Jump to ratings and reviews
Rate this book

துப்பட்டா போடுங்க தோழி

Rate this book
‘மாதவிடாய்'. 'ஜாதிகள் இருக்கேடி பாப்பா' போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூகச் செயற்பாட்டாளர். சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற தோழர் கீதா. சமூக வலைத்தளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார். தொகுப்பு... கற்பு. பெண் உடலின் மீதான குற்ற இஉணர்ச்சி. குடும்பப்பெண். நகையலங்காரம். சுயபரிவு. உடற்பயிற்சி, நட்பு, பயணம், வேலை, சம்பாத்தியம், வாகனம் ஓட்டுதல் எனப் பல தலைப்புகளில் கேள்விகளை எழுப்புவதோடு. தீர்வின் திசையையும் விவாதிக்கிறது. மொத்தத்தில் இந்தப் பதிவுகள். 'துப்பட்டா போடுங்க தோழி' என்பவர்களுக்கான பதில்: பெண்களின் சமகால சிந்தனைப் போக்கை தெளிவாக காட்டும் கண்ணாடி: ஆணாதிக்கத்தை விட்டொழிக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கான கையேடு!

127 pages, Paperback

Published March 1, 2022

31 people are currently reading
196 people want to read

About the author

Geetha Ilangovan

1 book24 followers
Geeta Ilangovan is an Indian journalist, writer and filmmaker of short films and documentaries which tackle social and gender based issues.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
81 (58%)
4 stars
45 (32%)
3 stars
7 (5%)
2 stars
2 (1%)
1 star
3 (2%)
Displaying 1 - 25 of 25 reviews
Profile Image for Raj Omm.
24 reviews1 follower
December 31, 2024
துப்பட்டா போடுங்க தோழி❤️

பெண்ணியம் சார்ந்த பல கருத்துகளை, பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை, மிக நேர்த்தியாக, ஆழமாக, முக்கியமாக எல்லாருக்கும் புரியும்படியாக எடுத்துரைக்கும் புத்தகம்.

ஆணாதிக்க சமூகம் ஒரு பெண்ணின் மீது திணிக்கும் நியாமற்ற எதிர்பார்ப்புகள், முறையற்ற கேள்விகள், கேவலமான முன்முடிவுகள் என்று நீளும் பட்டியல் அனைத்தையும் அழகாக அணுகி தெளிவுபடுத்துகிறார் ஆசிரியர் கீதா.

அக்கறை என்கிற பெயரில், நம் சமூகம், ஏன் சக பெண்கள் கூட ஆணாதிக்க சிந்தனையுடன் ஒரு பெண்ணை எப்படியெல்லாம் கட்டுக்குள்ளே வைத்து, கண்களுக்கு தெரியாத ஒரு கோடிட்டு அதனுள்ளே மட்டுமே அவள் தன் வாழ்வை முடித்துக்கொண்டு "நல்ல பெண்" என்று பெயர் வாங்க வேண்டும் என்று எண்ணுகிறது.

படித்துக்கொண்டிருக்கும் பொழுதே, பல கேள்விகளை எழுப்புகிறது, பல உண்மைகளை நமக்கு உணரசெய்கிறது.

தனிப்பட்ட முறையில் நான் பெண்களை பற்றியும் அவர்களை புரிந்துகொண்ட எண்ணங்கள் பற்றியும், அவர்களின் எண்ணங்களை அணுகும் முறை சிலவற்றை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று படித்து முடித்த பின்பு தோன்றியது.

இது பெண்கள் படிக்க வேண்டிய புத்தகம் மட்டும் இல்லை, ஆண்கள் நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம்.

இனி பெண்களை அவர்களின் போக்கில், அவர்களும் சக மனிதர்கள் தான், அவர்களுக்கும் ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாம் இருக்கிறது என்று இந்த சமூகம் உணர்ந்து அதற்கேற்ப மாற்றத்தை நல்ல முறையில் கொண்டுவர வழிசெய்ய வேண்டும்!
Profile Image for Shruthi Jothsana.
143 reviews16 followers
May 17, 2023
When I completed reading this book in January 2023, it wasn't listed on Goodreads. Now that it is, it shows how successful this book has become.

The chapters hold nothing new that people already don't know. Despite that everyone should read it. Apovavadhu thirutham varudhangradhu dhan hope-eh. 😌
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books173 followers
May 5, 2024
#269
Book 30 of 2024- துப்பட்டா போடுங்க தோழி
Author- கீதா இளங்கோவன்

“நமது அருமையான மகள்களைவிட,அவர்களது உயிரைவிட, உரிமைகளை விட,கல்வியை விட,அவர்களது உயிரை விட,உரிமைகளை விட,கல்வியை விட,அவர்கள் கனவு வேலைகளை விட,அழகான வாழ்க்கையை விட,இந்தப் பிற்போக்குத்தனமான,கொடுமையான ‘கற்பு’ என்ற கருத்தாக்கம் முக்கியமில்லை.”

மகளிர் தின மாதத்திற்காக எங்கள் புத்தகக் குழுவில் படித்த புத்தகம் தான் இது. “பெண்கள்” மீது சமுதாயம் திணிக்கும் கட்டுப்பாடுகளுக்கான பதில் தான் இந்த புத்தகம். வெளியில போனா துப்பட்டா போடுங்க என்பதில் தொடங்கி எத்தனை எத்தனை விதிகள், காலப்போக்கில் பெண்கள் உரிமைகளைப் பற்றி நிறைய விழிப்புணர்வு சமுதாயத்தில் ஏற்பட்டாலும் இன்னமும் சில கட்டுப்பாடுகள் இருந்துக் கொண்டே தான் இருக்கின்றன.

