நீலகிரியின் மேற்குத் தொடர்ச்சியில் காணப்படும் மலைகள் பலவற்றுள் இரண்டாவது பெரியமலை என்ற அந்தஸ்துடன் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் குன்னூர் மலைப் பகுதியில் வெகு இயல்பாக உலவி வர முடியும் என்று ஒரு வருடத்திற்கு முன்னால் எவர் சொல்லியிருந்தாலும் நம்பியிருக்க மாட்டோம் என்று நினைத்துக் கொண்டாள் மீனா.. இன்று அந்த அழகிய மலைபிரதேசம் அவளுக்குப் பரிச்சயமானதாக ஆகியிருந்தது.. அங்கேயே பிறந்து வளர்ந்தவளைப் போல அந்தப் பிராந்தியம் முழுவதும் சுற்றி வந்தாள் மீனா..