‘Nagarajan had a glimpse of visions that great souls have not yet seen’ Sundara Ramaswamy
This novella by the maverick Tamil prose writer G. Nagarajan centres on one eventful day in the life of a small-scale operator, fix-it man, pimp and procurer, Kandan. It offers a reading of the seamy margins of society and explores time and temporality, human desire and the possibility of love in the harsh and often violent underworld of a small town in Tamil Nadu.
Translated by Abbie Ziffren, one of the finest readers of modern Tamil prose, and with an insightful introduction by David Shulman, Tomorrow Is One More Day presents a major Tamil novelist to a whole new audience.
ஜி. நாகராஜன் (G. Nagarajan) தமிழ் எழுத்தாளர். நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள் ஆகியோரின் அடித்தள உலகை சித்தரிப்பவை இவருடைய எழுத்துக்கள். மனிதாபிமானநோக்கோ விமர்சனப்பார்வையோ இல்லாமல் அங்கதப்பார்வையுடன் அவ்வுலகை உருவாக்கிக் காட்டுபவை. கட்டற்ற வாழ்க்கைமுறை கொண்டவர் என்பதனாலும் ஒரு தீவிரமான ஆளுமைப்பிம்பம் இவருக்கு உள்ளது.
எப்போதாவது சோர்வாக உணரும் போது, சும்மா இரண்டு பக்கங்கள் வாசிக்கலாம் என்று தோன்றும் போது தேர்ந்தெடுக்கும் ஒரே புத்தகம் சுஜாதா எழுதிய “கணையாழியின் கடைசி பக்கங்கள்”. அப்படி படிக்கும் போது, நமக்கு பிடித்த நாவலை ஒருவர் எழுதிவிட்ட காரணத்தாலே அவரின் அனைத்து படைப்புகளையும் புகழ்ந்து தள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்று ஜி.நாகராஜன் எழுதிய குறத்தி முடக்கை சுஜாதா விமர்சிக்கிறார், மேலும் அதே பதிவில் ஜி.நா எழுதிய “நாளை மற்றுமொறு நாளே” என்ற நாவலை சிலாகித்து எழுதுகிறார். குறத்தி முடக்கு எனக்கு பிடித்திருந்தது, அதைவிட சிறந்தது என்று கருதப்படும் நாவலை படிக்க தூண்டியது க.க.ப.
கந்தனின் வாழ்வில் ஒரு நாள் நடக்கும் சம்பவங்களின் ஊடாக நம்மை அவனுடன் பயணிக்கச் செய்யும் எழுத்து. கதை வடிவம் புதிதாக இருந்தது. எதேச்சையாக அவன் பார்க்கும் காட்சிகளான, இரண்டு நாய்கள், பலூன், வண்டி போன்றவை அவன் வாழ்வில் நடந்த முக்கிமான சம்பவங்களையும் மனிதர்களையும் அடிகோடிட்டு செல்கிறது. சாராயக் கடையில், லாட்ஜில், பெட்டி கடைகளில் இருக்கும் சாதாரண மனிதர்கள் பாட்டாளிகளின் அரசியலையும் முதலாளித்துவத்தின் பாதகத்தையும் நையாண்டியுடன் விமர்சிக்கும் எழுத்து அட்டகாசம். அவசியம் படிக்க வேண்டிய நாவல்.👌
குறத்தி முடுக்கில் உணர முடிந்த யதார்த்தம், இந்நாவலில் ஏனோ கிடைக்கவில்லை. ஒரு மாதிரியான அந்நியத்தன்மை. அதனாலேயே 'கந்தன்' என்கிற பிரதானக் கதாபாத்திரத்தின் மீது எவ்வித ஈர்ப்போ/அனுதாபமோ/ஆர்வமோ ஏற்படவில்லை.
கந்தனைக் கழுகுப் பார்வையில் பின்தொடர்ந்த ஒரு 'வெளி ஆள்' பதிவு செய்த குறிப்புகள் போன்று தோன்றியதே தவிர, அவனின் அன்றாடத்தில் பின்னிப் பிணைந்து அசலாகப் பதியப்பட்ட அனுபவங்களாகத் தோன்றவில்லை.
An excellent find on Kindle. G. Nagarajan used surrealism in this 1970s novel. Everything happened in one day though it has a lot of flashbacks and the next day is just another day. I am going to read his rest of the collections available on Kindle.
ராஜாக்களின், வீரர்களின், ஞானிகளின், துப்பரிவாளர்களின், கற்ப்புகரசிகளின்,குடும்பப்பெண்களின், கதைகளை படித்து ஒரு வகையாக நாமும் இப்படி இல்லை என்று பெருமூச்சுடன் மூடிவைக்கக்கூடிய, சந்தோச முடிவுகளின் பொருட்டு வேகமாக நெருங்கும் கடைசி பக்ககளை கொண்ட, பெரும் துக்கங்களின் சுமைகளை சுமந்து நம்மை சில நாட்கள் வதைக்கிற, எந்த கதையும் தொடாமல் பயணிக்கிற புது மாதிரியான கதை களம், நம் வீட்டின் கீழ், நம் அடுக்கு மாடிகளை ஒட்டிய குப்பங்களில், குடிசைகளில், வாழ்கிற சாதாரண ஒரு மனிதன், ஒரு பெண், ஒரு குழந்தை, ஒரு சாதாரண காவலாளி, தாசிகள் என சமூகத்தால் ஒதுக்கப்பட்ட, மொத்தத்தில் நம்மால் அருவெறுப்பாக பார்க்கபடுகிற மக்களை பற்றிய கதை களம், ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை, அவனின் வாழ்க்கை ஆதாரத்துக்காக அவன் செய்யும் / இந்த சமூகத்தில் அவனால் செய்ய முடிந்த அவனை சார்ந்த மக்களின் (நம்மை பொறுத்த வரை) கீழ்தர நடவடிக்கைகளை (அவர்களை பொறுத்தவரை அதுவே அவர்களால் நியாயமாக/ இயன்றதாக ) முன்வைத்து நகர்கிறது.நமக்கு கீழ் இதனை கீழ்த்தரமான சமூகம் உள்ளது என்பதை உணர வேண்டும் என்பதற்காகவாவது ஒரு வாசகனாக நாம் படிக்க வேண்டிய ஒன்று. இவர்களையும் நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்வோம்.அவர்களுக்கு நாளை மற்றுமொரு நாளே....... Grungy Reading :) .