ஒரு பெண் குழந்தை பிறந்து,வளர்ந்து,பருவமடைந்து, பட்டம் படித்து, வேலைக்குச் சென்று,திருமணம் ஆகி,தாயாகி,வயதாகி,அவள் இறக்கும் வரை “இப்படித் தான் இருக்க வேண்டும்” என எத்தனை விதிகள். அவை எல்லாவற்றிர்க்கும் சாட்டையடி பதில் தான் இந்த புத்தகம். கண்டிப்பாக எல்லாரும் படிக்க வேண்டிய படைப்பு இது. இதை படிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மனதில் ஒரு நம்பிக்கை,நம்மாளும் எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கை உண்டாகும். இனி உங்கள் வீட்டில் ஒரு பெண் பருவமடைந்தால் அவளை பார்க்க வரும் எல்லாருக்கும் இந்த புத்தகத்தை பரிசாக தாருங்கள். அது தான் பெண்ணியத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் நீங்கள் தரும் உண்மையான பரிசு.

ஆணாதிக்கத்திற்கு பதில் சொல்லும் படைப்பாக மட்டும் இது இல்லாமல், பெண்கள் தங்கள் உரிமையை புரிந்துக் கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும். இந்த புத்தகம் மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
251 reviews38 followers
March 28, 2024
புத்தகம்: துப்பட்டா போடுங்க தோழி
எழுத்தாளர்: கீதா இளங்கோவன்
பதிப்பகம்: Her Stories
பக்கங்கள்: 127
நூலங்காடி: ஈரோடு புத்தகத் திருவிழா 2023
விலை: 160

💫 இந்த புத்தகத்தில் மொத்தம் 30 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு பெண்ணிற்கு நடந்த சம்பவத்தை விவரிக்கும் போது என்ன நமக்கு நடந்தது போலவே இருக்கு என்று தோன்றுகிறது.

💫 முதல் கட்டுரையின் தலைப்பு துப்பட்டா போடுங்க தோழி. தன் உடல் மீது இருக்கும் கோபமும் வெறுப்பும் குறிப்பாக தனது மார்பகங்களின் மேல் இருக்கும் வெறுப்பு... ஏன் இவ்வளவு பெருசா இருக்கு?? ஏன் இவ்வளவு சின்னதா இருக்கு??? என்ற கேள்வி. தங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அந்த ஆடைக்கு பொருத்தமாக இல்லை என்றாலும் பெண்ணை துப்பட்டா அணிய வைக்கிறது. இது மாதிரி ஒரு சம்பவம் என் மீதும் நடந்திருக்கிறது. வயதுக்கு வந்து சில மாதங்களில் அருகில் இருக்கும் கடைக்கு சென்று இருந்தேன் மீடியும் கை இல்லாத சட்டையும் அணிந்திருந்தேன். அந்த கடையில் இருந்த அக்கா, நீ இப்போ பெரிய பெண்ணாகிட்ட இனிமே கவர் (Cover) பண்ணி தான் போடணும் என்று கூறினார்கள். அப்போது அது புரியவில்லை சில வருடங்களுக்கு பின்னால் விளங்கியது.

💫 குழந்தை பெற்றுக் கொள்வது என்ற முடிவை, இந்த குடும்பம், சமுதாயம் இப்போது பெருகிவரும் Fertility centre களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கிறது. பெண்களது லிஸ்ட்ல (List) இல்ல. இதைப்பற்றி கட்டுரையில் Sara's (Malayalam movie) என்ற மலையாளம் படத்தைப் பற்றி கூறியிருப்பார். இந்த படத்தை பார்த்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குழந்தை பெற்றுக் கொள்வது முதலில் அவள் முடிவு.... இல்லை பெண்ணின் முடிவு மட்டும் தான்.

💫 இந்த புத்தகம் பெண்களுக்கானதா இல்லை... எல்லாருக்கும் ஆனது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற புத்தகம் இது.

💫 நாம் என்ன செய்ய வேண்டும் நம் எதிரில் வரும் பெண் என்ன உடையில் இருந்தாலும்,0 கணவரை பிறந்து தனியாக இருப்பவர்களோ, திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவர்களோ, குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பவர்களோ, அவர்களைப் பற்றி அவதூறாக பேசாமல் இருப்போம். முடிந்தால் சினேகமாக புன்னகை செய்வோம். வில்லத்தனம் செய்யாதீர்கள்.



புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால் இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி .


சுபஸ்ரீனீ முத்துப்பாண்டி
வாசிப்பை நேசிப்போம்
2 reviews2 followers
May 9, 2023
ஓட்டமும் நடையுமாக தன் வாழ்வை நோக்கிப் பயணிக்கும் ஓர் பெண்ணினைத் துரத்திச் சென்று, அவளை நிறுத்தி, அதீத (?!) அக்கறையுள்ள இச்சமூகம், அவளிடம் சொல்லும் "துப்பட்டா போடுங்க தோழி".

