Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Balakumaran.
Showing 1-30 of 33
“பெண், விரல் நீட்டிக் குற்றம் சுமத்தினால் கடவுளையும் காமுகன் என்று உலகம் நம்பும்”
― தாயுமானவன் [Thayumanavan]
― தாயுமானவன் [Thayumanavan]
“பசித்தபோது உணவு கிடைப்பது பெரிய வரம்”
― தாயுமானவன் [Thayumanavan]
― தாயுமானவன் [Thayumanavan]
“எது உயர்ந்ததோ அது தாழும், எது தாழ்ந்ததோ அது உயரும்”
― கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]
― கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]
“இந்த பெரியபுராணக்கதைகள் நமக்கு என்ன சொல்கின்றன என்று நான் திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தேன். இந்த பரதகண்டத்தின் எந்த மூலையிலும் இப்படிப்பட்ட செயல்கள் நிகழ்ந்திருக்குமோ என்று கேள்வி கேட்டேன். இந்த சோழ, சேர பாண்டிய நாட்டில்தான், தமிழ் பேசும் நல்லுலகில்தான் இப்படிப்பட்ட அற்புத விசயங்கள் நடந்திருக்கின்றன. தட்சிண பூமி புண்ணிய பூமி தாயே. சிவனைச் சேர்ந்தவர்களுக்கு தான் என்றும், தனது என்றும் ஒருநாளும் கர்வம் கூடாது. சிவனைச் சேர்ந்தவர்கள் ஒரு நியதிக்கு கட்டுப்பட்டவராகத்தான் இருக்கிறார்கள். இதுதான் நமது நாகரிகம். இதுதான் நமது பண்பாடு." - செப்புப் பட்டயம், ப.93”
―
―
“புத்தர் என்கிற பெயரில் அமைதி என்கிற பெயரில் அன்பு என்கிற பெயரில் ஒரு குழு செய்கிற அட்டகாசம்”
― கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]
― கங்கை கொண்ட சோழன் (பாகம் 3) [Gangai Konda Cholan #3]
“யார் எதிரி? யார் நண்பன்? காலம் காட்டும் மாயை இது. காலம்தான் எதிரி. காலம் தான் நண்பன். காலம்தான் குரு. காலமே கடவுள்.”
― Thayumanavan
― Thayumanavan
“என்ன இருக்கிறதோ அதை மட்டும் ஏற்க வேண்டும் . என்ன இல்லையோ அதை மறக்க வேண்டும் . கிடைத்ததைக் கொண்டாட வேண்டும் . விதித்ததை அனுபவிக்க வேண்டும் . இனித்தாலும் , கசந்தாலும் நீயே என்று பிரபஞ்ச சக்தியை பற்றிக் கொள்ள வேண்டும் . அந்த சக்தியோடு மனம் லயித்துக் கிடக்க வேண்டும் .”
― Enn Kanmani Thamarai
― Enn Kanmani Thamarai
“இல்லறத்தைத் துறப்பது துறவல்ல. அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளிவேஷங்கள்”
― Enn Kanmani Thamarai
― Enn Kanmani Thamarai
“அந்த எல்லை முடிந்து மறுபடி பார்த்த”
― Udaiyaar Part - II
― Udaiyaar Part - II
“ரீகலெக் ஷ ன் ஆஃப் தாட்ஸ் மனுஷாளுடைய பெரிய சொத்து இது. நடந்ததை நினைவுக்குக் கொண்டுவந்து யோசனை பண்ணத் தன்னைப் பக்குவப் படுத்திக்கறது மனுஷாளுக்கு மட்டுமே உண்டு. மிருகம் மாதிரி சட்டென்று கோபமோ, காமமோ வந்துடறதில்லே. வாலை மிதிச்சவுடனே பாஞ்சுடறதில்லை. கோபப்பட்டா என்னாகும்னு நம்மாலே யோசிக்க முடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி. முடியாதவன் மிருகம். யோசனை பண்ணினதின் விளைவு இன்றைய வாழ்க்கை, வளர்ச்சி.”
