ஏறக்குறைய 1976-77க்குப் பிறகு தான் ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பற்றி நம் நாட்டில் மிகுதியாக நூல்கள் வெளிவரத் தொடங்கின. அதற்குத் தலைமையான காரணம் எழுபதுகளின் பிற்பகுதியில் நம் நாட்டில் ஆய்வியல் நிறைஞர் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதுதான் என்றால் தவறாகாது. அந்தக் காலகட்டத்துக்கு முன்பு முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்களுக்கு அவர்களுடைய ஆசிரியப் பெருமக்களே ஆய்வு நெறிமுறைகளை அவ்வப்போது கற்பித்து உணர்த்தியிருக்கிறார்கள் . ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பற்றி நூல்கள் தேவை என்ற எண்ணம் அப்போது இயல்பாகவே எழவில்லை.
ஆய்வியல் நிறைஞர் படிப்பில் ஆராய்ச்சி நெறிமுறைகள் தேர்வுக்குரிய ஒரு தாளாக அமைக்கப்பட்ட பிறகு இந்தப்பாடத்துக்குரிய நூல்களĮ