பெண் தன் உடலின் ஓர் அங்கத்தை "அசிங்கமா இருக்கா?" என ஏன் எண்ணுகிறாள்? 'குடும்ப ஆண் / குடும்ப ஆண் அல்லாதவர்' என பிரித்துப் பார்க்காத இச்சமூகம் பெண்ணை மட்டும் ஏன் பாகுபடுத்தி படுத்தியெடுக்கிறது? அவளின் வெளி என்பது வீடாக மட்டுமே ஏன் இருக்க வேண்டும்? தற்சார்புடையவளாக வாழ அவளை ஏன் அனுமதிப்பதில்லை? எனத் தொடரும் கேள்விகளுடன் கற்பு, நகையலங்காரம், சுயபரிவு, உடற்பயிற்சி, நட்பு, பயணம், சம்பாத்தியம் எனப் பல தலைப்புகளில் 30 கட்டுரைகளாக கேள்வி கேட்கிறது கீதா இளங்கோவனின் "துப்பட்டா போடுங்க தோழி".

நூல்: துப்பட்டா போடுங்க தோழி
ஆசிரியர்: கீதா இளங்கோவன்
பதிப்பகம்: ஹெர் ஸ்டோரிஸ்
பக்கங்கள்: 127
Profile Image for Vino Kumar Ponnu Krishnan.
86 reviews2 followers
October 10, 2023
அருமையான புத்தகம், இந்த புத்தகத்தை பெண்கள் மட்டும் இல்லை ஆண்களும் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று நான்  நினைக்கிறேன்.

ஆண்கள் சமூகம் பெண்களை வீட்டில் அடக்கி விட வேண்டும் என்று எப்படிச் சிந்திகிறது அதற்கான யுக்திகளை எவ்வாறு கையாளுகிறது என்பதற்கான கையேடு.

30 கட்டுரைகளின் தொகுப்பு.

கற்பு தொடங்கி குடும்பப் பெண், வேலைக்கு போவது, உடற்பயிற்சி, வாகனம்  ஓட்டுவது, நண்பர்கள், தாய்மை, பயணம், உரையாடல்கள், காதல், சுயபரிவு, குடும்ப கட்டுப்பாடு, சம்பாத்தியம் வரை தெளிவான விளக்கம்.
Profile Image for Manju Senthil.
46 reviews4 followers
February 12, 2023
பெண்ணியம் பற்றிய புரிதல் இன்று இருப்பது போல் 10 ஆண்டுகளுக்கு முன் எனக்கு இருந்ததா என்றால்…இல்லை என்பது தான் உண்மை. ஆனால் இன்னும் நான் உணர வேண்டிய விடயங்கள் இருக்கின்றன என்று இந்த புத்தகம் தெளிவுபடுத்தியது.

பெண் குழந்தைகள் வீட்டில் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதில் தொடங்கி, திருமணமான பெண்கள் தனக்கென நேரம் ஒதுக்கி உல்லாச பயணம் செல்ல வேண்டும் என்பது வரை அனைத்தையும் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர். கற்பு என்பது இந்த ஆணாதிக்க சமுதாயம், பெண்களைச் சிறை செய்ய உருவாக்கிய ஆயுதம் என்று தெளிவுபடுத்திய அத்தியாயங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை. இந்த சமுதாய கட்டமைப்பை உருவாக்கி, அதை பெண்கள் கடைபிடிக்கச் செய்ததும், அதற்கு பெண்களையே காவலர்களாக நியமித்துவிட்டு ‘பெண்ணுக்கு பெண் தான் எதிரி’ என்று நம்பச் செய்ததுதான் ஆணாதிக்கத்தின் வெற்றி.

எப்பொழுதும் மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்று எண்ணத்திலும், நாம் சரியாக நமது கடமையைச் செய்கிறோமா என்ற சந்தேகத்திலும் தான் பெண்கள் வாழ்கிறார்கள். என்னை போன்ற படித்து, வேலை பார்க்கும் பெண்கள் கூட இதற்கு விதி விலக்கு இல்லை. இந்த குற்ற உணர்வு தேவையற்றது என்று விளக்கும் அத்தியாயம் மனதிற்கு ஆறுதல் அளித்தது. என்னற்ற கருத்துக்களை உள்ளடிக்கிய இந்நூல் அனைத்து வயதினரும், அனைத்துப் பாலினத்தவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம். சமுதாய சீர்திருத்த கட்டுரைகளைச் சுவாரசியம் குறையாமல் தொகுத்து, இந்நூல் வடிவத்தில் நமக்கு பரிசளித்த எழுத்தாளருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
9 reviews
February 24, 2023
துப்பட்டா போடுங்க தோழி

தோழி கீதா இளங்கோவனின் இந்த புத்தகம் பெண்கள் தினம் சந்திக்கும் நெருடல்கள் , பெண்களின் வாழ்வு சமுதாய கட்டமைப்பு , எந்தெந்த வகையில் சமூகமாக நாம் பெண்களை கொடுமை செய்கிறோம் , நம்மை அறியாமலும் அறிந்தும் அன்பு , காதல் , கல்யாணம் , தாய்மை என்று எப்படியெல்லாம் ஒரு பெண்ணை முழுநேர பிணைக்கைதிகளாக நாம் வைத்திருக்கிறோம் என்ற 126 பக்க கட்டுரைகள் .

ஒரு ஒரு பகுதியும் பெண்களின் உரிமை , சுதந்திரம் , தற்சாற்பு குறித்து செவிட்டு காதில் அறைந்த மாதிரி மிகத் தெளிவாக விவரியிருக்கிறார் .

இதில் சில திரைப்படங்களும் , புத்தகங்களும் பரிந்திருரை செய்துள்ளார் ,

இதில் " வாசக்டமி " குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார் , அது நிறைய கேள்விகளையும் எழுப்பியது , பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கேள்வி பட்ட வார்த்தைகள் ஏன் நம் சமூக வாழ்வில் யாரும் கடைபிடிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பியது .