குறத்தி முடுக்கு நாவலுக்கு பிறகு நான் படிக்கும் ஜி நாகராஜனின் இரண்டாம் நாவல் நாளை மற்றுமொரு நாளே. ஜி நாகராஜன் இந்த இரண்டு நாவலுக்கு பிறகு, சிறுகதைகளைத் தவிர வேறு நாவல் எதையும் எழுதாதது வருத்தமே.
ஜி.நாகராஜனின் தனித்தன்மையான பாங்கு; இதுவரை படித்திராத ஒன்று. இந்த நாவலில் கந்தன் என்ற பாலியல் புரோக்கரின் பொழுதுகளை பதிவு செய்திருக்கிறார்.
சுப்பையா செட்டியார் - ஐரின், அத்தியாயத்தை தொட்ட உடனே எழுத்து நையாண்டியின் உச்சத்திற்கு சென்று விடுகிறது.
காலனியில் இருந்த ஆங்கிலோ இந்திய இளைஞர்கள் கல்யாணத்துக்கு முன்னால் தங்களது ஆண்மையை சோதித்துக் கொள்ள அவள் பெரிதும் உதவி வந்தாள். ROFL
சந்திரனை பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைத்தாள் மீனா. நிறைய கெட்ட வார்த்தைகளை கற்றுக் கொண்டு வந்தான். இனிமேலும் கற்றுக்கொள்ள கெட்டவார்த்தைகள் பள்ளிக்கூடத்தில் கிடைக்கவில்லை என்பதை அறிந்ததும்; பள்ளிக்குப் போவதை நிறுத்திக் கொண்டான்.
G Nagarajan was one of the greatest writers of Tamil prose, equal only to a writer of the stature of Jayakanthan. And it is one of my greatest regrets that I will never be able to read him in Tamil, having been brought up in the north of my country and never having the chance to learn to read and write my own language.
So when I chanced upon this Penguin Classics translation of 'Naalai Mattrum Oru Naal' (spelled wrongly on the cover), I had to get my hands on it, and I did.
It's a description of a single day in the life of a 'fumbler' in the small town Tamilnadu of the 1950s, and it's a portrait of a completely different time. It's a beautiful short tale, told in sometimes unnerving prose, and has a rough undercurrent of the time's Marxist and Dravidian political movements. It's not an 'entertaining' read, it is quite disturbing at times as a picture of the margins of Tamil society, but it is also endearing in a quiet, understated way.
Do not miss David Schulman's critical introduction to the novella. It will set you up for the almost Camus-like existentialist prose to follow.
நாளை மற்றுமொரு நாளே ----------------------------------------------- எவனோ ஒருவனின் ஒரு நாள் வாழ்க்கையை அதற்கே உரித்தான இசைவுகளுடனும் அபத்தங்களுடனும் கூறிச் செல்கிறார் ஜி.நாகராஜன்.
முழு வாழ்க்கையும் ஒரு அனுபவமே என எண்ணும் பட்சத்தில் அந்த அனுபவத்தை வெளிச்சத்திலிருந்து இருட்டை கண்டும் பெற முடியும், இருட்டிலிருந்து வெளிச்சத்தைக் கண்டும் பெற முடியும். நாளை மற்றுமொரு நாளே இரண்டாவது வகையைச் சார்ந்தது.
ஒரு நாளில் வாழ்க்கை , அது தான் நாளை மற்றுமொரு நாளே , கந்தன் என்��வன் சுற்றி நடக்கும் கதை , ஒரு நாள் கதைக்களம் என்றாலும் , முன்கதை பல இடைச்சொருகலாக வந்து போகிறது . இந்த கதைக்களம் , தற்போது பல திரைப்படங்���ள் , நாவல்கள் , வழி நாம் பார்த்துவிட்டோம் , அக்காலத்தில் புதுமையான படைப்பாக , தோன்றி இருக்கலாம் . நல்ல வாசிப்பு .
'His glance happens to skim the heavens. Heaps of scattered lights make his hair stand on end. He's never wanted to know what they are or what they stand for. He has had the childish wish to fly among them. He doesn't wish that now; just looking at them is frightening.'
A small-time pimp and fixer schemes his schemes, looks back on his short, sordid life and comes face to face with the unforeseen. Is it a murder mystery in disguise or just another hard luck tale?
The translator's introduction holds up Chekhov and Camus as comparisons and influences on Nagarajan's blend of realism and existentialism.
