தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

116 views
இலக்கிய நிகழ்வுகள், அறிவிப்புகள், விழாக்கள், விருதுகள்!

Comments Showing 1-50 of 72 (72 new)    post a comment »
« previous 1

message 1: by Prem (new)

Prem | 230 comments Mod
சமீபத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா நடந்து முடிந்தது. எழுத்தாளர், கவிஞர் யுவன் சந்திரசேகருக்கு விருது வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக பா. ராகவன், ராமசந்திர குகா, வாசு முருகவேல், அர்வின் குமார், சந்திரா, கனலி விக்னேஸ்வரன், தீபு ஹரி, இல.சுபத்ரா மற்றும் லதா அருணாசலம் ஆகியவர்களுடன் உரையாடல் அரங்குகளும் இடம் பெற்றன. இரண்டு தினங்கள் இலக்கியம் மட்டுமே பிரதானமாக இருக்கும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வாசகர்களுக்கு மிகவும் கொண்டாட்டமாக இருக்கும் என்று நினைக்கின்றேன், அனுபவப்பட்டும் இருக்கின்றேன். என்னால் விஷ்ணுபுரம் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற ஏக்கம் இருந்து கொண்டு இருக்கின்றது. இது போன்ற மற்ற நிகழ்வுகள் பற்றி தெரிந்து கொள்ள ஏதேனும் பொது வெளி இருக்கின்றதா எனத் தெரியவில்லை.

சுருதி YouTube தளத்தில் முக்கியமான நிகழ்வுகள் நல்ல முறையில் காணொலிகளாகப் பதிவேற்றப்படுவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும் ஒரு எழுத்தாளரை நேரில் காண்பது, அவரது பேச்சைக் கேட்பது, அவருடன் உரையாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது. தற்காலத்தில் ஒவ்வொரு வாரமும் ஏதேனும் இலக்கிய நிகழ்வோ, செயல்பாடோ தொடர்ந்து தமிழ் எழுத்துச் சூழலில் நடந்து வருவது மிகுந்த ஆரோக்கியமான விடயமாக இருக்கின்றது. எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தளங்களில் வரும் அறிவிப்புகளை இங்கே பதிவு செய்யலாம் என்று எண்ணுகிறேன். வாய்ப்பும் ஆர்வமும் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வேறு நிகழ்வுகள் பற்றி தெரிந்திருப்பின் இங்கே பதிவும் செய்யலாம்!


message 2: by Prem (last edited Dec 23, 2023 07:46PM) (new)

Prem | 230 comments Mod
மலேசிய எழுத்தாளரும், வல்லினம் இணைய இதழாசிரியருமான ம.நவீன் எழுதிய மூன்றாவது நாவலான தாரா இன்று (24-டிசம்பர்-2023) ஞாயிறு சென்னையில் நிகழும் விழாவில் வெளியிடப்படுகிறது.

ம.நவீன் அவர்களின் பேய்ச்சி பேய்ச்சி by நவீன் முக்கியமான நாவல் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

நாள்: 24 டிசம்பர் 2023 (ஞாயிறு)
இடம்: கவிக்கோ அரங்கம், சென்னை
நேரம்: மாலை 5 மணி




message 3: by Prem (last edited Dec 23, 2023 07:58PM) (new)

Prem | 230 comments Mod
எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ஆறு புதிய நூல்கள் டிசம்பர் 26 செவ்வாய்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியிடப்படுகின்றன. பல முக்கிய ஆளுமைகள் கருத்துரை வழங்குகிறார்கள். எஸ்ரா ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாசன் குறித்து சிறப்புரை வழங்குகிறார்.

நாள்: 26 டிசம்பர் 2023 (செவ்வாய் கிழமை)
இடம்: கவிக்கோ மன்றம். சிஐடி நகர். மைலாப்பூர், சென்னை
நேரம்: மாலை ஆறு மணி

தொடர்புக்கு : 044 23644947 – 9789825280




message 4: by Prem (last edited Jan 03, 2024 11:08AM) (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் தேவிபாரதிக்கு நீர் வழிப்படூஉம் நீர் வழிப்படூஉம் by Devibharathi நீர்வழிப்படூம் நாவலுக்காக 2023 வருடத்திற்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

தேவிபாரதி அவரின் தமிழ் விக்கி பதிவில் இருந்து சிறு குறிப்பு (https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%...) :
தேவிபாரதி (ந. ராஜசேகரன்) (டிசம்பர் 30, 1957) தமிழில் எழுதும் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். இடதுசாரிப் பார்வையில் இருந்து காந்தியப்பார்வைக்கு வந்த படைப்பாளி. உளவியல் நெருக்கடிகளை சமூகப் பின்னணியில் நிறுவி ஆராயும் படைப்புகள் என விமர்சகர்கள் குறிப்பிடும் நாவல்களை எழுதியவர்.

நீர்வழிப்படூம் நாவலுக்கான தமிழ் விக்கி பதிவில் இருந்து சிறு குறிப்பு (https://tamil.wiki/wiki/%E0%AE%A8%E0%...) :
"தமிழில் நாவிதர்களின் வாழ்க்கையின் பின்னணியில் எழுதப்பட்ட முதல் நாவல். ஆனால் சமூகச்சித்தரிப்பாக இல்லாமல் அச்சூழலில் தனிமனிதர்கள் கொள்ளும் அறநெருக்கடிகளை விசாரிக்கிறது. "





உசாத்துணை: https://www.jeyamohan.in/194901/


message 5: by Saravanakumar (new)

Saravanakumar S K | 16 comments Prem wrote: "எழுத்தாளர் தேவிபாரதிக்கு நீர்வழிப்படூம் நாவலுக்காக 2023 வருடத்திற்கான சாகித்ய அக்காதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

தேவிபாரதி அவரின் தமிழ் விக்கி பதிவில் இருந்து சிறு குறிப்பு (http..."


Thanks, Prem for doing this.

I don't see the Tamil Wiki page opening up.


message 6: by Prem (new)

Prem | 230 comments Mod
நன்றி சரவணன். தமிழ் விக்கி இணைப்பை சரி செய்துள்ளேன்!


message 7: by Prem (last edited Jan 03, 2024 12:39PM) (new)

Prem | 230 comments Mod
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் இவ்வாண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு புத்தகம் மற்றும் வெண்முரசு தொடரின் புத்தகங்களின் பகுதிகள் வாசித்து உரையாடுகிறார்கள். அவர்கள் எடுத்துள்ள புத்தகங்களின் வரிசை கீழே.



உசாத்துணை: https://twitter.com/BondaPanda/status...


message 8: by Prem (last edited Jan 03, 2024 11:08AM) (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாதெமி விருதை ஒட்டி, எழுத்தாளர் ராம் தங்கம் எழுதிய திருக்கார்த்தியல் திருக்கார்த்தியல் Thirukkarthiyal  by ராம் தங்கம் என்ற புத்தகத்துக்கு யுவபுரஸ்கார் விருது (35 வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்) கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "ஆதனின் பொம்மை" (2021) புத்தகத்துக்கு பால சாஹித்ய புரஸ்கார் விருது (குழந்தைகளுக்கான இலக்கிய புத்தகம்) கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

உசாத்துணை: https://siliconshelf.wordpress.com/20...


message 9: by Prem (last edited Jan 03, 2024 12:38PM) (new)

Prem | 230 comments Mod
2023 மொழி (https://mozhi.co.in/) இணையத்தளம் நடத்தும் இந்திய மொழிகளில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு சார்ந்த போட்டியில் இரண்டு தமிழ் கதைகளின் மொழிபெயர்ப்புகள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ரெமிதா அஜிதனின் நிலைவிழி (https://akazhonline.com/?p=4211) சிறுகதையையும், ராதிகா ஜெயமோகனின் விசும்பு (https://www.jeyamohan.in/62/) சிறுகதையையும் மொழிபெயர்த்துள்ளனர்.


message 10: by Prem (last edited Jan 05, 2024 07:48AM) (new)

Prem | 230 comments Mod
கடந்த ஆண்டில் நான் வாசிக்கத் தொடங்கிய எழுத்தாளர் கமலதேவி கமலதேவி .

எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் இருந்து அவரைக் கண்டுகொண்டேன். அவரது ஆறாவது சிறுகதைத் தொகுப்பான "துறைமுகம்" நாளை (6-ஜனவரி-2024) வாசகசாலையின் நான்கு நூல்களில் ஒன்றாக வெளிவருகிறது.

இடம்: இக்சா மையம், கன்னிமரா நூலகம் எதிரில், பாதியான சாலை, எழும்பூர், சென்னை - 8
நாள்: 6-ஜனவரி-2024
நேரம்: மாலை 6 மணி முதல் 8:30 வரை

இந்த நூலுக்கான எழுத்தாளரின் என்னுரை, கமலதேவி அவர்களின் தளத்தில் வெளிவந்துள்ளது - https://kamaladeviwrites.blogspot.com...

என்னுரையிலிருந்து சில மேற்கோள்கள்:
* மனித இயல்புகள், நிகழ்வுக்கான சாத்தியங்கள், அவர்களுக்குள் இருக்க சாத்தியமான இன்னொரு அவர்கள்,அவர்களுக்குள் இருக்கும் தீவிரங்களே இந்தக்கதைகளை எழுத வைத்தன.

* திட்டிக்கொண்டே இருந்தாலும் நான் புத்தகத்தை கைகளில் எடுக்கவில்லை என்றால் உடம்பு சரியில்லையோ என்று யோசிக்கத் தொடங்கிவிடுவார். எதாவது மனசஞ்சலத்தில் இரண்டுநாள் புத்தகம் எடுக்காமல் இருந்தால் கடுப்பாகி ‘..நீ படிக்க வேண்டியது தானே..அகத்தால அழிஞ்சானாம் ராவணனன்..பிடிவாதத்தால வாழ்ந்தாளாம் சீதை…பொம்பளைப்பிள்ளைக்கு பிடிவாதம் வேணும்,’ என்று சொல்வார். அம்மா பேச்சில் பழமொழிகள் சரளமாக வரும்.




message 11: by Prem (new)

Prem | 230 comments Mod
2024 புதிய ஆண்டில் ஆகுதி ஒருங்கிணைப்பின் முதல் நிகழ்வாக எழுத்தாளர் அஜிதன் அவர்களின் மருபூமி வெளியீட்டு விழா அமைகிறது. மருபூமி Maruboomi  by Ajithan

அஜிதன் 2022 ஜனவரியில் தன் முதல் சிறுகதையை எழுதினார். ஜஸ்டினின் நியாயத்தீர்ப்பு. அதில் தொடங்கி வெவ்வேறு இணைய இதழ்களிலும், நீலம் இதழிலும் வெளியான கதைகளின் தொகுதி. வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கையை பற்றிய குறுநாவலான மருபூமி முதன்முதலாக இத்தொகுப்பில் வெளியாகிறது.

இடம்: டிஸ்கவரி புத்தகநிலையம், கேகே நகர், சென்னை
நாள்: 7 ஜனவரி 2023 (ஞாயிறு)
பொழுது: காலை 10 மணி

பங்கேற்போர்: பாவண்ணன், தமிழ்ப்பிரபா, சுசித்ரா, அகரமுதல்வன், ரஃபீக் இஸ்மாயில், நிகிதா .

ஏற்புரை – அஜிதன்




message 12: by Prem (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் ஜெயமோகனின் இணைய‌வழி உரை மற்றும் சந்திப்பு சிங்கப்பூர் நூலகம் முன்னெடுப்பு வழியாக!

பேசுபொருள்: இன்று ஆன்மிகம், இலக்கிய, சூழியல், சமூகவியல் உள்ளிட்ட களங்களில் அறிவியலுக்கு எதிரான பார்வைகளே ஓங்கி ஒலிக்கின்றன. அவற்றை எப்படி அணுகுவது என்பதே இதன் பேசுபொருள்

நாள்: 7-ஜனவரி-2024
பொழுது: மதியம் 2 - 3:30 சிங்கப்பூர் நேரம் (காலை 11:30 - 1:00 இந்திய நேரம்)
இணைப்பு: Zoom கூடுகை; 927 6496 2796; கடவு எண்: 279246

உசாத்துணை: https://www.jeyamohan.in/195649/




message 13: by Prem (new)

Prem | 230 comments Mod
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் இவ்வாண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு புத்தகம் மற்றும் வெண்முரசு தொடரின் புத்தகங்களின் பகுதிகள் வாசித்து உரையாடுகிறார்கள்.

கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 53வது இலக்கிய கூடுகை வரும் ஞாயிறன்று (சனவரி - 28) கோவையில் நிகழவுள்ளது.

அமர்வு 1: வெண்முரசு கலந்துரையாடல் – 34
வெண்முரசு – 10 – நூல் பத்து – பன்னிரு படைக்களம்
வெண்முரசு – 10 – நூல் பத்து – பன்னிரு படைக்களம் by Jeyamohan

பேசுபகுதிகள் :
6 – பூரட்டாதி
7 – ஐப்பசி

அமர்வு 2: நாவல் – கொரில்லாஷோபாசக்தி
கொரில்லா (Gorilla) by Shobasakthi

ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.

நாள் : 28-சனவரி-2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி: +91 98652 57233
நரேன் : +91 73390 55954

இணைப்பு: https://www.jeyamohan.in/196030/




message 14: by Prem (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவல் தொடருக்கான தனிப்பட்ட தொடர் மாதாந்திர கூடுகை புதுவையில் நடைபெற்று வருகிறது. அதன் அறுபத்தி ஏழாவது அமர்வு 26-சனவரி-2024 அன்று வெண்முரசு – 08 – நூல் எட்டு – காண்டீபம் புத்தகத்தின் முதற்பகுதி கனவுத்திரை பற்றி கலந்துரையாடல் நிகழ்கிறது. ஆர்வமுள்ள வாசகர்கள் கலந்து கொள்ளலாம்.

நாள்: 26-சனவரி-2024
நேரம்: இரவு 6:30 மணி முதல் 8 மணி வரை
இடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி,
புதுவை -605 001.

தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306

இணைப்பு: https://www.jeyamohan.in/196089/




message 15: by Prem (last edited Jan 24, 2024 08:47AM) (new)

Prem | 230 comments Mod
ஆலயக்கலைப் பற்றிய பயிற்சி முகாம் கடந்த ஆண்டு முதல் நடந்து வருகிறது. சிற்பங்கள், ஆலய அமைப்புகள், கட்டுமானம், வரலாறு சார்ந்த பயிற்சி இது. மதத்தைக் கடந்து, கலை என்ற அளவில் இந்த மூன்று நாட்கள் பயிற்சி முகாம் நடக்கின்றது. வரலாறு, கலையில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி அறிவிப்பு இணைப்பில் இருந்து சில வார்த்தைகள்:
"நம்மைச்சூழ்ந்து மாபெரும் கலைப்பொக்கிஷங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆலயமும் ஒரு மாபெரும் கலைக்கூடம். உலகமெங்குமிருந்து அவற்றை வந்து பார்த்துச் செல்கிறார்கள். நம்மால் அவற்றை பார்க்கமுடிவதில்லை. ஏனென்றால் நம் விழிகள் கலைப் பார்வையற்றவை. நமக்கு எந்த அறிமுகமும் இல்லாத ஒரு பொன்னுலகம் நம்மருகே இருந்துகொண்டே இருக்கிறது.

ஓர் எளிய அறிமுகம், ஒரு முறையான பயிற்சி போதும் நம் கண்கள் திறந்துகொள்வதைக் காணலாம். ஏனென்றால் நாம் ஏற்கனவே நம் ஆழ்மனதில், நம் கனவில் இவற்றை அடைந்துள்ளோம். நம் மொழியினூடாக, நம் பண்பாட்டினூடாக. மேலே இருக்கும் சாம்பலைச் சற்று விலக்குவதுதான் இப்பயிற்சி. ஒரு புதிய உலகம் தெரியலாகிறது. சிற்பங்கள் சடென்று பொருள்கொள்கின்றன."


