வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொடர் கொலைகள் செய்யப்போவதாக காவல் துறைக்குக் கடிதம் எழுதுகிறான். ஒரு ஜட்ஜீம் டாக்டரும் கொலை செய்யப்படுகிறார்கள். அடுத்த குறி ஓர் அரசியல்வாதி என்று நாள் குறிப்பிடுகிறான். அரசியல்வாதியின் மகள் தனது தந்தையைக் காப்பாற்றுவதற்காக கணேஷ், வஸ்ந்தை அழைக்கிறாள். ஆட்டம் ஆரம்பமாகிறது. இந்த 'நிர்வாண நகரம்' குங்குமத்தில் வந்த தொடர்.
Sujatha was the allonym of the Tamil author S. Rangarajan, Author of over 100 novels, 250 short stories, ten books on science, ten stage plays, and a slim volume of poems. He was one of the most popular authors in Tamil literature, and a regular contributor to topical columns in Tamil periodicals such as Ananda Vikatan, Kumudam and Kalki. He had a wide readership, and served for a brief period as the editor of Kumudam, and has also written screenplays and dialogues for several Tamil movies.
As an engineer, he supervised the design and production of the electronic voting machine (EVM) during his tenure at Bharat Electronics Limited (BEL), a machine which is currently used in elections throughout India. As an author he inspired many authors, including Balakumaran, Madhan.
பல வருடங்களுக்கு பிறகு த்ரில்லர் நாவல் படித்தோம். இது என்னுடைய பதின்ம காலத்துக்கே கூட்டி சென்றுவிட்டது. அப்போதைய த்ரில்லர் நாவல்களில் ஒவ்வொரு எழுத்தாளரும் முதன்மை புனைவு கதைமாந்தர்களின் பெயரையே, அவரவரது பல்வேறு நாவல்களில் பயன்படுத்துவார்கள். உதாரணமாக, ஷெர்லாக் ஹோம்ஸ்-டாக்டர் வாட்சன் கதைமாந்தர்கள் போல...
இந்நாவலில், கணேஷ்-வசந்த் ஐ சந்தித்ததில் துள்ளலான மகிழ்ச்சி நமக்கு. 1980களில் தொடராக வெளிவந்த த்ரில்லர் நாவல். அதாவது 'தியேட்டரின் பால்கனி டிக்கட்டை எட்டு ரூபாய்க்கு, பிளாக்கில் விற்ற காலம்(கதையில் வந்த ஒரு சம்பவம்). மற்றபடி, த்ரில்லர் நாவலுக்கே உண்டான கொலைகள், அதில் உள்புகுந்து விளையாடும் 'சிவராஜ்', அதனை துப்பறிந்து கண்டுபிடிக்கும் "கணேஷ்-வசந்த்". ஒரே வாசிப்பில் முடித்துவிடக்கூடிய வாத்தியாரின்(சுஜாதா) எழுத்துநடையே, நமக்கான ஆக்சிலரேட்டர். சுஜாதா வர்ணனையில் இளமையும், அறிவியலும் முன்சொன்னது போல, 1980 காலகட்டத்தில் எழுதப்பட்ட நாவல் என்றாலும், 'கம்ப்யூட்டர்', 'ஐ பி எம்', 'பஞ்ச் கார்ட்' போன்ற தற்கால இத்தியாதிகள் இந்நாவலில் கலந்துள்ளதால், தற்போதைய வாசகர்களுக்கும் அந்நியமாக தெரியாதபடி தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். 90s Kids வாசிப்பாளர்கள் மற்றும் புது வாசிப்பாளர்களுக்கு சுஜாதாவின் எழுத்தை அனுபவிக்க ஏற்ற நாவல்.
