மனிதர்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். பயணங்களே நாகரிகங்களை வடிவமைத்தன. நாம் வாழும் இந்த இடம், மாபெரும் பூமிப்பந்தின் சிறியதொரு புள்ளி என்hதை பயணங்களே நமக்குப் புரியவைக்கின்றன. வாழ்க்கை என்பது ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகம் என்றால், பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்திலேயே நின்றுவிடுகிறார்கள்.