Jump to ratings and reviews
Rate this book

Prathaba Mudaliyar Sarithiram

Rate this book
This is a Tamil literary classic.

151 pages

First published January 1, 1879

55 people are currently reading
167 people want to read

About the author

Mayuram Vedanayagam Pillai

4 books10 followers
Mayuram Vedanayagam Pillai Or Samuel Vedanayagam Pillai (Tamil: மாயூரம் வேதநாயகம்பிள்ளை), also known as Mayavaram Vedanayagam Pillai, was an Indian civil servant, Tamil poet, novelist and social worker who is remembered for the authorship of Prathapa Mudaliar Charithram, recognized as the "first modern Tamil novel". The novel reflects Vedanayagam's own ideals of women's liberation and education.

Tamil Wikipedia page: https://ta.wikipedia.org/wiki/வேதநாயக...

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
53 (34%)
4 stars
57 (37%)
3 stars
31 (20%)
2 stars
7 (4%)
1 star
5 (3%)
Displaying 1 - 17 of 17 reviews
Profile Image for Balaji Srinivasan.
148 reviews10 followers
March 29, 2017
தமிழின் முதல் உரைநடை நவீனம். 1879 ஆம் ஆண்டு வேதநாயகம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டது.

140 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட புத்தகத்தை படிக்க போகிறோமே, நம்மால் அந்த நடையை புரிந்து கொள்ளவியலுமா என்ற சந்தேகம் எனக்குள் கிளர்ந்து எழாமல் இல்லை. ஆனால் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த உடன் அவ்வளவு கஷ்டம் ஒன்றும் இல்லை என்றே தோன்றியது. சில சமயம் சில வரிகள், சில சமயம் சில பத்திகள் என்று நடை வேறுபடுகிறது. அவருடைய வாழ்க்கை சம்பவங்களை தான் நவீனமாக எழுதியுள்ளார்.

முதல் நவீனம் என்றே நம்பமுடியவில்லை. அவருக்கு இது போன்ற யோசனைகள், இப்படி தான் எழுத வேண்டும் என்பனவெல்லாம் எப்படி தோன்றிருக்கும். இன்றைய நவீன எழுத்தாளர்களின் தமிழோடு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது அன்றைய தமிழுக்கும் இப்பொழுது உள்ள தமிழுக்கும் இருக்கும் வேறுபாடுகளை அடையாளம் காணமுடிகிறது. நிறைய வார்த்தைகளை நாம் இன்று பிரயோகிப்பது கூட கிடையாது. அவ்வளவு வார்த்தைகள் நமக்கு புதிதாக இருக்கின்றன. ஆயினும் ஆசிரியரின் நடையில் சம்ஸ்க்ருதம் கொஞ்சம் தூக்கல் என்று தான் சொல்லவேண்டும். ஆசிரியரின் ஹாஸ்ய உணர்வு நன்றாக வெளிப்பட்டுள்ளது.

எத்துணை நிறைகள் குறைகள் இருந்தாலும், நம் மொழியின் முதல் நவீனம் என்பதற்காகவே படிக்கலாம். :-)
Profile Image for Sudeeran Nair.
93 reviews20 followers
April 4, 2017
தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற செய்தியின் அடிப்படை படிக்கும் எண்ணத்தைத் தூண்டியது. இன்றைய மொழிநடைக்கும் அக்காலத்திய மொழிநடைக்குமான வேறுபாட்டை நூலின் காணமுடிகிறது. 1879 காலத்தில் வெளிவந்திருந்தாலும் ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வை கடைசி அத்தியாயங்களில் வெளிப்படும் சிந்தனைகள் இக்காலத்திய பிரச்சினைகளைப் பற்றிய அலசல்களை அச்சு பிசகாமல் வெளிப்படுத்துவது மிக்க ஆச்சர்யம்.
நாவலை சாதீய கண்ணோட்டத்தில் எதிர் கொள்ள வேண்டுமா என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்திருந்தாலும் அதில் மனுதர்மத்தின் வர்ணத்தை எதிர்ப்பதும் மக்கள் ஒன்றுதான் என்ற கருத்தும் அன்றைய சூழ்நிலையில் மனிதனின் சமூக வாழ்வியலை எடுத்துக் காட்டுகிறது.
பழைய மொழிநடையாக இருந்தாலும் , பல இடங்களில் கேட்டிராத வார்த்தை உபயோகமிருந்தாலும் வாசிப்பதில் எந்த அசிரத்தையும் கொடுப்பதில்லை.
Profile Image for Jeni Gabriel.
51 reviews3 followers
July 30, 2025
மிக சுவாரசியமான சரித்திரம் இது. மனிதரிடம் வேண்டிய நல்ல குணங்கள் மற்றும் வாழ்க்கைக்கு ஏதுவான பண்புகள், அறிவாற்றல், ஒழுக்கம் மற்றும் நீதி நெறி ஆகியவற்றை மிக இயல்பாக கதைகளாக எழுதி வாசகர்களின் மனதையும் கவர்ந்து, தன் வாழ்வியல் பாடங்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறார் ஆசிரியர். ஒரு முறையாவது எல்லோரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. ஆழ்ந்த சிந்தனை மற்றும் நகைச்சுவை விரும்புவோர் இதனை வாசித்து மகிழுங்கள்.
Profile Image for Siva Prasath T R.
78 reviews4 followers
August 19, 2025
தமிழில் எழுதப்பட்ட முதல் புதினமாகும். பிரதாப முதலியார் சரித்திரம் எனும் இந்நாவலை வாசிக்கத் தொடங்கியபோது, இது ஒரு எளிய கதையாகவே இருக்கும் என நினைத்தேன். ஆனால் வாசிப்பின் தொடக்கத்திலிருந்தே என் கணிப்பு தவறானது என்பதை உணர்த்தியது. இந்த நாவல் என் எதிர்பார்ப்புகளை முற்றிலும் மீறி, வியப்பூட்டும் தன்மையுடன் அமைகிறது.