― Irumbu Kudhiraigal
― Irumbu Kudhiraigal
“பளிச்சுனு”
― Ullam Kavar Kalvan
― Ullam Kavar Kalvan
“எல்லா நேரமும் வெற்றி என்பது, எந்த மனிதரின் வாழ்க்கையிலும் இல்லை. வாழ்வில் குறிக்கோள் என்பது உண்டெனில், குறி பிசகுவதும் உண்டு. பிசகுகிற நேரம் மனம் சலிக்கத் துவங்கும். அந்தச் சலிப்பு உள்ளுக்குள்ளே, நான் யார் என்று பார்க்கத் துவங்கும். கேட்கத் துவங்கும். கேட்கும்போது, பிடித்துக்கொண்டால் போயிற்று. இல்லையெனில், மறுபடியும் மனம் மற்ற திட்டங்களுக்கு தாவத் தொடங்கிவிடும்.”
― Sri Ramana Maharishi
― Sri Ramana Maharishi
“சடங்குகளைவிட வாழ்க்கை முக்கியம். அனுஷ்டானத்தைவிட அன்பு முக்கியம். பொய்யான ஜாதி கர்வத்தைவிட சத்தியமான பிரியம் முக்கியம். இந்தக் குணங்கள்தான், கருவிலிருந்த குழந்தைக்கும் இயல்பாக இருந்தன. வித்து பலமாக இருந்ததால், விருட்சம் பெரிதாகக் கிளர்ந்தது.”
― Sri Ramana Maharishi
― Sri Ramana Maharishi
“இது மனிதனின் பலகீனமான நேரம் வலியும் அவமானமும் ஆளைக்குடைசாய்த்து விட்ட நேரம். கோபாலன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் தன் திட்டங்களைச் சொல்லிவர அந்த மாலை வேளையில் சிறையில், அரையிருட்டில் சுலபமாய்த் தலைவனானான்.”
― மெர்குரிப் பூக்கள் [Mercuri Pookkal]
― மெர்குரிப் பூக்கள் [Mercuri Pookkal]
“இது உங்கள் தலை எழுத்து. முன்ஜென்ம வினை. மூத்தோர் புண்ணியம். இவை கலந்து திரட்சியாகி உள்ளுக்குள்ளே இறங்கவேண்டும். அப்போதுதான் ‘நான் யார்?’ என்று தேடலை ஆரம்பிக்கவே முடியும்.”
― Sri Ramana Maharishi
― Sri Ramana Maharishi
“இதுதான் வாழ்க்கையின் சுழற்சி, இது எப்போது மீறப்பட்டாலும் பிரச்சினை வரும். பெண்களைத் தாங்குவது என்பது ஆண்களின் கடமை. தன்னைத் தாங்கும் ஆண்களுக்குப் பணிவிடை செய்து, அவனைக் காரியங்கள் செய்யச் செய்வது பெண்களின் கடன். இது இரண்டிற்கும் அடிப்படை அன்பு. பரஸ்பரம் மதிப்பு. இந்தச் சோழ தேசத்தில்”
― Udaiyaar
― Udaiyaar
“மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்பதற்கு நீங்கள் வேறு அர்த்தம் செய்துகொண்டு இருப்பீர்கள். கர்வப் படுகிறவனின் மூச்சுக்கு அருகே, அதாவது மண்டையின் வாசலுக்கு அருகே போய் விடாதே. மதியாதார் என்பது உன்னை மதிக்காதவன் அல்ல. தன் மனோசக்தியை மதிக்காதவன். கடவுளை மதிக்காதவன். அவன் மூச்சு தலைவாசல் வெப்பமாய் இருக்கும். இடைவிடாத பொறாமையாய் சூடாய் இருக்கும். மூச்சு சூடானவர்கள் கண்கள் சிவந்து அடிக்கடி மேலே சொருகியும் உதடுகள் கீழ்நோக்கி இழிந்தும் காணப்படும். கோணலான சிரிப்பு ஏற்படும். அந்த மனிதன் தன் நடையழகை கவனித்துக்கொண்டே இருப்பான். தன் அசைவுகளைப் பிறர் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்காகவே அசைந்து கொண்டிருப்பான். மிதிக்காதே என்று சொன்னதன் அர்த்தம் என்ன தெரியுமா? இந்த மாதிரி கர்வமான மனிதர்கள் மலத்தைப் போன்றவர்கள். மலத்தைத் தெரியாது மிதித்துவிட்டதைப் போல எந்த முயற்சியும் இல்லாது இவர்கள் அருகே”
― Kadalorak Kuruvigal
― Kadalorak Kuruvigal
“தெரியவில்லை”
― மெர்குரிப் பூக்கள் [Mercuri Pookkal]
― மெர்குரிப் பூக்கள் [Mercuri Pookkal]
“அவன் செத்தால் தடுக்க உம்மால் ஆகுமா? உமது மரணத்தை நீர் கவனித்துக் கொள்ளும். அவன் மரணத்தை அவன் பார்த்துக் கொள்வான்.'' ராஜம் அதட்டினாள்.”