பயிற்றுவிப்பவர்: திரு. ஜெயக்குமார்
நாட்கள்: பிப்ரவரி 2, 3, 4 தேதிகளில் (வெள்ளி சனி ஞாயிறு)
தொடர்பிற்கு: programsvishnupuram@gmail.com

இணைப்பு: https://www.jeyamohan.in/187406/





message 16: by Prem (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் அகரமுதல்வன் அவரது இணையத்தளத்தில் எழுதிய தொடர் "போதமும் காணாத போதம்". இத்தொடரின் புத்தக வெளியீடு திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.

"போதமும் காணாத போதம்" தொடரின் முதல் அத்தியாயம் இணைப்பு: https://akaramuthalvan.com/?p=847

இணைப்பு: https://akaramuthalvan.com/?p=1939

போதமும் காணாத போதம் – நூல் வெளியீட்டு விழா
இடம் – எஸ். கே. பி. பொறியியல் கல்லூரி. அண்ணா கேட்போர் கூடம். திருவண்ணாமலை
நாள் – 10 .03 .2024 ஞாயிற்றுக்கிழமை
நேரம் – காலை 10.30

தலைமை
எழுத்தாளர் ஜெயமோகன்

ஆசியுரை
முனைவர் இரா. சக்தி கிருஷ்ணன்.

மதிவாணன்

வெளியிடுபவர்
தியாக. குறிஞ்சி செல்வன்

பெற்றுக் கொள்பவர்கள்
நா. செந்தில்குமார்
சாய்

சிறப்புரை
எழுத்தாளர் மரபின்மைந்தன் முத்தையா
எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன்
எழுத்தாளர் செல்வேந்திரன்

நிகழ்ச்சித் தொகுப்பு
இரா. கார்த்திக் ராஜா





message 17: by Prem (last edited Mar 28, 2024 03:44PM) (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://www.jeyamohan.in/198624/


message 18: by Prem (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://www.jeyamohan.in/198620/


message 19: by Prem (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் அறிமுக விழா சென்னையில் மே 3 நடைபெறுகிறது.

நாள் : மே 3 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 5 மணி முதல் 9 வரை
இடம்:
கவிக்கோ மன்றம்
இரண்டாவது பிரதானச்சாலை
சிஐடி காலனி, மைலாப்பூர். சென்னை 4



சென்னை வெள்ளத்தில் அவரது தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் நிறையச் சேதமடைந்தன. ஈரத்தில் நனைந்து போன புத்தகங்களை உலர வைத்து மீட்டிருக்கிறார்கள். இந்தப் புத்தகங்களை மிகக் குறைவான விலையில் (ரூபாய் நூறு, ரூபாய் இருநூறு) விற்பதற்காகச் சிறப்பு விற்பனை மே 3 நடைபெறுகின்றது.




message 20: by Prem (new)

Prem | 230 comments Mod
தமிழில் சிறுவர் இதழ்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டன. மிக சமீபத்தில் தன்னறம் பதிப்பகம் தும்பி என்ற குழந்தைகளுக்கான மிக்கது தரமான மாத இதழை கடந்து ஏழு வருடங்களாக நடத்தி வந்தனர். ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக 81-வது இதழுடன் அவர்களை தும்பி இதழ் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர். அதைப் பற்றிய பதிவு (https://www.jeyamohan.in/200236/) எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் வந்துள்ளது. பிற்காலத்தில் நல்ல வாசகர்கள் உருவாக்க குழந்தைகள் நல்ல புத்தகங்களையம் அவர்களுக்கான சிறுவர் இதழ்களையும் வாசித்துப் பழக்க வேண்டும். சிறுவர்மலர், அம்புலி மாமா, கோகுலம், பூந்தளிர் என்று ஒரு மரபு இருந்தது. அவை அனைத்தும் இப்போது நின்றுவிட்டன. அவற்றோடு இப்போது தும்பி இதழும் ஒன்றாகிப் போனது வருத்தமே. கடைசி வாய்ப்பாக நிதி திரட்டும் பொருட்டு தன்னறம் பதிப்பகம், தும்பி பழைய இதழ்களை மொத்த விலைக்கு விற்கிறார்கள். கண்டிப்பாக இவை குழந்தைகளுக்கு புதிய வாசல்களைத் திறக்கும். புத்தகம் அளவிற்கு இவையும் வாங்கி சேகரித்து வைக்க வேண்டிய வருங்காலத்திற்காக.

