கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.
கதைச் சுருக்கம்
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது, அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து , அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை , தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.
கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்கரகளிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான்.மஞ்சளழகி அவனிடம் காதல் வயபடுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான். பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைகரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான் . ஸ்ரீவிஜயத்தை கைப்பற்றி சோழ புலிக்கொடியை பறக்கவிடுகிறான் . போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
A exciting plot wasted by the slowness of triangular romantic track. However,the story accelerates in patches & leaves you with a mixed feeling. Excellent descriptive writing which creates the entire scene visually. A sure read, if you can bear the romantic banter.
One of the best historic novel from Sandilyan. I have read this book almost 4- 5 times, once again I read this novel a week back. The way he had portrayed the characters, war sequence, detail and love are the best. We could easily imagine and picturise the story well.
Even the first page starts with siledai (Kanji irukka Kalingam kulaindha)...awesome and hats off to the Late Sandilyan (Legend of Tamil historic novel)
After I completed this book, I just read a book called Chozhargal by KA Nilakanta Sastri (Vol 1&2); the info given in the novel are almost matching with the referred period. Though the stroy is fiction in nature however there are real events and locations referred all over the pages.
Illayapallavan, Manjalazhagi, Kanchanadevi, Ahutha, Amir and Paalikullan - all this character will stick in our mind and will not be erased easily.
Anyone who wanna start Tamil historical novel, let this is be your starting point....just go with the flow and once u cross 30 to 50 pages, you will never be disappointed and you will start sailing together with kadal pura.
அறுபதுகளின் இறுதியில் குமுதம் வாரப் பத்திரிக்கையில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் வெளிவந்து தமிழக வாசகர்களைக் கலக்கிய சரித்திர நவீனம், சாண்டில்யனின்
"கடல்புறா".
யவன ராணியின் வெற்றிக்குப் பிறகு மாபெரும் வெற்றி கண்டது கடல்புறா.
இதன் முதற்பதிப்பு 1967 மார்ச் மாதம் வெளிவந்தது. ஐனவரி 2016ல் ஐம்பத்தி நான்காம் பதிப்பைக் கண்டது. ஐம்பது வருடங்களில் 54 பதிப்புகள்!
ஏறத்தாழ 1800 பக்கங்களை உள்ளடக்கி மூன்று பாகங்களாக வானதி பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.
நாவலின் பெரும் பகுதியில் நாம் கடலிலே காப்பிய நாயகன் இளைய பல்லவனோடு அழகுமிகு 'கடல் புறா' என்னும் கப்பலில் சஞ்சரிக்கிறோம். கதையின் இரு நாயகிகள் - காஞ்சனாதேவி, மஞ்சளழகி.
இருவருமே இளைய பல்லவன் மீது மையல் கொள்கிறார்கள். இளையபல்லவனும் இருவர் மீதும் மனதைப் பறிகொடுக்கிறான்.
கடற்போர், கப்பலின் நுணுக்கங்கள், கடலிலே காற்று பலமாக வீசும்போது கப்பலை எப்படிச் செலுத்துவது என்று கடல் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் கொள்ளைத்தலைவன் அஹூதாவிடம் கற்றுக் கொள்கிறான்.
இளையபல்லவனின் கடல் பயணத்தோடு பயணிப்பவர்கள் அஹூதாவின் சீடன் அமீர், கண்டியத் தேவன் மற்றும் மருத்துவன் சேந்தன் கூலவாணிகன். இவர்களின் துணை கொண்டு சோழ நாட்டின் படைத்தலைவன் இளைய பல்லவன் வெற்றிகள் பல காண்கிறான். விஜய சாம்ராஜ்யத்தின் அரியணைக்கு உரியவரான குணவர்மரைத் துரத்தி விட்டு பதவியில் ஏறிய அவரது ஒன்று விட்ட சகோதரன் ஜெயவர்மனின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டுகிறான். தோற்ற ஜெயவர்மனின் மகள் மஞ்சளழகியையும், குணவர்மனின் மகள் காஞ்சனா தேவியையும் சோழச் சக்ரவர்த்தி வீரராஜேந்திரர் ஆசிகளோடு மணம் செய்து கொள்கிறான். அதற்குமுன் அக்ஷயமுனையின் பலம் பொருந்திய கோட்டைத் தலைவன் பலவர்மனையும் அடிபணிய வைக்கிறான். கலிங்கமும் அவன் காலடியில் விழுகிறது.
இளம் வயதிலியே தாய் தந்தையரை இழந்த அஹூதாவும் அவனது தங்கையும் அக்ஷயமுனைக் கடற்கரையோரம் குடிசையில் வாழ்ந்து வரும் போது அஹூதாவின் தங்கை பலவர்மனால் அபகரிக்கப்பட்டு ஜெயவர்மனின் ஆசைக்கேற்ப அவனது அந்தப்புரத்தில் சேர்த்து விடப்படுகிறாள். அவள் ஜெயவர்மனால் ஒரு பெண் குழந்தையை ஈன்றதும் மடிகிறாள். அந்தக் குழந்தைதான் மஞ்சளழகி. சோழச் சக்ரவர்த்தி வீரராஜேந்திரர் காஞ்சனா தேவியையும், மஞ்சளழகியையும் இளையபல்லவனிடம் ஒப்படைத்து அவனை வண்டை நாட்டுக்கு மன்னாக்குகிறார்.
இருமலர்களையும் அருகில் வைத்துக் கொண்டு சாளரத்தின் வழியாக கடல் புறாவை நோக்குகிறான். அது வெட்கம் மேலிட்டு முகம் திருப்பிக் கொள்வதாக கதை முடிகிறது.
நாமும் கடற்பயணத்திலிருந்தும் இளைய பல்லவன், இரு அரசிகள், சோழ இளவல் அநபாயன், அஹூதா, கூலவாணிகன், கண்டியத்தேவன், அமீர், கலிங்கம், கடாரம், சொர்ணத்தீவு, அக்ஷயமுனை, பாலூர்ப் பெருந்துறை, புகார்த் துறைமுகம், மரக்கலங்கள் ஆக எல்லோரிடமிருந்தும் விடைபெறுகிறோம்.
