தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

188 views
புதினம்/நாவல் > அவ்வளவாக வெளியே தெரியாத நல்ல புத்தகங்கள்

Comments Showing 1-14 of 14 (14 new)    post a comment »
dateUp arrow    newest »

கிராமத்தான் சரவணன் (graamaththaan) | 5 comments நண்பர்களே, உங்களுக்கு தெரிந்த ஆனால் வெளியில் அவ்வளவாகத் தெரியாத நல்ல புத்தகங்களை இங்கு பரிந்துரைக்கவும்.

நீங்கள் படித்த புத்தகம் பற்றி சுவாரசியமான விமர்சனங்களையும் பகிர்வதன் மூலம் பிறரையும் படிக்கத் தூண்டலாமே...


message 2: by Rajasekar (new)

Rajasekar Pandurangan (kalkidhasan) | 8 comments ராகுல்ஜியின், வால்காவில் இருந்து கங்கை வரை....

http://www.goodreads.com/book/show/17...


கிராமத்தான் சரவணன் (graamaththaan) | 5 comments இதேபோல "வால்காவில் இருந்து வடுகப்பட்டி வரை"ன்னு ஒரு வைரமுத்து புத்தகமும் இருக்கு.


message 4: by Rajasekar (last edited Aug 21, 2013 01:34AM) (new)

Rajasekar Pandurangan (kalkidhasan) | 8 comments எட்கர் ததர்ஸ்டன் எழுதிய "தெனிந்திய குலங்களும் குடிகளும்...." Castes and Tribes of Southern India by Edgar Thurston

http://www.goodreads.com/book/show/13...


பிரிட்டிஷ் காலத்தில் தமிழகம், அதன் பல்வேறு கலாச்சாரம் பற்றி அறிய 7 பாகங்கள் கொண்ட ஒரு சிறந்த ஆராய்ச்சி புத்தகம், இல்லை கலைஞ்சியம்... படிக்கவும் சுவாரசியமாக பல தகல்வல்கள் கொண்டது... வரலாற்று பிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தகுந்த புத்தகம்....

http://en.wikipedia.org/wiki/Castes_a...


கிராமத்தான் சரவணன் (graamaththaan) | 5 comments Rajasekar wrote: "எட்கர் ததர்ஸ்டன் எழுதிய "தெனிந்திய குலங்களும் குடிகளும்...." Castes and Tribes of Southern India by Edgar Thurston

http://www.goodreads.com/book/show/13...
..."


இந்த புத்தகம்... எப்படி...? வரலாற்று மேற்கோள் காட்டப்பயனபடும் ஆராய்ச்சி புத்தகம் போலவா?... இல்ல சுவாரசியமா கதை சொல்ற புத்தகமாங்க?...

தமிழகத்தின் குலங்கள் மற்றும் வழக்கங்கள் பற்றி தொ.பரமசிவன் எழுதிய "அறியப்படாத தமிழகம்"-மும் சொல்வதாய் கேள்விப்பட்டேன்...
http://www.goodreads.com/book/show/17...


message 6: by Rajasekar (new)

Rajasekar Pandurangan (kalkidhasan) | 8 comments கதை அம்சத்துடன் இவை உருவாக்கபடவில்லை... Ethnography எனப்படும் மக்கள் இனங்கள் பற்றிய பிரிட்டிஷ் அரசால் தென்னிதியாவில் நடத்தப்பட்ட ஆய்வு...

தொ. பரமசிவன் இதன் தழுவலாக கூட அவர் புத்தகத்தை எழுதியிருக்கலாம்,,,, என்னுடைய தந்தை ஒரு கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளர், reference காக அவர் இந்த நூலை உபயோகித்து கொள்வர்....

ஆய்வறிக்கை போல் இல்லாமல், சற்று கட்டுரை உரை நடையுடன் இருக்கும்,,,


கடுவன் | 7 comments பரிந்துறைக்கு நன்றி Rajasekar. நான் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன்... அருமையான தகவல் தொகுப்பு. சாதிகள் உருவானதன் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள விரும்புபோர்க்கு இந்நூல் ஒரு களஞ்சியம்.


கடுவன் | 7 comments இந்நூலை இணையம் வழியே படிக்க.. இங்கே சொடுக்கவும்.
http://openlibrary.org/books/OL702456...


message 9: by Rajasekar (new)

Rajasekar Pandurangan (kalkidhasan) | 8 comments லிங்கிற்கு நன்றி,,, அறியபடாத தமிழகம், நான் தேடிக்கொண்டிருந்த புத்தக வகைகளில் ஒன்று,,, பரிந்துரைக்கு நன்றி கிராமத்தான். காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள், அறியபடாத தமிழகம் இதை போன்று பண்டைய தமிழ் மக்கள் சமூக நடைமுறைகள் பற்றி வேறு ஏதேனும் புத்தகங்கள் உள்ளதா?


message 10: by Rajasekar (last edited Aug 24, 2013 09:33AM) (new)

Rajasekar Pandurangan (kalkidhasan) | 8 comments 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், வி. கனகசபை



