Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following முகுந்த் நாகராஜன்.
Showing 1-16 of 16
“குளிர்பதன வோல்வோ பஸ்ஸில் இருந்து
வெளியேற முடியாமல்
கண்ணாடிகளில் முட்டி முட்டி
தடுமாறிக் கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.
சிக்னலில் பஸ் நின்றபோது
திறக்க முடியாத ஜன்னலில்
செய்தித்தாள் வாங்கச் சொல்லி
கண்ணாடியைத் தட்டுகிறான்
சிறுவன்.”
―
வெளியேற முடியாமல்
கண்ணாடிகளில் முட்டி முட்டி
தடுமாறிக் கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.
சிக்னலில் பஸ் நின்றபோது
திறக்க முடியாத ஜன்னலில்
செய்தித்தாள் வாங்கச் சொல்லி
கண்ணாடியைத் தட்டுகிறான்
சிறுவன்.”
―
“குறுகிய பால்கனியில்
முன்னும் பின்னும் நடந்து
பாடம் படிக்கிறாள் சிறுமி.
அவள் உதடுகள்
முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன
கண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப் போல்.”
―
முன்னும் பின்னும் நடந்து
பாடம் படிக்கிறாள் சிறுமி.
அவள் உதடுகள்
முணுமுணுத்த வண்ணம் இருக்கின்றன
கண்ணாடித் தொட்டியின் மீன்குட்டியைப் போல்.”
―
“இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?”
―
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?”
―
“இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்.
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?”
―
உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா.
வீடு இங்கேதான் இருக்கிறதாம்.
இதெல்லாம் ஒரு காரணமா?”
―
“முப்பது கம்பெனிகளும்
இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும்
அந்தப் பெரிய கட்டிடத்தைத்
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
அந்த சித்தாள்,
‘ நாங்கள் கட்டியது” என்று சொல்லி.
கட்டும்போது இருந்த இடம்
எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே.
முற்றிலும் மாறிப்போய்,
தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
பெருமையுடன் பார்த்தாள்,
அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
புடவை காயப் போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
என்பதை திடீரென்று உணர்ந்தவளாக.”
―
இரண்டு வெளிநாட்டு வங்கிகளும் இருக்கும்
அந்தப் பெரிய கட்டிடத்தைத்
தன் மகனுக்கு அறிமுகப்படுத்தினாள்
அந்த சித்தாள்,
‘ நாங்கள் கட்டியது” என்று சொல்லி.
கட்டும்போது இருந்த இடம்
எல்லாம் காண்பித்தாள் வெளியே இருந்தபடியே.
முற்றிலும் மாறிப்போய்,
தான் உள்ளே கூட நுழைய முடியாததாய்
ஆகிப்போன அந்தக் கட்டிடத்தைப்
பெருமையுடன் பார்த்தாள்,
அந்த வங்கியின் நியான் போர்டு இருக்கும் இடத்தில்
புடவை காயப் போட்டது தனக்கு மட்டுமே தெரியும்
என்பதை திடீரென்று உணர்ந்தவளாக.”
―
“கடைசியாய் ஒருமுறை சூடம் காட்டிவிட்டு,
வாடிப்போன எருக்கம்பூ மாலையை
கழற்றிவிட்டு,
களிமண் பிள்ளையாரைக் கிணற்றில் போட்டது
நேற்று மாதிரி இருக்கிறது.
நிறைய பிள்ளையார்களை விழுங்கிய என்
சின்னவயசின் பெரிய கிணறு
என் ஞாபகத்தில் மட்டும் இருக்கிறது.
ஃப்ளாட்டின் சின்ன அறையில்
கல்லுப் பிள்ளையாருக்குப் பூஜை செய்துவிட்டு
பக்கத்து ஃப்ளாட்காரர்களுடன்
கொழுக்கட்டை பரிமாறிக்கொள்வதும்
நன்றாகத்தான் இருக்கிறது
பிள்ளையார் படம் ஈமெயிலில் வந்ததும்
சந்தோசமாகத்தான் இருக்கிறது.
