தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

216 views
மற்றவை > உங்களுக்கு பிடித்த தமிழ் எழுத்தாளர் ?.. காரணம் ?...

Comments Showing 1-22 of 22 (22 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Karthick (new)

Karthick Subramanian | 5 comments ரொம்ப நாளா ஒரு விவாதமுமே இல்லாம கிடக்கு , இதிலிருந்து ஆரம்பிப்போம் .. பகிருங்கள் நண்பர்களே


message 2: by Sudharshan (new)

Sudharshan | 2 comments தேடலில் ஒரு 'Serendipity' இருக்கும் . அது எப்போதும் தனக்குப் பிடிக்கும் என, நம்மையும் அதை நோக்கி அழைத்துச்சென்ற எழுத்தாளர் சுஜாதாவை மிகவும் பிடிக்கும்.


message 3: by Karthick (new)

Karthick Subramanian | 5 comments எனக்கு "ஜெயமோகன்" மிகப்பிடித்தவர் மற்றவரிலிருந்து முற்றிலும் தனித்த , ஒரு அனுபவம் சார்ந்த வாசிப்பனுபவம் தரவல்ல தேர்ந்த கதை சொல்லி.ஒரு விஷயத்தை அப்படியே பட்டவர்த்தமாக சொல்லிவிடாமல் வாசகனையும் களப்பணி செய்ய வைப்பதில் வல்லவர். இவரது "காடு" அளவுக்கு நான் எந்த நாவலையும் அத்தனை ஆர்வத்துடன் படித்ததில்லை.இவரே "தி.ஜா" , "ல.சா.ரா., போன்றவர்களை தேடி படிக்க ஒருஆரம்ப புள்ளியாய் இருந்தவர்.


message 4: by Karthick (new)

Karthick Subramanian | 5 comments Sudharshan wrote: "தேடலில் ஒரு 'Serendipity' இருக்கும் . அது எப்போதும் தனக்குப் பிடிக்கும் என, நம்மையும் அதை நோக்கி அழைத்துச்சென்ற எழுத்தாளர் சுஜாதாவை மிகவும் பிடிக்கும்."

கண்டிப்பாக வாத்தியார் ரொம்ப கெத்து தான் . நாம் எத்தனை கஷ்ட்டப்பட்டாலும் புரிந்து கொள்ள முடியாத நிறைய நிறைய தகவல்களை அத்தனை எளிதாகதருவார் .


message 5: by Jaya Kumar (new)

Jaya Kumar K (jaikris75) | 2 comments தற்போதைய எழுத்தாளர்கள் குறித்து அதிகம் தெரியாது.

அனைத்து மொழிகளிலும் படித்ததில் எனக்கு 'கல்கி' மிகவும் பிடிக்கும். மின்சாரத்தை போல. தொட்டால் முடியும் வரை விடாது.


கிராமத்தான் சரவணன் (graamaththaan) | 5 comments Jaya Kumar wrote: "தற்போதைய எழுத்தாளர்கள் குறித்து அதிகம் தெரியாது.

அனைத்து மொழிகளிலும் படித்ததில் எனக்கு 'கல்கி' மிகவும் பிடிக்கும். மின்சாரத்தை போல. தொட்டால் முடியும் வரை விடாது."


நிச்சயமாக !!! ஆங்கில நாவல்கள் படித்துக்கொண்டிருந்த என்னை தமிழ் புதினங்களுக்கு இர்ழுத்தவர் இவரே! #கல்கி


message 7: by Dinesh Kumar (new)

Dinesh Kumar | 2 comments எஸ். ராமாகிருஷ்ணன் அவர்களின் எழுத்து புதுமையானது. ஒரு புதிய கோணத்தை அவர் எழுத்தில் காணமுடியும். உபபாண்டவம் படித்த போதுதான், மகாபாரத்தை விதவிதமான கோணத்தில் பார்க்க முடிந்தது.


message 8: by Dinesh Kumar (new)

Dinesh Kumar | 2 comments என்னை ஆச்சர்யமூட்டிய எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள். 'அக்னி பிரவேசம்' & 'சில நேரங்களில் சில மனிதர்கள்' கதைகள் - சமுகத்திற்கு விடப்பட்ட சவால்.

அதே சமயம் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' - ஆச்சர்யமூட்டும் அன்பு மனிதர்களின் கதை!