இந்த புத்தகம் நிறைய கேள்விகளும் , நிறைய பதில்களும் தந்தது , பெண்களை சமமாக இன்னும் நாம் நடத்தாமல் இருக்கிறோம் அதற்கு சமூக கரணங்கள் என்ன , ஒரு பெண்ணின் மனது என்ன , அவை எதை நம்மிடம் எதிர்பார்க்கிறது , ஒரு பெண்ணின் நிஜ தேவைகள் என்ன , பெண்ணை குறித்து அவர்களின் வழக்கை குறித்து நம் தவறான புரிதல்களை இந்த புத்தகம் தெளிவு செய்கிறது .

ஒரு பெண்ணின் அரசீற்றமாக இந்த கட்டுரைகள் எனக்கு தெறிகிறது .
18 reviews1 follower
September 2, 2023
A good book that talks about all the challenges that women face in various walks of their life due to the conditions which are imposed by the male dominant society.

A lot of the points mentioned in the book do reflect events that happen today. With that being said, I couldn't agree with everything that the writer has expressed, and I felt a monotonous tone at some places in the book.

Overall a good read that gives you a very good perspective on the hardships that the females go through.
Profile Image for Ariffa Jarena  Banu.
75 reviews
May 27, 2024
என் துப்பட்டாவை நான் பார்த்துக் கொள்கிறேன்..உங்கள் பார்வையை நீங்கள் தாழ்த்திக்கொள்ளுங்கள்...
Profile Image for Kumaresan Selvaraj.
23 reviews4 followers
January 26, 2024
துப்பட்டா போடுங்கள் தோழி இந்த சொற்றொடரை நிறைய முகநூல் பதிவுகளில் நாம் பார்த்து இருப்போம் அத்தகைய சொல்லாடல்கள் பின்னால் இருக்கக்கூடிய ஆணாதிக்க சிந்தனைகளை நாம் பெரிதாய் கண்டுகொள்வதில்லை, தன் சாதியை மதத்தை அதன் பெருமைகளைப் பறைசாற்றிக்கொள்ளக் கிடைக்கப்பட்ட ஒரு கருவியாகவே பெண்ணும் பெண்ணை சுற்றிய இயக்கங்களும் நடைபெறுகின்றன, மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாகப் பல பங்கு வகிக்கும் பெண்ணுடைய சொந்த உடல் மீதும் உரிமை மீதும் அவளுக்கே உரிமை இல்லாமல் செய்துவிடுகிறது இந்த சமுதாயத்தின் கற்பிதங்கள்.

பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்த பிறகுத் தனது உடல் மீதான உரிமைகள் தனக்கு இல்லாமல், அதன் மீது இந்த சமுதாயம் கட்டமைக்கும் ஆதிக்கத்தினால் பெரும்பாலான பெண்களுக்கு தன் உடல் மீது எந்த பெருமித உணர்வும் இல்லாமல் கோபமும் ஆதங்கமும் குற்றவுணர்வும் ஆத்திரமும் தான்அடையச்செய்கின்றது, குறிப்பாக வயது வந்த பெண்களுக்கு மார்பகங்கள் மீது. இதற்கு மிக முக்கிய காரணம் தன் கட்டுப்பாட்டில் இல்லாத இயல்பான உடல் வளர்ச்சியும் அதனால் தடைப்படும் சுதந்திரமும் அவர்களின் உடல் மீது கோபத்தை மேற்கண்ட உணர்வுகளை ஏற்படச் செய்கிறது.

நமது வரலாற்றைத் திரும்பிப் பார்த்தல் அது தாய் வழிச் சமுதாயமாக இருந்திருக்கின்றது என்பதற்கான சான்றுகள் இங்கே நிறைய உள்ளன, சரி மனித வரலாற்றை பார்ப்போமாயின் மனிதன் வேட்டையாடியாக வாழ்ந்த காலங்களில் பெண் தான் குடும்பத் தலைவியாக இருந்து இருக்கின்றாள், பின்னர் விவசாய முறைகளைக் கண்டுபிடித்த பின்னர் தன் நிலம், உடைமை என சுருக்கப்பட ஆரம்பித்த காலங்களில் அதனைக் காக்கப் பெண்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு அவள் ஓரிடத்தில் அடைக்கப்படுகிறாள், அவளின் வெளி சுறுக்கப்படுகின்றது அப்படி உடைமைகளைக் காக்கத் தடுக்கப் பட்ட பெண்ணின் இயக்கம் இன்றுவரை தனது சாதிய கௌரவம் மத கௌரவம் எனப் பெண்ணின் எல்லா இயக்கங்களையும் தடைபடுத்தி ஆணின் அல்லது குடும்பத்தின் ��ட்டுப்பாடுகளுக்குள் வைத்து விடுகிறது அதை மீறி பெண் செயல்பட்டால் அவளுக்குக் கொடுக்கப் படும் பெயர்கள் இங்கு ஏராளம்.

பெண் மென்மையானவள் என்ற கற்பிதங்களினாலும் பெண்களுக்கு சில செயல்கள் முடக்கப்படுகின்றன, அப்படி பெண் மென்மையானவள் என்றால் பளு தூக்குதல், பாக்ஸிங், மிக்ஸ்ட் மார்சியல் ஆர்ட்ஸ் மற்றும் பல கடினமான விளையாட்டுகளில் எப்படி பெண்கள் வெற்றி பெறுகிறார்கள் பிற எளிம���யான கேள்விகளினால் நம்மைச் சிந்திக்க வைக்கின்றது இந்த புத்தகம்.