These are good comparisons and valid reference points, but the book also puts me in mind of the bleak visions of noir writers like Chandler and Hammett and especially the novels of Simenon, themselves a form of existentialist crime fiction. This in turn puts me in mind of James Sallis, basically an existentialist who writes crime fiction. These are only comparisons, Nagarajan was not exposed to any of the writers I've just named, as far as I know.
Nagarajan's fictional world is bleaker than all these writers', except perhaps Simenon's, and there's a strong sense that this might be because it is, in fact, identical with the real world. An unforgettable narrative and a perfect miniature, containing vaster volumes than many longer novels.
You read this work not for the story and not for the plot, but to have an experience of the vignettes of someone outside the usual margins of the society. And in this the Author has done a remarkable job. It can help us, the privileged, understand what we consider scandalous need not be so. Here the love takes unusual forms, not out of the need to experiment, but because of lack of options. In a way the true love, because here is a form of love that is constrained to not have any constraints. Despite many constraints in life, financial and otherwise, the protagonist here cannot consider them all, because if it gets too concerned with them, he will be undone. Because for the protagonist working it out any which way possible despite all the constraints is the only thing that can feed him for the day. And that too just for the day, and come tomorrow he needs to look at a new set of equations to keep him fed and clothed. But then again the new set of equations that come on the next day are tied with the same thematic clips. And all this thematic clips are hanging by just one hook, surviving any which way. And this requires that the protagonist doesn't get too much encumbered by emotions, he can only have them in small doses like taking a medicine.
I think, this overarching theme is what the author is trying to show us. And the author does it with text that doesn't even have a hint of melodrama. All the episodes that happened to the protagonist are factual and transactional in nature. What I mean is for this text there is no composed background music to speak of, other than the constant murmur of the life happening its frenetic pace that doesn't care or stop for anyone. And life doesn't care for tying up different threads of existence nicely. The everyday existence, just like some episodes of the protagonist are cut half-way, have frayed ends, and can remain perpetually unfinished.
Such a work that can depict to us an existence that we don't get to experience and or more precisely can never want to experience, in a very undramatic yet gripping way should definitely be celebrated. Even if you don't care for anything the author wanted to give you a glimpse of, the text is still very much readable because of its definite page turning capability. There was never a dull moment. The life of someone outside conventional margins, despite the overarching sameness, that is the struggle for survival, can never have a dull moment. The translation itself was very decent, I guess, I can never say for sure, the type of writing that the author originally employed in Tamil to tell us such a tale as this. A must-read.
ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கென ஒரு உலகத்தை தேர்ந்துதெடுத்து தன் வாழ்க்கை முழுதும் அதற்குள் மட்டுமே பயணிக்க விரும்புவார். அந்த உலகம் எவ்வளவு எதார்த்தமாகவும், நிகழ் உலகத்தின் நிஜங்களாகவும் இருக்கும் வரையில் அந்த எழுத்தும், எழுத்தாளரும் உயிர்ப்புடன் இருப்பார்கள். அந்த வகையில் ஜி நாகராஜன் எனக்கு தெரிந்த வரையில் மனிதனின் இச்சைகளும், ஆசைகளும் சக மனிதனை காவு வாங்கும் வரை அவரும் அவரின் எழுத்தும் உயிரிப்புடன்தான் இருக்கும்.
வேசி, விலை மாது, தாசி, சிகப்பு விளக்கு, இப்படி எண்ணற்ற பெயர்கள் சூட்டுவதில் மெனக்கெடும் இந்த சமூகம் ஏனோ அவர்களின் நிலையை மாற்றுவதற்கு அவ்வளவு மெனக்கெடல்கள் எடுப்பதில்லை. மறுவாழ்வு மையங்கள் இருக்கிறதே? என்று உங்கள் கேள்விகள் எனக்கு கேட்கின்றன, ஆனால் முதலில் அவர்கள் எப்பொழுதும் தங்கள் முதல் வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்தர்கள்? நாம் அவர்களை அவர்கள் விரும்பும்படி வாழ விட்டோமா? அவர்களை மதித்து பாதுகாக்க வேண்டிய ஆண்களாகிய நாம் அவர்களின் பணத்தேவைக்காக நம் வெளிக்காட்டாத அசிங்கமான அருவெறுப்பான முகத்தை அந்த இருளுக்குள் அவர்களிடம் வெளிகாட்டி நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். இந்த உலகில் நிகழும் எண்ணற்ற மனித குல கொடூரங்களில் இதுவே முதன்மையானது. அப்படி சில மனிதர்களை பற்றிய ஒரு நாளைய கதையே இந்த நாளை மற்றுமொரு நாளே நாவல். ஆம், அவர்களுக்கும் நமக்கும் அது மற்றுமொரு நாள்தான்.இங்கு எதுவும் மாறப்போவதில்லை, மாறும் வரை எந்த நாளும் ஒரே நாளாகத்தான் அவர்களுக்கும் நமக்கும் இருக்கப்போகிறது.
