What do you think?

ராஜ யோகம்
ஆண்களுக்கு ஆத்திரம் இருக்கிறதே தவிர, எதையும் ஒழுங்காக சுவடு தெரியாமல் செய்து முடிக்க தெரியவில்லை என்று தனக்குள் அவள் எண்ணமிட்டதால், அவள் கண்கள் அவன் கண்களைப் பார்த்து வெட்கநகை நகைத்தன. அவள் இடதுகை, சேலையை சிறிது நன்றாக போர்த்தி கொண்டது. அந்த சமயத்தில் அவள் ஏதோ பேச முற்படவே, அவள் வாயை இறுகப் பொத்திய இளம்பரிதி அவள் கண்களுடன் கண்களைப் பூர்ணமாகக் கலந்தான். பூசலம்புகள் என்று கம்பன் கோசல நாட்டுப் பெண்களை வர்ணித்ததன் பொருளை அன்று புரிந்து கொண்டான் அந்த வாலிபன். அவள் கண்கள் அவன் கண்களை அம்புகள் போல் தைரியமாக ஊடுருவி நின்றன. அந்த அம்புக் கண்கள் தன் கண்களின் மூலமாக தனது உள்ளத்திலும் பாய்ந்து விட்டதை சந்தேகமற உணர்ந்தான் அந்த வாலிபன்.
- GenresHistorical Fiction
Kindle Edition
Published October 6, 2022
About the author
Sandilyan
77 books396 followersSandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 3 of 3 reviews
September 1, 2023
இக்கதையில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைவருக்கும் எதிரி யார் என்று அறிந்தும் சரியான நடவடிக்கைகளை எடுக்கமுடியவில்லை என்றுள்ளது. இதை மாற்றி அமைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதைப்படி மூத்த இளவரசர் பல கொடூரமான குற்றங்களைச் செய்கிறார். இதை நீதி, நேர்மை, நியாயம் என்று நெறி தவறாத அரசர் உண்மை அறிந்தும் எதுவும் செய்யாமல் விட்டது மிகவும் முரன்பாடான கருத்தாக உள்ளது.
March 28, 2022
Great storyline
Story is really fantastic. It was narrated really well with lots of suspense which impressed me to read it continuously. Those who want to read some novel related to pandiyar kingdom can choose this novel and read it.

February 19, 2025
Average
Displaying 1 - 3 of 3 reviews