Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following TAMIL ISAI.

TAMIL ISAI TAMIL ISAI > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-8 of 8
“உன்னை விரும்புகிறேன்

முதல் முதலில் பார்த்த பார்வையிலேயே என்னை கவர்ந்துவிட்டாய்

வாழ்க்கை உன்னிடத்தே என முடிவு செய்துவிட்டேன்
நம்மிடம் நாமே கேட்டுக்கொள்ளும் ஒரே கேள்வி

நாமா இப்படி மாறி போனோம் என்று

கோபம், தாபம், வெட்கம், மௌனம் இவையனைத்தும் நம் வாழ்வில் வந்த வண்ணமே உள்ளன

நம்பிக்கை வேரூன்றி கொண்டது இருவரிடமும்

நாம் காதலித்த முதல் நாள் முதல் இன்று வரை ஊடலும் கூடலும் ஒருங்கே ஒட்டிக்கொண்டன

காமம் என்பதே மறந்து காதல் மட்டுமே குடிகொண்டு விட்டது
.
"காமம் இல்லாமல் காதல் இல்லை.. ஆனால் காமம் மட்டுமே காதல் ஆகாது"
இதை நம் காதலே நமக்கு உணர்த்தியது..


உன்னை போல் என்னால் யாரையும் காதலிக்க இயலாது
காதல் என்பதையே நாம் நம்மிடம் தானே கண்டு கொண்டோம்

உன்னில் உன் உள்ளத்தில் வாழ விழைகிறேன்
உன்னை விரும்புகிறேன்!!”
TAMIL ISAI
“கண்மணியின் கண் வளைவு நெளிவுகளில் களவு போனது என் இதயம்!!!”
TAMIL ISAI
“உணவை வழங்குவது மண்...
அறவை வழங்குவது நூல்...

நூல் என்னுடைய தோழன்...
என்றுமே தீராப்பசி...

என்னை மூழ்கடிக்கும் பாற்கடல் நீ...
அள்ள அள்ள குறையாத முத்து நீ...

என் அறிவுப்பசிக்கு உன்னைப் பருகியே வாழ விழைகிறேன்...

வரம் கொடுஇறைவனே!! என் வாழ்நாள் முழுவதும் புத்தகங்களுடன் வாழ!!”
Tamil Isai
“பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் இனியவனே...

மனிதனாகப்பெற்றவன் அனைவரும் சஞ்சரிக்க விரும்பும் அழகான அனுபவத்தை தந்தவன் நீயே!!!

விழிகள் சந்தித்த மறுகணமே இதயங்கள் இடமாற்றம் செய்து கொண்டன..

என்னுடைய அன்புக்கும் அரவணைப்புக்கும் உரிமையானவனே...

உன்னைப் பிரியும் ஒரு நொடி கூட நரகம் தான்..

உன் வெற்றிக்கு பரிசாகவும் தோல்விக்கு மருந்தாகவும் நானிருக்க விழைகிறேன்..

என்னுடையவனின் பரிசாக எந்நாளும் வாழ விழைகிறேன்!

என் மனதை வென்றெடுத்த என்னவனுக்கான பிறந்தநாள் பரிசு
நானும்! என் கவிதையும்!”
TAMIL ISAI
“அவள்
பௌர்ணமி ஒளியின் குளுமையில் அவனுடைய காதலே நினைவுக்கு வர...
அவனைத் தேடி அலைந்தாள்...

முழு சந்திரனின் வெண்மையில் அவன் முகத்தையே அவள் கண்டாள்...
அவனுக்காக ஏங்கித் துடித்தாள்...

விண்மீன்களோ அவளையே நோக்குவது போல இருந்தது...
இப்படியொரு அழகான சூழலில் அதை அனுபவிக்க முடியாமல் தவித்தாள்....

அவனை அவளுடைய காதலனை எண்ணி ஏங்கும் பேதைப் பெண்..”
TAMIL ISAI
“உனை கண்டு வியந்தேன்....

விரும்பினேன்... நேசித்தேன்....

எனை சிறு வயதுகோண்டே உன்மீது

மோகம் கொள்ள செய்து விட்டாய்.......

கிடைக்கப் பெறாமல் ஏங்குகிறேன் இன்றும்.....


என்றாயினும் உன்னை அடைவேன் ...

என் ஆசை,என் கனவு பரதநாட்டியம்....”
TAMIL ISAI
“உணவை வழங்குவது மண்...
அறவை வழங்குவது நூல்...

நூல் என்னுடைய தோழன்...
என்றுமே தீராப்பசி...

என்னை மூழ்கடிக்கும் பாற்கடல் நீ...
அள்ள அள்ள குறையாத முத்து நீ...

என் அறிவுப்பசிக்கு உன்னைப் பருகியே வாழ விழைகிறேன்...

வரம் கொடுஇறைவனே!! என் வாழ்நாள் முழுவதும் புத்தகங்களுடன் வாழ!!!”
TAMIL ISAI
“கண்ணே!!

உன் விழியின் புன்னகையில் மயங்கிக் கிடக்கிறேன்..

உன் விழிகளில் மாயம் இருக்கிறது போலும்..
ஏனெனில் உன் விழிகளை கண்டவுடன் நான் உறைந்து விடுகிறேன்
உன் விழி பேசும் கவிதை நான் மட்டுமே வாசிக்கிறேன்

அந்த விழிவில்களின் வர்ணம்தான் என்ன?

என்னை கண்டவுடன் கொஞ்சும் செல்ல சிரிப்பும்
கோபத்தில் கனல் கொண்ட பார்வையும்
வெட்கத்தில் கமலத்தைப் போல பூத்துப் பூரிப்பதும்

அடடா!!

இந்த விழிச்சிறை போதுமடி.. என்னை ஆயுள் முழுதும் சிறையில் அடைத்து வைக்க.

என்னவளின் சிறையில் என்றென்றும்”
TAMIL ISAI