இந்த கதையில் எண்ணற்ற பாத்திரங்கள் உலாவினாலும், கந்தனும், மீனாவும் ஏனோ கதை முடிந்த பின்னரும் நம் கண்களில் ஆங்காங்கே தெரிந்துகொண்டே இருக்கின்றனர். ஒரு நாள் விடியலில் தொடங்கி இருள் வரை கதை நகர்ந்தாலும் அவர்களின் வாழ்வில் இருள் மட்டுமே மிஞ்சியுள்ளது. சில நூறுகளுக்கு பெண்களை இடம் மாற்றுவது, ஒரு வேளை சாராயத்திற்கு பஞ்சாயத்து பார்ப்பது, வேசியை மணமுடிப்பது, சிறு தயக்கமும் இன்றி விளிம்பு நிலை மக்களை ஏமாற்றுவது, பண முதலைகளின் வெறியாட்டங்கள் என்று கதை நெடுக இருள் மெல்ல மெல்ல படர்ந்துக்கொண்டே வருகின்றன. கதை முழுக்க குழந்தைகளின் அழு குரல் கேட்டுக்கொண்டே இருக்கும், மனித ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன, சாக்கடையும், சகதியும், கிழிந்த கூரைகளும், உடைந்த கதவுகளும், ஒடுங்கிய பாத்திரங்களும் தான் இவர்களின் நிலம். என்ன செய்வது காவல் துறைக்கு வாரா வாரம் கொடுக்க வேண்டிய ஊதியத்திற்காகவாவது இவர்கள் இரவு கண்விழித்து வேலை பார்க்க வேண்டியருக்கிறது. இந்த கதை இறுதி பக்கத்தில் முடிந்துவிடுவதில்லை, இது பக்கங்களில் முடியக்கூடிய கதையில்லை, இது நம் அனைவரின் மனதிலும் ஒரு முடிவுக்கு வர வேண்டிய கதை, அடுத்த தலைமுறையினரின் மனதில் இருந்து அகற்ற பட வேண்டிய கதை. முடிந்தால் நாளை மற்றுமொரு நாளாக மட்டுமே அல்லாமல் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தும் நாளாக மாற்றுவோம்.
"All that he and she had was 'today'; they couldn't even conceive of 'tomorrow'. 'Tomorrow is Monday,' Kandan thought to himself meaninglessly. What date is this? Who knows what date it is? When it's time for Naidu's rent, the date's the sixth, that's all."
This was an absorbing read, and Nagarajan is a masterful writer who manages to make you feel like you're right there in a small town in Tamil Nadu, along with the protaganist Kandan who we follow in the course of a day as he weaves in and out the lives and conversations and troubles of the people in his town, as he flirts with married women, smooths out neighbourly disputes, listens in on passionate political tirades on socialism, and looks with no great agony at the state of his life and there is a tone of disturbing indifference as tragedy after tragedy strikes. For the people living in that town, their great tragedies are suffused with the oppressive mood of normalcy, the writing itself refuses sentimentality. It is just another day for them to live through.
There is kaleidoscopic effect to the novella, and the quiet and suffocating despair builds throughout, before it finally crescendoes at the end. But even at the end, as we read Kandan bearing a great injustice, the mood is still one of a deep, celestial indifference. In the great scheme of things, this is just one more day.
I was reading up on Nagarajan online after I finished and read the following passage:
"G. Nagarajan (1929-1981), the most marginal of contemporary Tamil writers, a master of precision in his prose, a Brahmin and an atheist, a militant Marxist who broke with the Communist Party, a sensitive and brilliant teacher of English and Mathematics, an adulterer, a smoker of Ganja, an alcoholic, a vagabond and bohemian, a loving father of two children who instructed them to be bold and courageous at all times, died alone in a Government Hospital in Madurai, that temple-centered city in which he had roamed around and lived most of his life, the landscape in which most of his stories are set and narrated."
Hard not to see that Nagarajan had infused some of his disposition into the character of Kandan.
One of my best reads this year, and I feel a great respect for translators like Abbie Ziffren who dedicate their lives to making literature reach wider audiences.
காலையில் கந்தன் சாராயத்துடன் தொடங்குவது முதல் விலைமாது மீது காதல் கொள்வது, கல்யாணம் முடிஞ்சும் தொழிலை தொடர்வது என பல அப்பட்டமான உண்மை உணர்வுகளை தன் கற்பனையின் மூலம் எழுதி தெளிவுபடுத்தி உள்ளார் எழுத்தாளர் ஜி. நாகராஜன் அவர்க���்...
சற்றும் எதிர்பாராத ஒரு கதைக்களம், எழுத்துநடை, வாழ்வியல், முதலாளித்துவம் என பல விடயங்களை ஒருவித நக்கலுடன் கையாண்ட விதம் வாசிப்பின் ஆர்வத்தை தூண்டியது. கந்தனின் பின்னணியில் யாரோ ஒருவராக மட்டுமே கதையை தொடர முடிந்ததேத் தவிர கதையினுள் இனைய முடியாதது சிரு ஏமாற்றம். நன்றி ஆசிரியருக்கு♥️.
வேகவேகமாக பக்கங்களை திருப்ப வைக்கும் இந்த நாவலில் புனிதம் என்று எதுவும் இல்லை, யாருமே புனிதர்கள் இல்லை. கடவுள் இல்லை, அரசன் இல்லை. நன்மைக்கான பிரச்சாரமோ, நம்பிக்கையோ இல்லை. நாம் அசாதாரணமாக கடந்த சாதாரண ஒரு நாள். நாம் முகம் சுளிக்கும் மனிதர்கள் மட்டுமே இதில் இருக்கிறார்கள். சாராயம், விபச்சாரம், பணம், பஞ்சாயத்து இவை புரண்டு ஓடும் வாழ்வியலை சொல்லும் ஒரு கிளாசிக் நாவல். மனிதன், மகத்தான சல்லிப்பயல் என்பார் ஜி. நாகராஜன். வாழ்வின் முட்கள் மீது அவனேதான் விழுகிறான். இந்த நாவல் ஒரு முள். இதன் மீதும் ஒரு முறை விழுந்து எழலாம்.
Story of a person in a day. Doesn't talk about what's going to happen the next day. It's all about today.
The story has a lot of revolutionary ideologies against the norms like marrying a prostitute and finding a new home for her when he's unwell. But I'm not sure if I got the crux/essence of the book. I'm still trying to think and find what the author is coming to say. The climax is something that I clearly didn't understand.
சம்பவங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாய் தோன்றுகின்றன. வறுமையை உணர முடிகிறது. இடையிடையே பொதுநலக்கோட்பாடு பேசப்படுகிறது. குற்றம் என்று நாம் நினைக்கும் செயல்களுக்குப் பின் ஒரு நியாயம் இருக்கிறது என்று தெரிகிறது ஆனால் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என்னவென்ற தெளிவு இல்லை.
பள்ளிப்பருவத்தில் Roger Martin Du Gard எழுதிய Vielle France (1933) நாவலை வாசித்தேன். ஒரு மலையடி கிராமம். அதில் ழான் எனும் போஸ்ட்மேனின் ஒரு நாள் நாவலின் கதை. நான்கு மணிக்கு அவன் எழுந்துக்கொண்டு மலை உச்சி ரயில் நிலையத்திற்கு சென்று கடிதங்களை பெற்றுக்கொண்டு, ஒவ்வொன்றாக கொடுத்துவிட்டு, அன்றிரவு பொழுதுசாயும் போது வீடுதிரும்புகிறான். அதுவரை அவனுடன் பயணிப்போம். அவன் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருக்கு பின்னாலும் ஒரு வரலாறு ஒளிந்திருக்கும். படித்து பத்து வருடங்கள் கடந்தபின்னும் அந்நாவலின் தாக்கம் குறையவில்லை.
ஜி நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ அதே வடிவத்தில் எழுதப்பட்ட ஒன்று. இந்நாவலைப்பற்றி ‘நாவல் கோட்பாடு’ புத்தகத்தில் ஜெயமோகனின் விமர்சனத்தைப்படித்து ஆவலில் வாங்கிப்படித்தேன்.
கந்தன் எனும் பிம்ப். அவனது ஒரு நாள் இந்நாவல். ஒரு தியேட்டரில் வேலைசெய்துக்கொண்டிருந்த கந்தன் மீனா எனும் வேசியின் மீது காதல்வயப்படுகிறான். சோலைப்பிள்ளையிடம் அவளை கல்யாணம் செய்துக்கொள்ள பெண் கேட்கிறான். அதற்கு ஈடாக தன் வீட்டை விற்று காசைக்கொடுக்கிறான். சோலைப்பிள்ளையால் ஏமாற்றப்படுகிறான்.
அங்கிருந்து கந்தனும் பிறரை ஏமாற்றும் ஒருவனாக மாறிவிடுகிறான். தான் காதலித்து மணந்த மீனாவை இன்னும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறான். அதனால் அவன் மீது மீனாவிற்கு கோபமோ வருத்தமோ இருப்பதாக தெரியவில்லை. இட்லி கடை வைத்திருப்பது போல இதுவும் ஒரு தொழில்தானே என்கிற பிரக்ஞையில் இம்மனிதர்கள் வாழ்கிறார்கள்.
இவ்வொரு நாளில் ஓடிப்போன கந்தனின் மூத்த மகன், இறந்துப் போன இரண்டாவது மகள். அவன் பக்கத்து வீட்டில் தூக்கிமாட்டி இறந்துப்போன இளைஞன். லாரி இடித்து பேச்சுப்போன சிறுமி - என பல மனிதர்களின் கதையை கந்தனின் வழியே அறிகிறோம்.
அவர்களின் வாழ்க்கை முழுதாக விரித்துவைக்கப்படவில்லை. துரிதமாக ஒரு சில பக்கங்களில் அழுத்தமாக சொல்லிமுடிக்கப்படுகிறது. பல இடங்களில் நாம் நிரப்ப வேண்டிய மெளனங்கள்.
காலை எழுந்தவுடன் ஜிஞ்சரை தேடும் குடிநோயாளியாக இருக்கிறான் கந்தன். தன் கணவனுக்கு தெரியாமல் விபச்சாரம் செய்ய உதவுமாறு கேட்டு வந்து நிற்கும் தன் நண்பனின் மனைவிக்கு மோகனா என பெயர் வைத்து தன் தொழிலில் இணைத்துக்கொள்கிறான். முதல் வாசிப்பிலோ, வாசிக்கும் அக்கணத்திலோ இவை விளங்குவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கந்தன் யார்? அவன் தொழில் என்ன? அவன் சிநேகிதர்கள் விரோதிகள் யார் யார்? என அனைத்தும் விளங்கிமுடிக்க, மனதிற்குள் அந்நாளை மீண்டும் ஓட்டிப்பார்த்தால் முழு அர்த்தம் புரிகிறது.
கந்தன் வீட்டிலிருந்து சலூன் கடைப்போகிறான். அங்கே தனக்கு முடிவெட்டும் சிறுவனின் ஸ்பரிசத்தில் கிளர்ச்சி அடைகிறான். அப்படியென்றால் கந்தன் தன்பால்விருப்பியா? மீண்டும் மெளனம். வீட்டிற்கு வந்து தன் மனைவி மீனாவுடன் உறவுக்கொள்கிறான். அதனூடே அவளது கஸ்டமர்களைப்பற்றி விசாரிக்கிறான்.
