தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
காணொலிகள்: புத்தகங்கள், வாசிப்பு, எழுத்தாளர்கள்
date
newest »

message 1:
by
Prem
(new)
Oct 13, 2020 07:45PM

reply
|
flag
கானா பிரபா ஆஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்புத் துறையில் பணியாற்றுபவர். அவர் எழுத்தாளர் பா. ராகவன் (பாரா) நடத்திய சிறப்புச் சந்திப்பு இந்தக் காணொளியில்
வாசகசாலை அமைப்பு கடந்த 6 வருடங்களாக தமிழ் இலக்கிய வாசிப்பு, கலந்துரையாடல்களை சிறப்பாக செய்து வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு நகரங்கள், நூலகங்கள், மட்டும் அல்லாது இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், திரைக்களம் மற்றும் குழந்தைகள் இலக்கியம் வரை அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன. கலந்துரையாடல்கள் மட்டும் இல்லாது, புதிய படைப்பாளிகளை ஊகித்து அவர்களது படைப்புகளை அவர்களது தளத்திலும், பதிப்பகத்தின் மூலம் புத்தகங்களாவும் பதிப்பிக்கிறார்கள். வாசகசாலையின் முக்கிய பொறுப்பாளர்களின் நேர்காணல் காணொளி சமீபத்தில் வெளியாகியுள்ளது.
அவர்களது இணையதளம் - வாசகசாலை
சமூக வலைத்தளங்கள்:
Twitter
Facebook
YouTube
அவர்களது இணையதளம் - வாசகசாலை
சமூக வலைத்தளங்கள்:
YouTube

Ivar pala puthagangalai vasithu adhai elimayaga vimarsanam seithulla vidham enakku pidithathu.
https://www.youtube.com/channel/UCwtn...
நன்றி கிரிஷ்! "பேசும் புத்தகம்" வைசாலி வாரம் ஒரு புத்தகம் பற்றிய பார்வையை அவரது YouTube தளத்தில் பதிவு செய்து வருகிறார். பரந்துபட்ட வாசிப்பு மற்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.
எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன் - எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படம். எனக்குத் தெரிந்த வரையில் தமிழ் மொழியின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர் ஜெயகாந்தன். இந்த ஆவணப்படத்தின் மூலம் ரவி சுப்பிரமணியம் அவர்கள் ஜெயகாந்தனின் வாழ்க்கையை எண்ணங்களை ஒளிவு மறைவின்றி பதிவு செய்திருக்கிறார். அவரது நேர்காணல், மேடை பேச்சுக்கள், நண்பர்களுடன் அவர் இருந்த பொழுதுகள் என்று மிக அருமையாக தொகுக்கப்பட்டுள்ளது. உன்னைப் போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற அவரது புதினங்களை அவரே திரைப்படங்களாக எடுத்துள்ளார். அப்படங்களைப் பற்றியும் அந்த அனுபவங்களைப் பற்றியும் இந்த ஆவணப்படம் பேசுகிறது. திரைப்பாடல் எழுதிய அனுபவம் பற்றியும் கூறுகிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்து தயாரித்து இருக்கும் இந்த ஆவணப்படம் ஜெயகாந்தன் என்ற எழுத்தாளரை, மனிதரை நம் கண்முன்னால் காலகாலத்திற்கும் நிலை நிறுத்தும் அவரது எழுத்தைப் போல.

Thanks for sharing JK's Youtube interview.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் நல்ல வாசிப்பாளர் மற்றும் பேச்சாளர். அவர் எழுச்சி என்ற YouTube channel -ல் புத்தகங்கள் பற்றி பேசிய "புத்தகங்களோடு ஒரு பொழுது" என்ற காணொலிகள் அடங்கிய தொகுப்பு கேட்டேன். அவரது ஆழ்ந்த வாசிப்பும் அதை பற்றி விவரிக்கும் விதமும் மிக அருமை. ஒவ்வொரு காணொலியிலும் வெவ்வேறு கருக்களைக் கொண்ட புத்தகங்களைப் பற்றி பேசியுள்ளார். இது தொடராமல், சில காணொலிகளோடு நின்று விட்டது என்பது வருத்தம் தருகின்றது. அவரது பிற காணொலிகள் காணும் ஆர்வம் ஏற்படுகிறது.
