Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Radhakrishnan Venkatasamy.
Showing 1-6 of 6
“மனிதர்கள் என்றால் இப்படித்தான் என வரையறை வைத்துக் கொண்டார்கள். அதை மீறிய எந்தவொரு உருவமும் குறை உள்ளதாகவே இந்த உலகில் கருதப்படுகிறது. எவ்வித குறைகள் இன்றி பிறப்பது வரம் எனில் மனதில் குறைகள் இல்லாமல், இவ்வுலகின் மீது நிறைய நல்ல நம்பிக்கைகள் கொண்டு இருப்பது மாபெரும் வரம்.”
― பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum]

“நமது அடையாளம் எதுவென அறியாமல் நம்மை நாமே தொலைத்து இருத்தல் ஒரு நிலை. இதுதான் மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். நிகழ்காலம் புரியாமல் எதிர்காலம் மயங்குகிறது எனச் சொல்வது போன்ற ஒரு நிலை இது. எல்லாவற்றையும் தொலைத்தது போன்ற ஒரு இனம்புரியாத நிலையை சமாளித்துக் கொள்வது என்பது அறிவில், அன்பில் சாத்தியம்.
அடுத்த நிலை எப்படி மழையே இல்லாமல் இருந்த நிலத்தில் மழை பொழிந்து மண் வாசம் உண்டாக்கி அந்த ஒரு மகோத உன்னத மகிழ்ச்சியை உண்டாக்குமோ அது போல நம்மை புதுமைப்படுத்திக் கொள்வது. நமது அனுபவங்கள், பழைய விசயங்களில் இருந்து ஒரு அடையாளம், நமக்கான இலக்கு எதுவென நம்மை நாமே உணர்ந்து அறிந்து கொள்ளும் இந்த நிலை. ஒரு கற்பனை, அதில் இருந்து நமக்கான ஒரு உருவம் என நம்மை செழுமைப்படுத்திக் கொள்ள நமக்கு நிறைய மன உறுதி தேவைப்படுகிறது.
அடுத்து வரும் நிலையே நம்மை எவரென உலகம் அறிந்து கொள்ள வழி செய்யும். ஒரு உற்சாகத்தோடு நம்மை வழி நடத்திட நமது கனவுகளை எல்லாம் நனவாக்கிட நாம் செய்யும் செயல்கள். இந்த நிலையில் எண்ணற்ற எதிர்பாராத பிரச்சினைகள் வந்து சேரும். அதை எல்லாம் தகர்த்து இலக்குகள் நோக்கிய விசயத்தில் மனம் தளராது செயல்படுவது.
இறுதியான நிலையானது நாம் நினைத்த விசயங்களை சாதித்துக் காட்டி உலகம் நம்மை முழுமையாக அறிந்து கொள்ளச் செய்வது. இந்த நான்கு நிலைகளில் ஒவ்வொரு விசயங்களுக்கு நம்மை உட்படுத்திக் கொள்கிறோம். இது மனிதனின் மனமாற்றமான உருமாற்றம் என்று கொள்ளலாம்.”

“மனிதர்கள் தரும் நம்பிக்கைகள் எல்லாம் எவ்வித உறுதிப்பாடும் இல்லாதவை. ஆனாலும் இந்த நம்பிக்கைகள் ஒருவித மன நிம்மதியைத் தந்து போகிறது.”
― பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum]
― பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum]
“இந்த உலகில் நாம் நேசிக்கும் மனிதர்கள் நமது எண்ணங்களுக்கு மதிப்பு தருபவர்களாகவே இருக்க வேண்டும் என அவர்களையே நாம் தேடிக் கொள்கிறோம்.”
― பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum]
― பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum]
“இந்த பெரும் அண்டவெளியில் பெருமை கொள்ளக்கூடிய விசயம் என்னவெனில் அளப்பரிய அறிவு கொண்டு இந்த மானுடம் இருப்பதுதான், அதே வேளையில் சிறுமை கொள்ளக்கூடிய விசயம் என்னவெனில் மானுடத்தின் அறிவு பேரன்பு அற்று வெறுப்பில் வெந்து போவதுதான்.”
― பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum]
― பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum]
“இந்த உலகில் சாய்ந்து கொள்ள ஒரு தோள், நம்பிக்கை தளர்கின்ற போதெல்லாம் அரவணைத்துக் கொள்ளும் ஒரு உறவு என இதெல்லாம் அமைந்து விடுவது என்பது பெரும் வரம்.”
― பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum]
― பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum]

![பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum] பாமரத்தியும் பட்டாம்பூச்சியும் [Paaramatthiyum Pattaampoochiyum]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1578632885l/50376730._SX98_.jpg)
![ஒழுங்கற்ற கூழாங்கற்கள் [Ozhungatra Koozhangarkkal] ஒழுங்கற்ற கூழாங்கற்கள் [Ozhungatra Koozhangarkkal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1599712367l/55287628._SX98_.jpg)
![கர்மவினை அல்ல பரிணாமம் [Karmavinai Alla Parinaamam] கர்மவினை அல்ல பரிணாமம் [Karmavinai Alla Parinaamam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1578635644l/50376969._SX98_.jpg)
![கொலுசு குலுங்க ஒரு சிறுமி [Kolusu Kulunga Oru Sirumi] கொலுசு குலுங்க ஒரு சிறுமி [Kolusu Kulunga Oru Sirumi]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1621674833l/58118579._SX98_.jpg)