கடுவன் | 7 comments நான் இதுவரை படித்ததில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர் ஐயா பாலகுமாரன் தான். கண்ணெதிரே காட்சிகளை நிறுத்துவதிலும் சரி, கதாபாத்திரங்களின் உணர்வுகளை நம்முள்ளே செலுத்துவதிலும் சரி, அவர் எழுத்துக்களின் வலிமை நம்மை நிச்சயம் தாக்கும்.


message 10: by Saravanan (new)

Saravanan Kumarasamy (saravanankumarasamy) | 1 comments கல்கி , சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், எல்லோருமே என்னை அவர்கள் எழுத்துக்களால் மூச்சு திணற வைத்தவர்கள்..
கி ராஜநாராயணன் என்னை மூச்சு விடவே மறக்கும் படி செய்தவர்


message 11: by Sathyan (new)

Sathyan Velumani | 1 comments கல்கி


message 12: by Sudharshan (new)

Sudharshan | 2 comments புதுமைப்பித்தன் ,லா.சா.ரா, சுஜாதா எழுத்துகளில் ஒரு வேகம் கலந்த சுவாரசியம் இருக்கும்.முக்கியமாக வண்ணதாசன் அவர்களின் எழுத்திலேயே ஒருவித இரசனை இருக்கும்.அவர் மொழியூடாகப் பார்க்கும்போது உலகின் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அழகாய்த்தெரியும்.


message 13: by Gowtham (new)

Gowtham Sidharth (gowthamsidharth) | 1 comments சுஜாதா சுஜாதா சுஜாதா , காரணம் தேவையோ..........


message 14: by Samura (new)

Samura சமுர (samura_original) | 4 comments என்னை மிகவும் கவர்ந்தவர்கள் கல்கியும், அகிலனும் தான். இருவரின் எளிமையான உரைநடை என்னை மிகவும் கவர்ந்தது.


message 15: by Nandakumar (last edited Oct 07, 2017 01:00AM) (new)

Nandakumar Gopalan | 1 comments தமிழைத் தவழ வைத்து தமிழனைத் தலைநிமிர்த்தியவர் தமிழ்ப்பாவேந்தர் பாரதிதாசன். தமிழ் நடைபயில தமிழினமதனைத் தலை நிமிர்த்தியவர் அவராசான் பாரதி. தமிழை ஓடவைத்து தமிழனைத் தட்டிவிட்டு பட்டிதொட்டியெல்லாம் ஓங்காரமிட்டவர் அண்ணா. ஆனால்... தமிழால் தாலாட்டி சீராட்டி, தமிழனைத் தலைவணங்கச் செய்தவர் கவிஞர் கண்ணதாசன் மட்டுமே !


message 16: by Tamil Isai (last edited Apr 09, 2018 09:49PM) (new)

Tamil Isai (தமிழிசை) (tamil_isai) | 2 comments என்னை கவர்ந்த எழுத்தாளர்கள் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாண்டில்யன்..

புத்தகங்களை படிக்கும் போது விவரிக்க இயலாத அனுபவங்கள் மற்றும் புத்தகங்களின் உள்ளே
அனைத்து கதாபாத்திரங்களுடன் வாழும் அனுபவம்


message 17: by Prabhu (new)

Prabhu R. (prabhurengaswamy) | 12 comments கண்ணதாசன், சுஜாதா - all time favourite. சில நேரங்களில் அவர்களின் எழுத்து ஒளிவு மறைவு இல்லாமல் முகத்தில் அறைந்தாற்போல் இருக்கும் மேலும் அது கொச்சையாக இல்லாமல் நுணுக்கமாகவும், நாசுகாகவும் இருக்கும்...

இது போக கல்கி, மயிலை சீனி வெங்கிடசாமி, பாஸ்கர தொண்டைமான், சதாசிவ பண்டாரத்தார் போன்றோர் அவர்களுக்கே உரித்தான தனி அடையாளத்தை உருவாக்கியவர்கள்...

சமிபத்திய எழுத்தாளர்களில் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், மருத்துவர் கு. சிவராமன்....


message 18: by Lekshmana (new)

Lekshmana Perumal | 5 comments தற்போது நான் கல்கி புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும், அவருடைய கற்பனைகள், கதாபாததிரங்கள் மனதில் தனி இடம் உண்டு, இரவினை வர்ணிப்பதில் கல்கி தனி இடம்.. மற்றும்

அப்துல் கலாம் புத்தகங்கள் இளைய தலைமுறை, இந்தியா,கல்வி, விஞ்ஞானம் பற்றி அறியலாம்.

