Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Pudhumaipitthan.

Pudhumaipitthan Pudhumaipitthan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-11 of 11
“ஆட்சி மனித பலவீனத்தின் புறச்சின்னம்”
புதுமைப்பித்தன், அதிகாரம் யாருக்கு?
“காலை ஐந்து மணிக்கு ஈர ஆற்று மணல் ஒட்டிய அவர் பாதங்கள், வெகு வேகமாக ஆற்றில் இறங்கும் சந்திலிருந்து ராஜபாட்டையில் திரும்பி, மறுபடியும் ஒற்றைத் தெரு என்ற சந்தில் நுழைவதைக் காணலாம்.

மழையானாலும் பனியானாலும் ஈர வேஷ்டியைச் சற்று உயர்த்திய கைகளால் பின்புறம் பறக்கவிட்டுக் கொண்டு, உலர்ந்தும் உலராத நெற்றியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் விபூதி, குங்குமம், சந்தனம் விகசிக்க அவர் செல்லும் காட்சியைச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகக் கண்டவர்களுக்கு அவர் பக்தியைப் பற்றி அவ்வளவாகக் கவலை ஏற்படாவிட்டாலும், நன்றாக முடுக்கிவிடப்பட்ட பழுது படாத யந்திரம் ஒன்று நினைவிற்கு வரும்.”
Pudhumaipitthan, புதுமைப்பித்தன் சிறுகதைகள்
“இருள் இருந்தால்தானே ஒளி? ஒளி வராமல் போய்விடுமா? அதுவரை காத்திருக்க வேண்டியதுதான். எத்தனை காலமோ? ஒளி வரும்பொழுது நாம் இருக்க வேண்டும் என்ற அவசியமுண்டா? எனது சிருஷ்டிகள் இருந்தால் போதும்!”
Pudhumaipitthan, புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு
“சில கெட்டிக்கார அயோத்தி வாசிகள் தங்களிடம் இருந்த படைக்கலங்களின் இரும்பு வீணாவதைக்கண்டு, தோசைக் கற்களாகவும் இரும்புக் கரண்டிகளாகவும் உருக்கி வார்த்துக்கொண்டனர்.”
புதுமைப்பித்தன், நாரத ராமாயணம் [Narada Ramayanam]
“சுமந்திரபாலனும், கிரந்தத்தை மேலாகப் பார்த்து, அது பகைவர் வந்தவுடன் நடத்தவேண்டிய யுக்திகளாக இருந்ததால், இப்பொழுது அதைப்பற்றிக் கவலை இல்லை என்று அரசாங்கப் புத்தகசாலையில் வைத்துப் பூட்டினான்.”
புதுமைப்பித்தன், நாரத ராமாயணம் [Narada Ramayanam]
“நன்றாக முடுக்கிவிடப்பட்ட பழுது படாத யந்திரம்.”
Pudhumaipitthan, A Complete compilation of Puthumaippithan’s Short Stories: புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு
“ஒருநாள் பூராவாகவும், வெள்ளியம்பலத் தம்பிரான்களுடனும் அவர்கள் அரசாங்கத்துடனும் ‘டு’ போட்டுவிட்டால் வழிக்கு வந்துவிடுவார்கள் என்று நினைத்து, மூலைக்கு மூலை போய்ப் பேசி ஜனங்களைத் தன்வசப்படுத்த ஆரம்பித்தான்.”
புதுமைப்பித்தன், நாரத ராமாயணம் [Narada Ramayanam]
“எங்கையோ வடக்கே இருந்து சமணன் என்றும், புத்தன் என்றும் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அந்த முட்டாள் பயல்கள், 'கொல்லப்படாது! பாவம் கீவம்' என்று சொல்லி, ஆட்களைத் தங்கள் கட்சிக்குத் திருப்பிவிட்டார்கள். அந்தக் காலத்திலேயிருந்துதான் நம்ம பரமசிவன் முதற்கொண்டு எல்லாத் தேவாளும் சைவராகிவிட்டார்கள். காலம் அவாளை அப்படி ஆட்டி வைத்தது. முன்னே திரிபுரத்தை எரித்தாரே, இந்தச் சிவன், இப்போ அவராலே அந்தக் குருவிக் கூட்டைக் கூட எரிக்க முடியாது!”
Pudhumaipitthan, புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு
“மேலும், சீதாபிராட்டியின் மீது ஒரு தனிக் கோபம் இருந்தது. அசோகவனத்திலிருக்கும் பொழுது, என்ன சொல்கிறோம் என்றுகூட கவனிக்காமல் அவள் அவசரப்பட்டுக் கொடுத்த வரத்தினால், தனக்குச் செத்துப் போகவும் வழி இல்லாமல் செய்துவிட்டதை, அவரால் மன்னிக்க முடியவே இல்லை.”
புதுமைப்பித்தன், நாரத ராமாயணம் [Narada Ramayanam]
“செய்வது சரிதான், நன்றாயிருக்கிறது என்று சொல்லவாவது வேண்டாமா? நேர்மையான புகழ் இலக்கிய கர்த்தாவுக்கு ஊக்கமளிக்கும் உணவு. இதைக் கொடுக்கக் கூடச் சக்தியற்ற கோழையான ஒரு சமூகத்திற்கு என்ன எழுதிக் கொட்ட வேண்டியிருக்கிறது!”
Pudhumaipitthan, புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Short Stories: முழுமையான தொகுப்பு

All Quotes | Add A Quote
ஆண்மை (Tamil Edition) ஆண்மை
22 ratings