புத்தகத்திலிருந்து... \ மே மாதம் சென்னைக்கு ஜுரம் வந்து 104, 105 என்று எகிறியிருந்தது. கடல்காற்று வேலைநிறுத்தம் செய்திருந்தது. தார் சாலைகளின் மாய ஈரத்தில் போக்குவரத்து நடனமாடியது. ஏ.சி. தியேட்டர்களில் ஓட்டை படங்கள் விழாக் கொண்டாடின. தந்தி பேப்பர்களில் சிலர் 'கருகி'ச் செத்தார்கள். /
\ இருநூற்று அறுபது ரூபாயில் நூற்று இருபது ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிவிட்டான் சிவராஜ். தோலின் ஜோல்னாப் பையில் அவை அத்தனையும் புதிய அட்டைகளுடன் புதிய வாசனைகளுடன் இருந்தன. 'தம்மபதாவின்' ஆங்கில மொழி பெயர்ப்பு. பனாரசிதாசின் 'கோட் ஆப் கிரிமினல் ப்ரொசீஜர்', 'ஓ ஜெருசலம்', 'லாட்டரல் திங்கிங்', சதுரங்கத்தைப் பற்றி பிஷெரின் புத்தகம், கிருஷ்ணமூர்த்தியின் பிரசங்கங்கள். அந்த புத்தகங்கள் அவன் மூளையின் கதம்பத்தைப் பிரதிபலித்தன. /
\ வெளியே நகரம் மெளனமாக இருந்தது. டிராபிக் விளக்குகள் பாக்கி இருந்த இரவை ஆம்பரில்(Amber) கண்ணடிக்கத் தொடங்கி விட்டன. ஒரு காளை மாடு சுவரொட்டிகளைப் பற்றி இழுத்து மெதுவாகச் சுவைக்க ஆரம்பித்திருந்தது. 'ஆளுநரும் முதல்வரும் பேசப்போகும் மகத்தான விழா'வரை சாப்பிட்டுவிட்டு 'திரண்டு வாரீ'ரைத் தின்னலாமா என்று அஜீரணமாக யோசித்து கொண்டிருந்தது. சினிமா விட்டு ஒன்று பத்து ஐம்பது நூறு என்று மக்கள் உதிர்ந்துகொண்டிருந்தார்கள். /
\ அடித்த வெய்யிலில் காற்று தாபம் கொண்டு மேலெழும்பி, க்யூமுலஸ் கொப்பளங்களாக திரண்டு, மேகங்கள் கறுப்பு மகாநாடு நடத்தி, மின்னல்களாகக் கீறி மாலை மழைபெய்தது. /
நிர்வாண நகரம் - இந்த மொத்த நகரத்தையும் தன்ன பத்தி பேசவெச்சா என்னனு நினைக்கும் ஒருவனின் கதை. மூன்று கொலைகள், மூன்றிலும் போலீசிற்கு கிடைக்கும் ஜீவராசி என்ற பெயருடன் வரும் கடிதம் . ஜீவராசி என்று புனைபெயர் வைத்தவனின் பெயர் சிவராஜ் அல்லது ராஜீவ் என்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையுடன் நாமும் கூடவே சென்று பயணிக்க வேண்டியதாய் இருக்கிறது. வேறு கோணத்தில் ஏன் சிந்திக்கவில்லை எந்த சிந்தனை தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. வழக்கமான சுஜாதா நாவல்களில் இது சற்றே தோய்வுடன் கூடிய எழுத்து நடை போல் தோன்றியது. பாதி கதைக்கு மேல் கணேஷ், வசந்த் வந்த பிறகே கதை சற்று விறுவிறுப்பு கூடுகிறது. இவ்வளவு தான் சுஜாதாவிடம் இருந்தா? என்று நினைக்கையில் முடிவில் ஒரு எதிர்பாரா திருப்பம் இது தான் சுஜாதா என்று.
Another one of Sujatha's legendary mystery thrillers . You just can't put it down no matter how hard you try . It was so damn engaging I finished it in 3 hours . Climax was a bit let down for me .
Otherwise, its just perfect . Sujatha's description of Chennai can only be described by "Wow!" . Add that to the Sherlock-ish wit of Vasanth-Ganesh. You get the recipe for a quintessential novel.
No matter how many languages you read , how many award winning books you've completed, nothing beats reading a good old Tamil novel like Nirvana Nagaram :D #Vaazhga Thamizh .
I wish someone like Sujatha could arrive in the Tamil literary scene now. No new author to follow in Tamil ! That would draw plenty of youngsters to reading .
ஜீவராசி என்று புனைபெயர் வைத்தவனின் பெயர் சிவராஜ் அல்லது ராஜீவ் என்று தான் இருக்கவேண்டுமா என்ன? கதையின் பெரும்பகுதி (கணேஷ்-வசந்த் புலன் விசாரணை உள்ளடங்கலாக) "ஜீவராசி" என்ற அனாமதேய நபரின் பெயர் சிவராஜ் என்பதாக தான் இருக்கும் என்றொரு குருட்டு அனுமானத்துடன் சிவராஜை தேடுவதாக அமைவது ஏமாற்றமளித்தது. கணேஷ் - வசந்த் இடம்பெறும் ஒரு கதை வெறும் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் அனுமானம் ஒன்றை மையப்படுத்திய புலனாய்வாலும் முன்னகர்த்தி செல்வது சற்று ஏமாற்றமே. சுஜாதாவின் எழுத்துநடையும் சுஜாதாவுக்கே உரிய சின்னச்சின்ன வர்ணிப்புகளும் தான் சற்று ஆறுதல் அளித்தன.
