அநுத்தமா 16.4.1922 -ல் ஆந்திராவிலுள்ள நெல்லூரில் பிறந்தார் என்றாலும், பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம்தான். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மனாபன். படிப்பில் மிக ஆர்வமாக இருந்த ராஜேஸ்வரிக்கு எழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது 14 வயதிலேயே திடீரென்று திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதனால் படிப்பு தடைப்பட்டது. திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்து, சென்னையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி, மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தார். அந்தக் காலத்திலேயே கதை எழுதணும் என்றெல்லாம் இல்லாமல், திடீரென ‘அங்கயர் கண்ணி’ என்ற கதையை எழுதினார். அது ‘கல்கி’ சிறுகதைப் போட்டியில் 2வது பரிசு கிடைத்தது. பரிசு கிடைத்த உற்சாகத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். முதல் கதையைப் படித்த அவரது மாமனார்தான், ‘அநுத்தமா’ என்ற புனைப் பெயரைச் சூட்டினார்.
அநுத்தமா 22 நாவல்கள்,அநுத்தமா 16.4.1922 -ல் ஆந்திராவிலுள்ள நெல்லூரில் பிறந்தார் என்றாலும், பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம்தான். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மனாபன். படிப்பில் மிக ஆர்வமாக இருந்த ராஜேஸ்வரிக்கு எழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது 14 வயதிலேயே திடீரென்று திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதனால் படிப்பு தடைப்பட்டது. திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்து, சென்னையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி, மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தார். அந்தக் காலத்திலேயே கதை எழுதணும் என்றெல்லாம் இல்லாமல், திடீரென ‘அங்கயர் கண்ணி’ என்ற கதையை எழுதினார். அது ‘கல்கி’ சிறுகதைப் போட்டியில் 2வது பரிசு கிடைத்தது. பரிசு கிடைத்த உற்சாகத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். முதல் கதையைப் படித்த அவரது மாமனார்தான், ‘அநுத்தமா’ என்ற புனைப் பெயரைச் சூட்டினார்.
அநுத்தமா 22 நாவல்கள், சுமார் 300 சிறுகதைகள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், மற்றும் சிறுவர் நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் ‘ஒரே ஒரு வார்த்தை’ - மனோதத்துவ ரீதியில் தமிழில் வெளிவந்த முதல் நாவல். 1949-ல் இவர் எழுதிய ‘மணல் வீடு’ நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது கிடைத்தது.
இவரது ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளார்கள் சங்க விருது எனப் பல விருதுகள் கிடைத்தன. இவரது ‘கேட்ட வரம்’ நாவலை ஸ்ரீ காஞ்சி பெரியவர் புகழ்ந்து ஆசிர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாற்றாந்தாய்’ சிறுகதைக்கு ‘ஜகன் மோகினி’ இதழில் சிறுகதை போட்டிக்கான தங்கப் பரிசு கிடைத்தது. இவர் பறவையினங்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து, சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இவர் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கூட. பிரெஞ்ச், ருஷ்யன், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சம்ஸ்க்ருதம் என பல மொழிகள் தெரியும் என்றாலும், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் உண்டு. பலரின் வாழ்க்கையில் இவரது நாவல்கள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. தனது துணிச்சலான எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு மௌனமாகவே இரு பெரிய நன்மையை செய்திருக்கும் இவர் எழுத்துலகப் ‘பிரம்மா’ ...more