அவர் பேசிய புத்தகங்கள்:
1. சேபியன்ஸ் - யுவால் நோவா ஹராரி (தமிழில்: நாகலட்சுமி)
2. திருக்குறள் உரைவேற்றுமை - இரா.சாரங்கபாணி
3. எண்ணித் துணிக கருமம் - அறிஞர் அண்ணா
4. பெண் வரலாறும் விடுதலைக்கான போராட்டமும் - ப.சு.சந்திரபாபு, இல. திலகவதி
5. மார்க்சியம் அனா ஆவன்னா - தியாகு
6. The Story of Philosophy - Will Durant
7. பெரியார் அறம், அரசியல், அவதூறுகள் - சுகுணா திவாகர்
8. உலகத் தமிழ்க் களஞ்சியம் (உமா பதிப்பகம் கோலாலம்பூர்)
அவர் பேசிய புத்தகங்கள்:
1. சேபியன்ஸ் - யுவால் நோவா ஹராரி (தமிழில்: நாகலட்சுமி)
2. திருக்குறள் உரைவேற்றுமை - இரா.சாரங்கபாணி
3. எண்ணித் துணிக கருமம் - அறிஞர் அண்ணா
4. பெண் வரலாறும் விடுதலைக்கான போராட்டமும் - ப.சு.சந்திரபாபு, இல. திலகவதி
5. மார்க்சியம் அனா ஆவன்னா - தியாகு
6. The Story of Philosophy - Will Durant
7. பெரியார் அறம், அரசியல், அவதூறுகள் - சுகுணா திவாகர்
8. உலகத் தமிழ்க் களஞ்சியம் (உமா பதிப்பகம் கோலாலம்பூர்)
"விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்" தமிழின் பிரபலங்கள், எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இணைத்து இணையம் வழியாக கலந்துரையாடல்கள் நடத்தி வருகிறார்கள். கரிசல் நாயகன் கி.ராஜநாராயணன், இயக்குனர் மணி ரத்னம் போன்ற ஆளுமைகளுடன் கடைக்கோடி வாசகன், ரசிகனை இணைக்கும் முயற்சியாக இந்தக் கலந்துரையாடல்கள் இருக்கின்றன. ஜெயமோகன் வழி நடத்துகிறார். கிராவுடனான கலந்துரையாடலில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களும் ஜெயமோகன் அவர்களும் பங்கு பெற்றார்கள். மிகச் சிறந்த ஒரு முன்னெடுப்பு.
1. கி. ராஜநாராயணன் – கலந்துரையாடல்
2. மணி ரத்னம் – கலந்துரையாடல்
3. அ. கா. பெருமாள் – கலந்துரையாடல்
4. தியடோர் பாஸ்கரன் – கலந்துரையாடல்
5. நாஞ்சில் நாடன் கலந்துரையாடல்
6. அ. முத்துலிங்கம் கலந்துரையாடல்
1. கி. ராஜநாராயணன் – கலந்துரையாடல்
2. மணி ரத்னம் – கலந்துரையாடல்
3. அ. கா. பெருமாள் – கலந்துரையாடல்
4. தியடோர் பாஸ்கரன் – கலந்துரையாடல்
5. நாஞ்சில் நாடன் கலந்துரையாடல்
6. அ. முத்துலிங்கம் கலந்துரையாடல்
"குட்டி இளவரசனுடன் ஒரு பயணம்" என்ற எஸ்ரா அவர்களின் குட்டி இளவரசன் புத்தகம் பற்றிய காணொலி கண்டேன். நான் இதன் ஆங்கிலப் பதிப்பான The Little Prince இரண்டு மூன்று முறை வாசித்திருக்கின்றேன். எனக்கு மிகவும் விருப்பமான புத்தகம். இந்த காணொலியை பார்த்த கையோடு, இந்த புத்தகத்தை தழுவி சமீபத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படத்தையும் மறுபடியும் பார்த்தேன். இந்த புத்தகம் அந்த திரைப்படத்தில் ஒரு பாத்திரமாகவும், குட்டி இளவரசன் வளர்ந்து எல்லா மனிதர்களையும் போல குழந்தைத்தனத்தை மறந்து அர்த்தமில்லாமல் வேலை பார்ப்பது போலவும் கதையை மிகவும் உணர்வுபூர்வமாக விரித்து அருமையாக தற்காலத்திற்கு ஏற்ற வகையில் மிகவும் அழகாக animation வகையாயும், stop motion வகையாகவும் படமாக்கியுள்ளனர். Netflix தளத்தில் காணக் கிடைக்கின்றது. கண்டிப்பாக பெற்றோர்களும், ஆசிரியர்களும், குழந்தையாக இருப்பது எப்படி என்பதை மறக்காத எல்லோரும், குழந்தைகளும் படிக்க வேண்டிய புத்தகம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