கிணறுதான் குறைகிறது.
அதை யாராவது அனுப்புகிறீர்களா
அட்டாச் பண்ணி?”
―
வாடிப்போன எருக்கம்பூ மாலையை
கழற்றிவிட்டு,
களிமண் பிள்ளையாரைக் கிணற்றில் போட்டது
நேற்று மாதிரி இருக்கிறது.
நிறைய பிள்ளையார்களை விழுங்கிய என்
சின்னவயசின் பெரிய கிணறு
என் ஞாபகத்தில் மட்டும் இருக்கிறது.
ஃப்ளாட்டின் சின்ன அறையில்
கல்லுப் பிள்ளையாருக்குப் பூஜை செய்துவிட்டு
பக்கத்து ஃப்ளாட்காரர்களுடன்
கொழுக்கட்டை பரிமாறிக்கொள்வதும்
நன்றாகத்தான் இருக்கிறது
பிள்ளையார் படம் ஈமெயிலில் வந்ததும்
சந்தோசமாகத்தான் இருக்கிறது.
கிணறுதான் குறைகிறது.
அதை யாராவது அனுப்புகிறீர்களா
அட்டாச் பண்ணி?”
―
“முன்பின் பழக்கம் இல்லாத
பயண வழி உணவுவிடுதியில்
சாப்ப்பிட்டுவிட்டு
கைகழுவப்போனேன்
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ் பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன
கை கழுவும்போது
காரணம் தெரிந்துவிட்டது
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடிவிட்டு
விரைவாக வெளியே வந்துவிட்டேன்”
―
பயண வழி உணவுவிடுதியில்
சாப்ப்பிட்டுவிட்டு
கைகழுவப்போனேன்
சாதாரண உயரத்தில்
இரண்டு வாஷ் பேசின்களும்
மிகக்குறைந்த உயரத்தில்
ஒரு வாஷ்பேசினும் இருந்தன
கை கழுவும்போது
காரணம் தெரிந்துவிட்டது
குள்ள வாஷ்பேசின் முன்
இல்லாத குழந்தையின் மேல்
செல்லமாக தண்ணீர் தெளித்து
விளையாடிவிட்டு
விரைவாக வெளியே வந்துவிட்டேன்”
―
“ஓடும் ரயிலில்
அடம் பிடித்து
வாங்கிய குழலில்
அதை விற்றவன்
வாசித்த பாடலை
சலிக்காமல்
தேடிக்கொண்டிருக்கிறது
குழந்தை.”
―
அடம் பிடித்து
வாங்கிய குழலில்
அதை விற்றவன்
வாசித்த பாடலை
சலிக்காமல்
தேடிக்கொண்டிருக்கிறது
குழந்தை.”
―
“விளையாட்டில் வீட்டுப் பொருட்களை
காலம் காலமாக
உடைத்து வருகின்றனர் குழந்தைகள்.
உடைந்த சத்ததுக்கும்
ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்
நடுவில் இருக்கும் மவுனத்தில்
சிதறிய துண்டுகளில் இருந்து
தப்பிக்கும் வாக்கியங்களை
இயற்றுகிறார்கள்.
போன வாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
கை தவறி உடைத்த அதிமதுரா
அவள் அம்மாவுக்கு
'சொந்தமா விழுந்து உடைஞ்சி போச்சு'
என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.”
―
காலம் காலமாக
உடைத்து வருகின்றனர் குழந்தைகள்.
உடைந்த சத்ததுக்கும்
ஓடி வந்து பெரியவர்கள் போடும் சத்தத்துக்கும்
நடுவில் இருக்கும் மவுனத்தில்
சிதறிய துண்டுகளில் இருந்து
தப்பிக்கும் வாக்கியங்களை
இயற்றுகிறார்கள்.
போன வாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
கை தவறி உடைத்த அதிமதுரா
அவள் அம்மாவுக்கு
'சொந்தமா விழுந்து உடைஞ்சி போச்சு'
என்ற வாக்கியத்தைப் பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்தி வைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக் கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.”