― Enn Kanmani Thamarai
― Enn Kanmani Thamarai
“ஞானத்துக்கும் தொழிலுக்கும் என்னப்பா சம்பந்தம்? இரை தேடறது நமக்கும் உண்டே. புத்தியை வயத்தாலே கட்டிப் போட்டிருக்கே. ஒரு நாள் உணவை ஒழியென்றால் ஒழி யாய்ன்னு ஒளவைக் கிழவி பாடறாளே. இரை தேட வேண்டாம்னா பாறாங்கல்லாய்ப் போயிடுவோம். பாறைக்குப் பிரச்சனை இல்லை. மிருகம் மாதிரி இரை மட்டும் தேடற சுபாவமும் இல்லை. இரையும் தேடி ஞானமும் தேடி... அட்டா என்ன சுகம், எப்படிப்பட்ட போராட்டம். இது பனிஷ்மென்ட் இல்லை அம்பி. சுயமா புடம் போட்டுக்கற வித்தை, சுவாரஸ்யமான விளையாட்டு.”
― Irumbu Kudhiraigal
― Irumbu Kudhiraigal
“மானாபிமானம் விட்டுத் தானாக நின்றவருக்கு என்று ஒரு பாட்டு வரும். அப்படி நின்றவருக்குப் பெயரில்லை; விலாசமில்லை;”
― Sri Ramana Maharishi
― Sri Ramana Maharishi
“பாட்டியாருமான செம்பியன்மாதேவி கூடலூர் என்கிற சிறுகிராமத்தில் கொங்கு தேசத்தில் ஒரு மரத்தடியின் கீழ் சிவநாமம் சொல்லியபடி உயிர்நீத்தார்.”
― Udaiyaar
― Udaiyaar
“தொண்டை தேசத்தை விட்டு சோழ தேசம் போகப் போகிறேன். இங்கு இருக்கின்ற நிலங்களை விட்டு அல்லது விற்றுவிட்டு, என் மனைவியோடும், மகளோடும், குடும்பத்திற்கான சில பொருள்களோடும் நான் சோழ தேசம் நோக்கிப் போகப் போகிறேன். மனைவியின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். மகளின் மானத்தை காப்பாற்ற வேண்டும். அவளை ஒருவனிடம் கை பிடித்து கொடுக்க வேண்டும். மகனை என்னை விட மேம்பட்டவனாக, ஞானமுள்ளவனாக தயார் செய்ய வேண்டும். இதற்காக பொருள் அவசியம். நான் துறவறம் கொள்ள முடியாது. இவளை விட்டு விலக முடியாது. எனவே, இவர்களோடு நிலம் விற்ற சிறிய பொருள்களோடு நான் சோழதேசம் நோக்கி போகப் போகிறேன். மறுபடியும் ஒற்றை புள்ளியிலிருந்து ஆரம்பிக்கப் போகிறேன். சுண்ணத்திலிருந்து மறுபடியும் ஒன்று, இரண்டு என்று போகப் போகிறேன். முடிந்த வரை என்னை ஏதுமில்லாதவனாக வைத்திருக்க முயற்சி செய்யப் போகிறேன். இன்னும் சீரான வாழ்க்கை வாழப்போகிறேன். தொண்டை தேசத்து அந்தணர்களுக்கு சோழ தேசத்தில் வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் தொண்டை தேசத்து அந்தணர்கள் தஞ்சைக்கு சென்று அங்கு இருந்து ஜெயங்கொண்டத்திற்கு திரும்பிவிட்டார்கள். ஜெயங் கொண்டத்தில் இருக்க எனக்கு விருப்பமில்லை. அது அரசர் இருக்கும் இடம். அரசியல் ரீதியான இடம். இப்பொழுது தஞ்சை அமைதியாகிவிட்டது. மிகப்பெரிய கோவில் இருக்கிறது. தினசரி சிவ தரிசனம். காவேரி வாய்க்கால் குளியல் என்று நான் அமைதியாக இருக்க முயற்சி செய்வேன். அரசருடைய தயவில் மந்திரிமார் சேனாதிபதி தயவில் பெரும் வணிகர் தயவில் என் வாழ்வை துவக்குவேன்.”