மேலும் படிக்க:
https://kumareszh.wordpress.com/2024/...
5 reviews
March 13, 2025
விடுதலை வேண்டும் என்ற ஆசை தோன்ற அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம் என்ற விழிப்புணர்வு தேவை. அந்த விழிப்புணர்வு வராமல் பெண்களைப் பார்த்து கொள்ள எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என எழுத்தாளர் துல்லியமாக விவரிக்கிறார். 

பாதுகாப்பு, பாசம், பொறுப்பு, பாராட்டு என ஆண்கள் விரிக்கும் பல விதமான பட்டு கம்பளங்களின் மீது நடந்த படி வாழ்க்கையைக் கடந்து செல்வது தான் பெண்களின் பிறவிப்பயன் என்ற கருத்தை வளர்த்து வரும் இந்த ஆணாதிக்க சமூகம் ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் கட்டமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என  சான்றுரைக்கிறார்.

பிறருடைய தலையீடோ ஆதிக்கமோ இன்றி தனது ஆடையை தேர்வு செய்வது முதல் தனது ஊதியத்தை நிர்வாகம் செய்வது வரை அனைத்திலும் பெண்கள் தற்சார்பு உடையவர்களாக திகழ வேண்டும் என ஊக்கப்படுத்துகிறார். 

கணவர்,பிள்ளைகள், குடும்பம் இதைத் தாண்டி பெண்கள் அறிந்து கொள்ளவும் ஆர்ப்பரிக்கவும் சாதிக்கவும் சவால் விடவும் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன என்று கூறும் எழுத்தாளர் ஒரு பெண் வேலைக்கு செல்வதன் அவசியத்தையும் வாகனம் ஓட்டுவதன் அத்தியாவசியத்தையும் விளக்குகிறார். 

திருமணம், தாய்மை, குடும்ப கட்டுப்பாடு, உருவ கேலி, ஆடைகள் பற்றிய விமர்சனம், தங்க நகைகள் அணிந்து கொள்வதில் இருக்கும் அசௌகரியம் போன்ற பல பரிமாணங்களில் பெண்களுக்கு தங்கள் உடல் மீதான அடிப்படை உரிமைகளே எப்படி எதார்த்தமாக மீறப்பட்டு விடுகின்றன என்பதை திறம்பட எடுத்துக் காட்டுகிறார். 

ஒரு பெண் தனது மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள நம்பகமான தோழிகள் வட்டமும் பகுத்தறிவு கொண்ட பெற்றோரும் தேவை என பரிந்துரை செய்கிறார். 

வீட்டு வேலைகளையும் அலுவலக வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்து உடல் நலனையும் மன அமைதியையும் மாய்த்துக் கொள்வதற்கு மாற்றாக பெண்களின் உடலை வலுவாக்கும் உடற்பயிற்சியும் மனதிற்கு தெளிவூட்டும் பயணங்களும் தேவை என வழிகாட்டுகிறார்.

பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானது அல்ல என்றும் பெண்ணியக் கொள்கைகள் ஆண்களை வெறுப்பவர்களால் வகுக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தும் எழுத்தாளர்

பெண்களும் ஆண்களுக்கு நிகரான இயல்பான மகிழ்வான நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என பேரன்போடு வலியுறுத்துகிறார். 

என்னதான் படித்திருந்தாலும் வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் சமத்துவம் பற்றிய ஏக்கத்தையும் ஆணாதிக்க சமூகத்தின் மீதான குமுறலையும் மனதில் சுமந்த படி வாழ்ந்து வரும்  பெண்கள் படிக்க வேண்டிய நூல்.. 

திருமணம் ஆனவர் ஆகாதவர் என்ற வித்தியாசம் இன்றி அத்தனை ஆண்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்..
Profile Image for Kadhaippoma  with Kannamma .
4 reviews1 follower
January 16, 2025
#1 of 2025
Book - துப்பட்டா போடுங்க தோழி
Author - கீதா இளங்கோவன்

இந்த புத்தகத்தில் மொத்தம் 30 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் கற்பனையோ, அதிகம் பூசி மொழுகப்பட்ட வர்ணனைகளோ இல்லாமல் ஆணாதிக்க பொதுப்புத்தி ஒரு பெண்ணை எந்த மாதிரி எல்லாம் அடக்கி ஆள்கிறது... ஆள விரும்புகிறது... அதற்கு எந்த மாதிரியான யுக்திகளை கையாளுகிறது..
என்பதை எந்தவிதமான ஒளிவு மறைவும் இன்றி நெற்றி பொட்டில் அடிப்பது போல் உறுதியான கருத்துக்களை பதிவு செய்துள்ளது.

ஒரு பெண் பிறந்தது முதல் இறக்கும் வரை அவளை இந்த சமுதாயம் எப்படி நடத்துகிறது. சுடிதார்களில் ஏன் pockets வைப்பதில்லை, ஒரு நல்ல குடும்ப பெண்ணை தேடுகிற இந்த சமுதாயம் ஏன் ஒரு நல்ல குடும்ப ஆணை தேடுவதில்லை போன்ற பல கேள்விகளை ஆழமாய் பதிவு செய்கிறது

பிரச்சனைகளை மட்டும் பேசாமல் அதற்கான தீர்வுகளையும் இப்புத்தகம் பேசுகிறது.

