Jump to ratings and reviews
Rate this book

கோசலை [Kosalai]

Rate this book
அனைத்திலும் முழுமை பெற்ற மனிதர் எவருமில்லாத இவ்வுலகில் குறைமனிதர், நிறைமனிதர் என்ற இருமைகள் உருவாகி, வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையில் நெடுங்காலப் போர் ஒன்று நடந்துவருகிறது. இச்சமரில் முகாந்திரங்கள் ஏதுமின்றி, தன் உடற்கூறால் மட்டுமே சிக்கிக்கொள்ளும் கோசலை, புறக்கணிப்பையும், துரோகத்தையும், ஓடுக்குமுறைகளையும் தியாகத்தால் எதிர்கொண்டு எழுந்து நிற்கிறாள். நுண்மையிலிருந்து பெரும் ஆகிருதியாக விரியும் ஆலம் விதையின் பண்பைப் போன்றது கோசலையின் வாழ்வு.

தமிழ் இலக்கியப் பக்கங்களில் எவ்வளவு முயன்று தேடினாலும் கிடைக்காத புதிய வார்ப்பான கோசலையின் கதையை எழுதியிருக்கும் தமிழ்ப்பிரபா, எளிய சொல்முறையின் வழியே அதை அழுத்தமாக நிலைபெறவும் செய்கிறார். கதையில் நிகழும் கால மாற்றங்களை ஒருவித கலையமைதியுடன் வெளிப்படுத்தும் இந்நாவல், அழகு, சாதி, பொருள், தன்னிலை உள்ளிட்ட புறவிசைகளால் இயக்கப்படும் மனிதர்களின் குரூரங்களையும், அவற்றை மீறிப் பிரவாகிக்கும் அன்பையும் தவிக்கத் தவிக்கச் சொல்கிறது.

எக்காலத்திலும் நித்தியத்துவமாய் வென்று நிலைப்பது அன்பு என்பதே இப்பிரதியின் உள்ளீடு, தன்மீது வீசப்படுகின்ற வெறுப்பையெல்லாம் திரட்டி ஆற்றலாக மாற்றிவிடும் மானுட விழுமியத்தை முன்வைத்திடும் கோசலை நாவல், இருத்தலியலுக்கான அடிப்படை வினாக்களை ‘சமகாலத்தில்' வைத்து பரிசீலனை செய்கின்ற படைப்பாகத் திரண்டு வந்திருக்கிறது.

- அழகிய பெரியவன்

300 pages, Kindle Edition

First published January 1, 2022

11 people are currently reading
121 people want to read

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
46 (41%)
4 stars
45 (40%)
3 stars
17 (15%)
2 stars
3 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 24 of 24 reviews
Profile Image for Satheeshwaran.
73 reviews223 followers
August 25, 2023
“தன்னை விசித்திரமாகப் பார்ப்பவர்களின் கவனிப்பிலிருந்து தப்பிக்கும் பொருட்டு, கோசலை ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். மனிதர்கள், மரங்கள், மின்கம்பங்கள் எல்லாம் மெல்ல பின்னோக்கிச் சென்றன…“
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews28 followers
February 15, 2023
கற்பி. ஓன்று சேர். புரட்சி செய்.
என்கிற அண்ணல் அம்பேத்கரின் சொற்களுக்கு ஆதாரமாக கோசலை நாவல் எங்கும் திகழ்கிறாள்.
Profile Image for Shanmugam Udhayan.
50 reviews10 followers
April 9, 2023
கோசலை - தமிழ்பிரபா

பிரபாவின் இரண்டாவது நாவல். சமூகத்தால் ஒதுக்கித் தள்ளும் பெண்ணின் வாழ்க்கையை யாருடைய இரக்கத்தையும் வேண்டாத கதாபாத்திரமாக எழுதியிருக்கிறார். இந்த நாவலும் சிந்தாதிரிப்பேட்டையை களமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஒரு எளிமையான நாவல், வாழ்க்கை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தக்கூடிய எழுத்து.
Profile Image for Meenakshi.
19 reviews15 followers
April 28, 2023
தமிழ்பிபிரபாவின் மற்றுமொரு தரமான படைப்பு. முதல் நாவல் பேட்டையை விட இதில் படைப்பு மற்றும் கதை சொல்லும் திறன் கூர்மையாகி உள்ளது. பிற்பாதி கதை நகர்வு கொஞ்சம் மந்தமாக இருந்தது. கோசலையின் அப்பா சாதியை காரணம் காட்டி அவரது திருமணத்தை எதிர்க்கிறார். எந்த சாதி என்று குறிப்பிடவில்லை (சமீபத்தில் பெருமாள் முருகன் மாதொருபாகன் பிரச்சனைக்கு பிறகு பிற எழுத்தாளர்களும் சாதி பெயர்களை படைப்பில் தவிர்த்துவிடுகிறார்கள் என்று கூறியிருந்தார்). சாதி ஒழிய வேண்டுமென்றால் அதை சுட்டிக்காட்டாமல் எப்படி முடியும்? தமிழ்பிபிரபாவின் எழுத்து ஒரு திரைப் படம் போல் என் கண் முன்னே விரிந்தது (நாவலின் அறிமுக அத்தியாயம் ஒரு எடுத்துக்காட்டு). ஊனம் என்பது சமுதாயத்தில் தான் உள்ளது கோசலையின் உடலில் இல்லை என்பதே இந்த நாவலின் கருப்பொருள் என்று நான் எடுத்துக் கொள்கிறேன். இந்நாவலின் மூலம் கோவேறு கழுதைகள், கருக்கு போன்ற மற்ற தமிழின் முக்கியமான படைப்புகளும் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. சென்னையின் Goschen Library பற்றி அறிந்துகொண்டேன். கோசலை கனவில் வரும் சில மாய எதார்த்த காட்சிகள் என் நினைவில் என்றும் நிக்கும். வாழ்த்துக்கள் தமிழ்ப்பிரபா, அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன்.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
February 18, 2023
கோசலை தன் தம்பி கணேசனை தாக்கியவர்களை நோக்கி இனி எவனாவச்சும் என் தம்பிய அடிச்சிங்க அவ்ளோதான் என எதிரிகளை எச்சரிக்கும் அத்தியாயத்தில் துவங்கி கோசலையின் தந்தை அலங்காரவேலன், தாய் வேண்டாமணி, தம்பி கணேசன், சித்தி தவமணி, உசா, அப்புனு, நகரும் மேகங்கள், ஜோதி, பர்வதம்மாள், மல்லிகா, சிவக்குமார், ரேவதி, சாம்பவமூர்த்தி, குப்பு, டாக்டர் அம்பேத்கர் எழுதிய ‘விசாவுக்காகக் காத்திருக்குறேன்’ புத்தகம், சிந்தாதிரிப்பேட்டை கோசன் நூலகம், மீனாளு, ப்ரேசில், பந்தல் கே.ரவி, பூர்ணிமா, ஆரோன் & பம்பிங் ஸ்டேசன் ஏரியா பள்ளி குழந்தைகள் மற்றும் மக்களுடனான பிணைப்புடன் முடிவடகிறது.

