தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
புத்தகங்களின் வாசல்!
date
newest »

வண்ணநிலவன் அவர்களின் கடல்புரத்தில் புத்தகத்தின் பல அட்டைகள் கதையை பிரதிபலிக்கும் விதமாய் அருமையாய் இருக்கின்றன. எனக்கு பிடித்த அட்டைப் படங்கள் சில.








மித்ரா அழகுவேலின் 'கார்மலி' சிறுகதைத் தொகுப்பின் அட்டைப்படம்.
முகப்பு ஓவியம் - யுவதாரணி சிவகுமார்
அட்டை வடிவமைப்பு - திவாகர்
முகப்பு ஓவியம் - யுவதாரணி சிவகுமார்
அட்டை வடிவமைப்பு - திவாகர்

லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் ரூஹ் புத்தகத்தின் அட்டை. "Whirling Dervishes" என்று அழைக்கப்படும் சுழன்று கொண்டே தியானம் செய்யும் பக்தர்களையும், அரபு நாட்டு மனிதர் ஒருவர், அந்நாட்டு மாளிகை என்று மனதை கொள்ளை கொள்ளும் அழகான ஓவியம்தான் அட்டைப் படம். "ஏழையிடமிருந்து அவனுடைய இரட்சகனுக்கு" என்ற வாசகத்துடன் அழகிய எழுத்துருவில் ரூஹ் என்ற கவித்துவமான அட்டை வடிவமைப்பு, புத்தகத்தை வாசிக்கத் தூண்டியது. வரைந்தவர், வடிவமைத்தவர் யார் என்ற குறிப்பு புத்தகத்தில் இல்லை. ஜோதா அக்பர் ஹிந்தி திரைப்படத்தில் க்வாஜா மேரே க்வாஜா பாடலிலும், சமீபத்தில் வெளியான சுஃபியும் சுஜாதையும் மலையாள படத்தில் வாதிக்கல்லு வெள்ளரிபிறாவு பாடலிலும் "Whirling Dervishes" பார்க்கலாம்.


Thanks, Prem. Actually, I recently read Rooh on Kindle. In black and white, I couldn't even see this cover page properly. I didn't notice the whirling Sufi dance at all.

@Saravanan - With Kindle B/W covers some details do get missed. That's the point of this thread to look at book cover which are themselves are a great art form :)
@Kaviya - Rooh doesn't mention or explain about Dervishes in particular. Beginning of the story, அடிநாதம் of the main plot has some internal journey and sufi touch to it if you ask me. Enjoy reading it! Satheeshwaran's non-spoiler based views on the book is available in his YT channel- BookTagForum - https://www.youtube.com/watch?v=mRIa2...
@Kaviya - Rooh doesn't mention or explain about Dervishes in particular. Beginning of the story, அடிநாதம் of the main plot has some internal journey and sufi touch to it if you ask me. Enjoy reading it! Satheeshwaran's non-spoiler based views on the book is available in his YT channel- BookTagForum - https://www.youtube.com/watch?v=mRIa2...
தோட்டியின் மகன்
மலையாளத்தில்: தகழி சிவசங்கரன் பிள்ளை
தமிழில்: சுந்தர ராமசாமி
தமிழ் அட்டை படங்கள்:

மலையாள அட்டை படங்கள்:


ஆங்கில அட்டைப்படம்:
மலையாளத்தில்: தகழி சிவசங்கரன் பிள்ளை
தமிழில்: சுந்தர ராமசாமி
தமிழ் அட்டை படங்கள்:


மலையாள அட்டை படங்கள்:



ஆங்கில அட்டைப்படம்:

நான் இந்த இழையை தொடங்க காரணமாக இருந்த முக்கியமான அட்டைப் படம் விலங்குப் பண்ணை | ஜார்ஜ் ஆர்வெல் தமிழில் க.நா. சுப்ரமண்யம். 2018-ல் வெளியான மின்பதிப்பிற்கான அட்டைப்படம் இது. மிகச் சிறந்ததொரு அட்டை வடிவமைப்பு. மொழிபெயர்ப்பு புத்தகமான இதற்கு ஆங்கிலத்தில் கூட இப்படி அருமையான அட்டைப்படம் இருப்பதாகத் தெரியவில்லை.

