Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following S. Viswanathan.

S. Viswanathan S. Viswanathan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-7 of 7
“பச்சைப் பசேல்னு வாழை இலையைப் போட்டு, அதன் மேலே புகையப் புகைய நெய்யுடன் மினு மினுக்கும் உப்புமாவை வைக்கிறபோது, அதில் கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டிருக்கும் முந்திரியை விரலாலே தள்ளிச் சாப்பிட்டால் அந்த ருசியே விசேஷம்தான்!’ என்றார் அம்மாஞ்சி. ‘வாஷிங்டன்”
Saavi, வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
“இங்கிலீஷ் பாஷை தெரியாதே உங்களுக்கு. அமெரிக்காவிலே கஷ்டப்பட மாட்டீர்களா?’ ‘பாஷை தெரியல்லேன்னா நமக்கென்ன கஷ்டம்? நாம் பேசற பாஷை அமெரிக்காளுக்குப் புரியாது. அதனாலே, கஷ்டப்படப் போறவா அவாதானே?”
Saavi, வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
“ஆகாசத்தில் பறக்கிறவர்கள் கந்தர்வப் பெண்கள் மாதிரி இருப்பது சகஜம்தானே?”
Saavi, வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
“ஆப்ரஹாம் லிங்கன் மண்டபமா?’ என்று கேட்டார் மாமா. ‘ஆமாம்’ என்றான் பஞ்சு. ‘ஹர ஹர’ என்று அந்த மண்டபத்தை நோக்கிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார் சாஸ்திரிகள். ‘சாஸ்திரிகளே, எதுக்காக இப்போது கன்னத்தில் போட்டுக் கொள்கிறீர்கள்?’ அம்மாஞ்சி கேட்டார். ‘லிங்கம் வைத்து மண்டபம் கட்டியிருக்கிறாளே!”
Saavi, வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
“அதோ ஒரு மண்டபம் தெரிகிறதே, அதுதான் லிங்கன் மண்டபம்’ என்றான் பஞ்சு. ‘ஆப்ரஹாம் லிங்கன் மண்டபமா?’ என்று கேட்டார் மாமா. ‘ஆமாம்’ என்றான் பஞ்சு. ‘ஹர ஹர’ என்று அந்த மண்டபத்தை நோக்கிக் கன்னத்தில் போட்டுக் கொண்டார் சாஸ்திரிகள். ‘சாஸ்திரிகளே, எதுக்காக இப்போது கன்னத்தில் போட்டுக் கொள்கிறீர்கள்?’ அம்மாஞ்சி கேட்டார். ‘லிங்கம் வைத்து மண்டபம் கட்டியிருக்கிறாளே! மஹாலிங்கம், ஜம்புலிங்கம் மாதிரி அமெரிக்காவிலே ஆப்ரஹாம் லிங்கம் விசேஷம் போலிருக்கு’ என்றார் சாஸ்திரிகள். சாஸ்திரிகள் சொன்னதைக் கேட்டுக் குலுங்கிச் சிரித்தனர் அனைவரும். ‘பாவம்,”
Saavi, வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
“சம்பந்திங்க இஷ்டப்படியே செஞ்சுடு. அவங்களுக்கு எதுக்குக் குறை? பஞ்ச்! சம்பந்தி சண்டை வரும்னு சொல்லிக்கிட்டிருந்தயே, அது எப்ப வரும்? எனக்கு சம்பந்திச் சண்டை பார்க்கணும்போல ரொம்ப ஆசையாயிருக்கு பஞ்ச்!’ என்றாள் மிஸஸ் ராக். ‘அது எப்ப வேணாலும் வரும் மேடம்! பெண் வீட்டாருக்கும் பிள்ளை வீட்டாருக்கும் தகராறு வந்து பெரிய சண்டையிலே முடிஞ்சுடும். அதனாலே கல்யாணமே கூட நின்னு போயிடறதும் உண்டு. ஸௌத் இண்டியாவிலே இது ரொம்ப காமன்.’ ‘எதுக்குச் சண்டை போடுவாங்க?’ ‘அது அவங்களுக்கே தெரியாது! திடீர்னு சண்டை வரும். அது எப்படி வரும்? எதுக்காக வரும்? எந்த மாதிரி வரும்? எப்படி முடியும்?’ என்று யாராலும் சொல்லவே முடியாது. ‘இந்தக்”
Saavi, வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]
“டாஞ்சூர் டெம்பிள் வெரி பிக் டெம்பிள்! டெம்பிளிலுள்ள ‘புல்’ வெரி வெரி பிக்! கோபுரத்தின் நிழல் கீழே விழாது. தினம் தினம் விழுந்து கொண்டிருந்தால் அதற்குப் பலத்த காயம் ஏற்படும் என்பதற்காக, சிற்பிகள் அவ்வாறு கட்டியிருக்கிறார்கள்.”
Saavi, வாஷிங்டனில் திருமணம் [Washingtonil Thirumanam]

All Quotes | Add A Quote
Pazhya Kanakku (Tamil) Pazhya Kanakku
193 ratings