சுபம்.
This entire review has been hidden because of spoilers.
Unlike பொன்னியின் செல்வன் this one is only for hardcore Tamil readers. Others may find it lagging. With rich content in literature, the story moves forward very slowly. Though last 50 pages can be gripping and exciting.
superb story illaiya pallavan character romba nalla irunthuthu avanoda por muraigal nalla irukku nama epdi patta oru nattla irukrom book ah padikkapovey romba perumaiya irukku
இக்கதை சோழர்களுக்கும் கலிங்கர்களுக்கும் இடையே இருந்த சச்சரவுகளை கலைய சோழ அரசு முன்னெடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பதும், தன் நாட்டில் இருக்கும் தமிழர்களை துன்புறுத்துவதும் என்னும் போக்கில் ஈடு பட்டிருந்த பீம வர்மனைப் பற்றியும், சோழர்களின் சார்பாக அநபாய சோழரும், கருணாகர பல்லவரும் புரியும் வீர தீர செயல்களும் என விறுவிறுப்புடன் தொடங்குகிறது.
நிலவியல் நோக்கில் பார்ப்பின் கலிங்கத்தின் பாலூர் துறைமுகத்தின் பலமும், அக்காலத்தில் தமிழ்நாட்டுடன் வாணிபம் புரிந்த அரேபியர்கள், சீனர்கள், யவணர்கள் என பெரும் பெருமையையும் புத்தகம் முழுவதும் பல மேற்க்கோள்களுடன் விளக்கியுள்ளார் சாண்டில்யன்.
சாண்டில்யணின் காதல் வருணனைகளும், உரையாடல்களும் நாம் அறிந்ததே., வீரமும் அழகும் ஒரு சேர கலந்த இளவரசி காஞ்சனாவுக்கும் கருணாகர பல்லவருக்குமான காதல் இந்த போர்ச் சூழலில் தொடர என காதலும், வீரமும், நட்பும், சூழ்ச்சியும் என விறுவிறுப்பான கதைக் களத்துக்கு அணிகலனான வர்ணனைகள்.
வெகு நாட்கள் கடந்த பின், சரித்திர நாவல் படிக்க ஆர்வம் ஏற்பட்டவுடன், புத்தக அலமாரியில் கடந்த வருடம் வாங்கிய கடல்புறா தெரிந்தது. சரி, எடுக்கலாம் அனால் முன்னர் மாதிரி சரித்திர எழுத்துக்கள் நம்மை ஆர்ப்பரித்து இழுக்குமா? என்று பல கேள்விகள் ஏன் எழுந்தன என்று தெரியவில்லை. ஒரு வேளை, இந்த நீண்ட இடைவெளியில் படித்த புத்தகங்களின் தாக்கம், இலக்கியத்தின், சரித்திரத்தின் ஈர்ப்பை நீர்த்திருக்க செய்திருக்குமோ என்ற தேவையற்ற அதி மேதாவி சிந்தனைகளை அப்புறப்படுத்தி மெல்ல முன்னுரை, கதை என்று மூழ்கத் தொடங்கினேன்.
ஒரு சரித்திர நாவல் எப்படி இருக்கும், அல்லது அத��� வெற்றி பெற்றது எதனால் என்பதையெல்லாம் கடந்து அந்த சரித்திரத்தை நமக்கு கடத்தும் எழுத்தாளர்களின் நாடு நிலைப் பார்வை, அந்த காலத்து சமூக வழக்கத்தின் தெளிவு, வரலாற்று சமநிலை என்று எல்லாவற்றிலும், நம் காலத்தை கடந்த கற்பனை நிலையில் செல்வதனால் அதன் ஈர்ப்பு இன்னும் உயிர்ப்புடன் இருந்ததில் மகிழ்ச்சி.
இனி மெல்ல கதைக்குள் செல்வோம். 50 வருடங்களுக்கு முன்னர் குமுதத்தில் வெளிவந்து பல பதிப்புகள் வந்த நாவலாதனால், இளைய பல்லவரும், அவருடைய படைத்தலைவனுக்கான வீரமும், காதலும், கடமையும் பல வாசகர்களுக்கு முன்னமே வெகுவாக அறிமுகம் ஆகியிருக்கும். ஆதலால் இந்த இடுகை முழுவதுமே நூல் வாசிப்பில் என்னைக் கவர்ந்த இடங்களும், அதில் சாண்டில்யன் அவர்களின் எழுத்தின் பிரமிப்பையும் அடிக்கோடிட்டே படியே செல்லும்.
சோழப்பேரரசின் அன்றைய மிகப்பெரும் படைத்தலைவனாக விளங்கிய குணசேகரப்பல்லவனுக்கு இடப்பட்ட கட்டளைக்கான இளையப்பல்லவரின் பாலூர்ப் பெருந்துறை பயணம் மற்றும் அங்கே நாடாகும் கலிங்கா மன்னன் பீமனுக்கு எதிரான நிகழ்வுகளின் அதிவேகத் தொகுப்பே கடல்புறா நாவலின் முதல் பாகம். அநபாயர் என்று அழைக்கப்படும் குலோத்துங்க சோழர், இளைய பல்லவனின் மிக உற்ற தோழர். அவரும் பாலூர்ப் பெருந்துறையில் தான் இருப்பதாக அன்றைய தகவல்.
கலிங்கத்தின் பெரும் அரசரான குணவர்மரையும், அவரது மகள் காஞ்சனா தேவியையும் காப்பாற்றி அவர்களை தமிழகம் கொண்டு சேர்க்க வேண்டிய ஆணையோடு பாலூர் வந்திருந்தார் இளையப் பல்லவர். இப்படியாக ஆரம்பித்த நாவலின் பக்கத்திற்கு பக்கம் தன் இலகுவான, அதே சமயத்தில் ஈர்ப்பான மொழியால் சாண்டில்யன் மெல்ல மெல்ல அனைத்தையும் விளங்க வைத்துக் கொண்டே கதையை நகர்த்துகிறார்.
இவ்வாறு நகர்ந்து செல்லுகின்ற கதையில் ஏன் அரசர்கள் உதித்தனர் என்பதற்கான தர்க்கம் இருக்கிறது. ஆதி மனிதர்களில் அரசர்கள் இருந்தார்களா என்ன? முதலில் மனித குலத்திற்கு அப்படியான தலைமை தேவைப்பட்டது? தலைமை இல்லாமல் இன்று யாரும் இருந்திட இயலுமா? அப்படிப்பட்ட எண்ணங்கள் ஏன் வந்தன என்பதை சாண்டில்யன் இவ்வாறு விளக்குகிறார்.
"ஆம். அநீதிகளிலிருந்துதான் புது அரசுகள் பிறக்கின்றன. புது அரசுகள் அல்ல/என்ன, பழைய அரசுகளும் அப்படிதான் பிறந்தன. அரசுகள் உதித்ததற்கு அநீதியே அஸ்திவாரம். அரசோ, அரசனோ இல்லாமல் மக்கள் முதலில் கூட்டமாகத்தான் வாழ்ந்தார்கள். அப்பொழுது மக்களுக்குத் தேவை குறைவாயிருந்தது. தேவை குறைவாயிருந்ததால் திருப்தியிருந்தது. திருப்தி இருந்ததால் சண்டையில்லை, சச்சரவில்லை, அமைதி இருந்தது.
மனிதன் மெல்ல மெல்லத் தேவையை அதிகப்படுத்திக் கொண்டான். அதிகத் தேவை அதிருப்தியைத் தந்தது. அதிருப்தி அசூசையைத் தந்தது. அசூயை சர்ச்சையைத் தந்தது. அதை விலக்கி அமைதியாக வாழ்க்கை நடத்த மனிதக் கூட்டங்களுக்கு தலைவன் அவசியமாயிற்று. அந்த அவசியம் தலைவனை சிருஷ்டித்தது. ஆரம்பத்தில் தலைவன் தேவைக்கும் கூட்டத்தின் தேவைக்கும் வித்தியாசமில்லாமலிருந்தது. காலம் வித்தியாசத்தை விரிய வைத்தது. தலைவன் அரசனானான். அரசுக்கு தனி அலங்காரங்கள் ஏற்பட்டன. தனி அந்தஸ்து ஏற்பட்டது. அத்தகைய அரசனைக் காப்பதற்கு மக்களின் ஒரு கூட்டம் தேவைப்பட்டது. அது படை என்று பெயர் பெற்றது. இப்படி ஏற்பட்ட அரசர்கள் பொதுப்பணியைத் தனித்தனி சொந்த நாடுகளாகப் பிரித்து எடுத்துக் கொண்டனர். இப்படிப் பிரிந்த நாடுகளில் வளர்க்கப்பட்ட சுயநலம் (இதற்கு தேசபக்தி என்பது தற்காலப் பெயர்) நாடுகளை மொத வைத்தது. அரசர்கள் பேச்சாளர்கள் ஆனார்கள். இப்படி அதிருப்தி, அசூயை, தனிப்பட்ட நபர்கள் இழைத்த அநீதி அரசுகளாகவும், பேரரசுகளாகவும் வளர்ந்தன".
மேலே எழுதப்பட்ட வரிகள் அச்சிற்கு வந்து 50 வருடங்கள் கடந்தும், என்னென்ன உள் அர்த்தங்களை இன்றைக்கும் கடத்தியது என்ற பிரமிப்பில் மீண்டும் ஆழமாய் தொலைந்து போனேன். இப்படி இந்த நாவல் முழுவதிலும் எண்ணற்ற கருத்து ஏற்றங்களும், ஒரு தலைபட்சமில்லாத முடிந்த அளவுக்கான கருத்தின் அடிக்கோடிடல்களும் நீண்டு கொண்டே செல்கின்றன.
இப்படியாக குணவர்மரையும், அவரது மகளையும் காப்பாற்ற நிகழ்கின்ற செயல்களில் இளையப்பல்லவருக்கும், அநபாயருக்கும் அமீர் மற்றும் அவரின் குருநாதரான சீனத்துக் கடலோடி அகூதா இவர்கள் சேர்ந்து திட்டத்தை செயல்படுத்த விழைவது தான் கடல் புறா முதல் பாகத்தின் மிகப் பிரதானமான கதை இழை. இதில் அநபாயரிடம் அகூதா அநீதியைப் பற்றி விளக்கும் இடம் ஒன்று உண்டு. முக்கியமான உண்மை: எவ்வளவு பெரிய உத்தமர்களாய் உருப்பெற்றிருந்தாலும், அநீதி தெரியாது என்று சொன்னாலும், எந்த காலத்திலேனும் சிறு அநீதி கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும். அப்படியான அநீதியை நிகழ்த்தாத மன்னன், பேரரசன் என்ற மயப்பின்னல்களைத் தாண்டியே சரித்திரங்களைப் படிக்கவும், புரிந்து கொள்ளவும் வேண்டிய நிலையை அகூதா பின்வருமாறு விளக்குவதாக சாண்டில்யன் கூறுகிறார்.
"அநீதிக்கு பதில் அநீதி செய்ய தமிழ் விரும்புவதில்லை" என்றான் அநபாயன்.
"நாகரீகமுள்ள யாரும் விரும்புவதில்லை. ஆனால் விருப்பத்துக்கும், நீதிக்கும், நேர்மைக்கும் மாறாக நடக்க வேண்டிய சமயங்கள் சரித்திரங்களில் ஏற்படுகின்றன. மங்கோலிய கித்தான், கின் இனத்தவர்களுக்கு நீதி சொல் புரியாது. வாளின் பதில் ஒன்றுதான் புரியும். ஆகையால் தான் அவர்களை சிறை பிடித்தேன். அவர்கள் இல்லங்களைச் சூறையாடினேன். அதனால் தூரத்திலிருக்கும் நீங்கள் என்னை இகழலாம். என் மக்கள் என்னை இகழ்வதில்லை. உங்கள் நாட்டுப் பழமொழியொன்றைக் கேட்டிருக்கிறேன். புலியிடம் வேதாந்தம் பேசிப் பயனில்லையென்று சொல்கிறார்கள். நாகரீகமற்றவர்களுக்கு வாள் ஒன்று தான் பதில் சொல்ல முடியும்" என்று திட்டவட்டமாக அறிவித்தான் அகூதா.
சமீபத்தில், பிரபஞ்சன் ஆய்வுக்கட்டுரைப் பத்திகளில் தோழி என்ற கட்டுரையைப் படித்ததிலிருந்து இந்த சரித்திர நாவல்களில் தோன்றும் தோழிகள் மீது சற்று இரக்கம் கொண்டிருந்த நாட்கள். ஆனால் இந்த நாவல் முழுவதிலும் காதலும், இணக்கமும், ரம்மியமான எண்ணப் பின்னல்கள், வர்ணிப்புகள் என்று அனைத்தும் காஞ்சனா தேவிக்கும், இளையப்பல்லவருக்கும் இடையில் இருப்பினும் - இந்த தோழியரின் பலி கொடுக்கப்பட்ட கோட்டுச்சித்திரங்கள் எதுவும் இல்லை என்பதனையும் முழுமையாக ரசித்த கடந்து போனேன் என்று சொல்லிட வேண்டும்.
"தெய்வீகமான எதுவும் முழுதும் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அப்படிப் புலப்படாத காரணத்தாலேயே அதில் மர்மம் கலக்கிறது. அப்படித் துளிர்விடும் மர்மமே அதனிடம் ஆசையைத் தூண்டுகிறது. இது இயற்கையின் விசித்திரம்" என்று எண்ணினான் இளையப்பல்லவன்.
இப்படி புலப்படத்தையும், புலப்படாததையும் காஞ்சனாவிடம் பேசிக் கொண்டே அடுத்தக்கட்ட திட்டங்களில் வேகமாய் திரண்டு செல்லும் கதை எப்போதும். இடையில் நிறைய செய்திகள் இருக்கின்றன. உற்சாகம் தொனிக்கிறது, கவலை சூழ்கிறது, அறம் அர்ப்பணிக்கிறது, சூது தழைக்கிறது, நன்மைகள் தாழ் அடைக்கின்றன, தீமைகள் எழுந்து நகர்கின்றன, சூழ்ச்சிகள், அழகு, அபாயம் என்று சாண்டில்யன் அவர்கள் எல்லா நிகழ்வுகளையும் மிகுந்த சீரிய சொற்கோடுகளில் நகர்த்துகிறார்.
சீனத்துக் குடங்களில் அமர வைத்து மரக்கலத்துக்கு கொண்டு சென்று கலிங்க நாட்டில் இருந்து தப்பிக்க வைக்கின்ற திட்டம் தீட்டப்பட்டு அவரவரின் கடமைகள் எடுத்துரைக்கப்படுகின்றன. கலிங்கத்து மன்னன் பீமனைத் தாண்டி எவ்வாறு இவர்கள் அனைவரும் தப்புகின்றனர் என்பதையே முதல் பாகம் குறியிட்டுக் காட்டுகிறது. புத்தகத்தின் தலைப்பை வெளியிடும் வரிகளோடு முதல் பாகத்தைப் பற்றி முடிக்கிறேன்.
"எதுவும் வேண்டாம் தேவி. நான் எங்கும் இருந்தாலும் புறாவின் நினைப்பு எனக்கிருக்கும். இங்கு வந்ததும் வீட்டுப்புறா ஒன்றைக் கண்டேன். பிறகு காட்டுப்புறா ஒன்று கைக்கு வந்தது. இனி கடற்புறவொன்றும் கப்பலில் பறக்கும்!" என்றான் இளையப்பல்லவன், ஆபத்தான நினைப்புகளை அவள் இதயத்திலிருந்து அகற்ற. அவள் தனது கண்களை அகல விரித���தாள். "கடல் புறாவா!" என்றும் ஆச்சர்யம் குரலில் ததும்ப வினவினாள்....
கதை இடம் பெறும் வரலாற்று பகுதிகள்: பாலூர் துறைமுகம், அக்ஷயமுனை, மோகினி தீவு, மலையூர் கோட்டை,ஸ்ரீ விஜயம் மற்றும் புகார்...
இது ஒரு சரித்திர நாவல்...!!!
கதை சுருக்கம்: ஸ்ரீவிஜயத்தை தலைநகராக கொண்டு கொடுங்கோலன் ஜெயவர்மனால் ஆண்டுவரப்படும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தில் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட சோழர்களின் உதவி நாடி ஜெயவர்மனின் மூத்த சகோதரர்,குணவர்மனும் அவரது மகளுமான காஞ்சனாதேவியுடனும் கலிங்க தேசத்தை சார்ந்த பாலூர் துறைமுகத்தை வந்தடைகிறார்.
குணவர்மனை சோழநாட்டுக்கு செல்லவிடாமல் கலிங்கத்திலேயே ஒழித்துவிட ஜெயவர்மன் முயலவே அந்த சதித்திட்டம் சோழ பேரரசுக்கு தெரிந்ததால் குணவர்மனையும்,காஞ்சனா தேவியையும் பாதுகாப்புடன் சோழநாட்டுக்கு அழைத்துவர கருணாகர பல்லவன் (( என்ற இளையபல்லவன்)) என்னும் சோழ படைத்தலைவனை அனுப்புகிறார் சோழ சக்ரவர்த்தி வீர ராஜேந்திர தேவர். மேலும் கலிங்கம் - சோழமிடையே நல்லுரவு இல்லாததாலும், கலிங்கத்தில் குறிப்பாக பாலூரில் தமிழர்கள் கொடுமை படுத்தப்படுவதை நிறுத்தவும் கருணாகர பல்லவனிடம் ஒரு சமாதான ஓலையையும் கொடுத்து தென் கலிங்க மன்னன் பீமனிடம் சேர்த்து விடவும் வீர ராஜேந்திரர் உத்தரவிடுகிறார். இந்த சமாதான நடவடிக்கைக்காக சோழ இளவரசர் அநபாயர் முன்னரே கலிங்கம் சென்று பீமனால் சிறைப்படுத்தப்பட்டு பின் அங்கிருந்து தப்பித்து தலைமறைவாய் இருக்கிறார்.
சமாதான ஓலையுடன் வந்த கருணாகர பல்லவன் பாலூர் பெருந்துறை துறைமுகத்தில் சிக்கிக்கொள்கிறான்...அங்கிருந்து தப்பி ஓடும் போது விருந்தினர் மாளிகையில் கடாரத்தின் சிற்றரசர் குணவர்மரையும்,அவரது புதல்வி காஞ்சனாதேவியையும் சந்திககிறான். கலிங்கவீரர்களால் தந்திரமாக பிடிக்கப்பட்ட கருணாகர இளையபல்லவனை கலிங்க நீதிமன்றத்திலிருந்து துணிச்சலாக இளவரசர் அநபாயர், காஞ்சனாதேவி ஆகியோர் காப்பாற்றுகின்றனர்.
கருணாகர பல்லவன்,குணவர்மன்,காஞ்சனா தேவி,இளவரசர் அநபாயர், கலிங்க நாட்டில் சுங்க அதிகாரியாகவும் சோழ உளவாளியாகவும் பணியாறௌறும் கண்டியத்தேவன்,கலிங்கத்தின் வணிகன் சேந்தன் ஆகியோர் பாலூர் துறைமுகத்திலிருந்தும் கலிங்க மன்னனின் பிடியிலிருந்தும் அரபு நாட்டு அமீர் மற்றும் அந்த பிராந்தியத்திலேயே பயங்கர கடல் கொள்ளைக்காரனும் அமீரின் ஆசானுமான அகூதாவின் உதவியுடன் தண்ணீர் பானாகளுக்குள் மறைந்து தப்ப முயற்சிக்கின்றனர். துறைமுகத்தில் நடை பெற்ற பெரும் சண்டையில் அநபாயர்,குணவர்மன்,காஞ்சனாதேவி ஆகியோர் மட்டும் தப்பி சோழநாடு செல்கின்றனர். கருணாகர பல்லவன்,அமீர்,கண்டிய தேவன், சேந்தன் ஆகியோர் கலிங்க வீரர்களால் தடுக்கப்பட்டு பின் கொள்ளைக்காரன் அகூதா மூலம் தப்பிக்கின்றர். கருணாகர பல்லவனின் வீர தீர செயல்களை கண்ட காஞ்சனா தேவி அவனிடம் காதல் கொள்கிறாள்...!!!! பாலூர் பெருந்துறையில் இளையபல்லவனை பிரிய நேரிட்டதால் அவன் நினைவுடனே மரக்கலத்தில் பாலூரை விட்டுச்செல்கிறாள் காஞ்சனாதேவி.
பாலூர் பெருந்துறையில் இருந்து கொள்ளைக்காரன் அகூதாவின் உதவியுடன. தப்பிய இளையபல்லவன் சோழநாட்டுக்கு செல்லாமல், அகூதாவிடம் உபதலைவனாகி கடல் போர் முறைகள்,கடலாடும் முறை ஆகியவற்றை அடுத்த ஒரு வருடத்தில் கற்று மிகச்சிறந்த மாலுமியாகவும் கடல் கொள்ளைக்காரனாகவும் ஆகிறான். இளையபல்லவனும்,அகூதாவும் சேர்ந்து பல கலிங்க மரக்கலங்களை கொள்ளையடிக்கிறார்கள். இளைய பல்லவனின் திறமையை கண்டு வியந்த அகூதா அவனுக்குதன் மரக்கல்தில் ஒன்றை பரிசளிக்கிறான்.
அகூதாவால் பரிசளிக்கப்பட்ட மரகலத்துடன் அக்ஷயமுனைக்கு அமீர்,கண்டியத்தேவன் துணையுடன் வருகிறான். அக்ஷயமுனை ஸ்ரீ விஜய சாம்ராஜ்ஜியத்துக்கு கட்டுப்பட்ட கலிங்கத்தின் நட்பு துறைமுகமாக இருக்கிறது. ஒரு முறையான படைகள் இல்லாமல் கொள்ளைக்காரர்களே மாலுமிகளாய் இருக்கிறார்கள். அந்தப்பகுதியின் கோட்டை தலைவனாக பலவர்மன் என்னும் நயவஞ்சகன் இருக்கிறான். அக்ஷயமுனைக்கோட்டையும, நகரமும் நிலத்தில் "பதக்குகள்" என்ற பழங்குடியினராலும், நீரில் மற்றொரு பழங்குடி இனமான "சூலுக்கள்" என்பவர்களால் கொள்ளையிடப்படுகிறது. இந்த கொள்ளையர்களை நகருக்குள் அனுமதித்து கொள்ளையடிக்க பலவர்மன் துணைபோகிறான். அக்ஷயமுனையில் இப்படி ஒரு கட்டுப்பாடில்லாத கொள்ளைக்கூட்டத்தையும் கோட்டைத்தலைவன் பலவர்மன் முன்னிருத்தி ஆள்வதால்.,அந்த வழியாக தமிழகத்தில் இருந்து வரும் வணிக மரக்கலங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன..!!!
இதையெல்லாம் நேரில் காணும் இளைய பல்லவன் இந்த அக்ஷயமுனையை கைப்பற்றினால்தான் தமிழ்நாட்டு மரக்கலங்கள் அச்சமில்லாமல் அப்பகுதியால் பயணிக்கமுடியும் என முடிவுசெய்து அமீர்,கண்டியதேவன் துணையுடன் பலவர்மனை முறியடித்து அக்ஷயமுனையை கைப்பற்றுகிறான். பலவர்மனின் வளர்ப்புமகளும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தை ஆளும் ஜெயவர்மனின் மகளுமான மஞ்சளழகியும் இதற்கு பெருந்துணை புரிகிறாள்...அவளும் இளையபல்லவனிடம் காதல் கொள்கிறாள்.
இளையபல்லவன் அக்ஷயமுனையில் அகூதாவால் பரிசளிக்கப்பட்ட மரக்கலத்தை கண்டியதேவன் உதவியுடன் புறா வடிவில் அமைத்து "கடல் புறா"எனும் போர்க்கப்பலாக்கி, கைப்பற்றிய அக்ஷயமுனையை மஞ்சளழகியிடம் ஒப்படைத்து கோட்டையை ஆண்டுவரும் படி பணிக்கிறான்.
பின்னர் இளையபல்வன்கடல்புறாவுடன் மாநக்காவரம் என்றழைக்கப்படும் கடல்மோகினித்தீவுக்கு சென்று அங்கு கங்கதேவன் என்ற கலிங்க கடற்படைத்தலைவனை கொன்று மீண்டும் அதை தமிழர்வசம் ஒப்படைத்து சோழர்களின் கடற்தளமாக்குகிறான். சோழநாட்டில் இருந்து கடாரத்துக்கு பயணமான குணவர்மனும்,காஞ்சனாதேவியும் சிறைப்பட்டு கிடந்த கலிங்க கப்பலில் இருந்து அவர்களை மீட்டு கடல்புறாவில் தங்க வைக்கிறான்.
பின் இறுதியாக ஸ்ரீவிஜயத்தின் மலையூர் கோட்டையை மஞ்சளழகயின் உதவியுடன் கைப்பற்றி, கடல் போரில் ஜெயவர்மனை தோற்கடித்து ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை வெற்றி கொள்கிறான்...
பின்னர் அநபாயர் ஆணைக்கிணங்க ஸ்ரீவிஜயத்தின் பெரும்பகுதியை குணவர்மனும்..ஒரு சிறு பகுதியை ஜெயவர்மனும் ஆண்டுவரவும் சோழஅரசின் நட்பு நாடுகளாக இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இளைய ப���்லவன் கருணாகரனின் துணிச்சலாலும் வீரத்தாலும் கலிங்கத்தின் கடல்பலம் உடைக்கப்படுகிறது. மேலும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்திலும் குணவர்மன் அரசராக்கப்பட்டதால், ஸ்ரீ விஜயம் கலிங்கம்போன்ற நாடுகளால் ஆக்கிரமிக்கப்படாத, தமிழர்பால் அன்புள்ள சுதந்திர அரசாகிறது....
வெற்றி வீரனாக புகார் ((சோழநாடு)) திரும்பும் இளையபல்லவன் வீரத்தை போற்றும் வகையில் குறுநில மன்னனாக்கப்பட்டு "கருணாகர தொண்டைமான்" என்றழைக்கப்படுகிறான். தன் மனம் கவர்ந்த காதலியர் காஞ்சனா தேவி,மஞ்சளழகி இருவரையுமே மணந்து , சிறந்த படைத்தலைவனாகவும்,கடல் மாலுமியாகவும் சோழ நாட்டிற்கு தொடர்ந்து தொண்டாற்றுகிறான்.
#என்னுரை.. ஒரு புதினத்தை படிக்கும் ரசிகர்களை அதனுடன் ஒன்றச்செய்து ரசிக்கவைப்பது ஒரு வகை...புதினத்தை படிப்பவர்களை அதன் கதாபாத்திரங்களோடு பயணப்பட்டு மெய்மறக்கவைப்பது இரண்டாவது வகை..இந்த மாபெரும் புதினத்தின் ஆசிரியர் சாண்டில்யன் இரண்டாவது வகை.
படிக்கும் நேயர்கள் இந்த புதினத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தோடும் பயணிக்கிறோம்..குறிப்பாக இளையபல்லவனுடன் ஒன்றிப்போகிறோம்.
ஆசிரியர் இதன் முன்னுரையில் தெரிவித்தபடி "இவ்வளவு தொழில் நுட்பங்கள், வசதிகள் நிறைந்த இக்காலத்திலேயே கடல் பயணம் துன்பமாயும் ஆபத்து நிறைந்ததாயும் இருக்கிறது, இது எதுவும் இல்லாத சோழர்காலத்தில் எப்படி கடலாடடினார்கள்...எப்படிப் போரிட்டு அரசுகளை கைப்பற்றினார்கள் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தவே இந்த நாவல் உதயமானது" என்பதை பக்கத்துக்கு பக்கம் ஆசிரியர் நிரூபித்துள்ளார். இதற்காக அவர் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது....
அக்காலத்து அக்ஷயமுனையில் இருந்த பழங்குடி மக்கள், "அக்ரமந்திரம்" என்ற போர்க்கப்பலை பற்றிய செய்திகள், திசை காட்டும் கருவி ஆயிரம் ஆண்டுக்கு முன்னரே சீனர்களால் பயன்படுத்தப்பட்ட செய்திகள், புதினத்தின் மூன்று பாகங்களிலும் ஒவ்வொரு சரித்திர நிகழ்வுகள் தம்மால் எங்கிருந்து தகவலாக பெறப்பட்டது என்ற அடிக்குறிப்புகள்...என நேயர்களை அசர அடித்து பெரிதும் வியப்பிலாழ்த்துகிறார் ஆசிரியர் சாண்டில்யன்....!!!
கடல்புறா----பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்...!!!
எனக்குப்பிடித்த வசனம்: மஞ்சளழகி இளைய பல்லவனிடம்: " இதோ பாருங்கள்...இந்த அலை வந்து காலை தடவுகிறது...மீண்டும் போய் விடுகிறது.மறுபடியும் வருகிறது, போகிறது. அற்ப கால ஸ்பரிசம் இது. விட்டு விட்டு விலகும் நிலை...என் வாழ்க்கையில் நீங்களும் இப்படித்தான் மோதியிருக்கிறீர்கள். அலை போலப் போய்விடுவீர்களா? போய்ப்போய் வருவீர்களா...??
A masterpiece. If you know tamil do try. Not only is the story interesting but the way sandilyan handles tamil makes you wonder about the limits of language. This is the first time i tried an audiobook and stuck to it to the end. The audiobook is audible by "ponniyin selvan and brothers" is truly amazing with background music, sound effects and different voice actors for different people accurately and clearly pronouncing words along with appropriate emotion.
இந்த புத்தகத்தை படிக்கும் பொழுது நமக்கு சீனா , அரேபியா மற்றும் கடாரம் ஆகியவற்றின் வரலாறும் அவர்களின் நாகரிகமும் எப்படி இருந்திருக்கும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது . சாண்டில்யன் கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் . அநபாயனும் மற்றவரும் பாலூரிலிருந்து தப்பித்து செல்லும் திட்டம் மற்றும் நடவடிக்கை - இவற்றை நம் கண் முன் தத்ரூபமாக கொண்டு வந்து நிறுத்துகிறார் எழுத்தாளர். இன்னும் இரண்டு பாகங்கள் இருக்கின்றன. அவற்றை படித்து விட்டு மேலும் விமர்சிக்கிறேன்.
இந்த நாவல் யவனா ராணியை விட மிகச் சிறப்பாகவே உள்ளது. இந்த நாவல் யவன ராணி நாவல் மீதுள்ள ஏமாற்றத்திற்கு பல மடங்கு விருப்பத்தை அளித்துள்ளது. பாகம் 2,3 படித்து முடிக்க ஆவலாக காத்திருக்கிறேன்.
This is a historical novel authored by the famous Tamil writer Sri. Sandilyan. The novel is based on the victory of Tamil prince Anabhaya kulothungan of Chola dynasty about 1100 AD, over the Sri Vijaya empire, now Malasia/singapore. The main player in this novel Ilayapallavan or Karunakara Pallavan, who was a prince of the defunct Pallava empire. He acts as an aide and chieftain of Anabhaya in conquering the island nations by building strong Naval forces. After Anabhaya becomes Chola emporer, Karunakaran is made a King with the name Karunakara Thondaiman, who in the aftermath, is to win the war against Kalinga on behalf of Kulothunga chola and his victory is praised in the famous tamil epic Kalingaththup parani.
The wa y the author takes the story line makes us feel that we are actually passing through the historic period and the way he describes the on-sea invasions are astonishing. A very good-read.
ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் (தற்போதய இந்தோனேசியா ) ஆட்சிக்கு உட்பட்ட கடாரத்து அரசர் குணவர்மன் தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சாம்ராஜ்யம் ஆளும் உரிமையை தன சகோதரன் ஜெயவர்மன் தட்டிப்பறித்ததால்.. தனக்கு நீதி கிடைக்க சோழ பேரரசின் உதவி நாடி கலிங்க நாட்டின் பாலூர் பெருந்துறை துறைமுகம் வந்து அடைகிறான்..அவனை அங்கேயே கலிங்க மன்னன் பீமனை வைத்து கொலை செய்ய ஜெயவர்மன் சதித்திட்டம் தீட்டியதை அறிந்த சோழ மன்னன் வீர ராஜேந்திரர் அவனை மீட்டு வருமாறு தன தளபதி இளையபல்லவன் என்கிற கருணாகரப்பல்லவன் க்கு கட்டளையிடுகிறார். இதன்படி நம் கதாநாயகன் இளையபல்லவன் தன் நண்பனும் சோழ இளவரசனுமான அநபாய சோழன் மற்றும் அரபு நாட்டு அமீர் , சோழ ஒற்றன் கண்டியத்தேவன் சேந்தன் சீன கடற்கொள்ளைக்காரன் அகூதா ஆகியோர் உதவியுடன் எப்படி பாலூர் ல் இருந்து குணவர்மன் மற்றும் அவன் மகள் காஞ்சனா ஆகியோருடன் தப்பி சோழ நாடு திரும்பினானா ? என்பதே மீதி கதை.... இதன் பின்னர் சோழ நாட்டிற்கும் தமிழர்களுக்கும் தொல்லை கொடுக்கும் கலிங்க கடற்படையையும் அதற்க்கு உதவி செய்யும் ஸ்ரீவிஜய கடற்படையையும் ஒழித்துக்கட்ட அகூதா அளித்த கப்பலை கொண்டு அமீர் மற்றும் கண்டியத்தேவன் இவர்களை சேர்த்துக்கொண்டு தன லட்சியப்பயணத்தை துவங்குகிறான் இளையபல்லவன்.
விமர்சனம்......
முதல் பாகம் மிக நன்றாக துவங்கி எதிர்பார்ப்போடு கதை நகர்ந்தது.... ஆரம்பத்தில் சாண்டில்யன் அவர்களின் வர்ணனை ரசிக்கும்படி இருந்தது ஆனால் போகப்போக சில காட்சிகளை அவர் அவசியமில்லாமல் அதீத வர்ணனை செய்ய சலிப்பு ஏற்பட்டது...இறுதியில் மீண்டும் சூடுபிடித்தது கதை.
இரண்டாம் பாகம் மிகவும் இழுபறி நான்கு ஐந்து அத்தியாயங்களில் முடியவேண்டிய கதை நாற்பதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் வரை வளர்ந்தது....இதிலும் பல இடங்களில் அதீத வர்ணனை.
மூன்றாம் பாகம் சற்றே நிதானமாக நகர்ந்து இறுதியில் விறுவிறுப்பை கூட்டியது.ஆனால் முடிவு சற்று வேடிக்கையாய் இருந்தது...
