Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Gobinath.

Gobinath Gobinath > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-18 of 18
“என்ன திட்டம் போட்டாலும், எவ்வளவு ரிசர்ச் செய்தாலும் பிரச்னைகள் வரும். பிரச்னைகள் வராமல் 100 பர்சென்ட் தெளிவான பாதையில் பயணிக்கும் திட்டம் என்று ஒன்று இல்லவே இல்லை”
Gopinath, Password
“வேலையை முழுமையாகச் செய்ய வேண்டும். என் முழுத் திறனை வௌிப்படுத்திச் செயல்பட வேண்டும்’ என்று நினைப்பவர்கள், எந்தத் துறையில் இருந்தாலும் ஜெயிக்கிறார்கள்.”
Gopinath, Password
“நம்மிடம் இருக்கும் செல்போன் நன்றாகவே இயங்கிக்கொண்டு இருக்கும்போதும், தேவையே இல்லாமல் 10 ஆயிரம் ரூபாய்க்குப் புது செல்போன் வாங்குவோம். மருத்துவர் எழுதிக்கொடுத்த மாத்திரையில் 10 வாங்க வேண்டிய இடத்தில் ஐந்து போதும் என்று ‘புத்திசாலித்தனமாக’ மிச்சப்படுத்துவோம்.”
Gopinath, Password
“நம் வீட்டுச் சாப்பாட்டு மேஜைகளில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தலாம்!”
Gopinath, Password
“யார் ஒருவருக்கு எல்லாவற்றையும் முழுமையாகச் செய்ய நேரம் இருக்கிறதோ அவர்தான் பிஸியான மனிதர். அழுக்கு தேய்த்துக் குளிப்பதில் தொடங்கி, ஆற அமரச் சாப்பிடுவது வரை இதில் அடக்கம்.”
Gopinath, Password
“உயிரற்றவைதான், உயிருள்ள மனிதர்களின் உணர்வுகளைச் சுமக்கின்றன. உயிருள்ள மனிதர்கள்தான் தொடர்புகளை இழந்து தொலைந்துபோகிறோம்!”
Gopinath, Password
“வாழ்தலின் நோக்கம் வாழ்தல்தான். மற்றது எல்லாம் அப்புறம்!”
Gopinath, Password
“வேகத்தைக் குறைத்து, ஒரு செயலை நிதானமாக (கவனிக்க: மெதுவாக அல்ல... நிதானமாக!) திருப்தியாகச் செய்து முடிக்க வேண்டும் என்பதுதான் அந்த Slow Movement-ன் சாரம்.”
Gopinath, Password
“வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கையைவிட யாராலும் அழகாகச் சொல்லித்தர முடியாது!”
Gopinath, Password
“ஏனோதானோ என்று எதையோ ஒன்றைச் செய்து கையைச் சுட்டுக்கொள்ளக்கூடாது என்பதற்காக, கடைசி வரை திட்டம் போட்டுக்கொண்டே காலத்தை ஓட்டிவிட முடியாது.”
Gopinath, Password
“அலட்சியத்தாலும் சோம்பேறித்தனத்தாலும் காரணமின்றி எந்த வேலையைத் தள்ளிப்போட்டாலும், அது நாளையோ, நாளை மறுநாளோ... நம் கழுத்தில் கத்தி வைக்கத் தவறாது!”
Gopinath, Password
“இங்கு யார் யாருக்கு என்ன சம்பளம் என்பதுபற்றி யாரும் கவலைப்படாதீர்கள். உங்கள் திறமை என்ன என்பதை நீங்கள் சொன்னதைவைத்தும், உங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட விஷயங்களை வைத்தும், உங்கள் சம்பளம் தீர்மானிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், உண்மையில் இனிதான் உங்களை, நீங்கள் நிரூபிப்பதற்கான வாய்ப்பு தொடங்குகிறது. எப்போதுமே நிறுவனம் தரும் சம்பளத்தின் அளவு என்னவோ, அதை ஒரு குறியீடாக நிறுத்தி உங்கள் பணிகளைச் செய்யாதீர்கள். உங்கள் திறமை என்ன, அது எவ்வளவு விஷயங்களைச் சாதிக்கக்கூடியது என்பதை மனதில் இருத்திக்கொண்டு செயல்படுங்கள். அதான் நீங்கள் காலம் முழுவதும் தொடர வேண்டிய வாழ்க்கைப் பயிற்சி”
Gopinath, Password
“சின்ன வேலைதானே. அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று நாம் தள்ளிப் போட்ட வேலைகள்தான், எந்தப் பெரிய வேலையையும் பார்க்கவிடாமல் நம்மைப் பழிதீர்க்கின்றன.”
Gopinath, Password
“ஒரு தொழிலையோ அல்லது வேலையையோ தொடங்க, அது சம்பந்தப்பட்ட 100 சதவிகிதத் தகவல்களையும் தெரிந்துந்து வைத்திருக்க வேண்டும் என்பது எல்லாம் சாத்தியமே இல்லை. துணிஞ்சு உள்ளே இறங்கு. கத்துக்க வேண்டியது, கை கொடுக்க வேண்டியது எல்லாம் தானா வரும்”
Gopinath, Password
“என்ன பிசினஸ் செய்தால் ஜெயிக்கலாம் என்பதைவிட, என்னால் எந்த பிசினஸையும் ஜெயிக்க முடியும் என்பதே முக்கியம்”
Gopinath, Password
“பிடித்ததைச் செய்வதில் பிடிவாதமாக இருப்போம்!”
Gobinath, Password
“ஏனோதானோ என்று ஓடிக்கொண்டு இருக்கிற வாழ்க்கையில் காலம் ஏதோ ஒரு தருணத்தில் கல்லெடுத்து எறிகிறது. வாழ்க்கை முழுக்க இப்படியே இருந்துவிட முடியாது என்று எச்சரிக்கிறது.”
Gopinath, Password
“அர்த்தம் உள்ள பேச்சுகளைவிட அர்த்தம் இல்லாத, ஒரு காரணமும் இல்லாத பேச்சுகள்தான் வீடுகளை, அதன் சுதந்திரத்தை அர்த்தம் உள்ளதாக ஆக்குகின்றன.”
Gopinath, Password

All Quotes | Add A Quote