―
“எப்போதும்,
‘ஆஃபீஸ்-ல பூச்சி இருக்கு,
போகாதே’ என்று சொல்லும்
நேயமுகில்
அன்று ஒரு கோபத்தில்
‘அப்பா, நீ ஆஃபீஸ்-க்குப் போ’
என்றுவிட்டாள்.
‘சரி, நான் போறேன்’ என்று
திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.
சுற்றிச் சுற்றி வந்தாள் கொஞ்ச நேரம்.
தன் சாரட்டு வண்டியைக் கொடுத்து
சமாதானம் செய்ய வந்தாள்.
நான் வாங்கிக்கொள்ளவில்லை.
திடீர் உற்சாகத்துடன்
‘அப்பா, உனக்கு லீவ் ஆச்சே’ என்றாள்.
அட, ஆமாம்.
‘எனக்கும் லீவு’ என்றாள்.
‘செக்கருக்கும் லீவு’ என்றாள்.
அது அவளுடைய கரடி பொம்மை.
தன் பொம்மைகளையெல்லாம்
ஒவ்வொன்றாக அழைத்து
விடுமுறை அறிவித்தாள்.
சமைக்க வைத்திருந்த காய்கள்,
தொலைக்காட்சி, சோபா, ஒயர் கூடை,
விளக்கு, மின்விசிறி, ஜன்னல்,
தண்ணீர் பாட்டில்,என்று
தன் பார்வையில் பட்ட எல்லாவற்றுக்கும்
விடுமுறையைக் கொடுத்தாள்.
ஒவ்வொரு அறையாக நுழைந்து
தன் பொற்பிரம்பால் தொட்டு
பொருட்களையெல்லாம் விடுவித்தாள்.
தண்ணீர் கேன் ‘அப்பாடா’ என்று
தன் பெருமூச்சை
ஒரு குமிழியாய் வெளியிட்டு
காலை நீட்டி உட்கார்ந்து கொண்டது.”
―
‘ஆஃபீஸ்-ல பூச்சி இருக்கு,
போகாதே’ என்று சொல்லும்
நேயமுகில்
அன்று ஒரு கோபத்தில்
‘அப்பா, நீ ஆஃபீஸ்-க்குப் போ’
என்றுவிட்டாள்.
‘சரி, நான் போறேன்’ என்று
திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.
சுற்றிச் சுற்றி வந்தாள் கொஞ்ச நேரம்.
தன் சாரட்டு வண்டியைக் கொடுத்து
சமாதானம் செய்ய வந்தாள்.
நான் வாங்கிக்கொள்ளவில்லை.
திடீர் உற்சாகத்துடன்
‘அப்பா, உனக்கு லீவ் ஆச்சே’ என்றாள்.
அட, ஆமாம்.
‘எனக்கும் லீவு’ என்றாள்.
‘செக்கருக்கும் லீவு’ என்றாள்.
அது அவளுடைய கரடி பொம்மை.
தன் பொம்மைகளையெல்லாம்
ஒவ்வொன்றாக அழைத்து
விடுமுறை அறிவித்தாள்.
சமைக்க வைத்திருந்த காய்கள்,
தொலைக்காட்சி, சோபா, ஒயர் கூடை,
விளக்கு, மின்விசிறி, ஜன்னல்,
தண்ணீர் பாட்டில்,என்று
தன் பார்வையில் பட்ட எல்லாவற்றுக்கும்
விடுமுறையைக் கொடுத்தாள்.
ஒவ்வொரு அறையாக நுழைந்து
தன் பொற்பிரம்பால் தொட்டு
பொருட்களையெல்லாம் விடுவித்தாள்.
தண்ணீர் கேன் ‘அப்பாடா’ என்று
தன் பெருமூச்சை
ஒரு குமிழியாய் வெளியிட்டு
காலை நீட்டி உட்கார்ந்து கொண்டது.”
―
“கதவு
பிரிவைக் குறிக்கிறது
குழந்தைக்கு.
கதவு அருகே போனாலே
அழ ஆரம்பித்து விடுகிறது.