இந்நாவல் நகைச்சுவை, காதல், நையாண்டி, அரசியல், சாதி, மதம், சமயம் ஆகிய அனைத்தையும் இணைத்துத் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஒரு வளமான இலக்கிய நூலாகும். இந்நூலில் உள்ள துணைக்கதைகள் அல்லது கிளைக் கதைகள் மையக் கதைக்கு தொய்வூட்டாமல், அதை மேலும் சிறப்பாக்குகின்றன.

இப்புதினத்தை எழுதியவர் வேதநாயகம் பிள்ளை, நீதித்துறை நடுவராகவும், தமிழ்-ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவராகவும், சட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவராகவும், சமூக சீர்திருத்த நோக்குடன் கற்பனையிலக்கியத்தை தமிழ் மொழியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியவராகும்.

இந்த புதினத்தில் செம்மொழி மட்டுமின்றிவடமொழிச் செறிவும் காணப்படுகிறது. இதனால் பல சொற்கள் வாசிப்பவர்களுக்கு எளிதாக புரியவில்லை.இதே நேரத்தில், இந்நூலின் மொழி நடையில் புதுமை, பிரதிபலிப்பு, விளக்கத் திறன் போன்றவை காணப்படுகின்றன. என்றாலும், எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்த தந்தை பெரியாருக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இங்கு உருவாகிறது. தந்தை பெரியார் அவர்களாலே தமிழ் மொழி இன்றும் தனித்து செம்மையாக செம்மமோழியாக இயங்குகிறது.

இப்புதினத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் பிரதாப முதலியார் மற்றும் அவரது துணைவி ஞானாம்பாள். குறிப்பாக ஞானாம்பாள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஒரு பாத்திரமாக திகழ்கிறார். அவருடன் சேர்ந்து பிரதாப முதலியாரின் தாயார் சுந்தரத்தண்ணியும் இந்தக் கதைக்கு வலு சேர்க்கின்றார்.

இப்புதினம் முதலில் 1857ஆம் ஆண்டு எழுதப்பட்டு, 1879இல் அச்சாகியதாக நம்பப்படுகிறது.அக்காலத்தில் இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாடு, ஆங்கிலேய ஆட்சியின் கீழ் சமூக மாற்றங்களை எதிர்கொண்ட காலம்.அக்காலத்தில் மத சாதி வெறி, பெண்களுக்கு எதிரான ஒருக்குமுறைகள் என சமூக தீமைகள் கொடிகட்டி பறந்த காலம். அக்காலத்திலும் பெண் கதாபாத்திரம் படித்தவராகவும் அறிவாளியாகவும், துணிவானவளாகவும் உருவாக்கப்பட்டுள்ளது — இது அக்கால தமிழ் இலக்கியத்தில் வியக்கத்தக்க முயற்சி.
பிரதாப முதலியார் சரித்திரம் என்பது தமிழ் புதின இலக்கியத்தில் ஒரு முன்னோடியான படைப்பு. இது எளிய கதை சொல்லலாக இல்லாமல், பல்வேறு இலக்கிய நுட்பங்களை பின்பற்றியும், புதிய வழிகளில் தமிழ் வாசகர்களை ஈர்க்கும் முயற்சியாகவும் இருக்கிறது.நகரம், கிராமம், அரசவை என காட்சிகள் மாறிக்கொண்டே செல்வது வாசிப்பவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது.

