Robert Caldwell
Born
in Clady, Ireland
May 07, 1814
Died
August 28, 1891
More books by Robert Caldwell…
“இறந்தவர்களை எரிக்கும் பழக்கமுடைய இந்தியாவில் , இந்த புதைக்கும் பழக்கம் உடைய மக்கள் எப்படி தோன்றி , எந்தச் சுவடும் இல்லாமல் மறைந்து போனார்கள் என்ற கேள்வி வருகிறது. இது சில நூறு வருடங்கள் மட்டுமே வயதுள்ள இடங்கள் எனில் , இந்தப் பழக்கத்தின் எச்சம் இன்னமும் இருந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாமல் போனதன் காரணம் என்னவாக இருக்கும் ? இது மட்டுமே இந்த இடங்கள் வரலாற்றுக்கு முந்தையவை என்பதை குறிக்கின்றன.”
― கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.)
― கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.)
“அதாவது, துருவாச முனிவரின் வளர்ப்பு மகனும், சந்திர மரபு சத்திரியர்களின் இளவரசனும் ஆகிய துஷ்யந்தன் அல்லது அக்ரிதா என்பவனுக்குப் பாண்டியன், கேரளன், கோளன், சோழன் என்ற நால்வர் ஆண் மக்களாய் இருந்தனர் (! - ந. ச.). இங்கே குறிப்பிடப்பட்ட கோளன் யார் என்பது தெளிவாய் இல்லை. அவன் மத்திய இந்தியாவிலுள்ள கோளர்களுக்கு அல்லது கோளனுக்கு மூதாதையாயிருப்பானோ! இது மிகவும் பொருத்தமற்றது. கோளன் என்பது கோளம் அல்லது கொளத்து. நாடு - வடமலபார் என்பதுடன் பொருந்தி இருக்கிறது என விளக்கம் தரப்படுகிறது.”
― திருநெல்வேலி சரித்திரம் [Tirunelveli Sarithiram]
― திருநெல்வேலி சரித்திரம் [Tirunelveli Sarithiram]
“இன்றைய மன்னார் வளைகுடாவை , கிரேக்கர்கள் ' கொல்கி வளைகுடா ' என்று குறிப்பதில் இருந்து இது ஒரு பெரிய நகரமாக இருந்திருக்க வேண்டும் என்று தெரிந்துக் கொள்ளலாம். பண்டைய மரபுகள் குறிக்கும் , தென்னிந்திய நாகரீகத்தின் தொட்டிலான கொற்கை இதுவே என்று முடிவு செய்யலாம். இங்கிருந்துதான் , மூன்று சேரன் , சோழன் மற்றும் பாண்டியர்கள் பிறந்து , வளர்ந்து , பின் தங்கள் பேரரசுகளையும் , வம்சங்களையும் உண்டாக்கினார்கள் எனலாம். இங்குதான் பாண்டியர்களின் ஆட்சி தொடங்கி , பின் மதுரைக்கு போனது என்றும் தெரிந்துக் கொள்ளலாம். கொற்கை என்பதன் அர்த்தம் ' ஒரு படை முகாம் ' என்பதாகும். இதே நேரத்தில் , இன்றைய கொற்கைக்கும் , கடலுக்கும் இடையே இருக்கும் பழைய காயல் என்ற இடமே , மார்கோ போலோ அவரது நூலில் கிழக்கிந்திய கடற்கரையின் முக்கிய துறைமுகமாக குறிக்கும் ' காயில் ' என்ற இடம் என்று நான் முடிவுக்கு வந்திருந்தேன்.”
― கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.)
― கொற்கை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொல்லியல் ஆய்வுகள் (நகரங்கள்.)