இன்னும் நிறைய புத்தகங்கள் படித்து மற்ற எழுத்தாளர் பற்றி பதிவு செய்கிறேன்.


message 19: by Lekshmana (new)

Lekshmana Perumal | 5 comments பாரதியார் கவிதைகள், திருக்குறள் கூறும் நன்னெறி


message 20: by Lekshmana (new)

Lekshmana Perumal | 5 comments சுஜாதா வின் எளிய நடையின் எழுத்து முறை, பல தகவல்களை கொடுக்கிறது மற்றும் ராஜேஷ் குமாரின் கிரைம் நாவல்..


message 21: by Praveen (பிரவீண்) (last edited Apr 17, 2019 08:44PM) (new)

Praveen (பிரவீண்) KR (pkrvisakh) | 3 comments எனக்கு சரியாக ஒருத்தரை மட்டும் சுட்டி காட்ட தெரியவில்லை...

என்னை ஒரு சீரியஸ் புத்தக பிரியன் ஆக்கிய நூல் வைரமுத்து எழுதிய 'தண்ணீர் தேசம்'. ஒரு கவிதை கதையாக சொல்ல பட்ட விதம்

சிறு வயதில் ராஜா கதைகள் படிக்க விரும்பிய எனக்கு கல்கி அந்த மாய உலகத்தில் கொண்டு சென்றார். என்றும் மர்மம் மற்றும் கிரிம் கதைகளை விரும்பி படித்த எனக்கு தமிழில் சுஜாதா அதை அறிமுகப்படுத்தினார். எளிய நடையில் பெரிய விஷயங்களை சொன்னவர்.விஞ்ஞானத்தை எளிதாய் சொன்னவர்.

எனது சொந்த ஊர் குமரி மாவட்டம். அப்பா வேலை விஷயமாக பக்கத்தில் உள்ள கேரளாவை சேர்ந்த திருவனந்தபுரத்திற்கு குடியேறினோம். நாளடைவில் வேலையின் பால் வேறு ஊர்களுக்கு சென்றபோதும் எனது குமரி மண்ணை மிகவும் நேசிக்கிற நான் இவர்களின் எழுத்துக்களில் தான் தினமும் ஊர் சென்று வந்தேன் - நாஞ்சில் நாடன், ஜெயமோகன், நீல பத்மநாபன், ரா. மாதவன், சுந்தர ராமசாமி . வட்டார சொற்களும் அந்த ஊர் வாழ்க்கை முறைகளும் மனிதர்களையும் பற்றி இவர்கள் எழுதியது அந்த ஊர் மனிதனான எனக்கு நன்கு உணர முடிந்தது. எதோ நினைவலைகளில் எனது பக்கத்துக்கு தெருவிலோ, பக்கத்துக்கு வீட்டிலோ, ஏன் எனது வீட்டில் கூட நடக்கின்ற ஒரு பிரமை.

பூமணி, ஜெயகாந்தன் மற்றும் பெருமாள் முருகன் கதைகளில் இருக்கின்ற உயிரோட்டம், யதார்த்தம் இதுவும் எனக்கு மிகவும் புடிக்கும்.

கவிதை வகையில் என்றும் நான் என்றும் ஒரு நா.முத்துக்குமார் விசிறி.

Note: கண்ணதாசன், பாரதியார் இவர்களை எல்லாம் இப்படி ஒரு வட்டத்தில் போட்டு வைக்க விரும்பவில்லை. அவர்கள் என்றும் மனதில் நிற்கின்றவர்கள்.

வாழ்க தமிழ்!!


Praveen (பிரவீண்) KR (pkrvisakh) | 3 comments Lekshmana wrote: "தற்போது நான் கல்கி புத்தகங்கள் ரொம்ப பிடிக்கும், அவருடைய கற்பனைகள், கதாபாததிரங்கள் மனதில் தனி இடம் உண்டு, இரவினை வர்ணிப்பதில் கல்கி தனி இடம்.. மற்றும்

அப்துல் கலாம் புத்தகங்கள் இளைய தலைமுறை, இந்த..."


உண்மை. கல்கியின் கற்பனை வளம் மிக சிறப்பானது. பொன்னியின் செல்வன் ஆரம்பத்தில் வந்தியத்தேவன் வருகையில் காண்கின்ற சோழ தேசத்தின் சித்திரமே இதற்க்கு நல்ல உதாரணம்.


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread