💥தமிழர்களின் உணவு முறை, அதன் வரலாறு, நமது வாழ்வு முறை, நாம் கொண்டாடும் பண்டிகைகள், பொழுதுபோக்க நாம் விளையாடும் விளையாட்டுக்கள், பௌத்த மதம், சமண மதம் மற்றும் சித்தர்கள் குறித்த தகவல்கள், சமயங்களுக்கு இடையே நடந்த தத்துவச் சண்டைகள், கறுப்பு நிறம் குறித்து நமது இலக்கியங்களில் காணப்பெறும் தகவல்கள் என
ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
💥தமிழர்களின் உணவு முறை, அதில் தற்போதைய காலக் கட்டத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள், உணவு சார்ந்த நம்பிக்கைகள், நாம் பயன்படுத்திய எண்ணெய் பற்றிய குறிப்புகள், தேங்காய் தமிழகத்திற்கு வந்த வரலாறு, சிறு தெய்வங்களின் உணவு
💥வீடு கட்டும் முறை, நமது உடையும் அதில் அடைந்துள்ள மாற்றங்களும், குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் முறை, தாலி குறித்து இலக்கியங்களில் கிடைக்கும் சான்றுகள்
💥பள்ளிக்கூடம்/கல்லூரி போன்ற வார்த்தைகளுக்கும் சமண மதத்திற்கும் உள்ள தொடர்பு, சமண மதத்தின் வீழ்ச்சிக்குக்கான காரணங்கள், சித்தர்கள் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தமைக்கு காரணங்கள், பட்டிமண்டபம் என்ற கலை வடிவத்திற்கும் பௌத்த மதத்திற்கும் உள்ள தொடர்பு
💥பொழுது போக்குவதற்காக ஆடப்படும் பல்லாங்குழி முதலான விளையாட்டுக்களில் இருந்து பெறப்படும் சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த கருத்தியல்கள்
💥தைப்பூசம், தீபாவளி, விநாயகர் வழிபாடு போன்றவை தமிழகத்தில் தோன்றிய வரலாறு, நாகூர் தர்க்காவுக்கு சென்று வழிபடும் தமிழர்கள் போலவே இஸ்லாமியர்கள் வழிபடும் விருத்தாசலத்தில் உள்ள ‘இந்து’ கோவில், பண்டாரம் என்ற வார்த்தைக்கான உண்மையான பொருள், இறப்புச் சடங்குகள் மூலம் மரணத்தைப் பற்றிய தமிழர்களின் எண்ணம்,
💥கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை கொண்டாடப்பட்ட கருப்பு நிறம் அதற்குப் பிறகு அழகற்றதாக கருதப்பட்டதற்கான காரணங்கள்
என இவ்வளவு செய்திகளையும், இதற்கு மேலும் அதிகமான தகவல்களையும் இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.