1895 ஆம் ஆண்டில் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் என்னும் தலைப்பிலான தொடர் கட்டுரைகளில் முதலாவது கட்டுரை "மதராசு ரிவியூ"வில் வெளிவந்தது. முதற்கட்டுரையைப் பார்த்த சர். எஸ். சுப்பிரமணிய ஐயர், தமிழர் நாகரிகம் தொடர்பாக இலக்கியங்களில் உள்ள எல்லாத் தகவல்களையும் வெளிக்கொண்டு வரும்படி தன்னைக் கேட்டுக்கொண்டதாக கனகசபைப்பிள்ளை தனது முதல் பதிப்பின் முன்னுரையில் கூறியுள்ளார். இவ்வாறு ஆறு ஆண்டுகள் காலப்பகுதியில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடவேண்டும் என்று கனகசபைப்பிள்ளையின் நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். இதற்கு அமைய, கட்டுரைகளில் சில மாற்றங்களைச் செய்ததுடன் அவற்றைத் தொகுத்து வாசிப்பதற்கு இலகுவான முறையில் பிரிவுகளாகப் பிரித்து நூலாக்கினார். தலைப்பு குறிப்பிடுவதற்கு அமைய கிபி 50 ஆம் ஆண்டுக்கும் கிபி 150 ஆம் ஆண்டுக்கும் இடையில் அடங்காதவற்றை உள்ளடக்காமல் தவிர்த்ததாக நூலாசிரியர் கூறுகிறார்.இந்நூலை கா. அப்பாத்துரை தமிழில் மொழிபெயர்த்ததுடன், பொருள் விளக்கங்களையும், புதிய செய்திகளையும் அடிக்குறிப்புகளாகச் சேர்த்தும் உள்ளார்

http://www.nammabooks.com/Buy-History...


message 11: by Rajasekar (last edited Aug 23, 2013 02:32AM) (new)

Rajasekar Pandurangan (kalkidhasan) | 8 comments யுவான்சுவாங் இந்தியப் பயணம் 3 தொகுதிகள்...



புனிதப் பயணியருள் பௌத்த சமயத்தின்பால் தீராத பற்றுக்கொண்ட கன்ஃபூசியனிச சிந்தனை மரபு வழித்தோன்றலான யுவான்சுவாங்கின் இந்தியப் பயணம் பற்றிய குறிப்புகள் பேரார்வத்தைத் தூண்டக்கூடியவை. யுவான்சுவாங் சுமார் பதினாறு ஆண்டுகாலம் பயணம் செய்து தான் நேரில் கண்டவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் அக்கால சீனப்பேரரசர் தாங் வேண்டுகோளுக்கேற்ப சீனமொழியில் இயற்றிய பயண நூலினை தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். யுவான்சுவாங் பயணக் குறிப்புகளுக்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் ஆய்வுரைகள் இன்றியமையாதவை. இரண்டையும் உள்ளடக்கமாகப் பெற்ற நூல் தமிழிலும் வரவேண்டும் என்று எழுந்த பேரவாவின் துவக்கமாக ஆங்கில நூலின் ஒருபகுதி தமிழில் முதல் தொகுதியாக உங்கள் கைகளில்.

http://www.nammabooks.com/Buy-History...


message 12: by Rajasekar (last edited Aug 23, 2013 02:54AM) (new)

Rajasekar Pandurangan (kalkidhasan) | 8 comments மகாவம்ச



மகாவம்ச அறிதல் நல்லது. சிங்களருடைய அரசியல் மேலாதிக்க முனைப்புகளை அறிவதுடன், இலங்கையின் ஆதி வரலாற்றிலே தொல் திராவிடரும் தமிழரும் வாழ்ந்ததின் ஆதாரங்களையும் அறியலாம். தம்ழிழர்களுக்கு எதிரான இனவாதிகளாக மாற்றுவதற்கும் எவ்வாறு பயன் படுத்துகிறார்கள் என்பதையும் அறியலாம்.

http://discoverybookpalace.com/produc...


message 13: by Jaya Kumar (new)

Jaya Kumar K (jaikris75) | 2 comments Ayesha

'ஆயிஷா' - இரா. நடராஜன் அவர்கள் எழுதிய, 24 பக்கங்களே கொண்ட ஒரு மிகச்சிறிய புத்தகம்.

ஆயினும் இந்த குறுகிய நேரத்திற்குள் 'ஆயிஷா' என்ற அந்த சிறுமி நமக்குள் ஏற்படுத்தும் தாக்கம் மிக பெரிது. விஞ்ஞானியாக உருவாக வேண்டிய ஒரு பிஞ்சு ஆசிரியர்களின் உதாசீனத்துக்கும், அடிக்கும் பலியாவது மிகுந்த வேதனை.

ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.


message 14: by Balaraman (last edited Feb 27, 2021 10:17AM) (new)

Balaraman | 3 comments எதிர்கால நினைவுகள்

எதிர்கால நினைவுகள் by எறுழ்வலி பலராமன்

நானே நான் எழுதிய ஒரு நூலைப் பற்றி இங்கு கூறலாமா? :)

தமிழில் இதுவரை முயற்சி செய்யப்படாத ஒரு புதிய பாங்கில் எழுதப்பட்ட அறிவியல் புனைவு கதை. எதிர்பார்க்காத நிறைய திருப்பங்களோடு விறுவிறுவென்று செல்லும் கதை இது. நூலில் கதையை முடிக்கும் போதே இரண்டு வெவ்வேற கோணங்களில் முடியும். அதன் நீட்சியாக நான் என் பதிவில் எளிதியிருக்கும் காட்சியை படித்தால் இந்தக் கதையின் மூன்றாவது கோணத்தையும் அறியலாம்!


back to top