Jump to ratings and reviews
Rate this book

பொன்னி 2.0 - இரணியஹாசம் [Ponni 2 - Iraniyahasam]

Rate this book
பொன்னி இரண்டாம் பாகம் இரணியஹாசத்தைத் தேடிச் செல்லும் பொன்னியின் நெடும் பயணம். முதல் பாகத்தில் இல்லாத சாகசங்களும் இருண்ட வரலாற்றின் பக்கங்களும் நிறைந்தது. கதையில் வரும் சரித்திர நிகழ்வுகளும் இடங்களும் உண்மையானவை. பாத்திரங்களும் சம்பவங்களும் மட்டுமே புனைவு.

641 pages, Kindle Edition

Published October 22, 2022

2 people are currently reading
7 people want to read

About the author

Shan Karuppusamy

9 books18 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
21 (80%)
4 stars
4 (15%)
3 stars
1 (3%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 5 of 5 reviews
Profile Image for Kesavaraj Ranganathan.
47 reviews7 followers
November 9, 2025
#Kesav_Reads_2025

21/30+

பொன்னி 2 (இரணியஹாசம்) - ஷான் கருப்பசாமி

பொன்னி முதல் பாகம் முடித்த கையோடு இந்த இரண்டாம் பாகத்தை வாசிக்க எடுத்தேன்… முதல் பாகத்தில் நடத்த சம்பவங்களை லாஜிக் மாறாமல் இந்த பாகத்தில் சுவாரஸ்யமான முறையில் வரலாற்றுப் பின்னணியோடு சொல்லியிருக்கிறார் ஷான்!

முதல் பாகத்தில் இரணிய சேனையின் நடவடிக்கைகள், இந்தியாவிலிருந்து செல்லம்மா வெளியேறி பிரிட்டனில் குடியேறுவது என கதை நகர்ந்திருக்கும்… இந்த பாகத்தில் பொன்னி மற்றும் அவளுடைய கூட்டாளிகளின் பின்புலம் பற்றியும், பிரிட்டிஷ் ஆட்சியின் போது இரணிய சேனை கிழக்கிந்திய கம்பெனிக்கு உதவியதைப் பற்றிய குறிப்பு… பின்னர் ராபர்ட் கிளைவ் குறித்த விரிவான குறிப்புகளை எல்லாம் கொண்டு கதையை கட்டமைத்திருக்கிறார்!

பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பாக செல்லும் கதைக்களமும், கதை சொல்லும் முறையும் ஒரு நல்ல ஆக்‌ஷன் படத்தை பார்த்த மனநிறைவை அளிக்கிறது! இன்னும் இந்த புத்தகம் ஒரு இயக்குனரின் பார்வையில் படாமல் இருக்கிறது என்பதே ஆச்சரியமாக இருக்கிறது!

பிரிட்டன், இந்தியா என மாறி மாறி நடக்கும் சம்பவங்களும் கதையின் முடிச்சுகளும், அதை அடுத்தடுத்து தேடி விடை தேடும் பொன்னியின் குழுவினரும்… வில்லனின் சதியை முறியடித்து இரணியஹாசத்தை எப்படி கண்டடைகிறார்கள் என்பதை அற்புதமாக புனைந்திருக்கிறார் ஆசிரியர்! அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்!

புத்தகம் - பொன்னி 2 (இரணியஹாசம்)
ஆசிரியர் - ஷான் கருப்பசாமி
பதிப்பகம் - வாசல் படைப்பகம்
பக்கங்கள் - 448
விலை - ₹390
Profile Image for Saravanan.
356 reviews20 followers
June 29, 2023
2 வருடங்கள் கழித்து அதன் வெவ்வேறு நிகழ்வுகளையும் பாத்திரப் படைப்புகளையும் நினைவில் வைத்துக்கொள்வது உங்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் சவால் தான். கோகுல் சேஷாத்ரி போல் கதை சுருக்கம், கதாபாத்திரங்களின் குறிப்புகள் என்று கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் படிப்பதால் கண் கட்டி விட்ட மாதிரி தான் இருந்தது. பாதி கதைக்கு மேல் கொஞ்சம் விறுவிறுப்பாக கதை நகருகிறது. இப்போது பல படங்களும் அடுத்த பாகத்திற்கான lead கொடுத்து முடிப்பது போல இக்கதையும் முடிகிறது.

காரில் இருந்துக் கொண்டு தலையை வெளியே விட்டு பார்த்தால் சக்கரங்கள் காற்றில்லாமல் இருப்பது தெரியுமா? அது மட்டுமில்லாமல் காரில் இருக்கும் போது, டயர்கள் கிழிக்கப்பட்டால் கார் அசையாதா?

பல நூல்கள் போலத்தான் இந்தியா என்ற நாடே உருவாகும் முன் இந்நிலத்தில் இருந்தவர்களை இந்தியர்கள் என்று அழைத்தாலும், ஒரு கட்டத்தில் முதலில் இந்தியா என்ற கற்பனை கூட அப்போது இல்லை. இந்த மண் பல்வேறு நாடுகளாக பிரிந்திருந்தது என்று விளக்கம் தந்த வரை பரவாயில்லை.
Profile Image for Sriram Mangaleswaran.
176 reviews3 followers
November 24, 2024
Sometimes, too nice really is a red flag.

Because the first book was good in its terms about the character sketch of Ponni and it explained the other people around her, whom against her, whom helped her.

But this book goes on and on with explaining too much details. Sometimes its like oh Great the author is gonna explain some history let me relax. Because of this the plot is gone for a toss and the author needs to pull the reader again to the story. Especially the part where Ponni and crew travel was awesome tiring.

An average read.
14 reviews
May 31, 2025
புத்தக விமர்சனம்:

ஷன் கருப்புசாமியின் பொன்னி 2.0

வகை: சாதனை, மர்மம், வரலாறு

மதிப்பீடுகள்: ⭐️⭐️⭐️⭐️✨️ (4.5)


முதல் புத்தகத்தில் எதிர்பாராத திருப்பத்திற்குப் பிறகு 'இரண்யாஹாசம்' தேடல் தொடர்கிறது. இந்த முறை பொன்னி மற்றும் அவரது குழுவினர் பழங்கால வாளைத் தேடிச் செல்வது மட்டுமல்ல, ஒரு பிரிட்டிஷ் பிரபுவும் அதன் மீது பார்வையிட்டார். திருவிழாவின் முடிவில் இரண்யசென்னையிடம் வாளைக் கொண்டு வருபவர் எல்லாப் பொன்னும் சமூகத்தின் விசுவாசமும் பெறுவார்.

விறுவிறுப்பான கதைக்களம் வாசகர்களை கதாபாத்திரங்களுடன் சேர்த்து, அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும். கதையின் வசீகரிக்கும் கதையானது வாசகரை கதாபாத்திரங்களின் பயணத்தில் மூழ்கடித்து, அவர்களின் பயணத்தின் ஒரு பகுதியாக உணர்வைத் தூண்டுகிறது. முதல் புத்தகத்தின் இந்த தொடர்ச்சி சாகசம், மர்மம் மற்றும் வரலாற்றை விரும்புபவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.
Displaying 1 - 5 of 5 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.