வெளியே போகிறான். மீண்டும் ஜிஞ்சர். சாராயக்கடையில் ரவுடித்தனம். நண்பனுடன் சென்று லாட்ஜில் ஒருவனை மிரட்டி பணம்பறிக்கிறான். நண்பனுக்கு அவன் ஆசைப்படும் விதவைப்பெண்ணை ஏற்பாடு செய்துத்தருகிறான். குதிரை வண்டிப்பிடித்து பக்கத்து ஊருக்கு செல்கிறான். அந்தோணி எனும் ப்ரோக்கரை சந்தித்து வீட்டு இருட்டும் வேளையில் நடந்தே வருகிறான். ஒரு கொலையை சந்திக்கிறான். வீடு திரும்புகிறான். இதுவே அவன் ஒரு நாள்.
குறைந்தபட்சம் 30 கதாபாத்திரங்களாவது நாம் சந்தித்திருப்போம். அவர்களது கதைகளை தெரிந்துக்கொண்டிருப்போம். காதல் செய்ய காண்ட்ராக்ட் போடும் ஆங்க்லோ இந்திய ஐரீன் போன்ற விசித்திர பாத்திரங்கள் வந்துபோகின்றன.
என்னை மிகவும் கவர்ந்த பாத்திரம் - ப்ரோக்கர் அந்தோணி. அவனது வாழ்க்கைப்பார்வை தெளிவாக உள்ளது. சதுரங்கவேட்டை படத்தில் வரும் வசனம், “உன்ன ஒருத்தன் ஏமாத்திட்டா அவன எதிரியா பாக்காத. குருவா பாரு. அவன் உனக்கு ஒரு தந்திரத்த சொல்லிக்கொடுத்திருக்கான்” இவனுடையதுதான்.
விடலைப்பருவத்தின் உடன் படிக்கும் மாணவன் ஒருவன் சவால் விடுகிறான். பிறந்தமேனியாக மைதானத்தில் ஓடினால் ஐந்து ரூபாய் பெட். பிறர் தயங்க, அந்தோணி செய்து முடிக்கிறான். மாணவர்கள் கேலி செய்தது அந்தோணியை அல்ல. தோற்ற சவால்காரனை. பணம் கேடுகெட்ட ஒன்று என்று புரிந்துக்கொள்கிறான்.
அதன் பின்னர் பலருக்கு ப்ரோக்கர் வேலைப்பார்க்கிறான். ஒரு சாராரோடு நிறுத்திக்கொள்வது உகந்ததல்ல என்கிறான். ஒரு டாக்டருக்கு நிலம் வாங்க உதவினால் ஒரு இஞ்சினீயரை நட்பாக்கலாம். அந்த இஞ்சினீயருக்கு காண்ட்ராக்ட் வாங்கித்தர உதவினால் தாசில்தாரை நட்பாக்கலாம். தாசில்தாருக்கு வைப்பாட்டி வைக்க உதவினால் இன்னொருவரை நட்பாக்கலாம். அக்காலத்தில் நெட்வர்கிங் ஜித்தனாக அந்தோணி இருக்கிறான்.
பிறரை எப்படி ஏமாற்றுவது, சூழ்ச்சி செய்வது என்று யோசித்தால் தான் உசுரோடு இருப்பதாகவே அர்த்தம் என்கிறான். ராமன், கண்ணன், சாத்தான், கடவுள் என தன் கொள்கைக்கு அத்தனை பேரையும் பிராண்ட் அம்பாசிடர் ஆக்குகிறான்!
படு சுவாரஸ்யமான பாத்திரம்.
நாவலின் இறுதியில் கந்தனுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. தன்னை முதன்முதலில் ஏமாற்றி வாழ்க்கையை சீரழித்த சோலைப்பிள்ளையை இருவர் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இருள் கமிழும் நேரம். குறுக்கே புகுந்து சோலைப்பிள்ளையை தன் கத்தியால் குத்திப்போடுகிறான் கந்தன் (அல்லது எனக்கு அவ்வாறு தோன்றியது). தன் ஜென்ம பகையாளி தீர்ந்தான். பழி வேறொருவர் மீது விழுந்தது என திருப்தியடைகிறான். இன்னொருவர் வந்து டார்ச் அடித்துப் பார்த்தபின்பே தெரிகிறது. இறந்தவன் சோலைப்பிள்ளை இல்லை. வேறொருவன்!
இருட்டில் அடையாளம் தெரியாமல் வேறொருவனை கொலை செய்துவிட்டான் கந்தன். இதுவரை அவன் எட்டாத தூரம் இது. குற்றமிது. வீட்டிற்கு நடந்துச்செல்ல அன்றிரவு கனவில் அவன் மனசாட்சி அவனை சிறையில் தள்ளுகிறது.
இதுவே எனக்கான புரிதலாக உள்ளது. தவறாகவும் இருக்கலாம்.
நல்ல வடிவம், நல்ல கதைகளை கொண்டிருந்தாலும் ஒட்டுமொத்தமாக Vielle France கொடுத்த ஒரு வரலாற்று அனுபவத்தை இந்நாவல் கொடுக்கவில்லை என்பது சிறுவருத்தம். ஆனால், சலிப்பான நாவல் இல்லை.
This entire review has been hidden because of spoilers.