திரைப்படத்தின் முன்னோட்டம்
காணொலியில் இருந்து சில குறிப்புகள்:
* பெரியவர்களுக்கான சிறுவர்கள் புத்தகம்
* தண்ணீருக்குத்தான் எத்தனை கதவுகள். தண்ணீரில் நுழையலாம். ஆனால் தண்ணீருக்குள் நுழைய முடியாது
* அதிகம் சொல்லப்பட்டதும் யாராலும் பின்பற்றப்படாததும் அறிவுரைகள் மட்டுமே
* குழந்தைகள் பெரியவர்களிடம் யாசிப்பது "எங்களை புரிந்து கொள்ளுங்கள்" என்பது மட்டுமே
* மண்ணிலிருந்து உலகை பார்த்து எழுதியவர்கள் மத்தியில் விண்ணிலிருந்து உலகைப் பார்த்து எழுதியவர் அந்துவான் சு. எக்சுபெரி(Antoine de Saint-Exupéry) (விமானி)
* அறிவாளியாக இருந்தாலும் நல்ல ஆடை அணிந்திருந்தால் மட்டுமே அறிவை உலகம் அங்கீகரிக்கிறது
* பாலைவனத்தின் அழகு அது எங்கோ மறைத்து வைத்திருக்கும் கிணறுதான்
திரைப்படத்தின் முன்னோட்டம்
காணொலியில் இருந்து சில குறிப்புகள்:
* பெரியவர்களுக்கான சிறுவர்கள் புத்தகம்
* தண்ணீருக்குத்தான் எத்தனை கதவுகள். தண்ணீரில் நுழையலாம். ஆனால் தண்ணீருக்குள் நுழைய முடியாது
* அதிகம் சொல்லப்பட்டதும் யாராலும் பின்பற்றப்படாததும் அறிவுரைகள் மட்டுமே
* குழந்தைகள் பெரியவர்களிடம் யாசிப்பது "எங்களை புரிந்து கொள்ளுங்கள்" என்பது மட்டுமே
* மண்ணிலிருந்து உலகை பார்த்து எழுதியவர்கள் மத்தியில் விண்ணிலிருந்து உலகைப் பார்த்து எழுதியவர் அந்துவான் சு. எக்சுபெரி(Antoine de Saint-Exupéry) (விமானி)
* அறிவாளியாக இருந்தாலும் நல்ல ஆடை அணிந்திருந்தால் மட்டுமே அறிவை உலகம் அங்கீகரிக்கிறது
* பாலைவனத்தின் அழகு அது எங்கோ மறைத்து வைத்திருக்கும் கிணறுதான்
திருவண்ணாமலையில் உள்ள ஒரு வாடகை(?!) நூலகம் பற்றிய காணொலி விக்னேஷ் அவர்கள் YouTube தளத்தில் இருந்து. 1993-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் நூலகம். ஒரு கதை வடிவில் தொடங்கி, நூலகம் பற்றிய விவரங்களுடன், கதை போல நிறைவுறுகிறது. நன்றாக உள்ளது. வாசிப்பது சுவாசிப்பது போல இயல்பாய் நடக்க வேண்டும் என்று நூலகர் சொல்வது மிகவும் உண்மை!
கீதாஞ்சலி வாடகை நூலகம்! - https://www.youtube.com/watch?v=PzhsJ...
கீதாஞ்சலி வாடகை நூலகம்! - https://www.youtube.com/watch?v=PzhsJ...
Books mentioned in this topic
குட்டி இளவரசன் (other topics)The Little Prince (other topics)
Authors mentioned in this topic
Antoine de Saint-Exupéry (other topics)சுப. வீரபாண்டியன் (other topics)
பா. ராகவன் Pa Raghavan (other topics)