கோசலை (உடல் வளர்ச்சி குன்றிய குள்ள பெண்) பல நிராகரிப்புகளைக் கடந்து வாழ்வில் உயர்ந்து தன் சுற்றத்தாரின் உயர்வுக்கும் உழைத்த நல்ல உள்ளத்தின் வரலாறு இந்த நாவல். -கலைச்செல்வன் செல்வராஜ்.
Profile Image for Kavin Selva.
47 reviews1 follower
June 11, 2025
விமர்சனம்
பக்கங்கள்: 240
ஆசிரியர்: தமிழ் பிரபா

சில மனிதர்கள் வாழக்கை முழுக்க பிற உறவுகளால் கைவிட பட்டவர்களாகவே வாழ்ந்து முடிக்கிறார்கள், ஆனால் கோசலை அவளை கை விடுவதாயில்லை.

உடல் குறைபாடு கொண்ட கோசலை கழிவிரக்கம், inferiority complex என தன்னை முடக்கி கொண்டாலும், அவள் உறவுகளுக்கு தன்னை முற்றிலும் அளிக்கிறாள். ஆனால், நிராகரிப்பு மட்டுமே மிச்சம். ஒவ்வொருவரும் விலகும் போது, அவரவர் நியாயங்களை கற்பனை செய்து கொண்டு அவரவர் வாழ்க்கையை தொடர்கிறார்கள்.

கோசாலையின் தாய் மறைவிற்கு பின், வீட்டை தன் கையில் எடுத்து, தம்பி, தந்தையை தாய் போல காக்கிறாள். எவர் விலகினாலும், அவள் வாழ்க்கை முழுக்க , செயல் ஊக்கமாக நிறைவை அடைந்து, வாழ்க்கை கடக்கிரவளே, கோசலை.


தனக்கு திருமணம் அமைய வாய்ப்பே இல்லை என்று கோசலை எண்ணி கொண்டிருக்கும் போது, காதலன் அமைகிறான், எனினும் கோசலை காதல் வாழ்க்கையை பரீட்சித்து கொண்டே இருக்கிறாள் கேள்விகள் மூலமாக..
வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு முடிவிற்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவள் தன்னை தானே திரும்பத் திரும்ப கேள்விக் கொண்டே இருக்கிறாள். அவ்வாறு தன்னோடு பேசிக்கொள்ளும்போது அவளுக்கு கழி இரக்கம் ஏற்பட்டாலும், ஏனோ மனதில் சிறுநெறிப்பு தோன்றியது போல தன்னை தானே மீண்டும் செயலின் மூலமாக அவள் அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி செல்கிறாள்.

அவள் காதலை நிராகரிக்கும் தந்தை, சமுதாயத்திற்கு போராளி, ஆனால் வீட்டில் காதலை எதிர்க்கும் ஜாதி ஆணவம், காம கீழ்மை கொண்ட சாதாரண தந்தை. அவள் தம்பி மனைவியுடன், தனி குடித்தனம் செல்லும் போது, முதல் ஏமாற்றம், பின் வாழ்க்கை எல்லாம் ஏமாற்றம், இழப்பு, அவமானம். கணவன் , மகள் இருவரும் அவர்கள் நியாயத்தை முன்வெய்தே விலகி விடுகிறார்கள்.

அங்கு இருந்து , செயலின் வழியாக அவள் தன்னை மீட்டு எடுப்பதே நாவலின் உச்சம்.

இது பெண்ணியம் பேசும் நாவலா? இல்லை.
இது ஒடுக்குமுறை பேசும் நாவலா? இல்லை.
இது அரசியல் பேசும் நாவலா? இல்லை.
தமிழ் பிரபா, கோசலை வழியாக சிந்தாதிரிப்பேட்டை வாழ்க்கையின் மகிழ்ச்சியும் இன்பதையும் அழகாக நடையில் கையாண்டுள்ளார். சென்னையில் எதார்த்த வாழ்க்கையை அங்கும் இங்கும் சுட்டிக்காட்டிக் கொண்டே நாவலின் கதையை நடத்திக் கொண்டு செல்கிறார். இந்த நாவலில், கோசலைக்கு அடுத்து முக்கியமான கதாபாத்திரம் சிந்தாதிரிப்பேட்டை.


ஆசிரியர் தமிழ் பிரபா இந்த நாவலின் மூலமாக பல்வேறு சமுதாய சிக்கல்களையும் கையாண்டு உள்ளார்.உதாரணமாக, குடும்பத்தில் நடக்கும் அதிகாரப்போட்டி , உடல் குறைபாடு உள்ளவர்களை மோசமாக நடத்தும் மனிதமின்மை , சமுதாயமாக கல்வியின் மீது உள்ள aversion என பல...

இந்த நாவலில் வரும் காட்சிகள், சினிமா பாணியிலும் அமைந்துள்ளது என என்னுடைய புரிதல். அதற்குக் காரணம் தமிழ் பிரபா, சினிமாவில் எழுத்தாளராக இருப்பதுதான் காரணமா அல்லது அது என்னுடைய கற்பனையா என பிரித்துக் கூற முடியவில்லை.


- கவின்
Profile Image for Raj Gajendran.
17 reviews
February 15, 2023
ஏராளமான பதிவுகளும் கட்டுரைகளும் கோசலையை பற்றி வந்த வண்ணம் இருக்கிறது. என் ஆச்சரியமெல்லாம் தமிழ் பிரபாவின் எழுத்தைப் பற்றியதே. மகத்தான படைப்பு, தமிழ் பிரபா நிச்சயம் ஒரு ஆகச்சிறந்த எழுதாளர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கான ஒரு படி இந்த நாவல்.

எழுத்து மட்டுமின்றி எழுத்துக்கு பின் உள்ள தமிழ் பிரபாவின் நோக்கமும், தெளிவும் ஆங்காங்கே பிரம்மிக்க வைக்கிறது. வரப்போகும் பெறும் துயரத்திற்காக மனதளவில் கோசலை போராடுவதும், உறவுகள் நீடிக்கப்போவதில்லை என்று உறுதியாக எதிர்கொள்வதும் அத்துடனான சிறு பயமும், ஜோதியின் முடிவுகளுக்கு பின்னால் அவனால் கட்டமைக்கப்படும் வரையறைகளும் நம் யாவரும் நம் ஆழ்மனதில் விளையாடிக்கொண்டிருக்கும் பகிரங்கமான உணர்வுகள். இவற்றை வெட்ட வெளிச்சத்திற்கு தமிழ்பிரபா கூட்டிவந்து நடுரோட்டில் நிற்க வைப்பது, ‘அய்யய்யோ இது எப்படி இவருக்கு தெரியும்?’ என அச்சமூட்டுகிறது. அது ஒன்றே போதும் தமிழ் பிரபா என்னை பொறுத்தவரை இதுவரை எழுத்தில் நிகழாத சில சாதனைகளை நிகழ்த்த முன்வந்திருக்கிறார்.
Profile Image for Priyadharsini Palani.
50 reviews9 followers
January 31, 2023
கோசலை
ஒருவராவது தன் மீது மட்டுமே முழு அன்பையும் காட்டிவிட மாட்டார்களா என ஏங்கும் கோசலையை என்னால் புரிந்தகொள்ள முடிகிறது. அவள் எதிர்பார்த்த அன்பு - அப்பா, தம்பி, சித்தி, கணவன், மகள், தோழி - இப்படி இவர்களிடம் கிடைக்காமல் போனாலும், அவளால் படித்து உயர்ந்த எத்தனையோ பேர் மனதில் அழியாமல் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாள்.
தன் உடல் மீது கோசலைக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு, காழ்ப்புணர்வு, நம்பிக்கையின்மை? என்ன காரணமாக இருக்கும்?
இது தான் நம் உடல், நம் உடல் எப்படி இருந்தாலும் அதை நேசிக்க, பாதுக்காக்க வேண்டும் என்று சுற்றி உள்ளவர்கள் அவளிடம் கொஞ்சம் body positivity யை வளர்த்திருக்க வேண்டும். மாறாய் அவர்களே அதை ஒரு குறையாய் பார்க்கும் போது அவள் என்ன செய்வாள் பாவம். தன் உடல் இப்படி இருக்க நாம் காரணம் இல்லை, இப்படி நம்மை படைத்த கடவுள் தான் காரணம் என தோன்றும் அளவுக்கு அவளை பாதிப்புக்குள்ளாகும் கேலிகளும் கிண்டல்களும், மனிதத்தின் மீதே ஒரு வித வெறுப்பை ஏற்படுத்துகிறது.
கோசலையை போல் என் வகுப்பில் ஒரு பையன் படித்தான். வகுப்பிலேயே அவன் தான் நன்றாய் படிக்கும் மாணவன். வகுப்பில் எல்லோருக்கும் அவனை பிடிக்கும், எப்போதும் சிரித்த முகத்துடன் தான் இருப்பான். கோசலையை வாசிக்கும் வரை அவன் உடல் வித்தியாசம் கூட எனக்கு தெரிந்திருக்கவில்லை. குழந்தைகளிடம் அப்படிப்பட்ட குரூர கண்கள் இல்லாமல் இருப்பது தான் காரணம் போலும். ஒவ்வொரு நாளும் அவனை பள்ளியில் விட்டு செல்லும் போது அவன் அப்பா அவனை கொஞ்சி விட்டு தான் டாட்டா காட்டுவார். இப்படிதானே கோசலையை சுற்றியும் அன்பு மட்டும் நிறைந்து இருந்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் தான் மிஞ்சி நிற்கிறது.
அடுக்கடுக்காய் எவ்வளவு அடிகள். நான் என்னை அறியாமல் கதறி அழுது கொண்டிருந்தேன். ஒரு சொல்லொணா பாரம் மனதை அழுத்த தொடங்கி விட்டது. தமிழ் பிரபா, கோசலையின் வலி முழுதாய் நம்மிடம் கடத்தி விடுகிறார்.
நான் என் வயதிற்கு சற்று குள்ளமாக தான் இருப்பேன். காலேஜ் படிக்கும் போது கூட பார்க்கிறவர்கள் பாப்பா எந்த ஸ்கூல் படிக்கிற என்று தான் கேட்பார்கள். அப்போதெல்லாம் என் அப்பா என்னிடம் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று சொல்வார்.
அப்படிதான் கோசலையின் உருவம் எனக்கு ஒரு குறையாகவே புத்தகம் ஆரம்பம் முதலில் இருந்தே தோன்றவில்லை. மாறாய் கோசலை இதையெல்லாம் உதைத்து தள்ளி வெளிவர காத்திருந்தேன்.
தன் கூட்டை உடைத்து வெளி வந்த பாட்டாம்பூச்சி போல் தன் சிறகை விரித்து பறந்த போது தான் சற்று நிம்மதி கொண்டேன்.
இந்த புத்தகம் பேசும் அரசியல், வாழ்வியல், ஏற்ற இறக்கம், மூட நம்பிக்கைகள், இவற்றை தாண்டி, ஒரு புத்தகம் என்ன செய்து விட முடியும் என்ற கேள்விக்கு கோசலை வாசித்த 'விசாவுக்காக காத்திருக்கிறேன்' பதில் சொல்கிறது.
அந்த ஒரு புத்தகத்தால் என்னென்ன மாறறங்கள் நடந்தேறியது என்று புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இனி எப்போது மேகங்களை பார்த்தாலும் கோசலையை தான் மனம் நினைத்து கொள்ளும்.
78 reviews4 followers
April 29, 2023
உடற்குறைப்பாடு உள்ளவர்கள் பிறர் மீது பெரும்பாலும் அவநம்பிக்கையை கொண்டு உள்ளார்கள், ஏனென்றால் நம்பிக்கை ஏமாற்றத்தையே தரக்கூடும் என்ற எண்ணத்தில். கோசலையின் வாழ்க்கையிலும் பேரன்பு கொடுத்தவர்களே அவளை விட்டு விலகுகிறார்கள், இதனால் அவள் அதீத ஏமாற்றத்தை தவிர்த்துக் கொள்கிறாள். அவள் வாழ்வில் படும் பெரும் துயரங்கள் அவளின் அப்பா தம்பி கணவன் ஆகியோரால்.