― Gangai Konda Chozhan - Part II
― Gangai Konda Chozhan - Part II
“சொல்லி”
― காதல் ரேகை [Kadhal Regai]
― காதல் ரேகை [Kadhal Regai]
“உறவு என்பது தொடர்பு கொள்ளும் விதத்தில் அமைந்தது. பிறரைத் தொடர்பு கொள்ள தன்னைத் தெரிய வேண்டும். தன்னைத் தெரிய தனிமை பழக வேண்டும். தனிமை பழக தீவிர சிந்தனை வேண்டும். தீவிர சிந்தனை என்பது ஒரு பழக்கம். ஒருவித பயிற்சி...”
― Kanavu Kudithanam
― Kanavu Kudithanam
“பேசும் பாஷையில் இறைவனைத் துதிப்பது எத்தனை சுகம். வடமொழியில் யாரும் பேசுவதில்லை. ஆனால், வடமொழி அறிந்தவர்கள் தமிழில் பேச மட்டுமே உபயோகப் படுத்துகிறார்கள்.”
― Enn Kanmani Thamarai
― Enn Kanmani Thamarai
“இத்தனை நாள் அனுபவிச்சுட்டு....' சியாமளி பேசினது நினைவுக்கு வந்தது. எல்லா பெண்களும் ஏன் கூடல் அநுபவத்தை ஆணுக்கே சொந்தமாக்குகிறார்கள் என்பது தெரியவில்லை. எவனோ சொன்னது நினைவுக்கு வருகிறது When rape is inevitable like back and enjoy it இந்தத் தேசத்துப் பெண் எவளாவது இதைச் செய்வாளோ? கடைசிவரை போராடி இறந்தாள் சாவது உசத்தியானது. அப்பா - உயிர் எத்தனை அல்பம் இவர்களுக்கு, யோசிக்க யோசிக்க தலைக்குள் கனல் ஏறிக் கண்ணை அழுத்திற்று.”
― மெர்குரிப் பூக்கள் [Mercuri Pookkal]
― மெர்குரிப் பூக்கள் [Mercuri Pookkal]
“மனிதர்கள் எல்லோரையும் பகைத்துக் கொள்ள முடியாது. ஆனால் அதேநேரம் தினமும் யாரையாவது பகைத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். பகைக்கு ஏற்றவர் யார் என்று மனம் தேடிக் கொண்டேயிருக்கும். அவர்களை எந்தக் காரணமுமின்றி பகைத்துப் பழிவாங்கும் மனம் விசித்திரமானது. ஒருவனுக்குத் தன மனம் போடும் ஆட்டம் பற்றிய பிரக்ஞை இல்லையெனில் அவன் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. முன்னேற முடியாதவர்கள்தாம் மற்றவர்களை அதிகம் தொந்தரவு செய்கிறார்கள்.”
― குன்றிமணி [Kundrimani]
― குன்றிமணி [Kundrimani]
“மற்றுநான் பெற்றது ஆர்பெற வல்லார் வள்ளலே. கள்ளமே பேசி குற்றமே செய்யினும் குணமெனக் கொள்ளும் கொள்கையால் மிகைப்பலச் செய்தேன்”
― Udaiyaar
― Udaiyaar

![உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1] உடையார் - பாகம் 1 [Udaiyar - Part 1]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1600405059l/6705635._SX98_.jpg)
![உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2] உடையார் - பாகம் 2 [Udaiyar - Part 2]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1600404285l/13417655._SY160_.jpg)
![உடையார் - பாகம் 3 [Udaiyar - Part 3] உடையார் - பாகம் 3 [Udaiyar - Part 3]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1600405371l/13417656._SX98_.jpg)
![உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6] உடையார் - பாகம் 6 [Udaiyar - Part 6]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1600404606l/13417661._SX98_.jpg)