நான் படிக்கும் ஜி.நாகராஜனின் இரண்டாவது படைப்பு . கண்டிப்பாக முதல் படைப்பு கொடுத்த ஒரு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஆசிரியரின் இரண்டாவது நாவல் தரவில்லை . எதிர்பார்ப்பு என்றுமே ஏமாற்றம் தான் என்பதை இந்த வருடத்தில் எனக்கு உணர்த்தும் இரண்டாவது புத்தகமிது . குறத்தி முடுக்கு போல் ஆரம்பித்து எழுத முனைந்து தடம் மாறி கந்தனின் ஒரு நாள் வாழ்க்கையை ரசிகர்களுக்கு சொல்ல முனைந்து எதிர்பாரா ஒரு கொலைக்கு இட்டு சென்று ஓர் எதிர்மறை முடிவுடன் முடிகிறது கதை . கதையோட்டத்தில் தேக்கம் இல்லாமல் இருப்பது மட்டுமே ஒரே ஆறுதல் . முதல் பாதியில் கந்தன் , கந்தனின் மனைவி மீனா என்று ஒன்றிரண்டு கதாபாத்திரங்கள் நாவலின் முதல் பாதியில் நினைவிலிருந்தாலும் போக போக எல்லா கதாபாத்திரமும் நீர்த்து போய்விடுகிறது . கதாபாத்திரங்களை தொடர்வது என்பது மாறி நிகழ்வுகளை தொடர தொடங்கி முடிவில் ஏன் இந்த நிகழ்வை தொடர்ந்தோம் , இந்த நிகழ்வுக்கும் அந்த கதாபாத்திரத்துக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம் . சில நாவல்களை படித்ததும் நல்ல நாவல் படித்த திருப்தி இருக்கும் . சிலவற்றை முடித்து விட்டோம் என்கிற ஒரு திருப்தி இருக்கும் . இந்த நாவல் இரண்டாம் வகையை சேர்ந்தது . குறத்தி முடுக்கு நாவல் ஒன்றே ஜி.நாகராஜனின் மொத்த திறமைக்கும் சான்றாய் இருக்கும் . இந்த நாவலை படித்தால் கண்டிப்பாக உங்களுக்கு ஆசிரியரின் மேல் இருக்கும் நன்மதிப்பு கண்டிப்பாக கூடாது , குறைய வாய்ப்பிருக்கிறது .
நீங்க வாழ்க்கைலே எதைச் சாகிக்கனூம்னு திட்டம் போட்டிருக்கீங்க ?"
கந்தன் சிரித்தான் "எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துலே வந்து பொறெந்தேன் ?"
அவன் எங்கேயோ அனுபவித்த அவமானங்களுக்கு வேறெங்கேயோ அர்த்தமற்ற நிவாரணம் தேடிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது.
பரமேஸ்வரன் பசுபதி சலூன் கடை மற்றும் கந்தன்,அம்மா, மீனா அவர்களின் மகளின் இழப்பு மகன் காணாமல் போதல்... இட்லி விற்கும் பெண்மனி,செட்டியார், லாட்ஜில் அரசியல் வாக்குவாதம்,தெரு வேடடிக்கை,வயசாலிகளின் வேலையின்மையால் குடும்பத்தில் வறுமை, சிறுமியின் கர்ப்பம்,ஆங்கிலோ இந்திய பெண்ணின் வாழ்வு, பக்கத்து வீட்டு சிறுமி,இறுதியில் ஒரு மரணம் அதன் சாட்சி என இன்னும் நிறைய நிஜங்கள் மனித வாழ்க்கையில் ஒரு நாளில் நாம் கண்டும் காணாததுமாக கடந்து செல்லும் மனிதர்களின் வாழ்க்கை,படிமங்களாக ஒருவித வலியோடு ஒருவித கிண்டலோடு ஒருவித அனுபவத்தோடு நம்முள் நிறைக்கிறார் ஜி.நாகராஜன்
இந்த கதையின் நாயகன் கனவுகளை துரத்துபவன் அல்ல..பெரிய பெரிய லட்சியங்களை நோக்கி நகர்பவன் அல்ல...நீங்கள் இதுவரை கண்ட கதநாயகனோ இல்லை கனவு நாயகனோ அல்ல மாறாக அன்றடா தினத்தை அதன் போக்கில் கழிக்கும் நாம் தெருவில் தினமும் கடந்து செல்லும் ஒருவன்..இவனின் தேவைகள் எல்லாம் இந்த நாளை இந்த பொழுதை கடந்துவிட வேண்டும் நாளைய எதிர்காலம் "நாளை மற்றுமொறு நாளே..."
பெரிய அசத்தியங்கள் சாதனைகள் நாவலில் இல்லை என்றாலும் நாவல் ஏதர்த்தமாக கையண்டருப்பது படிப்போருக்கு புது அனுபவத்தை தரும்....ஆசிரியர் பெரிய நாயகனை தேர்தெடுத்து செதுக்குவதை செய்யாமல் நம்மிள் கடந்துபோகும் ஒருத்தனை வைத்து கதை சொன்ன விதம் அருமை...!!!
ஆம்,ஆசிரியர் சொன்னது போல் எதிர்கால சிந்தனைகள் அற்றவனுக்கு "நாளை மற்றுமொறு நாளே...!!!
ஒரு கிலோ சர்க்கரை, இரண்டரை ரூபாய் இருக்கும் கால கட்டத்தில் அமைந்திருக்கும் நாகராஜனின் கதைக்களம், கந்தன் எனும் காமத் தரகரின் ஒரு நாள் வாழ்க்கை நிகழ்ச்சிகளை "stream of consciousness" வடிவில் கூறுகிறது.
