(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Selventhiran

“இன்று ஓரொரு நாளும் தன்னை மேம்படுத்திக்கொள்ளாத ஒரு மனிதன் எந்த அமைப்பிலும் நீடிக்க முடியாது. அன்றாடம் கல்விக்கூடங்களுக்குச் செல்வது சாத்தியமல்ல. தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள மனிதனுக்கு இன்றிருக்கும் ஒரே சாதனம் வாசிப்புதான். அன்றாடம் தொடர்ச்சியாக வாசிப்பதொன்றே வழி. மாவீரன் நெப்போலியனின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லும் ஒரு கர்ண பரம்பரை கதை உண்டு. நெப்போலியன் சிறுவனாக இருந்தபோது கட்டாய ராணுவப் பயிற்சிப் பள்ளியில் இருந்தார். பயிற்சி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் அவரது நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து நகர்வலம் சென்றுவிடுவார்கள் அல்லது மைதானத்தில் திரண்டு அரட்டை அடிப்பார்கள். நெப்போலியனோ தனது அறையில் இருந்து வாசித்துக்கொண்டே இருப்பார். அந்த முகாமிற்கு தயிர் ஊற்ற வரும் கிழவி ஒருத்தி, “எப்போதும் அறைக்குள் அமர்ந்து படித்துக்கொண்டே இருக்கிறாயே, நீ என்ன கோச்சா பெண்ணா?” என்று கேலி செய்வாளாம். அன்று பிரான்ஸில் பெண்கள் முக்காடிட்ட வீட்டுக்குள் இருப்பார்கள். வெளியாட்களுக்கு முகம் காட்டும் வழக்கம் இல்லை. நெடுநாட்கள் ஓடின. நெப்போலியன் ராணுவத் தளபதியாக உயர்ந்து பல நாடுகளைக் கைப்பற்றி மாபெரும் பேரரசனாக ஆனார். ஒருநாள் தன் ராணுவப்பயிற்சி பள்ளி இருந்த நகரத்திற்கு படைகளுடன் வந்தார். தயிர்க்கார கிழவியை அழைத்துவரச் சொன்னார். மன்னன் எதற்காகத் தன்னை அழைக்கிறார் என பதைபதைத்தபடி வந்தாள் கிழவி. குதிரையிலிருந்த நெப்போலியன் சொன்னார், “நீ என்ன கோச்சா பெண்ணா எனக் கேலி செய்தாயே… என் நண்பர்கள் கேளிக்கையில் ஆழ்ந்திருந்தபோது நான் நாடுகளின் வரலாற்றை, யுத்த தந்திரங்களை, மகத்தான வெற்றியாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை வாசித்தேன். அன்று விளையாடிய என் நண்பர்கள் படைவீரர்களாக, அதிகபட்சம் சிறிய படையணியின் தலைவர்களாக உள்ளனர். நான் இன்று சக்கரவர்த்தியாக உலகை ஆள்கிறேன்” என்றாராம்.”

செல்வேந்திரன் Selventhiran, வாசிப்பது எப்படி?: vasippathu eppadi?
Read more quotes from Selventhiran


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From


Browse By Tag