பல நிலப்பரப்புகள், பலவிதமான குழந்தைகள், பலவித உணர்வுகள், பல காலத்துக் கதைகள், சில கேள்விகள், சில சமூக அவலங்கள் என சிறார்கள் சுவைக்க, தித்திக்க… தித்திக்க… ஒரு தொகுப்பார் ‘தேன் முட்டாயி’. நிச்சயம் இங்கிருந்து நிறையத் தேடல்கள் துவங்கும்.
பாடப் புத்தகத்தில் முதற்பக்கத்தில் இருக்கும் "தீண்டாமை ஒரு பாவச்செயல்" என்ற வாக்கியம், இந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் இடம் பெற்று புத்தகத்திற்கு கூடுதல் சிறப்பு பெற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளை கவரும் வகையில் 'மேகம் மேலே எப்படி போனது...' துவங்கி 'எல்லோரும் சமம்...' வரை விழியன் சார் எழுத்து நடையில் முத்தாய்ப்பாக அமைந்த நூல் தான் *#தேன்மிட்டாய்* ஒற்றுமையின் பலம், சிறுவர்கள் சமாதானப் புறா, அமைச்சருக்கும் நமக்கும் 'மொழி அறிவு' பற்றி சொன்ன கூற்று, கதைகளில் சார் கதை விட்டதை எழுத்து சாட்சியாக மாற்றி அதை வைத்தே கதை எழுதும் திறமை எல்லாம் விழியன் சாரையே சாரும். Traces of #தம்பி and Remembrance of #Thambi is there...😍🐴 சமீபத்திய புத்தகத் திருவிழாவில், புத்தகத்தை மட்டும் பார்த்துவிட்டு கடந்த சிறுவர்களுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்து குஷி ஊட்டிய #மனுஷ் சார் நிகழ்வை நிகழ்வதற்கு முன்பே கதையாக மாற்றிய தீர்க்கதரிசி விழியன் சார் அவர்கள் 💕 குழந்தைகளுக்கான பல புரிதல்களை, புரிந்துகொள்ள வைக்கும் புத்தகம் #தேன்மிட்டாய்🍭 #books2023
This entire review has been hidden because of spoilers.