தும்பி இதழ்கள் எப்படி குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை திறந்து வைத்தது என்பதை பற்றிய ஒரு தந்தையின் உளப் பதிவு - https://www.jeyamohan.in/200242/

மூன்று தும்பி இதழ்கள் அவர்களது தளத்தில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கின்றன.
1. https://thumbigal.com/wp-content/uplo...
2. https://thumbigal.com/wp-content/uplo...
3. https://thumbigal.com/wp-content/uplo...




message 21: by Dinesh (new)

Dinesh Babu | 2 comments Prem wrote: "தமிழில் சிறுவர் இதழ்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டன. மிக சமீபத்தில் தன்னறம் பதிப்பகம் தும்பி என்ற குழந்தைகளுக்கான மிக்கது தரமான மாத இதழை கடந்து ஏழு வருடங்களாக நடத்தி வந்தனர். ஆனால் நிதிப் பற்றாக..."
Thanks for bringing this to attention. Ordered some of their older issues. Hoping that your post reaches more people and they come out of their current situation soon


message 22: by Prem (new)

Prem | 230 comments Mod
Dinesh wrote: "Prem wrote: "தமிழில் சிறுவர் இதழ்கள் கிட்டத்தட்ட இல்லாமல் ஆகிவிட்டன. மிக சமீபத்தில் தன்னறம் பதிப்பகம் தும்பி என்ற குழந்தைகளுக்கான மிக்கது தரமான மாத இதழை கடந்து ஏழு வருடங்களாக நடத்தி வந்தனர். ஆனால் ..."

Thanks Dinesh. Really glad it is helpful :)


message 23: by Prem (last edited May 14, 2024 01:36PM) (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://www.jeyamohan.in/200839/


message 24: by Prem (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://www.jeyamohan.in/200891/


message 25: by Prem (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://www.jeyamohan.in/201058/


message 26: by Prem (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://akaramuthalvan.com/?p=2320


message 27: by Prem (last edited May 30, 2024 03:58PM) (new)

Prem | 230 comments Mod


எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா முன்னெடுப்பில் வழங்கப்படும் தஞ்சை ப்ரகாஷ் இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் என்.ஶ்ரீராம் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

இணைப்பு: https://www.jeyamohan.in/201194/


message 28: by Prem (new)

Prem | 230 comments Mod


கவிஞர் குமரகுருபரன் நினைவாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும் விருது விழா இவ்வாண்டும் வழக்கம்போல முழுநாள் நிகழ்வாக நடைபெறவுள்ளது. தமிழ்ப்படைப்பாளிகளுடன் தெலுங்கு, மலையாளப் படைப்பாளிகளும் கலந்துகொள்கிறார்கள். அவர்களுடன் வாசகர்கள் உரையாடும் அமர்வுகள் நிகழும்.

இணைப்பு: https://www.jeyamohan.in/201412/


message 29: by Prem (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://www.jeyamohan.in/202020/


message 30: by Prem (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://akaramuthalvan.com/?p=2568


message 31: by Prem (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://www.jeyamohan.in/203137/


message 32: by Prem (last edited Aug 23, 2024 06:36PM) (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும், எழுத்தாளரும்/வாசகரும் அவரது துணைவியுமான அருண்மொழி நங்கை அவர்களும் ஒரு மாத காலம் செப்டம்பர்-அக்டோபர்-2024 மாதங்களில் அமெரிக்க சுற்றுப் பயணம் வருகிறார்கள். அதை பற்றிய அறிவிப்பு ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்க வாசக நண்பர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தக் கொள்ளலாம்!