கோசலையின் வாழ்க்கையை மாற்றிய அம்பேத்கரின் ஒரு பொன்மொழி 'இவர்களுடைய வெறுப்பை எல்லாம் என் ஆற்றலாக மாற்றினேன்'. அவளின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றி அமைக்கிறது, அதன் பின் வாழ்க்கையில் வரும் சவால்களையும் ஏற்ற இறக்கங்களையும் அவள் கையாள்வதே ஒரு கலை. அவளுடைய வாழ்வே சமூகமாக மாறுகிறது அவளால் உருவான சமூகம் பெரும் கடலாக வரும் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவள் இழப்பை ஜீரணிக்க முடியவில்லை என்றாலும் இதைவிட ஒரு அழகிய இறப்பை காண முடியாது.

பிரபாவின் இரு நாவல்களை வாசித்த பின் நானும் சிந்தாரிப்பேட்டையில் இருக்கும் தெருக்களில் சுற்றித் திரியும் ஒரு சிறுவனை போல் அங்கும் இங்கும் என் மனம் ஓடுகிறது. அங்கு நடக்கும் மக்களின் வாழ்வியலை மிகவும் எதார்த்தமாகவும் நம்முள் கடத்தி விடுகிறார். கோசலையின் வாழ்க்கை நம் வாழ்விற்கு அதீத நம்பிக்கையை தருகிறது.
Profile Image for Marudhamuthu.
68 reviews13 followers
January 8, 2024
மிக உணர்வுபூர்வமான புத்தகம். நான் படித்து என் மனதில் பதிந்த கதாபாத்திரங்களில் கோசலை நிச்சியம் இருப்பாள். அவள் வாழ்க்கைக்குள் அம்பேத்கர் நுழையும் பக்கங்கள் மிகவும் நெகிழ செய்தது.
Profile Image for Moulidharan.
96 reviews19 followers
March 26, 2023
கோசலை

ஆசிரியர் : தமிழ்பிரபா
நாவல்
208 பக்கங்கள்
நீலம் வெளியீடு

நாம் வாழும் இந்த பூமியை தொலைவில் இருந்து பார்த்து இது உருண்டையானது, சமமானது என்று மேலோட்டமாக சொல்லிவிட முடியும் ஆனால் சற்றே உள் சென்று பார்த்தால் அதில் எத்தனை ஏற்றங்கள் எத்தனை இரக்கங்கள் எத்தனை பள்ளங்கள் எத்தனை மலைகள். அப்படித்தான் இந்த மனித வாழ்வும், தள்ளி நின்று பார்த்தால் இங்கு அனைவரும் ஒரு நல்ல வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர் என்று ஒரு மாய பிம்பம் தோன்றக்கூடும். அதே மனிதர்களை சற்று அருகில் சென்று ஆரத்தழுவி அவர்களின் உள்ளம் வரை உள் சென்று மனதால் பார்த்தால்தான் தெரியும் இங்கு வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்று அல்ல, அது நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு பெருஞ்சுமையை எப்படி ஈவு இரக்கமின்றி ஒரு மனிதன் மேல் காரணகாரியமின்றி ஏற்றப்பட்டு, அச்சுமையுடனே அந்த வாழ்வை அவன் வாழ்ந்து முடிக்க நிர்பந்திக்க படுகிறான் என்று. சரித்திரம் வாழ்க்கையில் சாதித்த�� வெற்றிபெற்றவர்களுக்கு மட்டுமே இடம் கொடுக்கும் ஆனால் இலக்கியமோ இந்த வாழ்க்கையை வாழ்தலே ஒரு பெரும் சாதனை தான் என்று ஒரு சாதாரண வெகுஜன மனிதனையும் தனக்குள் நிரப்பிக்கொள்ளும். அப்படி இலக்கியம் தனக்குள் அள்ளி அள்ளி நிரப்பி கொண்ட ஒரு சாமானிய பெண்ணின் வாழ்க்கை வரலாறு தான் இந்த கோசலை.

மெட்ராசின் - சிந்தாதரிபேட்டையில் அலங்காரவேலன் - வேண்டாமணி என்ற தம்பதிக்கு மூத்த பெண்ணாக பிறக்கிறாள் கோசலை, அவளுக்கு கணேசன் என்று ஒரு தம்பி. கோசலையின் முதல் சவால் அவளுடைய உடல் குறைபாடு. 15 வயதில் அவளுக்கு இருப்பதோ 5 வயது உடல் வளர்ச்சி. பார்க்கும் நமக்கு அது குறையாக தெரிந்தாலும் அவள் எந்த குறையும் இல்லாமல் தான் வளர்க்க படுகிறாள், அவளும் வளருகிறாள் முதிர்கண்ணி ஆகும் வரை. அம்மா இறந்த பின்னும், தம்பிக்கு மனமுடித்து பிள்ளை பிறந்த பின்னும், தம்பி பிரிந்து சென்ற பின்னும் ஒரு தனிமைக்கு தள்ளப்படுகிறாள். எப்பொழுதும் அவள் தனிமையை போக்குவது அவள் வீட்டின் மாடியில் இருந்து ரசிக்கும் அந்த மிதக்கும் மேகங்கள் மட்டுமே. இந்த தனிமையை போக்க ஜோதி வருகிறான். இருவரும் இரு குடும்பங்களை எதிர்த்து மனமுடிக்கின்றனர். ரேவதி என்ற குழந்தை பிறக்கிறது. ஜோதி தன் அம்மாவின் சூன்யத்திற்கு பயந்து கோசலையை விட்டு விலகி செல்கிறான். அந்த ஏக்கத்தில் ரேவதி விபத்தில் உயிர் துரக்கிறாள். மீண்டும் தனிமை பிடியில் கோசலை. தன் வாழ்வில் தன்னை விடாமல் துரத்தி கொண்டுவரும் தனிமையையும், வெறுமையையும் கோசலை எவ்வாறு தடுமாறாமல் கையாண்டு இறுதியில் லைப்ரரியம்மா என்ற பெயருடன் மரித்து அவளுக்கு சிலை வைக்கப்பட்டது என்பதே மீதி கதை.

