தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

வெண்முரசு – 09 – நூல் ஒன்பது – வெய்யோன்
20 views
புதினம்/நாவல் > தோழமை வாசிப்பு: வெண்முரசு 09 - வெய்யோன்

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

Prem | 230 comments Mod
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நிகழ்காவியமான வெண்முரசு தொடரின் ஒன்பதாவது புத்தகம் "வெய்யோன்". சூரியனின் மைந்தனான கர்ணனைப் பற்றியது. இது வரை தொடரின் இரண்டு புத்தகங்களுக்கு மட்டுமே இக்குழுவில் இழை தொடங்கி அதுவும் நினைத்த அளவிற்கு நிறைவு பெறவில்லை.

தோழமை வாசிப்பு: வெண்முரசு 01 - முதற்கனல்
தோழமை வாசிப்பு: வெண்முரசு 04 - நீலம்

ஆனால் வெண்முரசு வாசிப்பு இல்லாத நாட்கள் அந்த உலகத்தை மீள அனுபவிக்க ஆசை ஏற்படுத்தும். நிறுத்தி வாசித்தவற்றை தொகுக்க விழையும் ஆசையைக் கட்டிப்போடும். அதனால் தொடர்ச்சியாக வாசிக்கவே விரும்புகிறேன். இந்த புத்தகத்தில் மொத்தம் 79 அத்தியாயங்கள். ஒரு நாளுக்கு இரண்டு அத்தியாயங்கள் என்ற கணக்கில் இரண்டரை மாதத்தில் வாசித்து முடிக்கும் கனவுடன், வாசித்தவற்றையும் தொடர்புடைய வாசிப்புகளைத் தொகுக்கும் வகையிலும், இப்புத்தகம் வாசிப்பில் உள்ள பிற வாசக நண்பர்களின் கருத்துக்களை பதிவிடவும் இவ்விழை பயன்படும் என்று நம்புகிறேன்.



காண்டீபம் நாவல் எழுதி முடித்து அடுத்த நாவலுக்கான அறிவிப்பு பதிவில் (https://www.jeyamohan.in/81879/) ஜெமோ கீழ்வருமாறு எழுதி இருக்கிறார். அப்புள்ளியில் இருந்து இந்த இழையைத் தொடங்குகின்றேன்.

என்ன எழுதுவதென்று தெரியாமல் தத்தளிப்பு இருந்தது. அதுவே வரட்டும் எனக் காத்திருந்தேன். கீதை உரைகள் அதன் எதிர்வினைகள் ஆகியவற்றிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டபோது மெல்ல முளைகள் மேலெழுந்தன. இந்நாவல் எப்படியோ கர்ணனை மையமாகக் கொண்டது. ஆகவே ‘வெய்யோன்’ என தலைப்பிட்டிருக்கிறேன்.


Yuthes | 1 comments வெய்யோன் தொடங்கி நானூறு பக்கத்தினை நெருங்கிவிட்டேன். கர்ணன் ஹஸ்தினாபுரிக்கு சென்று கௌரவர்களை, துச்சலையை வரவேற்கும் காட்சிகள் ஆழமாக உணர்வில் பதிகின்றன. உபகௌரவர்களின் அசுரத்தனமான அட்டகாசம் பல இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்தது. பிற வெண்முரசு புத்தங்கள் வாசிக்கும்பொழுது அடுத்த கட்டம் நோக்கி செல்வதில் ஒரு ஆர்வம் இருக்கும். இதில் மாறாக, நடப்பவையே இன்னும் நீளக் கூடாதோ எனவே தோன்றுகிறது. ஏனெனில், இதன் பிறகே கௌரவர்களின் வீழ்ச்சி தொடங்கும் என நினைக்கயில் துயரமே எஞ்சுகிறது.

ஒரு அழகிய 'surrealistic' காட்சி ஒன்று நாவலின் தொடக்கத்தில் வருகின்றது. கர்ணன் ஒரு பீடத்தில் அமர்ந்திருக்க, ஒரு குதிரை ஒன்று அறைக்குள் நுழைந்து அவனருகில் வந்து நிற்கிறது. அவன் அப்புரவியை பார்த்து இங்கே எப்படி வந்தாய் என தன்னை தானே கேட்டு கொள்கிறான்.


back to top