தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

41 views
வலையுலா!

Comments Showing 1-7 of 7 (7 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (new)

Prem | 230 comments Mod
இணையத்தில் வாசித்த, வாசிப்பு, புத்தகங்கள், எழுத்தாளர்கள், ஆளுமைகள் பற்றிய பதிவுகளை பகிர இந்த இழை!


message 2: by Prem (last edited Dec 22, 2020 12:55PM) (new)

Prem | 230 comments Mod
தமிழ் சிறுகதைகள் என்று வாசிக்க ஆரம்பித்தது முதலில் சுஜாதா அப்புறம் புதுமைப்பித்தன்தான். புதுமைப்பித்தன் சிறுகதைகள் இணையத்தில் இன்று பல தளங்களில் வாசிக்கக் கிடைக்கின்றன. 1948-ல் மறைந்த புதுமைப்பித்தன் எழுதிய நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை அவை வெளிவந்த பல சிற்றிதழ்களைத் தேடி, அவற்றை காலவரையறைப்படி தொகுத்த வகையில் வேதசகாயகுமாருக்கு பெரும்பங்கு இருக்கிறது. அவரது மறைவு செய்தி கண்டு இன்றுதான் அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன். விரல் தொடுதலில் கதைகளைத் தேடிக் கண்டு கொள்ளலாம் என்ற இக்காலத்தில், சிறுகதைகளைத் தொகுக்க அவர் பட்ட பாடு பற்றி வாசிக்க மலைப்பாக இருக்கின்றது. தமிழ் சிறுகதைகள் மரபை கொஞ்சமாக ரசித்து கொண்டிருக்க இவர் போன்ற வரலாற்றாசிரியர்கள் பணி மகத்தானது, மிகுந்த நன்றிக்குரியது.

இவரை பற்றி அறிந்து கொள்ள உதவிய பதிவுகள்
* வேதசகாயகுமார் – அஞ்சலி சிலிக்கான் ஷெல்ப் ஆர்வி எழுதியது
* புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை எம். வேதசகாய குமார் எழுதியது


message 3: by Prem (last edited Jan 05, 2021 08:18PM) (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் ஆ. மாதவன் மறைந்த செய்தி அறிந்தேன். சமீபத்தில்தான் அவரது சிறுகதை "சாத்தான் திருவசனம் .." வாசித்தோம். மிகவும் யதார்த்தமான பகடி நிறைந்த எழுத்து வகை. "நாயனம்" என்ற சிறுகதையை எஸ்.ரா அவர்கள் 100 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக தேர்ந்தெடுத்துள்ளார். மிகச் சிறந்த ஒரு கதை அது. அவரது பிற எழுத்துக்களையும் சிறுகதைகளையும் வாசிக்க வேண்டும்.

* நாஞ்சில் நாடன் அவர்களின் ஆ.மாதவன் பற்றிய நினைவுக் குறிப்பு
* ஆ.மாதவன் அவர்களின் எழுத்துக்கள் அழியாச்சுடர்கள் இணைய தளத்தில்

"சாத்தான் திருவசனம்" கதையில் இருந்து சில மேற்கோள்கள்:
* நேரம், பலபலவென்று வெளிச்சம் பூசத் தொடங்கியிருந்தது.

* நீங்க எங்கே விட்டு வக்கறியோ, படிப்பு, எழுத்து, படிப்பு, எழுத்து இப்பிடியே தானே... பேசாமெ ஆரயாவது பிடிக்க வேண்டிய ஆளெப் பிடிச்சு ஒரு அவார்டு தட்டி யெடுக்கப் பாருங்க, ஆயுசு போயிட்டிருக்கு...''

* மேற்கே வானச்சரிவில் பெரிய தொப்பி போல மேகங்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டு மலை உச்சிகள் வடக்காக வளைந்து போய்கிடக்கிறது.

