“மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும் சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன். அப்புறம் நீயும் நானும் உன் பையனா, பேரனா வாழ்ந்திட்டு இருப்போம். ஜனனமும் மரணமும் முடிவே இல்லாத ஒரு தொடர்ச்சிடா.. புரியுதா?”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.”
― வேடிக்கைப் பார்ப்பவன்
― வேடிக்கைப் பார்ப்பவன்
“இவன் கடவுளாக இருந்தபோது இவனுக்குள் இருந்த சாத்தான் உரித்த பாம்புச் சட்டை.”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“சில பார்வையாளர்கள் புத்தகங் களைப் படிப்பதைப் போல பாவனைசெய்து, திருடிச் சென்றுவிடுவார்கள். ‘விடுப்பா... அந்தப் புத்தகம் அவனைப் பாதிச்சா, அடுத்த மாசம் திரும்ப வந்து காசு தருவான்’ என்பார் நாரயணன்.”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“வேலை இல்லாதவனின் பகலைச் சுட்டெரிக்கும் வெயில், இவன் வானத்தில் தினமும் எரிந்துகொண்டேயிருந்தது. புத்தகங்களின் நிழலில் ஒதுங்குவது மட்டுமே இவனுக்கு ஆறுதலை அளித்தது.”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
NiMmi’s 2025 Year in Books
Take a look at NiMmi’s Year in Books, including some fun facts about their reading.
Favorite Genres
Polls voted on by NiMmi
Lists liked by NiMmi