காலையில் விழிக்கும் கந்தன், போதை தெளியாமலேயே ஓரிரண்டு அவுன்ஸ் ஜிஞ்ஜர் அருந்தி, சாராயக் கடையில் வேளை பார்க்கும் சிறுவனிடம் அவனது சம்பளத்தை விசாரித்து விட்டு, முடிவெட்ட வந்த இடத்தில் மிதுனம் இராசி பலன் கேட்டுவிட்டு, தன் மனைவி மீனாவுடன் புணர்ச்சியில் ஈடுபட்டு விட்டு, அப்படியே தன் அன்றாட வேலைகளைச் செய்யத் துவங்குகிறான்.
அவன் பார்க்கும் மனிதர்கள், சந்திக்கும் சூழ்நிலைகளே இக்கதையின் கருவாகும்.
தனிப்பட்ட முறையில், எனக்கு 10ல் 6 தடவை கந்தன் பேசும் வட்டார வழக்குகள் புரியவில்லை. இதைத் தவிர, "நாளை மற்றுமொரு நாளே" சிறப்பான நாவல்.
தமிழ் இலக்கியத்தில் அதிகம் கண்டுகொள்ளப்படாத பாலியல் தொழிலாளிகளையும் அவர்களை சுற்றி வாழும் விளிம்புநிலை மனிதர்களையும் கதைமாந்தர்களாக கொண்டு எழுதப்பட்ட நாவல்.எழுபதுகளிலேயே கலாச்சார கோட்பாடுகளையும் புனிதத்துவங்களையும் கட்டுடைத்து எழுதிய ஜி.நாகராஜன் பாராட்டுக்குரியவர். எவ்வாறெனினும் தியேட்டர் காவலாளியாக, சொந்த வீட்டோடு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த கந்தன் ஏன் ஒரு பாலியல் தொழிலாளிக்காக எல்லாவற்றையும் இழக்க வேண்டும் என்ற கேள்விக்கு இறுதி வரை விடை கிடைக்கவில்லை. அதனால் தான் என்னவோ கந்தனின் கதையும் அவனது சோகமும் சில நேரங்களில் வலிந்து திணிக்கப்பட்டது போல் தோன்றியது.சுப்பையா செட்டியார், ஐரின், கம்யூனிசம் பேசும் இளைஞன் போன்ற சில பாத்திரங்கள் இயல்பாக படைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கதையோட்டத்தோடு ஒட்டாமல் ஆசிரியரின் கருத்துக்களை வாசகனுக்கு முன்வைப்பதற்காக சேர்க்கப்பட்ட தேவையின்றிய இடைச்செருகல்கள் போல் இருந்தது. ஒட்டுமொத்தமாக நோக்கின் நல்ல நாவல் தான் ஆனால் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்றை வாசிக்கும் ஆவலுடன் வாசித்த எனக்கு சிறிது ஏமாற்றமே.
வாசிப்பதற்கு சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் காதல் துரோகம் வீரம் என்ற எழுதி தள்ளி கொண்டிருக்கையில் இது சற்று வித்தியாசமாகவும் புதுமையானதாகவும் இருந்திருக்க வேண்டும். பாலியல் தொழில் செய்பவர்களையும் அதற்கு உடனே அவர்களையும் எந்தவித குற்ற உணர்வோடு அணுகாமல் சாதாரணமாக மனிதர்களாக காட்டியதற்கு நன்றிகள். எந்த இடத்திலும் பாடம் எடுக்காமல் சோக ரசம் பிழியாமல் இருந்ததற்கும் நன்றிகள்.
ஒருமுறை வாசித்து பார்க்க வேண்டிய நாவல். நேரமிருந்தால் கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள்
அன்றாட வாழ்வில் நடக்கும் யதார்த்தங்களை தத்ரூபமாக வடிப்பது ஒரு கலை எனில் ஜி.நாகராஜன் அதன் பிதாமகன் என்றே சொல்ல தோன்றுகிறது. வாழ்வின் அழகை பல பேர் எழுதி இருப்பினும், அழகின்மையே வாழ்க்கை,அதை வெல்லவோ , வீழ்த்தவோ முடியாது அதை வாழ்ந்து அனுபவிப்பதே அதனை புரிந்து கொள்ள ஆகச் சிறந்த வழி என்பதை கதை மாந்தர்களின் வழியாக கடத்தி உள்ளார். 35 வருடம் முன்பு எழுதிய நாவல் இன்றுமதே அனுபவம் தருமெனின் அதுவே கிளாசிக் . வரலாறு கடந்து நிற்கும் ஆகசிறந்த படைப்பு..
நான் இதுவரை பார்த்திடாத பேசிடாத மனிதர்கள் பற்றிய கதை. ஆயினும் என்னால் அவர்களின் உலகை புரிந்துகொள்ளும்படியாக எழுதியிருக்கிறார் ஜி.நாகராஜன். ஒருவனின் அன்றாட வாழ்க்கையை விவரித்து அவன் மூலம் நம்மை அவனின் உலகிற்கு அழைத்து போகிறார். அதன் மூலம் அவனது ஒரு நாளின் அனுபவத்தை நாமும் பெறுவது போலான வாசிப்பு. அந்த அனுபவம் பிடித்ததா இல்லையா என்பது வாசிப்பவரின் மனநிலையை பொறுத்தது. ஆனாலும் அனுவபக்தை பெறுவது நிச்சயம்.