இந்த நாவலை படிக்கும் முன்பே பொன்னியின் செல்வன் உட்பட கல்கியின் பல நாவல்களை படித்து மிக எதிர்பார்ப்புடன் இந்நாவலை படிக்க ஆரம்பித்தேன்...... ஆசிரியர் இந்தோனேஷியா ,பாலி , மலேசியா போன்ற பகுதிகளுக்கு போய் பார்த்திருக்கிறார் என்பது அவர் அந்தந்த இடங்களை வர்ணிப்பதிலிருந்து தெரிகிறது.....
கதையின் துணை கதாபாத்திரங்களான அமீர் , கண்டியத்தேவன் , சேந்தன் ஆகியோர்களை நன்றாக வடிவமைத்து முக்கியத்துவமும் அளித்துள்ளார் சாண்டில்யன். அதே நேரத்தில் கதையின் இரு நாயகிகளான காஞ்சனா மற்றும் மஞ்சளழகியை தொடர்ந்து வர்ணித்து கொண்டே இருக்க அவசியமில்லை...மேலும் அவர்களிடம் பழகும் இளையபல்லவன் கண்ணியமின்றி எப்போதும் அவர்களின் இடையை பிடிப்பது போல கூறுவது சற்றே எரிச்சலூட்டுகிறது.
மொத்தத்தில் பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களை படித்துவிட்டு அதே எதிர்பார்ப்புடன் இதை படித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.. இது முற்றிலும் வேறுபட்ட கதைக்களம்.
Johnny depp Pirates of the Caribbean க்கு உலகளாவிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. Black pearl க்கு பின்னான fantasy adventure ஏழு பாகங்களையும் தாண்டி நீள்கிறது. ஆனால் அதற்கு சற்றும் குறைவில்லாமல் தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னமே ஒரு கப்பல் பயணித்திருக்கிறது. அதுதான் கடல்புறா.
ஸ்ரீ விஜயத்தின் இளவரசரான குணவர்மனும் அவன் மகள் காஞ்சனாதேவியும் அரியணை ஏற சோழத்தின் உதவியை எதிர்நோக்கி கலிங்கத்தில் தங்கியிருக்கிறார்கள். சோழ தளபதியான கருணாகர பல்லவன் அவர்களுக்கு தூது கொண்டு வந்து மூவரும் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அநபாயச் சோழனின் உதவியோடு கப்பல் ஏறித் தப்பிக்கிறார்கள்.ஆளுக்கு ஒரு திசையில் சென்றுவிட கருணாகரன் கடற்கொள்ளையனாகி கலிங்கத்தின் கடல்வலிமையை முறியடித்து பெரும் வீரனாக நாடு திரும்பும் கதைதான் இந்தக் கடல்புறா.
ஒரு hero, நம்பிக்கைக்குரிய அராபியன் அமீர், சீன god father அகூதா, பாலிக்குள்ளன், tech support கண்டியத்தேவன் Comedyக்கு சேந்தன் என ஒரு International piratw gang ஐ அழகாக வடிவமைத்திருக்கிறார்கள்.
கதை ஒடிஷாவில் ஆரம்பித்து பாலி ஜாவா சுமத்ரா என பயணித்து அந்தமான் நிகோபார் வழியாக சோழ தேசத்தில் முடிகிறது. ஒரு உலகளாவிய கடல்சார் கதைக்களத்தை அமைத்ததற்கு சாண்டில்யனை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். அதிலும் மூன்று பாகங்களும் தொய்வில்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் திருப்பம் வைத்து அடுத்த பக்கத்தை யூகிக்க முடியாமல் நகைச்சுவை காதல் நட்பு போர் என mega bonanza ஆக நம் கைகளில் அமர்கிறது கடல்புறா.
It has good story. But lot of details on this book are repetitive, may be that's because it could have been written as series in a weekly magazine. But such redundancy is not valid Or required anymore and considering it is still in demand among Tamil historical novel enthusiasts, the publications can cut short the novel and make it more interesting.
This is almost fifty percent romance and fifty percent adventure drama. If you are not a fan of romance literature, you may find hindrances reading this. This is one of the main differences when you compare it with ponniyin Selvan.
Establishing the environment of the characters and their inner thoughts are little overkill at many places. It is also the strength for novels.
Not sure if Karunakara pallavan really had a hand in helping Cholas in establishing their Almost-vassals in South East Asia but Cholas did eventually do it around that time. Also the Aguda lived in different age altogether. With all these shortcomings, the novel still managed to be good.
Heroics were explained with less heroic flair which is actually good and I liked it. Although the final act was one dimensional And little incomplete.
This entire review has been hidden because of spoilers.
பொன்னியின் செல்வனுக்கு அடுத்து நான் எடுத்த தமிழ் சரித்திரப் புதினம் கடல் புறா. சாண்டில்யனின் தமிழ் மிகவும் நேர்த்தியாக இதயங்களை கவரும் வகையில் இருந்தது. கதையின் கதாப்பாத்திரங்கள், கருணாகர பல்லவன், அநபாய குலோத்துங்கன், காஞ்சனா தேவி - இவர்களின் படைப்பும் உயிரோட்டமுள்ள பாத்திரப் புனைவும் அற்புதம். கதைக்களத்தை மிகப் பொறுமையாக எடுத்துக்கொண்டு போன ஆசிரியர், தக்க சமயங்களில் சரியான பரபரப்பையும் கொடுக்க மறக்கவில்லை. வீரம், காதல், நட்பு, போர், பகை, சூழ்ச்சி, தந்திரம் என அனைத்து உணர்வும் கதைக்குள் படரவே ஒரு நிறைவான வரலாற்றுக் கதை வாசிக்கும் அனுபவம் பிசறாமல் கிடைத்தது. கடைசி இரு நூறு பக்கங்களின் வேகமும் விறுவிறுப்பும் கதையை ஆசிரியர் கொண்டு சென்ற விதமும் மனத்துள் பரபரப்பிற்குச் சற்றும் பஞ்சமில்லாமல் செய்துவிட்டன. அடுத்த பாகத்தை நிச்சயம் உடனே ஆரம்பித்தாக வேண்டும் என்ற நிலைக்கு ஆசிரியர் தள்ளி விட்டுவிட்டார் என்றே கூற வேண்டும்.