Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Roy Moxham.
Showing 1-6 of 6
“கிளைவ் நவாபை தோற்கடித்த பின்னர் அவர் ஒரு பொம்மை நவாபிற்கு முடிசூட்டினார், அவர் பெயர் மிர் ஜாபர். அரச குடும்பத்தில் ஒருவர். அதற்கு வெகுமதியாக கிளைவிற்கு அந்த ’இராஜதுரோகியிடமிருந்து’ ரூ 23,40,000 தரப்பட்டது, கூடவே ரூ. 3,00,000 வருடாந்திர வாடகையும் 880 சதுர மைல் அளவில் சொந்த நிலமும் வழங்கப்பட்டது.”
― உப்பு வேலி [Uppu Veli]
― உப்பு வேலி [Uppu Veli]
“கிழக்கிந்திய கம்பெனி யினால் சுங்க எல்லையை வகுக்க 1850ல் உருவாக்கப்பட்ட 1500 மைல்கள் நீளமிருந்த ஒரு புதர்வேலி (hedge) குறித்த மேலோட்டமான குறிப்பு இருந்தது. அந்த வேலி இமாலயத்திலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவை இரண்டாகப் பிரித்திருந்தது. 12,000 பேர் இந்த வேலியின் ஓரத்தில் உப்புவரி ‘பிடுங்கும்’ பணியிலமர்த்தப்பட்டனர். மனித வரலாற்றின் மிகப்பெரிய கட்டுமானங்களில் ஒன்றாக அது இருந்த போதும் எந்த வரலாற்று நூலிலும் அது குறிப்பிடப்படவில்லை. இன்று அது இங்கிலாந்திலும் இந்தியாவிலும் முழுவதுமாக மறக்கப்பட்டு விட்டது.”
― உப்புவேலி / Uppuveli
― உப்புவேலி / Uppuveli
“கம்பெனி ஆட்சியின் துவக்கத்தில் குறைந்தபட்சம் 60,000 பேராவது உப்பு தயாரிப்பில் வேலைசெய்தனர். வேலை அதிகமாகவும் ஊதியம் கொடுமையாகக் குறைவாகவும் இருந்தது. ஒருநாளைக்கு 13 குண்டாக்கள் ஊதியமாக வழங்கப்பட்டன. குண்டா என்பது பணத்தின் மிகச்சிறிய அலகாகும். அது நான்கு சோழிகளுக்குச் சமமானது. 100 குண்டாக்கள் சேர்ந்து ஒரு அணா ஆகின. ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். ஆக முப்பது நாட்கள்கொண்ட ஒரு மாதத்தில் மொத்த சம்பளமும் கால் ரூபாய் ஆகும்.”
― உப்புவேலி / Uppuveli
― உப்புவேலி / Uppuveli
“1774ல் தன் 49வது வயதில் கிளைவ் தனது பேனா கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டார். அடையாளமற்ற கல்லறை ஒன்றில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.”
― உப்புவேலி / Uppuveli
― உப்புவேலி / Uppuveli
“ஒரு வரலாறானது புத்தகமாகவோ அல்லது திரைப் படமாகவே படைப்புறும்போது, அது மானுடத்தின் மனசாட்சியை எக்காலத்துக்கும் உலுக்கும் ஆவணமாக நிலைபெற்றுவிடுகிறது.”
― உப்புவேலி / Uppuveli
― உப்புவேலி / Uppuveli
“அதிக வெப்பத்தினால் ஏற்படும் தளர்ச்சி (Heat exhaustion) உடலில் நீர் குறைவதால் அல்லது உப்பு குறைவதால் ஏற்படுவதாகும். இவை இரண்டுக்கும் உடல் முற்றிலும் வெவ்வேறு விதமாய் எதிர்வினையாற்றுகிறது. உடலில் நீர் குறைந்தால் தாகம் எடுக்கிறது. தாகம் கொண்டவர் நீரை அருந்தி சகஜ நிலைக்குத் திரும்புகிறார். ஆனால் உப்பு குறைந்தால் தாகமோ அல்லது உப்பை உண்ண விருப்பமோ தோன்றுவதில்லை. பாதிக்கப்பட்டவர் உடல்நிலை சரியில்லாததை உணர்வார். ஆனால் எதற்காக என்பது தெரியாது. களைப்பு, உற்சாகமின்மை, தலைவலி மற்றும் தசை தளர்ச்சி ஆகியன உப்பின்மையின் முதல் அறிகுறிகள். உப்பின் அளவு குறையக்குறைய தலைச்சுற்றும், மயக்கமும் நேரலாம். இன்னும் குறைந்தால் பசியின்மையும், குமட்டலும், வாந்தியும் ஏற்படும். இதனால் உணவு உட்கொள்ளுவது குறைகிறது அல்லது முற்றிலும் தடைபடுகிறது, எனவே உப்பை உட்கொள்ளுவதுவும் குறைகிறது. இது உடலை மேலும் வாந்தியெடுக்கச் செய்து மேலும் மேலும் உப்பை வெளியேற்றுகிறது.
உடலில் உப்பு குறைவாகி இறப்பு நேர்வதை முன்னறிவது கடினம். குறிப்பாக வேறொரு நோயுடன் இது சேர்ந்துகொள்ளும்போது இதை தனித்து அறிவது மிகக்கடினம். பழைய இந்திய கிராமங்களில் நிச்சயமாய் வேறு காரணங்களே சுட்டப்பட்டிருக்கும். இருபதாம் நூற்றாண்டின் மருத்துவமனைகளிலேயே ‘இறப்புகள் இரத்தத்தில் நச்சு, யூரியா அதிகரித்தல் அல்லது இரத்த ஓட்டம் நின்றுபோதல் போன்றவற்றால் நிகழ்ந்ததாக கருதப்படுகின்றன. ஆனால் அவர்கள் உண்மையில் மிகச் சாதாரணமாக உப்பில்லாமல் இறந்து போயிருக்கிறார்கள். அவர்களை எளிதில் காப்பாற்றியிருக்க முடியும்’ என்கிறார் டாக்டர். மாரியட்.”
― The Great Hedge of India: The Search for the Living Barrier that Divided a People