Bloggers/Book Lovers from India discussion

This topic is about
பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்
Promotion/Giveaways
>
பிரைட் அண்ட் பிரிஜூடிஸ் : புத்தகம் இரண்டு - கிண்டிலில் இலவசம்
date
newest »

ஆங்கில இலக்கியத்தின் சிறந்த நாவல்கள் என்று எடுக்கப்படும் எந்த பட்டியலிலும் , முதல் பத்து இடங்களுக்குள் ' பிரைட் அண்ட் பிரிஜூடிஸ் ' வந்துவிடும். மிகவும் விரும்பப்படும் நாவல்கள் என்பதிலும் இல்லாமல் இருக்காது.
தமிழில் ஒரு சரியான , முழுமையான மொழிபெயர்ப்பு இதுவரை வந்ததாக தெரியவில்லை. இதுவே முதலாவதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது போலவே இரண்டு பாகங்களாக வெளிவரப்போகும் இந்த நாவலின் இரண்டாம் பாகம் இது.
1813இல் இரண்டு பாகங்களாக எழுதப்பட்ட இந்த நாவல் சிறப்பாக பேசப்படுவதற்கு அதன் கதைக்கருவே காரணம். எலிசபெத் பென்னட் , எப்படி தனது கணவனை தேர்ந்தெடுக்கிறாள் என்பதுதான் கதை. அவசரப்பட்டு முடிவெடுப்பதன் விளைவுகள் , மேலோட்டமாக நல்லவர்கள் போலிருப்பவர்கள் போன்றவற்றை கற்று தேர்ந்து மனதை சரியான நபருக்கு கொடுக்கும் கதையே இது. ஒரு காதல் கதையாக இருந்திருந்தால் இந்தளவிற்கு கொண்டாடப்பட்டிருக்குமா என்பது தெரியாது. அத்துடன் மனிதர்கள் , சமூக பழக்கங்கள் என்று பலவற்றையும் கதை தொட்டு செல்கிறது.
ஜேன் ஆஸ்டென் இந்தக் கதையை தன்னுடைய நகைச்சுவையாலும் , ஆங்கில சமூக வாழ்வின் மீதான விமர்சனத்தின் மூலமாகவும் வேறொரு தளத்திற்கு எடுத்து செல்கிறார். https://www.amazon.in/dp/B08JQJWVWS/