பெண் குழந்தைகளை வீட்டில் எப்படி நடத்த வேண்டும் என தொடங்கி கற்பு, சுயப்பரிவு, நட்பு, பயணம், வேலை, சம்பாத்தியம், நகையலங்கரம், உடற்பயிற்சி, வாகனம் ஓட்டுதல், பாலியல் கல்வி, குடும்ப கட்டுப்பாடு போன்ற பல தலைப்புகள் அனைவருக்கும் புரிய கூடிய வகையில் மிகவும் எளிமையாக பேசப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொரு பெண்ணிற்குமே நம்மாலும் ஏதாவது செய்ய முடியும் என்கிற நம்பிக்கையும் தைரியமும் வரும் என்று எண்ணுகிறேன்.

இந்த புத்தகம் பெண்களை பற்றிய புத்தகமாக இருந்தாலும், அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்... ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமான புத்தகம்...

துப்பட்டா போடுங்க தோழி -
உன் கனவுகளை பொசுக்க நினைப்பவர்களிடம் அடங்க மறு பெண்ணே!!!

My Favourite lines from book

1) "உனக்குப் பிடித்தமான உடையை அணிந்து, தன்னம்பிக்கையுடன், கம்பீரமாக, நிமிர்ந்து நடைபோடு. உன் உடலை, உடையை விமர்சித்து யாராவது குறை கூறினால், மோசமாக பேசினால், அது அவர்கள் அறியாமையை காட்டுகிறது என்று புரிந்துகொள் கண்ணம்மா".

2) "நமது அருமையான மகள்களை விட, அவர்களது உயிரை விட, உரிமைகளை விட, கல்வியை விட, அவர்கள் கனவு வேலைகளை விட, அழகான வாழ்க்கையை விட, இந்த பிற்போக்குத்தனமான, கொடுமையான 'கற்பு' என்ற கருத்தாக்கம் முக்கியமில்லை".
Profile Image for Suba Mohan.
104 reviews3 followers
July 13, 2024
மொத்தம் 30 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. பெண்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றிய கட்டுரைகள். ஆணாதிக்க சமூகத்துல பெண்களோட உரிமைகளும், ஆசைகளும், கனவுகளும் எப்படி காணாமப் போகுதுனு ஆசிரியர் சொல்ற விதம் அருமை.

பெண்கள் அன்றாட வாழ்க்கைல சந்திக்கிற சின்ன சின்ன பிரச்சினைகள் தான். இதெல்லாம் ஒரு விஷயமானு கூட நெனைச்சுருப்போம், ஆனா அது எல்லாமே இந்த சமூகக் கட்டமைப்புனால நமக்கு நாமே போட்டுக்கிட்ட ஒரு கட்டுப்பாடு. For ex: துப்பட்டா போடுறது.

தன்னுடைய உடல் மீது பெண்களுக்கு எந்நேரமும் இருக்க self-consciousness, குடும்பப் பெண் இப்படித் தான் இருக்கணும், கல்யாணம் ஆயிட்டாலே உடனே வீட்ல விசேஷமானு கேக்குறது, so called கற்பை நொடிக்கு நொடி நிரூபிக்கனும்னு நிபந்தனை போடுறது, திருமணத்திற்கு பிறகு பெண் வேலைக்கு போனாலும் குறை சொல்றது, போகலைனாலும் குறை சொல்றதுனு இன்னும் பல விஷயங்களைப் பத்தி இதுல ஆசிரியர் எழுதி இருக்காரு. 

இதுல எனக்குப் பிடிச்ச கட்டுரைகள் - உங்ககிட்ட சுயபரிவு இருக்கா, மல்டி டாஸ்கிங் நல்லதா, பெண்ணுக்கு உடற்பயிற்சி அவசியம், அரசியல் செய்வோம் வாங்க பெண்களே, உங்களுக்கு நட்பு வட்டம் இருக்கிறதா, த மோஸ்ட் ஹேட்டட் உமன் இன் அமெரிக்கா, பயணம் போங்கள் பெண்களே, ஒரே காதல் ஊரில் இல்லையடா, ஆஸ்க் த செக்ஸ்பர்ட், மனைவியை நேசிப்பவர்கள் வாசக்டமியை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள், கடைசியாக வாகனம் பழகு பெண்ணே.

கண்டிப்பா எல்லாருமே படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியருக்கு இது தான் முதல் புத்தகம். ஆனா அப்படி தெரியவே இல்ல. எளிமையான நடையில் நேர்த்தியாகவும் எல்லாருக்கும் புரியுர மாதிரி அழகாவும் எழுதி இருக்காங்க. ஒவ்வொரு கட��டுரையும் short and crisp. Beginner friendly too. இந்தப் புத்தகத்துல சில புத்தகங்கள் அப்புறம் திரைப்படங்களும் recommend பண்ணி இருக்காங்க. அதுல self-compassion by Kristin Neff கூடிய விரைவில் படிக்கணும்.

சுய சிந்தனையோட பிடிச்சத செஞ்சு நிறைவோட வாழனும் அதுக்கான முயற்சிகளை எந்த ஒரு guilty feelingஉம் இல்லாம பெண்கள் இனிமேலாவது எடுக்கணும்.
15 reviews1 follower
October 14, 2023
பெண் சமுதாயத்தை முன்னிறுத்த முயற்சி செய்யும் புத்தகங்களில் முதன்மையான புத்தகம் தான் இந்த துப்பட்டா போடுங்க தோழி என்கின்ற புத்தகம்.

