கடல் கடந்து செல்லும் ஆண்களின் பாடுகளை விட தன் குடும்பத்திற்காக மொழி தெரியாமல், நிலம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் எதையும் அறியாமல், துணை இல்லாமல் துணிந்து பொருளாதாரச் சுமைகளுக்காக அமீரகம் வரும் பெண்கள் எதிர்கொள்ளும் பாதை சவால்கள் நிறைந்தது. எல்லாவற்றையும் சகித்தபடி அயல்தேசத்தின் பிரம்மாண்டங்களுக்குள் தங்களைப் பொருத்திக்கொள்ளும் சில பெண்களின் கதைகள் ஒன்றோடொன்று ஊடாடுகிறது.
திருக்கோவிலூரில் பிறந்த நஸீமா ரஸாக், மெட்ராஸ் பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக உள்ளார். என்னைத் தேடி, தளிர், சூஃபி ஆகும் கலை என இவரது பிற நூல்கள். ஹீலிங்-தியான ஆசிரியர். வசிப்பது துபாயில். வாழ்வது எழுத்தில்.
திருக்கோவிலூரில் பிறந்த நஸீமா ரஸாக், மெட்ராஸ் பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக உள்ளார். என்னைத் தேடி, மராம்பு, என இரண்டு நாவல்கள் முன்னதாக வெளியாகியுள்ளன.
தன்னிச்சையாக சாலையை கடக்க கூட பயப்படும் மாந்தர்கள் இருக்கும் இவ்வுலகில் அய்யனாரை மட்டுமே துணையாக எண்ணி அயல்நாடு செல்லும் அபலையோடு நம்மையும் அழைத்து போகிறார் நசீமா!
இந்த அத்தியாயத்தின் முடிவிலாவது அந்த பெண்ணுக்கு ஒரு விடிவு கிடைக்குமா என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு காற்புள்ளி வைத்து நம்ம இழுத்து பிடித்து வைக்கிறார்.
வலி நிறைந்த முகங்களை மறைக்கத்தான் மங்கைகளுக்கு ஒப்பனையா? என்று அவர் நம்மிடம் கேட்கும் கேள்விக்கு விடை தெரிந்தும், இறைவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பொறுமைக்கு மட்டும் பதிலா என்று நம்மையே நிலைகுலைய வைத்து, இன்று ஒரு நாள் மட்டும் கடந்து விட்டால் போதும் என்று வாழ்வதற்கு நமக்கு நம்பிக்கையை ஊட்டி இறுதியாக யாரிடமும் கடன் படாத உணர்வு கொடுக்கும் நிம்மதியை நமக்குத் தருகிறார்கள் அந்த ஷவர்மா சாப்பிடும் பொழுதில்...
"திரைகடல் தேடியும் திரவியம் தேடு"" இதை பின்பற்றி அரபுதேசம் சென்று வாழும் பலதரப்பட்ட மக்களின் மத்தியில் ஐந்து பெண்மணிகளின் உழைப்பு, பிரிவு, ஏமாற்றம், ஏக்கம் என கலந்து சொல்லும் கதை. வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் இடைத்தரகரால் ஏமாற்றபட்டு அரபு தேசம் வரும் 'வள்ளி'யின் பார்வையில் கதை நகர்கின்றது. மிகவும் இலகுவான எழுத்துநடையுடன் அழுத்தமான உணர்வுகளை சுமந்து சென்றன காட்சிகளும் கதாபாத்திரங்களும். குடும்பத்தை பிரிந்து வாழும் மக்களின் நிலையை ' வசதியான ஊருக்கு அழைத்து வந்து வெறும் சுவாசத்தை மட்டும் விட்டு வைத்திருப்பது போல மனம் கனத்தது. ' என்ற உணர்வல் தொலைந்து போன நாட்களினால் வலியை உணர முடிந்தது.