MJV > MJV's Quotes

Showing 1-13 of 13
sort by

  • #1
    S. Ramakrishnan
    “வெற்றி பெற்றவனை விட தோற்றவனிடம் தான் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் போல் இருக்கிறது .. காரணம் - வெற்றி விளையாட்டை பெருமை கொள்ள செய்கிறது, தோல்வி விளையாட்டை புரிந்துகொள்ள செய்கிறது.. எல்லா விளையாட்டு வீரர்களும் ஒரு முறையாவது தோற்றவர்கள்தானே ..”
    S.Ramakrishnan

  • #2
    S. Ramakrishnan
    “ உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள் ” - (ஜன்னல் வழியான உலகு)”
    S.Ramakrishnan

  • #3
    S. Ramakrishnan
    “இது நாள் வரை நகரையும் பாண்டவர்களையும் பற்றிப் பீடித்திருந்த ஆசைதான் நாய் உருவம் கொண்டு அவர்கள் மின் வந்திருக்கிறது என்பதைக் கண்டான். சதா விழிப்புற்றபடி அலைந்து கொண்டிருக்கும் வேட்கையென்னும் அந்த நாய் உருவினைக் கண்டபடியிருந்த அவனும் பிறகு தன் கண்களை மூடிக் கொண்டு விட்டான்.”
    S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]

  • #4
    S. Ramakrishnan
    “உலகம் எண்ணிக்கையற்ற கதவுகள் கொண்டது.”
    S. Ramakrishnan, ஆதலினால் [Aadhalinaal]

  • #5
    S. Ramakrishnan
    “நான் திகைப்புற்று கண் திறந்தபோது படகு நதியில் போய்க் கொண்டிருந்தது. அஸ்தினாபுரத்திற்கு என்னை கூட்டிச்செல்ல ஏற்றி கொண்ட மனிதன் துடுப்பிட்டவாறே இருந்தான். அவன் இப்பொழுது வாலிபனை போல தோற்றம் கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது.

    "நீ கிருஷ்ண துவைபான வியாஸனா?"

    ஆம் என்று தலையசைத்தான். அப்பொழுது தான் கவனித்தேன். படகை நதி கரைக்கு செலுத்தாமல் நதியின் திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள் நதிவழியில் வெகு தூரம் வந்துவிட்டோம். எதுவும் திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்லை. அவனிடம் நான் கேட்டேன்,

    "நாம் எங்கே செல்கிறோம்?"

    "துவக்கத்திற்கு".

    இதன் துவக்கத்திற்கு என்றோ, அது எங்கிருக்கிறது என்றோ, அவன் சொல்லவோ நான் கேட்கவோ இல்லை. நதி செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தது.”
    S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]

  • #6
    S. Ramakrishnan
    “கிருஷ்ணை யாருமற்ற தன் அறையில் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு தன் புத்திரர்களை விடவும், கணவர்களை விடவும், பிரியத்திற்கு உரியவனாக கிருஷ்ணன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. திரௌபதி உறவின் வரம்புகளுக்குள் கிருஷ்ணனை வைத்துக்கொள்ளவில்லை. அவன் கிருஷ்ணன். அதுவே போதுமானதாய் இருந்தது.”
    S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]

  • #7
    S. Ramakrishnan
    “பழந்தமிழ் ஆய்வாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, ‘‘இன்றைய ஜெராக்ஸ் எனும் நகலெடுப்பு போல, இருநூறு வருடங்களுக்கு முன்பாக, ஒரு ஏட்டிலிருந்து நகல் எடுத்து இன்னொரு ஏட்டில் எழுதித் தருவதற்கென்று ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் வசித்த தெருவுக்கு எழுத்துக்காரத் தெரு என்று பெயர். அப்படி நகல் எடுத்து எழுதுபவர், தான் பிரதி எடுத்த ஏட்டின் கடைசிப் பாடலுக்குக் கீழே தனது முத்திரையாக, தனது பணியானது தமிழுக்குத் தொண்டு செய்யும் அடியார்க்கு செய்யும் சிறு ஊழியம் என்று ஒப்பமிட்டு, அதன் கீழே தனது பெயரையும், ஊரையும் தெரிவிக்கும் முறை இருந்தது’’ என்றார்.”
    s.ramakrishnan, தேசாந்திரி [Desandri]

  • #8
    S. Ramakrishnan
    “யானையைப் பார்த்து வியப்படைவர்களில் ஒருவர் கூட எறும்பைப் பார்த்து வியப்படைவது கிடையாது. ஆனால் யானை எந்த அளவு வியப்பானதோ அதே அளவு எறும்பும் வியப்பானதே!”
    S. Ramakrishnan, ஆதலினால் [Aadhalinaal]

  • #9
    S. Ramakrishnan
    “காட்டு நெருப்பைப் போலிருந்தாள் மாதிரி. அவள் மத்ர நாட்டுப் பெண்களைப் போலவே தன் பூப்பின் காலத்தில் அடி எடுத்து வைத்தே இச்சைகளின் அரும்புகள் உடலில் மொக்கு விடுவதை அறிந்திருந்தாள்.”
    S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]

  • #10
    S. Ramakrishnan
    “ஆகஸ்ட் 15-ம் தேதி அஷ்டமி என்பதால் அன்று சுதந்திரம் பெறக்கூடாது. ஆகஸ்ட் 17-ம் தேதி சுதந்திரம் பெற வேண்டும் என்று ஜோதிடர்கள், நேருவைச் சந்தித்து வலியுறுத்தினர். தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று நேரு மறுத்துவிட்டார். ஆனாலும், கடைசி வரை அஷ்டமி அன்று சுதந்திரம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து இருக்கின்றன.”
    s.ramakrishnan, Maraikkappatta India

  • #11
    S. Ramakrishnan
    “பங்காளதேஷ் உருவாவதற்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் விஷயத்தில் மட்டும் கைகட்டி மௌனம் சாதிப்பதுதான் கவலைக்குரியது.”
    s.ramakrishnan, Maraikkappatta India

  • #12
    S. Ramakrishnan
    “உலகில் மாறாத இயக்கங்களில் ஒன்று எறும்பின் அலைச்சல்.”
    S. Ramakrishnan, ஆதலினால் [Aadhalinaal]

  • #13
    Carlo Levi
    “The future has an ancient heart.”
    Carlo Levi



Rss
All Quotes



Tags From MJV’s Quotes