அதனால் தினமும்
சுவர் வழியாக வெளியேறி
அலுவலகம் போய் வருகிறான்
புது அப்பா.”
―
பிரிவைக் குறிக்கிறது
குழந்தைக்கு.
கதவு அருகே போனாலே
அழ ஆரம்பித்து விடுகிறது.
அதனால் தினமும்
சுவர் வழியாக வெளியேறி
அலுவலகம் போய் வருகிறான்
புது அப்பா.”
―
“அப்போது அந்த நாட்டின் மேல் பறந்து போய்
குண்டு போடுவதைக் காட்டினார்கள்.
அப்புறம் கொஞ்ச நாட்களுக்கு அதில் செத்த
அப்பாவிகளைக் காட்டினார்கள்.
நடு நடுவில் அடிபட்ட அப்பாவிகளிடம்
மைக்க நீட்டி விசாரித்தார்கள்.
அதற்குள் இந்த சண்டை வந்துவிட்டது.
இப்போது இந்த நாட்டின் மேல் பறந்து போய்
குண்டு போடுவதைக் காட்டுகிறார்கள்.
அப்போது அடிபட்டவர்களையும் செத்தவர்களயும்
பற்றி ஒரு வார்த்தை கூட சொல்வதில்லை இப்போது.
அடிபட்டவர்கள் எல்லோரும் காயத்தின் வடு
கூடஇல்லாமல் உடல் தேறி இருக்க வேண்டும்.
செத்தவர்களைப் பற்றிய நினைவுகள்
அவரவர் உறவினர்களிடம் இருந்தும்
மாயமாய் மறைந்து போய்
எல்லோரும் சந்தோஷமாக
வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
அப்படித்தான் இருக்கும்,
இல்லாவிட்டால் காட்டி இருப்பார்களே.”
―
குண்டு போடுவதைக் காட்டினார்கள்.
அப்புறம் கொஞ்ச நாட்களுக்கு அதில் செத்த
அப்பாவிகளைக் காட்டினார்கள்.
நடு நடுவில் அடிபட்ட அப்பாவிகளிடம்
மைக்க நீட்டி விசாரித்தார்கள்.
அதற்குள் இந்த சண்டை வந்துவிட்டது.
இப்போது இந்த நாட்டின் மேல் பறந்து போய்
குண்டு போடுவதைக் காட்டுகிறார்கள்.
அப்போது அடிபட்டவர்களையும் செத்தவர்களயும்
பற்றி ஒரு வார்த்தை கூட சொல்வதில்லை இப்போது.
அடிபட்டவர்கள் எல்லோரும் காயத்தின் வடு
கூடஇல்லாமல் உடல் தேறி இருக்க வேண்டும்.
செத்தவர்களைப் பற்றிய நினைவுகள்
அவரவர் உறவினர்களிடம் இருந்தும்
மாயமாய் மறைந்து போய்
எல்லோரும் சந்தோஷமாக
வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
அப்படித்தான் இருக்கும்,
இல்லாவிட்டால் காட்டி இருப்பார்களே.”
―
“அத்தனை சிறிய சிறுமிக்கும்
தனி இருக்கை பதிவு செய்திருந்தார்கள்
ரயில் பெட்டியில்.
அவள் அங்கு உட்காராமல்
பெட்டி முழுவதும்
பறந்து திரிந்து கொண்டிருந்தாள்.
எல்லா இருக்கைகளும் நிரம்பி
அவள் இடம் மட்டும்
காலியாக இருந்தது
பயணம் முழுவதும்.
அந்தப் பெட்டியே
முன் பல் விழுந்த
அவளது சிரிப்பைப் போல
தோற்றமளித்தது..”
―
தனி இருக்கை பதிவு செய்திருந்தார்கள்
ரயில் பெட்டியில்.
அவள் அங்கு உட்காராமல்
பெட்டி முழுவதும்
பறந்து திரிந்து கொண்டிருந்தாள்.
எல்லா இருக்கைகளும் நிரம்பி
அவள் இடம் மட்டும்
காலியாக இருந்தது
பயணம் முழுவதும்.
