Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Kannadasan.
Showing 1-30 of 71
“நீ வெற்றிகக்காக போராடும்போது வீண்முயற்ச்சி என்று சொல்லபவர்கள்,நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்”
―
―
“ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்”
―
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்”
―
“நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி”
―
―
“தன்பாடு தீரும் வரைக்கும் தான் பண்பாடு.”
― வனவாசம் [Vanavaasam]
― வனவாசம் [Vanavaasam]
“அப்போதுதான் அவள் கூந்தலைப் பார்த்தேன். ஒரு கவிஞனுடைய ரசனைக்கு எவ்வளவு நீளமான கூந்தல் வேண்டுமோ அவ்வளவு நீளம் இருந்தது.”
― அவளுக்காக ஒரு பாடல்
― அவளுக்காக ஒரு பாடல்
“தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது.”
― வனவாசம் [Vanavaasam]
― வனவாசம் [Vanavaasam]
“முதல் முத்தத்தின் இனிய சுவையை உணர்ந்தவன் ஒரு பைத்தியகாரனைப் போலாகி விடுகிறான்.”
― அவளுக்காக ஒரு பாடல்
― அவளுக்காக ஒரு பாடல்
“அவள் எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தாள், நான் எழுந்திருக்க விரும்பாமல் படுத்திருந்தேன்.”
― அவளுக்காக ஒரு பாடல்
― அவளுக்காக ஒரு பாடல்
“தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது..”
― வனவாசம் [Vanavaasam]
― வனவாசம் [Vanavaasam]
“ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக”
― வனவாசம் [Vanavaasam]
― வனவாசம் [Vanavaasam]
“Sollendrum Mozhi Endrum Porul Endrum Illai, Porul Endrum Illai
Sollaatha Solluku Vilai Yethum Illai, Vilai Yethum Illai
Ondrodu Ondraaga Uyir Serntha Pinne, Uyir Serntha Pinne Hmm..hmm hmmhmmm
Ullagangal Nammayandri Vereythum Illai, Vereythum Illai”
―
Sollaatha Solluku Vilai Yethum Illai, Vilai Yethum Illai
Ondrodu Ondraaga Uyir Serntha Pinne, Uyir Serntha Pinne Hmm..hmm hmmhmmm
Ullagangal Nammayandri Vereythum Illai, Vereythum Illai”
―
“இதயம் மறப்பதில்லை
இயற்கை மறந்தாலும்
இறைவன் மறந்தாலும் - உன்னை
இதயம் மறப்பதில்லை
உதயம் என்றால்
அதில் உன் முகம் பார்ப்பேன்
உண்ணும் பொருளிலும்
உன் குணம் காண்பேன்
மதியத்துக் கோடையிலும்
உன் நிழல் கேட்பேன்
மரணத்தில் உன் மடியில்
என் தலை சாய்ப்பேன்
மறுபிறப் பென்றிருந்தால்
மண்ணிடைப் பிறப்பேன்
வயது வளரும் வரை
மனதில் வைத்திருப்பேன்
இருபதில் உன்னுடனே
இரண்டறக் கலப்பேன்
இதிலுமோர் தோல்வியென்றால்
என் கதை முடிப்பேன்”
―
இயற்கை மறந்தாலும்
இறைவன் மறந்தாலும் - உன்னை
இதயம் மறப்பதில்லை
உதயம் என்றால்
அதில் உன் முகம் பார்ப்பேன்
உண்ணும் பொருளிலும்
உன் குணம் காண்பேன்
மதியத்துக் கோடையிலும்
உன் நிழல் கேட்பேன்
மரணத்தில் உன் மடியில்
என் தலை சாய்ப்பேன்
மறுபிறப் பென்றிருந்தால்
மண்ணிடைப் பிறப்பேன்
வயது வளரும் வரை
மனதில் வைத்திருப்பேன்
இருபதில் உன்னுடனே
இரண்டறக் கலப்பேன்
இதிலுமோர் தோல்வியென்றால்
என் கதை முடிப்பேன்”
―
“என் பொருள் எங்கே என்று கேட்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்; யாசிப்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“பிரம்மம் விருஷ்ணத்தில் லயித்து, விருஷ்ணம் சிவத்தி லயித்து , மூன்றும் மன்மதனிடம் லயித்த நிலை நாங்கள் இருந்த நிலை”
― அவளுக்காக ஒரு பாடல்
― அவளுக்காக ஒரு பாடல்
“ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை, உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை, ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக”
― வனவாசம் [Vanavaasam]
― வனவாசம் [Vanavaasam]
“கானலை நீர் என்று நினைக்கும் மான்.”
