"கௌசல்யா சுப்ரஜா.." மிருதுவான சங்கீதம் தேனாக காதுகளில் நுழைய கண் விழித்தாள் மீனா.. முழுப் பெயர் மீனாம்பிகை.. அவளுடைய அப்பா மூர்த்தியைப் பெற்ற பாட்டியின் பெயர் மீனலோசனியாம்.. அவளது நினைவாக மீனாவுக்கு மீனலோசனி என்று நாமகரணம் சூட்ட நினைத்தார்களாம்.. மீனாவின் அம்மா வசந்தா அம்பிகையை ஆராதித்தவளாம்.. அதனால் மீனலோசனி என்ற பெயர் சிறு திருத்தத்துடன் மீனாம்பிகை என்று மாறியதாம்.. நல்லவேளை என்று நினைத்துக் கொள்வாள் மீனா..