சில ஆங்கில பதிப்பின் அட்டை படங்கள்:



சில ஆங்கில பதிப்பின் அட்டை படங்கள்:




இந்த இழையை மீண்டும் தொடரும் பொருட்டு இந்த பதிவு. எழுத்தாளர் ஜெயமோகனை கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவரது இணையதளம், வெண்முரசு மற்ற ஆக்கங்கள் என. அதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்த புத்தகம் அறம். தமிழின் மிக முக்கியமான சிறுகதை தொகுப்பு. "உண்மை மனிதர்களின் கதைகள்" என்ற வாசகத்துடன் முதலில் வம்சி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டது. அந்த அட்டையில் உள்ள நிழற்படத்தில், நிழல்களாகத் தெரியும் உண்மை மனிதர்கள். புகைப்படக்கலையில் silhouette என்று அழைக்கப்படும் காட்சிப் படிமம் வகையில் உள்ள அழகான படம். புத்தத்தில் உள்ள பல மனிதர்களின் நிழலுருவாய் பிரதிபலிக்கும் மிகச் சிறந்த முகப்புப் படம்.

இந்த புத்தகத்தின் மற்ற பதிப்புகளின் அட்டைப்படங்கள் அந்த அளவிற்கு எடுப்பாய் அமையவில்லை என்பது என் கருத்து.

சமீபத்தில் பிரியம்வதா அவர்களின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் இப்புத்தகம் Stories of the True என்ற தலைப்பில் வெளிவந்து பரவலான வாசிப்பை எட்டியுள்ளது. அந்த அட்டைப்படமும் தரமான வடிவமைப்பில் உள்ளது ஆனால் உள்ளர்த்தம் எனக்கு தெளிவாக விளங்கவில்லை.

இந்த புத்தகத்தின் மற்ற பதிப்புகளின் அட்டைப்படங்கள் அந்த அளவிற்கு எடுப்பாய் அமையவில்லை என்பது என் கருத்து.


சமீபத்தில் பிரியம்வதா அவர்களின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் இப்புத்தகம் Stories of the True என்ற தலைப்பில் வெளிவந்து பரவலான வாசிப்பை எட்டியுள்ளது. அந்த அட்டைப்படமும் தரமான வடிவமைப்பில் உள்ளது ஆனால் உள்ளர்த்தம் எனக்கு தெளிவாக விளங்கவில்லை.


ஆங்கில மொழிபெயர்ப்பில யானை, யானை டாக்டரை நினைவுபடுத்துகிறது. வணங்கானிலும் ஒரு யானை வரும். ஆனால் அது கம்பீரமான யானையாக தோன்றும். மல்பெரி பழமும் தேனியும் எனக்கும் புரியவில்லை. எங்கோ படித்தது போல ஞாபகம், ஆனால் எந்த கதை என்று நினைவில்லை.