தமிழ்பிரபா வின் இரண்டாவது நாவல். எழுத்தில் வேறு உயரத்திற்கு சென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு கதை மாந்தருக்கும் உரிய இடத்தையும், உணர்வுகளையும் எந்தவித குழப்பமும் இன்றி தெளிவாக படைத்துள்ளார். 90 களின் சென்னையை நம் நினைவுகளில் தூண்டி விடுகிறார். உதாரணமாக ஆசை மிட்டாய், சன் டிவி, ரிச்சி ஸ்ட்ரீட், பாரிஸ் கார்னெர், பும்பிங் ஸ்டேஷன், முருங்கை மரங்கள் என இன்னும் பல. கோசலையின் கதாபாத்திரத்துடன் இவர் பல நாட்கள் தன் நினைவுகளோடு பின் தொடர்ந்துந்துள்ளார் என்பது எழுத்தில் தெரிகிறது. இலக்கியத்தின் உச்சம் என்று சொல்லும் ஒரு இடம் உள்ளது தன் வயது மூப்பில் ஏற்கனவே வலைந்த முதுகு இன்னும் அதிகம் கூன் விழுக அவள் ஒரு கேள்விக்குறி போல் மாற தன் உருவத்தை தெருவிளக்கின் வெளிச்சத்தில் சற்றே உயரமாக தெரிவதை சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு செல்வாள். இந்த எண்ணமும் எழுத்தும் ஒரு அறையில் அமர்ந்து யோசித்தால் மட்டும் வந்துவிடாது. கோசலை கடந்து சென்ற வழி நெடுக தமிழ்பிரபா வும் அலைந்து திரிந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். மற்றுமொரு இலக்கிய சிறப்புமிக்க இடம் - கோசலையின் வாழ்க்கை துணை என்று பார்த்தால் அந்த மேகங்கள் மட்டும்தான். அவளை மகிழ்விக்க, ஆறுதல் படுத்த, உந்திதள்ள, தோள்கொடுக்க, கண்ணீரை துடைக்க, புலம்பல்களையும் விசும்பல்களையும் காது கொடுத்து கேட்க என கதை நெடுக மேகமும் ஒரு மாந்தராக உலா வருவது சிறப்பு. இதனையே அட்டை வடிவமைப்பிலும் கொண்டு வந்தது மிக சிறப்பு.


பல சரித்திர புருஷர்களின் வாழ்க்கை வரலாற்றை வெறும் தேர்வுக்காக படித்து அயர்ந்த நாம் இந்த கோசலையின் வாழ்க்கையையும் சரித்திரமாக வாசிக்க வேண்டும். கோசலையிடம் இருந்து இந்த சமகால மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தாலும். வாசிப்பு ஒருவனை எந்த நிலையில் இருந்தும் தூக்கி சுமந்து, அவனை தடுமாறாமல் ஒரு அலை போல கரை சேர்த்துவிடும் கோசலை யை சேர்த்தது போல. தன் வாழ்க்கை முழுக்க தன் உருவத்தை கொண்டும், தன் நிலை கொண்டும் வெறுப்பை மட்டுமே சந்தித்த கோசலை தடுமாறி தன்னை மாய்த்து கொள்ளவும் இல்லை, இந்த உலகத்துக்கு தன் வெறுப்பை கொடுக்கவும் இல்லை மாறாக அவள் தன்னிடம் நிரம்பிய அன்பை அள்ளி அள்ளி கொடுத்தாள். "இவர்களுடைய வெறுப்பை எல்லாம் நான் என் ஆற்றலாக மாற்றினேன் " என்ற அம்பேத்கரின் சொற்களை தன் வாழ்வின் உறுதிமொழியாக ஏற்ற கோசலையும் ஒரு சமூக போராளிதான்.


--இர. மௌலிதரன்.
26-3-23
Profile Image for Gautami Raghu.
230 reviews23 followers
May 4, 2023
% Another impactful book by Tamil Prabha. In a nutshell, it is a story of a girl who was born a dwarf. The novel is more than that in a wholesome way.

The emotions portrayed, humans described, and actions justified are real to the core! This book shows some best examples of how every person who does a bad thing convinces himself that it was for the best and how a person who showers unconditional love is taken for granted. The best part is that the author makes you feel what the character feels (உயிரோட்டம் உடையவை). There were tiny, simple details that made me tear up. The author has done justice in bringing out how tough & insecure it can get for a physically challenged person - mentally, emotionally, etc.
The book itself had a good 90s feel to it - the design, font used, thread binding, etc. I agree that it was similar to a good Ramanichandran pocket novel to some extent but had an upper hand when it came to practicality.

