பலநூறு ஆண்டுகளாகத் தமிழர்கள் கேட்டும் பார்த்தும் வாசித்தும் கற்பனையில் சேர்த்துவைத்திருந்த போர்களுக்கும் அதன் வன்முறைகளுக்கும் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் நேரடி சாட்சியாக இருந்து அனுபவித்தவர்கள் ஈழத் தமிழர்கள். செல்வம் அருளானந்தத்தின் தனிக்குரலில் அவர்களின் ஒட்டுமொத்தத் துயரமும் வெளிப்படுகிறது. இலட்சியம், தியாகம், விடுதலை ஆகிய சொற்கள் இவரது மொழியில் புதிய அர்த்தங்களைப் பெறுகின்றன. செல்வம் தன்னுடைய அனுபவங்களைப் புகாரோ குற்றச்சாட்டோ பொருமலோ இன்றிப் பகடியாகவும் எதையும் துறக்க முடியாத துறவியின் பாவனையிலும் எழுதிச் செல்கிறார். இது அவரின் மூன்றாவது அனுபவப் புனைவு நூல்.
’காலம்’ செல்வம் (செல்வம் அருளானந்தம்) (ஜூன் 30, 1953) கனடாவில் இருந்து வெளிவரும் காலம் என்னும் சிற்றிதழின் ஆசிரியர். ’வாழும்தமிழ்’ என்னும் இலக்கிய அமைப்பின் நிறுவனர். எழுத்தாளர். இலக்கியச்செயல்பாடுகளுடன் தெருக்கூத்திலும் ஈடுபாடு கொண்டவர்.
செல்வம் யாழ்ப்பாணம் சில்லாலையில் ஜூன் 30, 1953-ல் சவரிமுத்து - திரேசம்மாவுக்கு பிறந்தார். சில்லாலை ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் புனித ஹென்றி கல்லூரி (St. Henry’s College) இளவாலையில் பட்டப்படிப்பையும் புனித அகஸ்டின் பிரெஞ்சு மொழி பள்ளியில் (St. Augustine French Language School Paris, France) ல் பிரெஞ்சு மொழியும் மருத்துவத் தாதிக்கான பட்டயப்படிப்பு (Diploma from St. Daniel College Toronto) கனடாவிலும் முடித்தார்.
செல்வம் 1975-ல் நான் என்னும் இதழில் தன் முதல் கவிதையை எழுதினார். ஜெயகாந்தன், எஸ். பொன்னுத்துரை, சுந்தர ராமசாமி, ஜானகிராமன் ஆகியோரை இலக்கிய முன்னோடிகளாக கருதுகிறார். செல்வம் தொடக்கத்தில் கவிதைகள் எழுதினார். பின்னர் நீண்டகாலம் ஏதும் எழுதவில்லை. அவருடைய அகதிவாழ்க்கையைப் பற்றி எழுதிய எழுதித்தீரா பக்கங்கள் என்னும் நூல் அதன் இயல்பான நகைச்சுவையால் புகழ்பெற்றது. தொடர்ந்து அதன் அடுத்த பகுதியான சொற்களில் சுழலும் உலகம் நூலையும் எழுதினார்.
புலம்பெயர் வாழ்க்கையில் இரண்டு சிற்றிதழ்களை நடத்தினார். குமார் மூர்த்தி என்னும் நண்பருடன் இணைந்து அவர் தொடங்கிய காலம் சிற்றிதழ் முப்பதாண்டுகளாக கனடா டொரொண்டோ நகரில் இருந்து வெளிவருகிறது. ஈழத்து இலக்கியவாதிகளுக்கும் தமிழ் இலக்கியவாதிகளுக்கும் காலம் வெளியிட்ட சிறப்பிதழ்கள் இலக்கிய ஆவணங்களாகும்.
பார்வை சஞ்சிகை (1987-1989) (ஆசிரியர்) (Montreal, Canada) காலம் சஞ்சிகை (1990 - Present) (Toronto)
எழுபதுகள் மற்றும் எண்பதுகளின் யாழ்ப்பாணத்திலிருந்த சாதி ஒடுக்குமுறைகளும் இனப்பிரச்சினையும் புலம்பெயர்தலும்தான் நாவலின் அடிநாதம். எழுதப்பட்ட விதம் வாசித்து முடிக்காமல் வைக்க விடாது. யாழ்ப்பாண பின்புலமுள்ளோருக்கு அல்லது புதிய தலைமுறை அறிந்து கொள்ள வாசிக்கலாம் இந்த அருமையான புத்தகத்தை