* எவ்வளவு ரம்யமான, ரசசுந்தரமான, ரகவிஸ்தாரமான, விதரணையான, குளிரான, காதடைந்த அமைதியான - முக்காலத்தையும் எட்டித்தொடும் நிர்மல சாயூஜ்யம் இப்படி கிடைத்தால், எவ்வளவு படிக்கலாம், எவ்வளவு எழுதிக் குவிக்கலாம்..



message 4: by Prem (last edited Jan 22, 2021 02:43PM) (new)

Prem | 230 comments Mod
கரிசல் நாயகன் கி.ரா அவர்களுக்கு உ.வே.சா விருது கிடைத்திருக்கிறது. அதையொட்டி விகடனில் வந்த அவரது மனம் திறந்து நேர்காணல். பெரிய விஷயங்களை ரொம்ப எளிதா சொல்லிட்டு போறார். கட்டாயம் வாசித்து பாருங்கள்! - இணைப்பு

கி.ராஜநாராயணன்

* "தொழில்நுட்பமெல்லாம் வருமய்யா... வந்துக்கிட்டேதான் இருக்கும். ரயில் வரும்போது அப்படித்தானே எல்லாரும் நினைச்சிருப்பாக. தொழில்நுட்பத்துல ஜனங்களுக்கு நல்லது வரும். கண்டுபிடிச்சவனுக்கு பேராசை வந்துட்டா தீங்கும் வரும்."

* "இசை தெரிஞ்சவனுக்கு ஏதய்யா தனிமை... அது துணைக்கிருக்குமே... எழுதத் தெரிஞ்சவன், படிக்கத் தெரிஞ்சவனுக்கெல்லாம் தனிமையே தெரியாது."

* "மனுஷனோட வாழ்க்கையை யார் மதிப்பீடு பண்ண முடியும். அப்படி மதிப்பீடு பண்ணிட்டா சொல்லவே விஷயமிருக்காதே... மனுஷ வாழ்க்கை மட்டுமில்ல... எதையுமே மதிப்பீடு பண்ணமுடியாது. ஒரு விஷயத்தை மதிப்பீடு பண்ணி முடிச்சு வச்சிருப்போம். எவனாவது ஒருத்தன் வந்து அது தப்புன்னு சொல்லுவான். இன்னொருத்தன் வந்து அவன் சொன்னதையும் மறுப்பான். எது நிஜம் எது பொய்யுன்னு எளிதா கண்டுபிடிக்க முடியாது... வாழ்க்கையின் சுவாரஸ்யமே அதுதான்..."


message 5: by Prem (new)

Prem | 230 comments Mod
விகடனில் கி.ரா பற்றி வந்த மற்றோரு நேர்காணல் கட்டுரை. மேலே பகிர்ந்த கட்டுரைல இருக்கிற சில விடயங்கள் இதுலயும் இருக்கு. வேற புது விடயங்களும் இருக்கு. அவர் எழுத்துக்களைப் போலவே பதில்களும் கவித்துவமா இருக்கு - இணைப்பு

“ஆளுறவங்க தனக்குன்னு எதையும் எடுத்துக்கக் கூடாது!”

* ஒரு கதை எழுதுறபோது அதுக்குப் பின்னால நிறைய கதைகள் இருக்கும். எல்லாத்தையும் அந்தக் கதைக்குள்ள வைக்கமுடியாது. கொஞ்சத்தை விலக்கி வைப்போம். அஞ்சு பவுன்ல ஒரு நகை இருக்குன்னா, அதைச்செய்ய அஞ்சு பவுன் தங்கம் மட்டும் போதாது.

* விளக்கத்தைத் தேடித் தேடித்தானே வாழ்ந்துக்கிட்டிருக்கோம். விரல்களெல்லாம் அழுகி விழுந்தபிறகும் ஒருத்தன் நம்பிக்கையோட வாழ்ந்துக்கிட்டிருக்கான்லா... அது எப்படி? ஏதோ ஒரு விஷயம் அவனை வாழவைக்குதில்லா... அது என்ன?