There is a lot to learn from Kosalai. This is a classic example of how life can turn around when you educate yourself and become independent. I'm happy that this book had about 95% pure Tamil as against the previous one - Petta. I got a chance to enjoy the author's மொழிவளம், உரைநடை.
Definitely a very good read!
Profile Image for Boopathiraj S.
7 reviews1 follower
Read
May 9, 2023
தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமின்றி தமிழ் மக்களின் அன்றாடத்திற்கு பழக்கமாகியும், பழையதாகியும்போன ஒரு கதைக்கரு. இந்துமதி, சிவசங்கரி, ரமணிச்சந்திரன், லஷ்மி போன்ற எழுத்தாளர்கள் பாணியிலான கதை அதினினும் மலிவான ஒரு வடிவமாகவே இது எழுதப்பட்டிருக்கிறது. எவ்வித அழுத்தமும்,‌ ஆழமும்‌ இல்லாமல் எழுதப்பட்டிருக்கும் ஒரு எழுத்தும் கதாபாத்திரங்களும். அம்பேத்கர், சாதியமைப்பு போன்ற விசயங்கள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டு ஒரு சோகக் கதையை சுயமுன்னேற்றக் கதையாக்கியிருக்கிறது.
இந்தக் கதைகளை தலித் இலக்கியம் என்றோ, வடசென்னை மக்களின் வாழ்க்கை என்றோ குறிப்பிடுவது; மாபெரும் தடைகளை, விமர்சனங்களை, கூச்சல்களை கடந்துவந்த தலித் இலக்கிய வரலாற்றை பின்னுக்கு இழுப்பதாகும். தனது வாழ்வை சமூகம் தந்த வலியை, தழும்புகளை, எழுத்தாக்கி ஒரு போராட்ட வடிவமாக எழுந்த தலித் இலக்கியத்தையும், இயக்கத்தையும், விற்பனைப் பண்டமாக மட்டுமே அணுகும் சந்தைக் கண்ணோட்டத்தோடு எழுதப்படும் இதுபோன்ற படைப்புகள் (கோசலை கோவேறு கழுதைகள் படித்துக்கொண்டிருந்ததாக குறிப்பிடுவதிலிருந்து அது உறுதியாகியிருக்கிறது) தலித் இலக்கியத்தின் அடையாளமாகுமானால் அது ஒரு சாபக்கேடு. இது ஒரு சந்தை சரக்கு மட்டுமே.

பேட்டை ஒரு சினிமா கதை,
கோசலை ஒரு சீரியல் கதை.

தமிழ்பிரபா, கோசலை, நீலம்‌ பதிப்பகம், சென்னை, 2023.
18 reviews1 follower
October 23, 2023
A beautiful story of a woman who fought against the odds and challenges in her life. Her constant fight against the inequality, and using education as a tool for uplifting was beautifully conveyed throughout the story. Unfortunately, the end for this fight isn't visible, and it will go on.
Profile Image for Divakar T Lingam.
11 reviews2 followers
August 31, 2024
கோசலை | தமிழ் பிரபா | நீலம்

நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு முழு தமிழ் நாவலை குறுகிய நாட்களில் படிக்க நேர்ந்தது. அதற்குக் காரணம், "கோசலை" என்ற இந்த நாவலும், தமிழ் பிரபா அவர்கள் எழுதிய கதையின் விவரிப்பும்தான். பொதுவாகவே அதிகாலையில் நாவல் வாசிக்கும் நான், இந்த புத்தகத்தை குறிப்பாக அதிகாலையில் வாசிப்பதை தவிர்த்துவிட்டேன். காரணம், சில நாட்களின் தொடக்கமே பாரமாக அமையக் கூடாது என எண்ணி.

இலக்கியம் நம்மை என்ன உணர வைக்கும்? மேலும், ஒரு எழுத்தாளர் இந்த சமூகத்திற்கும் வாசகர்களுக்கும் என்ன பங்களிப்பை வழங்க முடியும்? சில சமயங்களில், கதையின் மையக் கதாபாத்திரம் தனக்குள் பேசிக்கொள்ளும் உணர்ச்சிகளைப் பற்றி எழுதுவதும், உளவியல் ஆழத்தை இலக்கியமாக மாற்றுவதும் சவாலாக இருக்கும். ஆனால் இலக்கியத்தின் பலம் என்னவென்றால், அதைச் சரியாகச் செய்தால் அது ஆழமாக நம்மை தாக்கும். "கோசலை" அப்படிப்பட்ட ஒரு நாவல்.

மறுபுறம், சமூக கலாச்சார குறிப்புகளுக்கும் இந்த நாவல் ஒரு தனிப்பட்ட ஆவணமாக அமைந்துள்ளது. மெட்ராஸ் பாஷையின் இயல்பான பயன்பாட்டிலிருந்து, பழைய மெட்ராஸின் தெளிவான சித்தரிப்பு, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பரபரப்பான தெருக்களின் சூழல், பழைய கடிதங்கள், பரிசுகள், மற்றும் பலவற்றின் வழியாக, இந்த நாவல் ஒரு அழகான உ���கத்தை உருவாக்குகிறது.

கோசலை, இந்த கதையின் நாயகி. அவள் தன்னையே முழுமையாக அன்புக்காக கொடுத்தவள். முதல் அத்தியாயத்திலேயே இளம் புலியைப் போல் தோன்றும் இளைய கோசலையை காணலாம். கடைசி அத்தியாயத்தில், அதே புலி போன்ற மனோபாவத்துடன், வயதான கோசலையைப் பார்க்கிறோம். இதற்கிடையில், அவளுடைய வாழ்க்கையின் முழு சுற்றுப்பயணத்தையும் இந்த கதை விவரிக்கிறது. நேரடியாக நம்மோடு பேசி, நம்மை காதல், சமூகம், படிநிலை, மற்றும் மிக முக்கியமாக, அனுபவிக்கும் சிறப்புரிமைகள் பற்றிச் சிந்திக்க வைக்கும். சுவாரஸ்யமாக, இந்த நாவல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள 98 வருடங்களுக்கு மேலான பழமையான நூலகம் (கோசென் நூலகம்) பற்றிய வளமான வரலாற்றையும் ஆவணப்படுத்தியுள்ளது. நாவலின் வெளியீட்டிற்கு பிறகு, பலர் மீண்டும் அந்த நூலகத்தைப் நேரில் சென்று பார்க்கத் தொடங்கியதாக சில கட்டுரைகளில் படித்தேன். ஒரு நாவலும், எழுத்தாளரும் சமூகத்திற்குச் செய்யக்கூடியது இதுதான். தமிழ் பிரபாவின் அடுத்த படைப்பிற்காக காத்திருக்கிறேன்.
12 reviews
August 10, 2024
தமிழ் பிரபாவின் 'கோசலை' நாவல், உடல்ரீதியான சவால்களை கொண்ட ஒரு பெண் எதிர்கொள்ளும் ஏமாற்றங்களையும், இழப்பையும், சவால்களையும், துயரங்களையும் மற்றும் அதிலிருந்து அவள் மீண்டெழும் எழுச்சியையும் பற்றியது. கதையில் வரும் பல கதைமாந்தர்களின் வழியே வெளிப்படும் மனிதர்களின் முரண் இயல்பும், அது குறித்த சிந்தனைகளாகவும் வெளிப்படும் பகுதி மனித மனத்தை ஆராயும் முயற்சி. மனிதர்களின் முரண் இயல்பை அவர்களின் போலித்தனம் என்றோ அல்லது முகமூடி என்றோ எளிமைப்படுத்தி புறந்தள்ளாமல், மனித மனங்களின் அடுக்குகளை பற்றியும், புற காரணீகள் மனத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை பற்றியும் விவாதிருப்பது வாசகனை மேலும் சிந்திக்க தூண்டுகிறது. நீண்டு நெடிய துயரங்களையும் ஏமாற்றங்களையும் கொண்ட கோசலையின் வாழ்வில் ஏற்படும் பொருளாதார மீட்சியும் வாழ்தலுக்கான உந்துதலையும் பெரும் தருணம், வாழ்வின் மீதான நம்பிக்கை ஒளியாகவும், வாழ்வு தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யத்தின் மீதான வெளிச்சமாகவும் பாய்கிறது.