― வனவாசம் [Vanavaasam]
― வனவாசம் [Vanavaasam]
“எது நடக்கக்கூடாது’ என்பதற்காக நீ கோபப்படுகிறாயோ, நீ கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்திற்காக, அது நடந்தே விடுகிறது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“குடும்பத்தைக் கோவில் ஆக்கிக்கொள்ள முடியாதவர்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட இடங்களே, கோயில்கள். மனத்தைக் குளிப்பாட்டி மகேஸ்வரனைக் காணச் சக்தியற்ற உள்ளங்கள், உடலைக் குளிப்பாட்டி உமாபதியைக் காண ஏற்படுத்தப்பட்டவையே பொதுக் குளங்கள். அடக்க ஒடுக்கத்தோடு ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திப்பதால், மனோதத்துவப்படி அந்த அடக்கம் பிறர்க்கும் வரும் என்பதைக் காட்டுவதற்காகவே, தேர்த்திருவிழாக்கள். தனிமையில் ஒருமுகப்படுத்த முடியாத மனது, சந்நிதானத்தில் ஒருமுகப்படுத்தப்படுகிறது. சிந்தனைக் குழப்பங்களில் ஆழ்ந்துவிடாமலிருக்கத் தேங்காய் உடைப்பதிலும், தீபாராதனை காட்டுவதிலும் சிந்தனை திருப்பி விடப்படுகிறது. குறைந்த பட்சம், மனிதனை மனிதனாக வைப்பதற்கே இந்துமதம் பெருமுயற்சி எடுத்தது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைத்தான் குறிக்கும். தவறு செய்ய நினைப்பது விரும்புவதாகாது; திட்டமிடுவதாகும்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது. எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு ‘அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும். எதிர்த்தால் வேரொடு பிடுங்க முயலும். பக்குவமற்ற நிலை என்பது இரண்டு ‘எக்ஸ்ட்ரீம்’ நிலை. ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும். பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“உன் கடமை தொழில் செய்வது; அதன் லாப நஷ்டங்கள் உன்னைச் சேர்ந்தவையல்ல. என்ன வரப் போகிறதென்று நினைக்காதே; அதற்காகத் தொழில் செய்யாமலும் இராதே.”
― கண்ணன் அருளிய பகவத் கீதை
― கண்ணன் அருளிய பகவத் கீதை
“எதிரே வந்த மாலைகளைப் பார்த்துப் பின்னாலே திரும்பிப் பார்த்தேன். அங்கேயும் மாலைகள் வந்து கொண்டிருந்தன. நான் நின்று விடவில்லை.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்து விட்டால் ‘சமதர்மம்’ என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபடப் போகிறது?”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“குடும்பக் கோபம் தணியும்; தொழிலின் கவலை தணியும்; கடன் கவலை தணியும்; ஆனால், பகை உணர்ச்சி மட்டும் சீக்கிரம் தணியாது. ஒரு தடவை யார் மீதாவது பகை ஏற்பட்டு விட்டால், அது திடீர் திடீர் என்று தோன்றும்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“வசதியுள்ளவர்கள் பாரியாகலாம், பச்சையப்பராகலாம், அழகப்பராகலாம். மன நிலையில் தெளிவுள்ளவர்கள் தலைவர்களாகலாம். உடல் நிலையில் வலுவுள்ளவர்கள் தொண்டர்களாகலாம். ஒன்றும் முடியாதவர்கள், நான்கு சுவர்களுக்குள் அடங்கியுள்ள தங்கள் குடும்பத்தை நாணயமான முறையில் காப்பாற்றலாம்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“காட்டில் முளைத்த மரமும் கவலையுறும் காலம் இலையுதிர் காலம். ஆற்று மணலும், கவலைப்படும் காலம், கோடைக் காலம். பகுத்தறிவற்ற விலங்குகளும் கவலைப்படும் காலம், அவை பயப்படும் காலம். இவற்றுக்கெல்லாம் யார் ஆறுதல் கூறப்போனார்கள்? மானிட ஜாதி ஆறுதல் தேடுகிறது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி
A mother for the cradle, a damsel for the bed
food for hunger, sinistrad realised saint.”
―
பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி
A mother for the cradle, a damsel for the bed
food for hunger, sinistrad realised saint.”
―
“வறுமையைவிடச் சிறந்த பள்ளிக்கூடம் வேறெதுவும் கிடையாது.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“துன்பத்தைச் சோதனை என்று ஏற்றுக்கொண்டுவிட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது?”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக்கப்பட்டுவிட்டதென்று கருதுங்கள். வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள். புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத்திற்கு இரண்டு மூன்று பதிப்புகள் போடாதீர்கள். ‘நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, ‘நமக்கு வந்தது துன்பமில்லை’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume


![சேரமான் காதலி [Cheramaan kaadhali] சேரமான் காதலி [Cheramaan kaadhali]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1377363548l/12695358._SX98_.jpg)

![வனவாசம் [Vanavaasam] வனவாசம் [Vanavaasam]](https://s.gr-assets.com/assets/nophoto/book/111x148-675b3b2743c83e96e2540d2929d5f4d2.png)