1998 ல் குங்குமம் இதழில் தொடர்கதையாக வந்தது. 2000 ல் விசா பப்ளிகேஷன் மூலமாக வாசகர்களின் கைகளில் புத்தகமாகத் தவழ்ந்தது. அடுத்த பதிப்பை கிழக்குப் பதிப்பகம் 2011ல் வெளியிட்டது.
தனது அறிவையும், படிப்பையும், மதிக்காத சமுதாயத்தின் மேல் கோபம் கொண்ட ஒரு பட்டதாரி இளைஞன், தான் சிலரைக் கொலை செய்யப் போவதாகக் காவல்துறை அதிகாரிக்கே கடிதம் எழுதுகிறான். அவன் கடிதத்தில் சொல்லியது போல், கொலைகளும் நடக்கின்றன. கடிதம் எழுதிய இளைஞன் கொலை செய்தானா, அந்த இளைஞன் யார் என்பதைத் சொல்வதே கதை. ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரஸ்யமாகப் பயணிக்கிறது.
நாம் பார்க்கும் இயல்பான விஷயங்கள் சுஜாதாவின் எழுத்துக்களில் கவிதைத்துவம் பெறுகின்றன. இளைஞன் மாடிப்படியில் இறங்குவதோ, சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டரை மாடு மேய்வதோ, ஓட்டலில் இட்லி சாப்பிடுவதோ, பார்க்கிங்கிலிருந்து ரிவர்ஸ் கியரில் கார் வந்து பிறகு மெயின் சாலையில் பறப்பதோ, காதோரமாக படரும் முடியோ, வழுக்கைத்தலையோ, பிளாட்பாரத்தில் நியூஸ்பேப்பர் விற்கும் சிறுவனோ, எல்லாவற்றிலும் ஒரு நயம் வெளிப்படும். அந்த நயத்தில் மயங்காதோர்தான் உண்டா?
நாவலிலிருந்து சில பகுதிகளை பகிர்கிறேன்.
நீங்களும் சுவையுங்கள்........
".........இருநூற்று அறுபது ரூபாயில் நூற்று இருபது ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிவிட்டான் சிவராஜ். தோளின் ஜோல்னாப் பையில் அவை அத்தனையும் புதிய அட்டைகளுடன் புதிய வாசனைகளுடன் இருந்தன.
இருபத்து ஐந்து ரூபாய் கொடுத்து பூமிக்கு அடியில் இறங்கி பேஸ்மெண்ட் ரெஸ்டாரண்டுக்கு பாலு அவனை அழைத்துச் சென்றான். நீல விளக்கின் பாதி இருட்டு. மூன்று இளைஞர்கள் வாத்தியம் வாசித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பேஸ் கித்தார், ஒரு லீட் கித்தார், டிரம்கள், ஆங்கிலோ இந்திய இளைஞன் தலையை அட்டகாசமாக வைத்திருந்தான். தன் வாத்தியத்தைப் பற்பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, அதன் வால்வா, ஃபேஸ் போன்ற சேர்க்கைகளை முடுக்கியும் திரித்தும் கம்பிப் பாகாகப் பாடலை இழுத்தான். இங்கிலீஷில் புரியாமல் பாடினான். வேஷ்டி கட்டியிருந்த ஒருவர் சீட்டனுப்ப இளைஞன் சிரித்துக்கொண்டு, ஆத்துக்குத்தி முத்தயித்து என்று பதினாறு வயதுத் தமிழை சம்ஹாரம் பண்ணினான். முடிந்ததும் காலாவதியான அரசியல் கட்சிக் கூட்டம் போல், ஒன்றிரண்டு பேர் சோகையாகக் கை தட்டினர். வேட்டி சீட்டியடித்தது. விளக்குகள் இன்னும் மங்கின. ஜிலு ஜிலு என்று உடையணிந்த ஒரு பெண் வந்து உறைந்த சிரிப்புடன் நடனமாடத் தொடங்கினாள்.
வெளியே நகரம் மௌனமாக இருந்தது. டிராஃபிக் விளக்குகள் பாக்கி இருந்த இரவை அம்பரில் கண்ணடிக்கத் தொடங்கிவிட்டன. ‘சாப்பாடு தயார்’ பலகைகள் உள்ளே உறங்கச் சென்றுவிட்டன. ஒரு காளை மாடு சுவரொட்டிகளைப் பற்றி இழுத்து மெதுவாகச் சுவைக்க ஆரம்பித்திருந்தது. ‘ஆளுநரும் முதல்வரும் பேசப்போகும் மகத்தான விழா’ வரை சாப்பிட்டுவிட்டு ‘திரண்டு வாரீ’ரைத் தின்னலாமா என்று அஜீரணமாக யோசித்துக் கொண்டிருந்தது. சினிமா விட்டு ஒன்று பத்து ஐம்பது நூறு என்று மக்கள் உதிர்ந்துகொண்டிருந்தார்கள். சிவராஜ் சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றான்.