✨ துப்பட்டா போடுங்க தோழி...
✨ யாருங்க இந்தக் குடும்பப் பெண்?
✨ SO CALLED 'கற்பை' நொடிக்கு நொடி நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டுமாம்!
✨ உன் சம்பாத்தியம் உன் உரிமை; உன் சுயமரியாதை
✨ கல்யாணம்தான் பெண்ணுக்கு எல்லாமுமா?
✨ தாய்மைதான் பெண்ணின் அடையாளமா?
✨ வாகனம் பழகு பெண்ணே!
✨ நைட்டியை நேசிப்போம்!

போன்ற முப்பது தலைப்புகளின் மூலமாக நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார் நம் தோழர் கீதா இளங்கோவன்.

பெண் சமுதாயம் முன்னேறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எல்லாவற்றையும் முட்டி மோதி வெல்ல இப்புத்தகம் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.

அதுமட்டுமல்லாமல், பெண்ணின் கண்களின் மூலம் பெண்ணின் கலங்கிய உலகத்தை பார்க்கும் வாய்ப்பு இப்புத்தகம் அளிக்கிறது.

தனிப்பட்ட முறையில் இந்தப் புத்தகம் என் வாழ்வில் மிகப் பெரிய திருப்பங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. பொருளாதாரப் பொறுப்புகளையும், பெண்கள் வாகனம் இயக்குவதின் பயன்களையும், வாழ்க்கையில் பயணத்தின் பங்கையும், என் உடலும் உடையும் என் உரிமை என்கின்ற ஊக்கத்தையும் அளித்திருக்கிறது.

"பெண்ணியம் என்பது ஆண்களுக்கு எதிரானதல்ல... ஆணாதிக்கச் சிந்தனைக்கு எதிரானது" - கீதா இளங்கோவன்
Profile Image for Happyme.
18 reviews1 follower
June 14, 2025
it's truly an eye opener for each and every female about their so-called taboo in their entire life. sometimes women themselves didn't understand why we are doing this ? Are we really happy doing this in life? education, dressing, marriage decision like choosing partner without family permission, motherhood, childbirth, parenting, post delivery, career, pausing career for family, children,,,till her death women has to get permission for everything is it really worth it? who are we? Slipper shot Question and answers u will get it through this 30 essays. i totally love it.
Writer covers all the situations in a woman life. Great read...
Profile Image for Aishwarya Ravi.
14 reviews
August 9, 2024
Very nice book, which every individual should read. It talks on the current and revolving factors which affects woman community. All chapters were well written which every woman can connect to their personal life.
I enjoyed reading!!!
A short and quick read..
Profile Image for Agalya Kandasamy.
5 reviews
March 16, 2023
1. A tight slap answer to the one with the idealogy of saying "duppatta podunga doli"

2.A mirror which reflects the thought process modern Female

3.A guide for destroying male chauvinistic society
Profile Image for Udhaya Raj.
100 reviews2 followers
July 25, 2023
It's give a lot of learning about each and every women life.
Profile Image for Veda.
37 reviews20 followers
October 30, 2023
We need more books like these in Tamil :)
Profile Image for Bhuvan.
253 reviews42 followers
February 10, 2025
3.5

Some essays are good and thought provoking.

Some just remind you of what you already know.
Profile Image for Anitha Ponraj.
274 reviews42 followers
August 30, 2023
அட்டைப்படத்தைக் கொண்டு புத்தகத்தை மதிப்பிடுவது தவறு என்று தெரிந்திருந்தும் சில நேரங்களில் நாம் அறியாமலே அதை செய்து தான் வருகிறோம்.

துப்பட்டா போடுங்க தோழி என்ற தலைப்பைப் பார்த்து ஏதோ ஆணாதிக்க அறிவிலி பெண்களுக்கு அறிவுரை கூறும் புத்தகம் என்று எண்ணி இந்த புத்தகம் குறித்து எதையும் வாசிக்கவில்லை.

ஆனால் தற்செயலாக என் சித்தப்பா வீட்டில் அந்த புத்தகத்தின் இரண்டு பிரதிகளை பார்த்தது என் கவனத்தை ஈர்த்தது.

முற்போக்கு சிந்தனையும், சமூக அக்கறையும், பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடைக்காமல் குடும்பம் அல்லாமல் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை கொண்டிருந்த அவர்களிடம் எப்படி இந்த புத்தகம் என்ற கேள்வியோடு பக்கங்களை புரட்டிய எனக்கு வியப்பு.

ஆசிரியரின் நகைச்சுவை உணர்வை புரிந்து கொள்ளாமல், என் முன்முடிவால் இந்த அருமையான புத்தகத்தை இவ்வளவு காலம் வாசிக்காமல் விட்டுவிட்டதை எண்ணி கொஞ்சம் வருத்தம் கூட.

பெண்ணியம் என்பது பெண்களுக்கான உரிமைகளை அவர்களுக்கு கொடுப்பது என்ற சமநிலை என்று புரிய வைக்கவே போராட வேண்டிய நிலையில் தான் நம் சமுதாயம் இன்னும் இருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லப் பெரியார் மட்டும் போதாது சில கீதாக்களும் தான் தேவைப்படுகிறார்கள்.

தான் ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பபாட்டுக்குள் தான் இருக்கிறோம் என்று உணர முடியாத அளவுக்கு பெண்களை தன் கட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது எத்தனை சாமர்த்தியம்?

பெண்களின் நடை உடை பாவனையில் தொடங்கி, ஏன் விட்டால் மூச்சு கூட இப்படித்தான் விட வேண்டும் என்று வரையறைகள் வகுத்தாலும் கேட்பதற்கில்லை. ஆனால் ஆசிரியர் கேட்டிருக்கிறார் தன் எளிமையான எழுத்து நடையில் அருமையாக கேட்டிருக்கிறார்.

