Ganesh > Ganesh's Quotes

Showing 1-3 of 3
sort by

  • #1
    Na. Muthukumar
    “பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #2
    Na. Muthukumar
    “தாத்தா நெறைய கடன் வாங்குனார்டா. அதெல்லாம் அப்பாதான் அடைச்சேன்.” மகன் கேட்டான். “தாத்தா எதுக்குப்பா கடன் வாங்குனாரு?” “தாத்தா நெறைய புக்ஸ் படிப்பார்டா. அத வாங்கத்தான் கடன் வாங்குனாரு...” “நல்ல விஷயம்தானப்பா... நீங்களும் நெறைய புக்ஸ் படிங்க. உங்க கடனை எல்லாம் நான் அடைக்கிறேன்!”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #3
    Na. Muthukumar
    “கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கட்டுகள்தானே கனவுகள்.”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]



Rss