* டால்ஸ்டாய் என்ன விருது வாங்கினார்? ஆனா இமயம் மாதிரி நிக்குறார். எனக்கு விருது பற்றிய கவலையெல்லாம் இல்லை.


message 6: by Prem (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் எஸ்.ரா அவர் இணைய தளத்தில் "நூலக மனிதர்கள்" என்று தொடர் எழுதி வருகிறார். எத்தனை வகையான மனிதர்கள், அனுபவங்கள். மிகவும் ரசிக்கும் படியாகவும், பொறாமை கொள்ளும் விதமான நூலக நிகழ்வுகள். 32வது பகுதியில் இரு சிறுவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் கொண்டு அவர்களுக்குள்ளாக சில விசித்திர விளையாட்டுகளை விளையாடுகின்றனர்.



"நூலகத்தில் இப்படி அறிவு சார்ந்த விளையாட்டுகளை ஏன் அனுமதிக்கக் கூடாது என்று இன்று தோன்றுகிறது. வெறும் வாசிப்பை விடவும் வாசிப்பு சார்ந்த விளையாட்டுகள். நாடகங்கள். கூடி வாசித்தலுக்கான களமாக நூலகத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும். அதற்கெனச் சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட்டால் சிறார்கள் அதிகப் பயன் அடைவார்கள்"

நல்ல யோசனையாகத்தான் தெரிகிறது. சிறு வயதில் நூலகங்கள் பயன்படுத்தாததை பற்றி வெட்கப்படுகிறேன்.

"புத்தகத்தின் அட்டையைப் பார்த்துப் புத்தகத்தை எப்படி முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியாதோ அது போலத் தான் நூலகத்திற்கு வரும் மனிதர்களும். அவர்களின் தோற்றதை வைத்து அவர்கள் என்ன படிப்பார்கள். எதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று கண்டறியமுடியாது.

ஒருவர் புத்தகம் படிக்கும் போது அதன் பக்கங்களின் வழியே என்ன உணருகிறார். என்ன பார்க்கிறார் என்று எவராலும் கண்டறிய முடியாது. வாசிப்பு எளிமையானது போலத் தோன்றினாலும் அது ரகசியமான செயல்பாடே."



message 7: by Prem (new)

Prem | 230 comments Mod
ஏதோ கட்டுரை தேட "ஏன் வாசிக்கிறேன்" என்ற இந்த கட்டுரை வாசிக்க நேர்ந்தது. சிலிகான் ஷெல்ஃப் - புத்தகங்களுக்காக ஒரு ப்ளாக் என்ற தளம் ஆர்வி(RV) என்பவரும் அவரது வாசக நண்பர்களும் பல வருடங்களாக புத்தகங்கள், வாசிப்பு பற்றி எழுதி வருகிறார்கள். தமிழ், ஆங்கிலம் என்ற எல்லா மொழியில் உள்ள புத்தகங்கள், சிறுகதைகள்,எழுத்தாளர்கள் பற்றியும் குறிப்புகள், வாசிப்பு அனுபவங்கள் பற்றி இங்கு வாசிக்கக் கிடைக்கும். நான் எந்த புத்தகம் வாசித்தாலும் இந்த தளத்தில் ஆர்வி என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்ப்பது உண்டு. 2010-ல் ஆர்வி அவர்கள் எழுதிய இந்த கட்டுரையை வாசிக்கும் போது அவருடைய எண்ணங்கள் எனக்கும் ஒத்துப் போவதை உணர முடிகிறது. அதையொட்டி அவரது நண்பர் பாஸ்கரன் என்பவரின் "புத்தகம் சுமத்தல்" என்ற பதிவும் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது. வாசித்து யோசிக்கலாம்!

ஆர்வி:
* மனிதனின் உச்சங்களை, அதீத உணர்ச்சிகளை உண்மையாக காட்டும்போது
* சிந்திக்க வைக்கும்போது
* ஒரு புதிய உலகம் கண்முன்னால் விரியும்போது முடிச்சுகள் பர்ஃபெக்டாக அவிழும்போது
* வாய் விட்டு சிரிக்கும்போது

பாஸ்கரன்:
*புத்தகங்கள், அன்னியர்களை நம்மவர்கள் ஆக்குகிறது.


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread


Authors mentioned in this topic

S. Ramakrishnan (other topics)
A. Madhavan (other topics)