குடும்ப அமைப்பிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பெண்ணின் சமூக பங்களிப்பு, நம் சமூகம் காலங்காலமாக பெண்களின் ஆற்றலையும் அன்பையும் குடும்ப அமைப்பின் மீது மடைமாற்றி வைத்திருப்பதின் போதாமையை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தனக்கு இழைக்கப்படும் அநீதிகளும் கொடுமைகளும், இயல்பாக சமூகத்தின் மீதான கோபமாகவும் வெறுப்பாகவும் உருப்பெறும் சாத்தியத்திற்கு மாற்றாக அவற்றை வாழ்வின் மீட்சிக்கான ஆற்றலாய், உந்துதலாய் உருப்பெறுவதால் இந்நாவல் சக மனிதர்களின் மீதான நேசம், அன்பு மற்றும் அஹிம்சையின் பலத்தை நிலைநாட்டுகிறது.

கதை மாந்தர்களின் நிறை, குறையென அவர்களின் அனைத்த்து பக்கங்களும் வெளிப்படுவது, கதை மாந்தர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக்கொள்ளும் உரையாடலின் வழியே வெளிப்படும் நியாய தர்க்கங்கள் போன்ற பகுதிகள், வாசகனை கதைக்கப்பால் பயணிக்க வைத்து மனித உணர்வுகளின் பல்வேறு பரிணாமங்களை அறிய உதவுகிறது. இயக்கங்கள் மற்றும் கோட்பாடுகளின் போதாமை, சாதியின் உளவியல் என இந்நாவல் தொட்டுச்செல்லும் சில பகுதிகள் வாசகனை புதிய சிந்தனையை நோக்கி நகர்த்துகிறது.
Profile Image for Chandrasekar Krishnamurthy.
28 reviews
April 20, 2024
Book #08/2024
கோசலை (புதினம்)(தமிழ்ப்பிரபா)
Kosalai(Tamil Novel)(Tamizhpraba)(220 pages)
From the author of pettai comes the second novel that was released in the book fair 2023. Again a novel of the oppressed that is set around north madras . I have become a fan and in awe about how the weiter includes geography as a backdrop to make his impact in the narration. The story is about kosalai's life which comes full circle cause of the choices she makes and people she meets. She is one of us as tamizhprabha pens how we/she go through an internal conflict in our daily lives. A short read with some powerful pages. A portion centered around chindatripet again. Though I have travelled through the area the descriptions from pettai and kosalai wants me to do a detailed tour of the spots mentioned.
Profile Image for Sharath Jothi.
29 reviews
February 5, 2023
Kosalai will make you fall in love with her. I ended up with wet eyes every now and then. Then best part was the writing of such complex characters with so much ease. Tamil Prabha effortlessly takes the readers into the world of Kosalai. Once you are inside you stay so close to Kosalai and root for her happiness. Lot of dramatic moments were written with such visual details and crispness. After a point I forgot I am reading a Novel. It felt more like reading a movie screenplay. So much for the readers to anticipate and fill in for themselves.
Profile Image for Umesh Kesavan.
451 reviews178 followers
February 23, 2023
Tamil Prabha's touching biographical portrait of a woman afflicted with dwarfism shines because of it's minimalism and politics. How a woman neglected by her own family goes on to win the hearts of an entire Madras locality is sketched in affecting prose. The hypocrisy of certain "comrades" who preach idealism outside but practice casteism at home is beautifully brought out. It is fitting that a novel about a person who fights major odds to succeed has references of Dr.B.R.Ambedkar. Whenever an underdog wins, Ambedkar smiles from the clouds above.

Profile Image for Kamali Joe.
23 reviews
December 25, 2025
கோசலை... மேகம் பார்க்கும் வானம் அவள்.

அப்பா, தம்பி, கணவன்,மகள் என குறுகிய வட்டத்திற்குள் உழன்றுக்கொண்டு வரும் கோசலைக்கு தான் நம்பினவர்களின்,தான் நேசித்தவர்களின் ஆதரவற்று வெறுமையாய் நிற்கையில் எதற்காக இந்த வாழ்க்கை? தன்னை போன்ற ஓர் உடல் குறைபாடு உள்ள சமூகத்தால் புறக்கணிக்க படும் தோற்றம் கொண்ட பெண்ணெருத்தி, சிறு வயது முதல் தன் மீதே கழிவிரக்கம் கொண்டு வளர்ந்து வந்தவள் வாழ்வில் சந்திக்கும் பல மாறுபாடுகளும், சமூகத்தில் அவள் கொண்டு வரும் மாற்றங்களுமே கதையின் சுருக்கம்.
கோசலையின் தாக்கம் படிப்போர் அனைவரையும் கட்டாயாம் ஆட்கொல்லும்.
7 reviews4 followers
March 20, 2023
தமிழ்ப் பிரபாவின் பேட்டை நாவல் படித்தபின் அவரின் அடுத்த நாவல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

அனைத்திலும் முழுமை பெற்ற மனிதர் எவருமில்லாத இவ்வுலகில் குறைமனிதர், நிறைமனிதர் என்ற இருமைகள் உருவாகி, வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையில் நெடுங்காலப் போர் ஒன்று நடந்துவருகிறது. இச்சமரில் முகாந்திரங்கள் ஏதுமின்றி, தன் உடற்கூறால் மட்டுமே சிக்கிக்கொள்ளும் கோசலை, புறக்கணிப்பையும், துரோகத்தையும், ஓடுக்குமுறைகளையும் தியாகத்தால் எதிர்கொண்டு எழுந்து நிற்கிறாள். நுண்மையிலிருந்து பெரும் ஆகிருதியாக விரியும் ஆலம் விதையின் பண்பைப் போன்றது கோசலையின் வாழ்வு.