இணைப்பு: https://www.jeyamohan.in/204103/





பயண வரைவு:

செப்டம்பர் 22 - செப்டம்பர் 27: வால்நட் க்ரீக், கலிபோர்னியா
செப்டம்பர் 28 - செப்டம்பர் 29: சியாட்டல், வாஷிங்டன்
செப்டம்பர் 30 - அக்டோபர் 02: தத்துவ வகுப்பு, பூன், வடக்கு கரோலினா
அக்டோபர் 03 - அக்டோபர் 06: இலக்கிய முகாம், பூன், வடக்கு கரோலினா
அக்டோபர் 07 - அக்டோபர் 09: சிகாகோ, இல்லினாய்
அக்டோபர் 10 - அக்டோபர் 14: மிச்சிகன்
அக்டோபர் 15 - அக்டோபர் 19: நியூ ஜெர்சி / நியூ யார்க்
அக்டோபர் 20 - அக்டோபர் 22: வாஷிங்டன் டி.சி.
அக்டோபர் 23 - அக்டோபர் 24: நியூ ஜெர்சி / நியூ யார்க்


message 33: by Prem (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://www.jeyamohan.in/205092/


message 34: by Prem (new)

Prem | 230 comments Mod
மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு,

இணைப்பு:
https://akaramuthalvan.com/?p=2701
https://www.jeyamohan.in/205713/












message 35: by Prem (new)

Prem | 230 comments Mod
2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதையொட்டி டிசம்பர் மாதம் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்குக்கும் விஷ்ணுபுரம் விருது விழாவில் இளம்படைப்பாளிகளுடன் உரையாடல் அரங்குகளும், சிறப்பு விருந்தினர் அரங்குகளும் அமைக்கப்படும்.

இணைப்பு : https://www.jeyamohan.in/204785/






message 36: by Prem (new)

Prem | 230 comments Mod
இணைப்பு: https://www.jeyamohan.in/205766/




message 37: by Prem (new)

Prem | 230 comments Mod


இணைப்பு: https://www.jeyamohan.in/205918/


message 38: by Prem (new)

Prem | 230 comments Mod
இணைப்பு: https://www.jeyamohan.in/206510/




message 39: by Prem (new)

Prem | 230 comments Mod
இணைப்பு: https://www.jeyamohan.in/206549/




message 40: by Prem (new)

Prem | 230 comments Mod
எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஓர் இலக்கிய மாலை- மலேசியா, கூலிம்.

இணைப்பு: https://www.jeyamohan.in/206566/




Shoba Shanmugathasan | 7 comments கொழும்பு புத்தக கண்காட்சி நேற்று ஆரம்பித்தது. எதிர்வரும் 6ம் திகதிவரை நடைபெறும். காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிவரை புத்தகங்களை கொள்வனவு செய்யலாம்.


message 42: by Prem (new)

Prem | 230 comments Mod
தகவலுக்கு நன்றி ஷோபா!


message 43: by Prem (last edited Oct 02, 2024 04:12PM) (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் ஜெயமோகன் உடன் அன்று வாசகர் சந்திப்பு மிச்சிகன் மாகாணத்தின் டிராய் நகரில், வரும் அக்டோபர் 13 ம் தேதி.

இணைப்பு: https://www.jeyamohan.in/206671/




message 44: by Prem (new)

Prem | 230 comments Mod
அக்டோபர் 6ம் தேதி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விருதுநகரில் உரையாற்றுகிறார்.

இணைப்பு: https://www.sramakrishnan.com/%e0%ae%...




message 45: by Prem (new)

Prem | 230 comments Mod
எழுத்தாளர் ஜெயமோகன் உடன் அன்று வாசகர் சந்திப்பு நியு ஜெர்சி மாகாணத்தில் வரும் அக்டோபர் 19 ம் தேதி.

இணைப்பு: https://www.jeyamohan.in/207190/




message 47: by Prem (new)

Prem | 230 comments Mod
இணைப்பு: https://www.jeyamohan.in/207996/




message 48: by Prem (new)

Prem | 230 comments Mod
இணைப்பு: https://www.sramakrishnan.com/%e0%ae%...




message 49: by Prem (new)

Prem | 230 comments Mod
இணைப்பு: https://www.jeyamohan.in/208120/




message 50: by Prem (new)

Prem | 230 comments Mod
டிசம்பர் 25 புதன்கிழமை மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் நான்கு புதிய நூல்களின் வெளியீட்டுவிழா நடைபெறுகிறது.




« previous 1
back to top