Gopi Krish > Gopi's Quotes

Showing 1-8 of 8
sort by

  • #1
    Sujatha
    “வலிக்க வலிக்க உண்மை பேசுகிறாள்!”
    சுஜாதா, பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhipom]
    tags: women

  • #2
    Sujatha
    “புக் ஷாப்புக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினாள். அழகேசனுடன் சேர்ந்ததில் வந்த பழக்கம் அது... ' முதலில் சின்னப் புத்தகமாக ஏதாவது வாங்கிப் படி.. லேசான கதைகள், கட்டுரைகள். உனக்கு நாட்டமிருந்தால் கவிதைகள்... ஏதாவது புத்தகம் வாங்குவதற்கு முதலில் பழகவேண்டும். அப்புறம் அதில் தவறாமல் கையெழுத்து போடு. வாங்கின தேதி, இடம். நிச்சயம் மறுபடி அதைப் புரட்டும்போது, அடடா வாங்கி ஒரு மாசமாகி விட்டதே என்று படிக்கக் ஆரம்பிப்பாய். அப்புறம் படித்த பக்கம்வரை ஒரு அடையாளம் வை. காதை மடக்காதே. புத்தகத்துக்கு வலிக்கும்' என்பான்.”
    சுஜாதா [Sujatha]

  • #3
    Jeyamohan
    “அஞ்சவேண்டும். அவ்வச்சம் முற்றிலும் இல்லை என்பதே கர்ணனின் வீழ்ச்சி” என்றான் கிருஷ்ணன். “போர்க்களத்தின் முன் நிற்கையில் ஊழின் பெருந்தோற்றம் கண்டு கைதளர்ந்து வில்நழுவும் வீரனே மெய்மையை அறியக்கூடியவன்.”
    Jeyamohan, வெண்முரசு – 06 – நூல் ஆறு – வெண்முகில் நகரம்

  • #4
    Vairamuthu
    “உலகம் முழுக்க ஒரே கலாச்சாரம் இல்லை. அப்படி இருந்திருந்தால் அதுபோல் ஒரு கொடுமை இல்லை. வித்தியாசங்களே அடையாளங்கள்; ஓரே நிறத்தில் இருந்தால் வானவில்லுக்கு ஏது வசீகரம்? வேற்றுமை என்பது உலகியல்; அதில் ஒற்றுமை காண்பது வாழ்வியல்.”
    Vairamuthu, Moondram Ulaga Por

  • #5
    Vairamuthu
    “இந்தியாவில் பிடித்தது?"

    "உழைப்பு."

    "பிடிக்காதது?"

    "ஊழல்."

    "ஆனாலும் இந்தியா முன்னேறியிருக்கிறதே..!"

    "உண்மை. சேவல் உறங்கும்போது குஞ்சு பொரித்துவிடும் கோழியைப்போல சில அரசியல்வாதிகள் உறங்கும் போது இந்தியா முன்னேறிவிடுகிறது.”
    Vairamuthu, Moondram Ulaga Por

  • #6
    Jeyamohan
    “உடலசைவு காலத்தை அலகுகளாகப் பிரித்து அளவிடுவது. அளவிடப்படும் காலம் மீது ஏறி நெடுந்தூரம் செல்லமுடியாது. செய் செய் என்று அது ஆணையிடும். ஏதும் செய்யாதபோது எடைகொண்டு ஒவ்வொரு உடல்கணுமேலும் ஏறி அமரும். ஒவ்வொரு எண்ணத்துடனும் பின்னி முயங்கி இறுக்கி நெரிக்கும். 'உடலசைவுகளால் மானுடன் காலத்தை சமைத்துக் கொண்டிருக்கிறான்’ என்று துரோணர் சொல்வதுண்டு. ‘அசைவற்ற உடல் காலத்தை அசைவற்றதாக்குகிறது. அசைவற்ற உடலை அசைக்க உள்ளம் கொள்ளும் முயற்சியை வென்றால் அதுவும் அசைவிழந்து உடல்மேல் படிவதைக் காணலாம். கற்சிலைமேல் படியும் ஆடை போல. பின்னர் வெறும் வண்ணப்பூச்சாக ஆகிவிடுகிறது. உள்ளத்தை வெல்ல உள்ளத்தால் முயல்பவன் யோகி. அவர்களின் வழிகள் பல.”
    Jeyamohan, வெண்முரசு – 07 – நூல் ஏழு – இந்திரநீலம்

  • #7
    Leo Tolstoy
    “Respect was invented to cover the empty place where love should be.”
    Leo Tolstoy, Anna Karenina

  • #8
    Indra Soundar Rajan
    “இந்த உலகத்துல தப்பு செய்யாம கடவுளாலகூட இருக்க முடியாது.”
    Indra Soundar Rajan, தங்கக் காடு [Thanga Kaadu]



Rss