பிரதாப முதலியார் சரித்திரம் என்பது வெறும் ஒரு கதையல்ல. அது தமிழ் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தையும், இலக்கிய வளர்ச்சியின் தொடக்க கட்டத்தையும், மாற்றத்திற்கான நுட்ப முயற்சிகளையும் பிரதிபலிக்கும் முக்கியமான ஆவணமாகும். இது தமிழில் புதினம் என்ற இலக்கிய வடிவத்துக்கு அடித்தளமிட்டதும், நவீன தமிழிலக்கிய வளர்ச்சிக்கே மூலதனமாக அமைந்ததுமான ஒரு பெரும் பங்களிப்பு. தமிழராக பிறந்த அனைவரும் தனது வாழ்வில் ஒருமுறையேனும் வாசிக்கவேண்டிய புதினம்.
Profile Image for Padmanathan N.
32 reviews1 follower
May 9, 2022
தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல்

இந்நூல் தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல். 313 பக்கங்கள் கொண்ட நெடிய கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. அக்கால கட்டத்தில் சமஸ்கிருத மற்றும் வடமொழி சொற்களின் ஆதிக்கத்தை இந்நாவலில் கண்கூடு காணமுடிகிறது. மூல கதையை வ��ட கிளைக் கதைகள் ஆர்வத்தை தூண்டியது. அதிக திருப்பங்கள் அற்ற நேர் கதை. கடைசி அத்யாயங்கள் சோம்பலை ஏற்படுத்துகிறது.
Profile Image for P..
528 reviews124 followers
December 28, 2023
4.5*

தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் பல வகைகளில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட நாவல்களைக் காட்டிலும் முதிர்ச்சியும் வடிவக் கச்சிதமும் சுவாரஸ்யமும் மிக்கதாக அமைந்தது நான் எதிர்பாராத ஒன்று. புத்தகத்தை எடுக்கையில் அக்கால மொழிநடையாலும் பிற்போக்கு சிந்தனைகளாலும் விரைவில் அயர்ச்சியடைந்து கைவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால், மொழியிலும் சிந்தனைகளிலும் நவீனமாக, பேசுபொருட்கள் பலவகைப்பட்டதாக, நகைச்சுவையும் குறும்பும் நிரம்பியதாக அமைந்தது இச்சரித்திரம்.

பிரதாப முதலி என்னும் கதாநாயகனின் சரித்திரம் அவனுடைய குழந்தைப்பருவத்தில் தொடங்கி நேர்க்கோட்டில் பயணிக்கிறது. அக்காலத்து domestic drama வாக குறுகிவிடும் என்ற எதிர்பார்ப்புகளைத் தகர்த்து, சாகசங்கள் ததும்ப கதை விரைகிறது. செல்வந்தர் குடும்பத்தில் பிறப்பதால், அக்காலத்திய சராசரி மனிதனுக்கு எட்டாத அனுபவங்கள் முதலிக்கு எளிதில் எட்டுகிறது. கதை அவனைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருந்தாலும், மற்ற பல கதைகளின் கோர்வை அக்கட்டங்களை நிரப்புகிறது.

முக்கியமான இரு பாத்திரங்கள் முதலியின் தாயான சுந்தரத்தண்ணியும், அவனது தோழி/மனைவி ஞானாம்பாளும். இவ்விரு பெண்களும் மிகுந்த அறிவும் தெளிவும் சாமர்த்தியமும் விவேகமும் கொண்டு அவர்களது தொழிலையும் கிராமத்தையும் வீட்டையும் நிர்வகிக்கிறார்கள். தமிழின் பெரும்பான்மையான நாவல்களில் பெண்கள் இதுவரை பின்னணியிலேயே இருந்துள்ளதாலும், பெரும்பாலும் சுய ஆளுமை இல்லாமல் ஆண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கருவிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளதாலும், முதன்முதலில் எழுதப்பட்ட இப்புதினத்தில் இவ்விரு ஆளுமைமிக்க பெண்கள் பிரதானம் வகிப்பது மிக்க ஆச்சரியமளிக்கிறது. பிற்போக்கான கருத்துக்களும் பெண்களின் ஒழுக்கம் தொடர்பான வசனங்களும் இல்லாமல் இல்லை தான். ஆனால், இங்குள்ளது போல் ஆண்-பெண் சமமான, மரியாதை நிறைந்த ஓர் உறவு தமிழில் மிக அரிது.

