Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following NithaniPrabu.

NithaniPrabu NithaniPrabu > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-1 of 1
“ஏனோ மனம் தள்ளாடுதேவிலிருந்து...

இழப்பு அவனுக்கு இல்லையா? இல்லை வலியும் வேதனையும் தான் இல்லையா? அவள் அழுதுவிட்டாள். கோபத்தை வார்த்தைகளாக அவனிடம் கொட்டிவிட்டாள். அவன்? இதோ வெடிக்கப்போகிறேன் என்று கனத்துக்கொண்டு நிற்கும் மனதைச் சுமக்க முடியாமல் திணறுகிறான்.

ஒரு நொடி ஒரேயொரு நொடி மடி சாய்த்து தலை கோதிவிட்டாளானால் அவன் தேறிக்கொள்ள மாட்டானா? அவளின் கைகளுக்குள் ஒரு முறை அடக்கிக்கொள்வாளாக இருந்தால் காயங்கள் எல்லாம் ஆறிவிடாதா!

அவள் ஏன் செய்யப் போகிறாள்! இதெல்லாம் அவனுக்கு வாய்க்கவேண்டும் என்று சாபமிட்டவளே அவள் அல்லவோ!

அதுதான், அவனுடைய மகளே சுவாமி தரிசனம் போல் காட்சி தந்துவிட்டு உனக்கு மகளாக வாழ விருப்பமில்லை அப்பா என்று சொல்லிவிட்டுப் போனாளோ.

கண்ணோரம் கரித்துவிட அவனது தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று. உயிரற்ற உடலாகத் தன் கையில் கிடந்த மகளின் பால்வண்ண மேனி கண்ணில் வந்து போயிற்று.

குவா குவா சத்தம் நிறைத்திருக்க வேண்டிய அறை குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும் மயானமாகிப் போயிற்றே!”
NithaniPrabu