ஆச்சரிய மழை. தயாரில்லாத நகரவாசிகள் அங்கங்கே ஒதுங்கிக் கொண்டார்கள். செய்தித்தாள்களையும் பத்திரிகைகளையும் டிபன் பாக்ஸ்களையும் தாற்காலிகமாகக் குடை பண்ணிக்கொண்டார்கள். நகரத்தில் மிச்சமிருந்த மரங்கள் ஆனந்த ஸ்நானம் செய்தன. தெருக்களில் சின்னச் சின்ன பழுப்பு நதிகளில் அத்தனை கழிசடைகளும் மிதந்தன. காகிதங்கள், காய்ந்த இலைகள், காலாவதியான பஸ், சினிமா, லாட்டரி டிக்கெட்டுகள், ரத்தம் தோய்ந்த பஞ்சுகள்... யாரோ எழுதிய கவிதை...
வெளியே சென்னை நகரம் இன்றைய உயிர் பெற்று பஸ் சப்தங்களாக, விற்பவர் குரல்களாக, ஹாரன் ஒலிகளாக, காக்கையின் கரையல்களாக, ஆட்டோ ரிக்ஷாக்களின் கமறல்களாக, ரோலிங் ஷட்டர்கள் திறந்து, ஹோட்டல்களில் புதுசாகப் பால் வந்து, வீட்டு வாசல்கள் அலம்பப்பட்டு... மற்றொரு சென்னை தினம். சிவராஜ் மெதுவாக தலைப்புச் செய்திகளை மேய்ந்தான்........."
"Nirvana Nagaram" is just another stereotypical Ganesh-Vasanth crime thriller from Sujatha. The story revolves around Sivaraj a commoner who sends threatening letters to police. In fact, he merely tries to take credit for the crimes committed by others. How the mystery is revealed forms part of rest of the story. Readers of the author may find the story very much stereotypical while for others the book may prove to be entertaining.
Nirvana Nagaram is a Sujatha murder mystery thriller that reads bit like his classic novella, Apsara in the beginning, but quickly changes direction with the introduction of the legendary lawyer Ganesh, and his irreverent assistant, Vasanth into the story. Not one of Sujatha’s best efforts, the protagonist Sivaraj’s character lacks depth, and Ganesh-Vasanth approach to solving the case lacks an urgency that I would have expected in a murder mystery story. 3 stars.
A deranged lunatic is on the loose, killing people after notifying the police in advance. Will he be caught before bodies start piling up? This is a Vasanth and Ganesh novel.
Brilliant writing, exceptional narration and wonderful execution. A masterful page turner. If you are looking for a suspense thriller, look no further than this one!
பிரபலமான கதாநாயகர்கள் நட்புக்காக ஒரு சில படங்களில் வருவதைப்போல கணேஷ் வசந்த் வந்து முடித்து வைக்கும் கதைகளில் இதுவும் ஒன்று. என்ன ஒன்று, கணிக்க முடிகிறது. Jan27 நிமிர் படத்தில், அப்பாவ பார்க்கணும். அவரு குளிச்சிட்டு இருக்கார். நீங்க? நான் காலையிலே குளிச்சிட்டேன் = வருவார்! காப்பி சாப்பிடப் போயிருக்காரு. நீங்க? காப்பி சாப்பிட்டாச்சு?
வழக்கமான சுஜாதாவின் page turner. கதையைக் கொண்டு சென்ற விதம் ஒரு திரைப்படம் போன்ற விறுவிறுப்பைத் தந்தது. முடிவு சற்று எதிர்பார்த்த விதம் தான் என்பதால் ஒரு மிகச்சிறிய ஏமாற்றம்.
சுஜாதாவின் நாவல்கள் எல்லாமே படு ஸ்பீட்டில் செல்லும் .இந்த புதினமும் அதற்கு விதி விலக்கல்ல,ஆர்மபம் முதல் இறுதி வரை நான் கீழே வைக்காமல் முடித்த புதினங்களில் இதுவும் ஒன்று. எனக்கு இந்த நாவலில் பிடித்தது ஒரு மனிதனின் பெரு நகர தனிமையயும்,கோபத்தையும் அருமையாக எழுதியிருப்பார்,சுஜாதா. நல்ல பொழுது போக்கு புதினம் மிஸ் பண்ணிடாதிங்க
One more good thriller of sujatha. The pace of the story is commendable in this case. Though the end could be some what guessed it was still a very good read since once taken in hand the book makes you to continue reading. Definitely a very good read - Go for it