சாதாரண மனிதர்களின் தினசரி நடவடிக்கைகளை அறிய ஆவலுள்ளவர்களுக்கு இக்கதை சிறிது ஏமாற்றத்தையே அளிக்கும். அதற்கு பதில் சாகசமும் கற்பனைகளும் தத்துவங்களும் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது. ஆள் கடத்தல், குதிரை மேலேறி துரத்தல், எதிர்பாரா பயணங்கள் என விரியும் கதை பல ஆச்சரியமூட்டும் இடங்களுக்குப் பயணிக்கிறது. பிற நாடுகளும் அவர்களது கலாச்சாரம், இலக்கியம் தொடர்பான குறிப்புகளும் அங்கங்கே இடம் பெறுகின்றன. ஒரு கட்டத்தில் கதை அமெரிக்காவையும் தொடுகிறது. கடைசி 50 பக்கங்களில் ஏற்படும் எதிர்பாரா திருப்பத்தால், ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்கிற (இக்காலத்துக்கும் பொருந்தும்) போதனைகள் கதையை hijack செயகின்றன. முற்போக்கான பல கருத்துகள் இருந்தாலும், சாதி/மத விமர்சனங்களோ இந்திய விடுதலைப் பற்றிய அபிப்பிராயமோ இடம்பெறவில்லை.

உரைநடைக் கதைகள் ஒரு நாட்டிற்கும் மொழிக்கும் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்த, செய்யுளின் சந்தத் தளைகளை தகர்த்து, தமிழில் ஏற்பட்ட சிறந்த தொடக்கம் இப்புதினம். 150 ஆண்டுகள் கழித்தும் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக இன்றைக்கும் relevant ஆக இருப்பது மேலும் சிறப்பு.
16 reviews1 follower
April 26, 2020
This is the first tamil novel published and it was published 141 years ago. I started reading this last month, but then i was not at all interested because, the lifestyle described, the ideas suggested, the way it is written are much different from modern tamil novels and the title sounds it is about a particular caste(actually not) . It is more of short stories and advices joined together in a timeline just like modern tamil soap (But the novel has more quality). Good read if you have mindset it was written in the past and is the first of its kind. The author speaks more of history, ethics and law.. Thought in between read that he may be a lawyer... Some ideas proposed in the novel may way progressive social thoughts at that time which may sound not apt in today's world. We might have read about doctrine of lapse, but we are not aware how it would have affected people at that time. It speaks on imposition of English, Women empowerment. Coincidently little of pandemic. I would give a rating of 6.5 in a scale of 10. English translation of the Novel is also available..
33 reviews1 follower
February 27, 2021
I listened to this book in storytel, where it has the introduction, which itself is one eighth of the total book, written by Gnanakkoothan. That best describes and criticizes the book and author. It is full of spoilers (!) and it's better to read or listen after the complete book.

We can learn a lot about contemporary period's language, society, family(rich), caste (a little) and lot more from this novel. Author was informed of lot of things around the country, state administration, slave trade etc.

Primarily, talking about first Tamil novel tag, I acknowledged it with scratching head. As it's full of Sanskrit words. Understood most of the words in hindsight.

In terms of engagement, obviously most of the stuffs are outdated. It was mind-blowing wherever it was talking about . It has good humour but looks like we are already exposed to such due to plagiarism.

Overall, it can be read for understanding Tamil Nadu history rather than for entertainment. It can also be read for thesis on education, administration, lawyers and ruler.
12 reviews
July 6, 2018
First novel of Tamil

Really fortunate to read this , Lot of words we are not using now ! Narration took me to ace age of British raj . Lot of messages are still matching . It showing the pride tradition of Tamil & India . If you have patience you can enjoy a ton . பிரதாபமுதலியார்-ஞானாம்பாள் வாழ்க ☺
6 reviews
July 15, 2017
Tamil's first novel

It is the first novel in Tamil.

The language is a bit hard to understand. Some of the ideas proposed by the author are good but majority of them are not applicable as of now.

It is recommended for those who are interested in 18th century life...
3 reviews
April 19, 2019
First Tamil novel in prose

First time i have read the first Tamil novel in prose
Many new words of old Tamil Great effort. Very good
Profile Image for viswanathan Raja.
4 reviews
Read
September 23, 2020
This is the first Tamil Print book. The sequence and writing are good with the nativity , reading recommended. The flow , characters are local area defined .onsidering the fact of the first Tamil Books , Must read
Profile Image for Harish.
170 reviews11 followers
March 29, 2014
Takes you back in time. You will love the word play.
Displaying 1 - 17 of 17 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.