Jump to ratings and reviews
Rate this book

வாடா மல்லி: நாவல்

Rate this book

Book 6 x 9/ Book Matte Finish / 70 GSM Cream paper

Let's see if one or the other in a family becomes transgender. What will the family strive for? - This is the story of a young man who becomes a key to a paddy field, an egg and an egg without joining a man or a woman. Girl? How to tell them ?. How many to say? Has been around for a very long time. . Feminity decreases, masculinity refers to transgender, and masculinity decreases to femininity. Silappathikaram speaks of a kind of Bedikuttu in koothu It is a masculine feminine colloquialism. Naladiyar says that one who is less feminine is less masculine. Writer Su. Samuthiram gives a holistic view of Ali's life. In this novel, Suyambu is portrayed as 'Vadamalli'. Vadamalli has given the withered self to the trio of family life, public life and personal life.

700 pages, Paperback

Published April 22, 2021

Loading...
Loading...

About the author

Su Samuthiram

38 books8 followers
Samuthiram was born in Tippanampatti village in Tirunelveli District. He worked in All India Radio and Doordarshan. He was a prolific writer who wrote fourteen novels, four novellas, two essay anthologies, one play and more than 300 short stories (published as twenty-two collections). Many of his works have been translated into other Indian languages, such as Telugu, Hindi, and Malayalam. His political orientation was socialist, and he was involved in many literary feuds with fellow writers, such as Asokamitran and Vannanilavan. His works reflect his socialist beliefs, and most of them are about the oppression of the downtrodden. In 1990, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his novel Veril Pazhutha Pala. Other awards received include the Tamil Annai Award from Tamil University, Thanjavur; the Ilakkiyachinthanai Short Story Prize; and the Kalaignar Award from Murasoli Trust (posthumous). He died in 2003 in a road accident in Chennai.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
11 (50%)
4 stars
9 (40%)
3 stars
2 (9%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Vivek KuRa.
298 reviews53 followers
March 23, 2026
ஒரு ஜனநாயக நாடு, அங்கு வாழும் சிறுபான்மையினரை எப்படி நடத்துகிறது அல்லது பாதுகாக்கிறது என்பதே அந்நாட்டின் மகத்துவத்தின் அளவுகோல் . அவ்வகையில், தமிழில் "திருநங்கைகள்" அல்லது "அரவாணிகள்" என்று நாம் அழைக்கக்கூடிய சிறுபான்மையினர்கள் காலம் காலமாக எவ்வாறு விளிம்புநிலை மனிதர்களாக தமிழகத்திலும் ,இந்தியாவிலும் ஒதுக்கிவைக்கப்பட்டதை வரலாறெங்கும் நாம் காணலாம்.ஏன் , வளர்ந்த நாடுகளாகிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலுமே இதற்க்கு விதிவிலக்கில்லை . இஸ்லாமிய நாடுகளில் இது இன்னும் படு மோசம்.உலகெங்கும் பல அறிவியல் விழிப்புணர்வும், மாற்றங்களும் சட்டங்களும் சமீப காலத்தில் வந்தாலும், சமுதாயம் இவர்களை முழுமையாக ஏற்கவில்லை என்றே சொல்லலாம் .

தமிழகத்தில் "அலி" என்றும் "ஒம்போது" என்றும் இழிவான சொற்களால் அழைக்கப்பட்டவர்களை இப்பொழுது "திருநங்கைகள் என்று அழைக்கும் வரை மற்றம் வந்திருப்பது மகிழ்ச்சி . மேலும் , கல்வியினாலும் , அரசு நலத்திட்டங்களாலும் மேம்பட்டு அரசு வேலைகளில் திருநங்கைகள் அமர்வதாக வரும் செய்திகள் வரவேற்கத்தக்கதாக இருந்தலும் , சமுதாய விழிப்புணர்வுப் பாதையில் இன்னும் வெகுதூரம் நாம் பயணிக்க வேண்டியதிருக்கிறது என்பதை நமக்கு உணர்த்தும் நூலாக வாடாமல்லி இருக்கிறது.

ஆண் உடலில் சிறைப்பட்ட ஒரு பெண்ணாக இருக்கும் சுயம்பு என்கிற வாலிபரின் கதை இது. சமுதாயத்தின் விதிகளில் பொருந்தாத அல்லது பொருந்த இடம் தராத சமுதாயத்தில் திருநங்கையான ஒரு நபரின் வலிகளையும் வேதனைகளையும் சொல்லும் ஒரு காத்திரமான படைப்பு . விவசாய ஏழை குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய சிரத்தையினால் பொறியியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் இளைஞனான சுயம்புவுக்கு இருந்தலும் , அவனுடைய வீட்டிலும் திருநங்கை தன்மையினால் குடும்பத்திலும் , கல்லூரியிலும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு, துரத்தப்படுகிறான் . அவனை புரிந்துகொண்ட ஒரே ஒரு ஜீவனாக அவன் தமக்கை இருக்கிறாள் . இவனால் நின்றுபோகும் அக்கா கல்யாணம் .அதனால் வீட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை. பின்னர் இன்னொரு திருநங்கையால் தத்தெடுக்க பட்டு , திருநங்கைகளின் தனி உலகத்துக்குள் நுழைகிறான் சுயம்பு.

சிக்கண்டி, அரவான் ,மாலிக்கபூர் , ஜெங் ஹே (Zheng He) என்று பல திருநங்ககளின் கதைகளும் ,வரலாறும் நாம் அறிந்திருந்தாலும் நம் சமூகத்தில் இருக்கிற ஆனால் பொதுவாக அறியப்படாத திருநங்கைகளின் தனி உலகை அழகாக நாவல் விவரிக்கிறது. திருநங்கைகளின் படிநிலை, அவர்களின் பகுச்சர் தேவி/ முருகே வாலி வழிபட்டு முறை, ஆண்குறி அறுத்தெடுக்கப்படும் கொடூர சடங்கு, சேலை(அறுக்கப்பட்டவர்கள்) மற்றும் லுங்கி (அறுக்கப்படாதவர்கள் ), வேற்றுமை, வடஇந்திய திருநங்ககைகளுக்கும், தமிழக அரவணிகளுக்கும் இருக்கும் வேற்றுமை, என்று பல அறியப்படாத தகவல்களை நமக்கு தருகிறார் சு .சமுத்திரம்.

தமிழில் திருநங்கைகள் பற்றி எழுதப்பட்ட முதல் புதினம் இதுவாக இருக்குமென்று நினைக்கிறன். திருநங்கைகள் ஏன் பிறக்கிறார்கள் என்பதற்கான அறிவியல் விளக்கம் கதையோடு வருவது சிறப்பு . எனினும் இந்நூல் எழுதப்பட்ட 1997 காலகட்டத்தை விட நிறைய விளக்கங்கள் LGBTQ + இயக்கங்களினால் வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பதால் சில விளக்கங்கள் காலாவதி ஆகி இருப்பதை வாசிக்கு ஒருவர் உணரலாம் .இருந்தலும் அந்த காலகட்டத்த்திற்கு முற்போக்கான ஒரு நூல் இது. வெறும் பாலியல் தொழிலாளிகளாக மட்டுமே சித்தரிக்கும் ஊடகங்கள் இன்றும் இருக்கிற காலகட்டத்தில் , திருநங்கைகளின் குடும்ப, சமூக பிரச்சனைகள் மற்றும் தடைகளை , அவர்களின் உளவியலை ஆழமாக பேசும் ஒரு அழகிய நூலக இருக்கிறது வாடாமல்லி . அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
Displaying 1 of 1 review