ரஷ்ய புரட்சியின் பின்புலத்தில் ட்ராட்ஸ்கி போன்றோர் எப்படி பங்கு வகித்தர் , அதை ஸ்டாலின் போன்ற சர்வாதிகாரிகள் எப்படி புறக்கணித்து அதிகாரத்தை கைபிடித்து கொடுங்கோலர்களாக மாறினர் என்பதை ஒரு விலங்கு பண்ணையில், விலங்குகள் புரட்சி செய்து பண்ணையின் உரிமையாளர்களாக மாறுவதை போன்று ஒரு உவமையுடன் ஜார்ஜ் ஆர்வெல் அருமையாக எழுதி இருப்பார். செவ்விலக்கியங்களின் மிகச்சிறப்பே அது எல்லா காலகட்டங்களிலும் பொருத்தமாக இருப்பதே.
தமிழ் விலங்கு பண்ணையின் அட்டைப்படம் அருமை. புத்தகத்தில் கரடி, யானை, ஒட்டகச்சிவிங்கி போன்ற காட்டுவிலங்குகள் வராது. கதை மனிதர்களோடு ஒப்பிடுவதால் அதுவும் சரியாகத்தான் உள்ளது.
நன்றி சரவணன்! வம்சி பதிப்பகம் அறம் அட்டைப்படம் எனக்கு கேரள நிலத்தை நினைவுபடுத்துகிறது. சோற்றுக்கணக்கு மிகவும் நெருக்கமான சிறுகதையாக உள்ளது :) அது மல்பெரி பழம் என்றே நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. தேனீயா இல்லை வெறும் ஈயா என்று தெரியவில்லை!
விலங்கு பண்ணை அட்டைப்படத்தில் எல்லா விலங்குகளையும் உள்ளடக்கியே ஒரு மனிதன் இருக்கின்றான் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் விலங்குகளைவிட மோசமான மனநிலையை கொண்டுள்ளோம் என்று கூறுவதாகப்படுகிறது.
சந்தோஷ் நாராயணன் (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%...) என்ற ஓவியர் மிகவும் ரசிக்கத்தக்க, மினிமலிச வகை அட்டைப்படங்களை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தை அவர் உருவாக்கியதாகவே கருதுகிறேன்.
விலங்கு பண்ணை அட்டைப்படத்தில் எல்லா விலங்குகளையும் உள்ளடக்கியே ஒரு மனிதன் இருக்கின்றான் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் விலங்குகளைவிட மோசமான மனநிலையை கொண்டுள்ளோம் என்று கூறுவதாகப்படுகிறது.
சந்தோஷ் நாராயணன் (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%...) என்ற ஓவியர் மிகவும் ரசிக்கத்தக்க, மினிமலிச வகை அட்டைப்படங்களை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தை அவர் உருவாக்கியதாகவே கருதுகிறேன்.
ஜெயமோகன் அவர்களின் நூறு நாற்காலிகள் சிறுகதைக்கான அட்டைப்படங்கள்! மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த சிறுகதைக்கு எத்தனை வகையான நாற்காலிகள். சிம்மாசனங்கள், ஒரு கால் உடைந்த நாற்காலி. இக்கதையில் தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பிணைப்பு மற்றும் பிறப்பின் அடிப்படையில் ஒருவரை ஒதுக்கும் இழிவுபடுத்தும் சமூகம் என்று எடுத்துக் கொண்டுள்ள கருவை ஓரளவிற்கு இந்தப் படங்கள் பிரதிபலிக்கின்றன.










யானை டாக்டர் - அறம் தொகுப்பில் உள்ள மற்றொரு முக்கியமான சிறுகதை. இயற்கைக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவுவை பற்றி சிந்திக்க வைக்கவும் கதை! டாக்டர் கே என்ற கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையை கோடிட்டு காட்டியது சிறப்பு. இதுவும் தனி புத்தகமாக தமிழிலும், மலையாளத்திலும் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கொஞ்சமேனும் தொடர்புள்ள அட்டைப்படம் உள்ளது. தமிழில் தன்னறம் வெளியீட்டு அட்டை புகைப்படமாக நன்றாகவுள்ளது.








Books mentioned in this topic
யானை டாக்டர் (other topics)நூறு நாற்காலிகள் [Nooru Narkaligal] (other topics)
ஜார்ஜ் ஆர்வெல்லின் விலங்குப் பண்ணை (other topics)
அறம் [Aram] (other topics)
Stories of the True (other topics)
More...
Authors mentioned in this topic
George Orwell (other topics)க.நா. சுப்ரமண்யம் (other topics)
Jeyamohan (other topics)
Priyamvada Ramkumar (other topics)
George Orwell (other topics)
More...
இந்த மிக பிரபலமான வாக்கியம் எவ்வளவு தூரம் உண்மையோ தெரியாது. ஆனால் சமீப காலமாக புத்தகங்களின் அட்டை வடிவமைப்பு என்பது சிறப்பாக இருக்கின்றது என்றே தோன்றுகிறது. தமிழில் "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்று ஒரு பழமொழி உண்டு. அது புத்தகங்களுக்கும் பொருந்தும் இல்லையா. தற்காலத்தில் தமிழ் புத்தகங்கள் பல நல்ல வடிவமைப்புடன் சிறப்பான அட்டை ஓவியங்கள் கொண்டு இணைய பதிப்பாகவும், நூல் பதிப்பாகவும் வெளிவருகின்றன. ஓவியர் சந்தோஷ் நாராயணன் போல பலர் புத்தகத்தின் பொருள் அறிந்து தேர்ந்த, புத்தக அட்டை ஓவியங்கள் அமைக்கின்றனர். அப்படிப்பட்ட நல்ல புத்தக அட்டைகளை பாராட்டும் விதமாக இந்த இழை. அப்படிப்பட்ட நூல்களின் வாசல்களை பகிர்ந்து கொள்ள இந்த இழை. நண்பர்களும் உங்களுக்கு பிடித்த தமிழ் புத்தக அட்டைகளை பகிர்ந்து, பங்குகொள்ள அழைக்கிறேன்.