,
Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Vairamuthu.

Vairamuthu Vairamuthu > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-18 of 18
“இன்னும் சற்று நேரத்தில் மின்சாரத் தீயில் அழியப்போகிறது எனக்கு உயிர் தந்த உடல். நேற்றுவரை அப்பா ஓர் உயிர்; இன்று உடல். நாளை வெறும் சொல். கடைசியில் எல்லா மனிதர்களும் வெறும் சொல்லாகித்தான் போகிறார்கள். அந்தச் சொல்லை உச்சரித்துக்கொண்டேயிருக்கும் கடைசி மனிதனோடு இரண்டாம் மரணம் அடைகிறார்கள்; அவ்வளவுதான்.”
Vairamuthu, Vairamuthu Sirukathaigal
“அவமானம் நேரலாம். ஓர் அவமானமோ காயமோ வெற்றிடமோதான் லட்சியத்திற்கு கருவறையாக முடியும். உடல், மானம் இரண்டையும் தியாகம் செய்ய முடியாதவன் நன்மை செய்ய முடியாது.”
Vairamuthu, Moondram Ulaga Por
“இந்தியாவில் பிடித்தது?"

"உழைப்பு."

"பிடிக்காதது?"

"ஊழல்."

"ஆனாலும் இந்தியா முன்னேறியிருக்கிறதே..!"

"உண்மை. சேவல் உறங்கும்போது குஞ்சு பொரித்துவிடும் கோழியைப்போல சில அரசியல்வாதிகள் உறங்கும் போது இந்தியா முன்னேறிவிடுகிறது.”
Vairamuthu, Moondram Ulaga Por
“பூமியை மனிதன்தான் செதுக்கினான் என்பது எத்துணை பெரிய உண்மையோ, அத்துணை பெரிய உண்மை அவன்தான் சிதைத்தான் என்பதும்.”
Vairamuthu, Moondram Ulaga Por
“உலகம் முழுக்க ஒரே கலாச்சாரம் இல்லை. அப்படி இருந்திருந்தால் அதுபோல் ஒரு கொடுமை இல்லை. வித்தியாசங்களே அடையாளங்கள்; ஓரே நிறத்தில் இருந்தால் வானவில்லுக்கு ஏது வசீகரம்? வேற்றுமை என்பது உலகியல்; அதில் ஒற்றுமை காண்பது வாழ்வியல்.”
Vairamuthu, Moondram Ulaga Por
“மாறும்; எதுவும் மாறும். மாறுதல் ஓன்றே ஜீவிதம்; உயிர்ப்பின் அடையாளம். ஆனால் முன்னேற்றத்தின் விளைச்சலாக இருக்க வேண்டும் மாறுதல். கூட்டுப் புழுவிலிருந்து பட்டுப்பூச்சி பறப்ப்து மாறுதல்; கல் சிற்பமாவது மாறுதல். சிற்பம் உடைந்து கல்லாவதல்ல மாறுதல்.”
Vairamuthu
“மனசு பின்னாடி மனுசன் போனான்னா அவன் மிருகம்; மனுசன் பின்னாடியே மனசு வந்துச்சுன்னா அவன் தெய்வம்."

"நீ மிருகமா? தெய்வமா?"

"நான் ரெண்டும்தானடா மகனே. மாறிமாறித்தான் இருக்கேன். ஆனா ஒண்ணு, தெய்வமா இருந்தாத் தெரியுது எனக்கு; மிருகமா இருந்தாத் தெரியல.”
Vairamuthu, Moondram Ulaga Por
“வாழ்வின் பல தருணங்களில் அறியாமைதான் சந்தோஷம்; அறிவு நிம்மதிக்குச சத்துரு.”
Vairamuthu, Moondram Ulaga Por
“படிச்ச மகன் பெருமையை படிக்காதவன் கொண்டாடற மாதிரி படிச்சவன் கொண்டாடறதில்ல.”
Vairamuthu, Moondram Ulaga Por
“தேவைக்கு ஆரம்பிக்கிற சம்பாத்தியம், ஆசைக்கு இழுத்துட்டுப் போகுது. ஆசை பேராசையில முடியுது. பேராசை மனவியாதியில கொண்டுபோய் விட்டுறது மனுசன.”
Vairamuthu, Moondram Ulaga Por
“மறுக்கப்பட்ட பொருளாதாரத்தை, சுரண்டப்படும் வாழ்க்கையை இந்திய உழவர்களுக்கு மீட்டுக் கொடுத்தால் போதும்; அவர்கள் வாழ்க்கை நிமிர்ந்துவிடும். இங்கே மண் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது; மனிதர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.”
Vairamuthu, Moondram Ulaga Por
“சுவையான கதை; ஆனால் சோக முடிவு."

"எல்லா சுகமும் ஒரு சோகத்தில் முடிகிறது; எல்லா சோகமும் ஒரு சுகமாய்க் கனிகிறது. காலனி ஆதிக்கம் உலகச் செல்வத்தை அள்ளிச் சென்றது சோகம்; உலகெங்கும் ஆங்கிலத்தை விட்டுச் சென்றது சுகம்.”
Vairamuthu, Moondram Ulaga Por
“தோல்வியை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் மனிதர்கள். கன்னம் கிள்ளிச் சொல்லிக் கொடுப்பது வெற்றி; கன்னத்தில் அறைந்து சொல்லிக் கொடுப்பது தோல்வி.”
Vairamuthu, Moondram Ulaga Por
“எரியும் மூங்கில் காட்டில் சிறகு கருகும் ஒரு பட்டாம்பூச்சியை எந்தப் பறவை விசாரிக்கும்?”
Vairamuthu, Moondram Ulaga Por
“With a drop of your love,
The moon, I shall conquer”
Vairamuthu R
“இந்த உலகத்தை பிறப்பிலிருந்து சிந்திக்கத் தொடங்குகிறவன் சோகத்தில் முடிகிறான்; மரணத்திலிருந்து சிந்திக்கத் தொடங்குகிறவன் ஞானத்தில் முடிகிறான்.”
Vairamuthu, Moondram Ulaga Por
tags: wisdom
“சொற்களும் அம்புகளும் ஒன்றுதான். சொல்லுக்கும் அம்புக்கும் தனி பலம் ஏதுமில்லை. வீரத்திலும் சத்தியத்திலும் தோய்ந்து வருவதிலிருக்கிறது அம்புக்கும் சொல்லுக்குமான ஆற்றல்.”
Vairamuthu, Moondram Ulaga Por
“இயற்கையின் பெருமையே மானுடத்திற்கான அதன் தியாகம்தான். இயற்கையும் மனிதனும் வேறுவேறன்று. இயற்கையின் சிறுபிரதிதான் மனிதன்; மனிதனின் பெரும்பிரதிதான் இயற்கை. மனித வேர்களின் கீழே கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் கசியும் கருணைதான் இயற்கை.”
Vairamuthu, Moondram Ulaga Por

All Quotes | Add A Quote
Karuvachi Kaaviyam Karuvachi Kaaviyam
2,135 ratings
Kallikaattu Ithigaasam Kallikaattu Ithigaasam
2,339 ratings
Thanneer Desam Thanneer Desam
1,785 ratings
Moondram Ulaga Por Moondram Ulaga Por
1,041 ratings