Periyar > Quotes > Quote > Lahika liked it
“உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல், திருப்தியில்லாமல், தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்கவேண்டுமென்பதற்காக வேயாகும். ஆனால், காதலென்றாலென்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வப்போது மறைகின்றது? அப்படி மறைந்து போய்விடுவதற்குக் காரணமென்ன? என்பதைப்போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதலென்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும், அதை (காதலை)ப் பிரமாதப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.”
― பெண் ஏன் அடிமையானாள்?
― பெண் ஏன் அடிமையானாள்?
No comments have been added yet.