அப்போ, கோசலையை கடவுள் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுவாரோ என்று பயந்த போது அவளும் சாதாரண மனுசி தான் என்பதை உஷா மீது அவள் காட்டும் பொறாமை மூலம் விளக்குகிறார்.

Profile Image for Arunmozhi Ganesan.
108 reviews24 followers
January 23, 2023
கோசலையை பிரிந்த பின் தன் மேல் பெரிதாக தவறில்லையென்று ஜோதி சமாதானம் செய்துகொள்ளும் sequence is absolutely brilliant. ஒடுக்கப்பட்டோருடன் நேசமாக இருப்பவர்கள் அதிலிருந்து பிறழும் போது தாங்கள் முன்னர் சமத்துவத்துடன் பழகியதையே பெருந்தன்மையாக எண்ணி தங்களின் தற்போதைய விலகலை அவர்களே நியாயபடுத்துவதுடன் ஒப்பிடத்தக்க பகுதி அது.

கோசலை குறையில்லாதவள் இல்லை. அவளின் insecurity குறிப்பாக தம்பியின் திருமணத்துக்கு பின் அவளின் செயல்களில் கச்சிதமாக சொல்லப்பட்டுள்ளது. கனவென்றாலும் ஜோதியின் வேறொரு மகளை கல்லால் அடிக்கத்தோன்றும் சம்பவம் அவளின் வன்மத்தை விளக்கும்.

கணவன் விட்டு செல்வது, பின் பிள்ளையை இழப்பது என்ற தொடர் சோகங்கள் கருவாச்சி காவியத்தை நினைவுபடுத்தினாலும் அவளை போல் அல்லாது அம்பேத்கரை பற்றி மேலெழுகிறாள் கோசலை.

Emergency, இரட்டை கோபுரம் தாக்குதல், சுனாமி, தலைமை செயலக கட்டிடத்திற்காக மக்களை துரைப்பாக்கத்திற்கு மாற்றியது என்று ஒரு பெரிய long timelineல் கதை கடக்கிறது.

சார்பட்டா போல ஒரு கதாபாத்திர அறிமுகம் பின் அதன் பிண்ணனி என்ற கதை சொல்லல் கவனிக்க வைக்கிறது. சாம்பவமூர்த்தி, மீனாள் என்று அதே பாணி கதையின் பின்பாதியிலும் பின்பற்றபட்டிருக்கலாம்.

திடீரென்று வரும் பம்பிங் ஸ்டேசன் தகவல்கள் நன்றாக இருந்தாலும் திணிப்பாக தோன்றுகிறது. விசாவுக்காக காத்திருத்தல் படித்துவிட்டு அழும் சம்பவங்களும் செயற்கையாக இருக்கிறது.

கம்யூனிஸ்ட்கள் சாதியை பொருட்படுத்தாது இருக்கிறார்கள் என்ற விமர்சனம் காலம் காலமாக இருப்பது தான். ஆனால் அலங்காரவேலன் என்று ஒருவருக்கு பெயரை அவரை வைத்து சாதி பார்ப்பவராக காண்பிப்பதெல்லாம் கொடூர தாக்குதல். தொடைச்சூட்டை தீர்க்க என்பதெல்லாம் pure வன்மம். நாட்டில் விமர்சிக்க ஆளே இல்லை என்பது போல் கம்யூனிஸ்ட்களை இடிக்கும் நீலம் ஆட்களை புரிந்து கொள்ள இயலவில்லை.

நடையடைத்த பிறகும் கோசலையையும் ரேவதியையும் பார்த்து ‘நெகிழ்ந்து’ கோவிலுக்குள் அனுமதிக்கிறார் அய்யர் ஒருவர். தாலியை கழட்டி வைத்ததை பார்த்து வானத்தை பார்த்து வேண்டிக்கொள்கிறார். அடஅட. டேய் காசி. நீயுமாடா?
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Mohan Nath.
18 reviews
July 2, 2023
அலங்கார நடை இல்லாமல் மிக இயல்பாக கோசலையின் வாழ்வில் உள்ள இன்பங்களை, காதலை, ஆற்றாமையை, துயரத்தை மிக நேர்தியாக ஆசிரியர் நம் உள் கடத்துகிறார். முற்போக்கு அரசியல் பேசுபவர்களிலும் சிலர் சொந்த வாழ்கையில் எப்படி சாதியமும், அடக்குமுறையும் தரும் போதையில் திளைக்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டப்பட்ட விதம் அற்புதம். கோயில் உட்கார்ந்து பூர்ணிமாவிடம் கோசலை 'என்னை நினைத்துக்கொள்' என்று கூறுவது, அத்தனை வாசகர்களுக்கும், வாழ்வின் தொய்வுகளை கடக்க உதவும் உந்து சக்தியா இருக்கும் என நினைக்கிறேன். தமிழின் சிறந்த நாவல்களில் கோசலைக்கு முதன்மையான இடம் இருக்கும் என அருதியிட்டு கூறமுடியம்.
Profile Image for Bala.
13 reviews
January 20, 2023
கோசலை ஒரு போராளி. அவள் கதையின் ஊடாக மனிதர்கள் அனைவருக்கும் எவ்வளவு போராட்டங்கள் இருக்கிறதென உணர்ந்தேன். முடிவிலா ஒரு தேடல் மட்டுமே இந்த வாழ்கையின் காரணியாக இருக்க முடியும் என்றும் உணர்ந்தேன்.

இருத்தலின் காரணங்களை மிகவும் அழகாக ஆய்ந்திருக்கிரார் தமிழ்ப்பிரபா. தனிமையை விரட்ட நாம் அன்றாடம் செய்யும் முயற்சிகளையும், இனிமை பொங்கும் மொழியில் எழுதியுள்ளார். அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்

"அவள் மீது காட்டப்பட்ட வெருப்பையெல்லாம், ஆற்றலாக மாற்றினாள் கோசலை!"
Displaying 1 - 24 of 24 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.