பெண்களிடம் சகஜமாக கேட்கப்படும் கேட்கக் கூடாத கேள்விகள், அறிவுரைகள் எனத் தொடங்கி பெண்கள் தங்களைத் தாங்களே கேட்டு கொள்ள வேண்டிய கேள்விகள் அனைத்தும் அடங்கும்.

புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் கடந்து வந்திருப்பதால் புத்தகத்துடன் ஒரு ஒட்டுதல் முதல் பக்கத்தில் இருந்தே ஏற்படுகின்றது.

தான் விரும்பிய உடை அணிய வேண்டும், விரும்பியபடி வாழ வேண்டும், தனக்கென்று ஒரு வேலை, தன் சம்பாத்தியம், நட்பு வட்டம், பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என ஆண்களுக்கு இயல்பாக கிடைக்கும் அனைத்தும் இன்னும் பல பெண்களுக்கு போராடி தான் கிடைக்க வேண்டும் என்ற நிலை தான் இன்றும் உள்ளது என்பது ஒரு சமூகமாய் அதில் பாதியளவு இருக்கும் ஒரு அங்கத்தினருக்கு இளைக்கப்படும் அநீதியாகவே தோன்றுகிறது.

சிலர் மாறி வருகிறார்கள் என்பது வரவேற்கத்தக்கது. பலர் மாற வேண்டியுள்ளது.

புத்தகம் வாசிப்பது என்ற எண்ணம் இல்லாமல் நம் தோழி நம்முடன் பேசும் இயல்பான ஒரு உரையாடல் போன்ற நடையில் புத்தகம் இருக்கிறது.

கண்டிப்பாக எல்லோரும் வாசிக்க வேண்டிய அருமையான புத்தகம்.

'குடும்ப ஆண்' தானா என்று பையனைப் பற்றி விசாரிக்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்.
Profile Image for Murali.
10 reviews
October 23, 2024
இந்தப் புத்தகத்தில் நிறைய நல்ல கருத்துக்கள் உள்ளன, நிறைய சிந்திக்க வேண்டிய கருத்துக்களும் ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களும் மற்றும் கருத்துகளும் உள்ளன அவசியம் வாங்கி படியுங்கள்.

அதேசமயம் சில விஷயங்களை இவர் சொல்லும் முறை மிகவும் மோசமாக உள்ளது இது ஒரு தப்பான பார்வையை ஆண்கள் சமுதாயத்தின் மீது பார்க்கச் செய்கிறது. இவர் சொல்லும் ஒரு சில குற்றங்கள் ஆண்களுக்கும் நடக்கிறது பெண்களுக்கும் நடக்கிறது ஆன��ல் இது வெறும் பெண்களுக்கு மட்டும் நடக்கிறது அதுவும் ஆண்களால் தான் நடக்கிறது என்று ஒரு தப்பான கண்ணோட்டத்தில் அந்தக் கருத்தை எழுதி உள்ளார்.

ஆனால் அந்தக் குற்றங்கள் பெண்களை தான் மிகவும் பாதிக்கிறது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம், அதை இவர் சொல்லிய முறை மற்றும் இவரின் கருத்து ஏற்பதற்கு அல்ல.
Profile Image for Karthick Raja.
1 review
November 1, 2025
Speaks a lot about feminism and women oppression. But romba static aa iruntha maathiri irunchu innum kooda konjam interesting story nuances add pannirukalamnu feel aachu. I know ithu weekly vantha katturai thoguppunu but still katturai padikura feel than book padikkura feel illa. Also enga family um same ithula mention panna family than but enga veetlayum ivanga solra sila visayangal illathanala enaku athulam impact aagala. Lastly opening la problems ku solution irukunu mention pannirunthanga but neraiya blank aa vitta maathiri iruku.
Profile Image for K.
54 reviews
November 24, 2025
"Thuppatta Podunga Thozhi" by Geetha Ilangovan is not just a book; it's a battle cry for every woman who’s had enough of being told how to live her life. Imagine having a no-nonsense, fiercely feminist friend who’s got your back. Geetha’s words are like that,unfiltered, unapologetic, and absolutely empowering.

This book is a deep dive into the everyday BS women face,gender roles, caste discrimination, body shaming,you name it. Geetha Ilangovan tackles these issues head-on, with a mix of sass and seriousness that will make you laugh, cry, and most importantly, think.

Geetha’s writing is like a shot of espresso,sharp, invigorating, and impossible to ignore. She doesn’t just point out problems; she offers a toolkit for dismantling them. Her exploration of how gender, caste, and class intersect is both eye-opening and revolutionary. She’s not here to play nice; she’s here to dismantle the patriarchy, one page at a time.

What makes this book stand out is its cultural relevance. Rooted in the Indian context, it speaks directly to the experiences of women who are constantly navigating societal expectations. But don’t let that fool you,its themes are universal. Whether you’re in New Delhi or New York, you’ll find yourself nodding along and feeling seen.

"Thuppatta Podunga Thozhi" is not just a read; it's a revolution. Geetha’s words challenge you to reflect, rebel, and rise. It's like having a pep talk from your fiercest, most feminist friend,one who’s telling you to question everything and stand tall.

So, why should every woman read this book? Because it's a powerful reminder of the strength and resilience that lies within us all. It’s a call to action for self-reflection, personal growth, and collective empowerment. For women tired of societal expectations, this book is a beacon of hope and a roadmap for change.
Displaying 1 - 25 of 25 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.