அந்தப் பெட்டியே
முன் பல் விழுந்த
அவளது சிரிப்பைப் போல
தோற்றமளித்தது..”
―
“டுட்டு' என்று ஒருத்தன் குறிப்பிடும் ரயிலை
'டாட்டா' என்பானாம் இன்னொருத்தன்
'சாச்சா' என்பாளாம் சாப்பாட்டை ஒருத்தி
பிஸ்கட்டை 'அக்கி' என்று சொல்பவளும்
'பையை' என்று பைக்கை சொல்பவளும்
டிவியை 'டிடி' என்பவனுமாக வித்தியாசங்களால் நிறைந்திருக்கிறது குழந்தைகளின் உலகம். எல்லாவற்றையும் எல்லோரும்
ஒரே மாதிரி சொல்வதற்கு பள்ளிக்கூடத்தில்
சொல்லித் தருவோம் அவர்களுக்கு.”
―
'டாட்டா' என்பானாம் இன்னொருத்தன்
'சாச்சா' என்பாளாம் சாப்பாட்டை ஒருத்தி
பிஸ்கட்டை 'அக்கி' என்று சொல்பவளும்
'பையை' என்று பைக்கை சொல்பவளும்
டிவியை 'டிடி' என்பவனுமாக வித்தியாசங்களால் நிறைந்திருக்கிறது குழந்தைகளின் உலகம். எல்லாவற்றையும் எல்லோரும்
ஒரே மாதிரி சொல்வதற்கு பள்ளிக்கூடத்தில்
சொல்லித் தருவோம் அவர்களுக்கு.”
―
“அந்த சின்னக் கல்லை மெதுவாக
உதைத்து உதைத்து முன்னேற்றி
தன் கூடவே பள்ளி வரை
அழைத்துக்கொண்டு போகும் காரியத்தில்
கவனமாக இருந்தவள்
எதிரே வந்த தெரு நாயைக்
கொஞ்சம் தாமதமாகத்தான்
கண்டுகொண்டாள்.
அமைதியான அந்த நாய்க்கு
பயந்து விலகிய போது
சின்னக் கன்றுக்குட்டி ஒன்று
பின்னால் இருந்து ஓடி வந்து
அவளை சற்றே உரசிச் சென்றது
கூட்டிக் கொண்டு வந்த கல்லை
அப்படியே விட்டுவிட்டு
விரைந்து நடந்தாள்,
முகத்தில் ஆர்வம் பொங்க.
இந்த சம்பவத்தை தன்
தோழிகளுக்கு எல்லாம் எடுத்துச் சொல்ல
அவளுக்கு
ஒரு பீரியடு போதுமோ,
ரெண்டு பீரியடு ஆகுமோ.”
―
உதைத்து உதைத்து முன்னேற்றி
தன் கூடவே பள்ளி வரை
அழைத்துக்கொண்டு போகும் காரியத்தில்
கவனமாக இருந்தவள்
எதிரே வந்த தெரு நாயைக்
கொஞ்சம் தாமதமாகத்தான்
கண்டுகொண்டாள்.
அமைதியான அந்த நாய்க்கு
பயந்து விலகிய போது
சின்னக் கன்றுக்குட்டி ஒன்று
பின்னால் இருந்து ஓடி வந்து
அவளை சற்றே உரசிச் சென்றது
கூட்டிக் கொண்டு வந்த கல்லை
அப்படியே விட்டுவிட்டு
விரைந்து நடந்தாள்,
முகத்தில் ஆர்வம் பொங்க.
இந்த சம்பவத்தை தன்
தோழிகளுக்கு எல்லாம் எடுத்துச் சொல்ல
அவளுக்கு
ஒரு பீரியடு போதுமோ,
ரெண்டு பீரியடு ஆகுமோ.”
―
“போனவாரம் கண்ணாடிக் கோப்பை ஒன்றை
கை தவறி உடைத்த அதிமதுரா
“சொந்தமாக விழுந்து உடைஞ்சி போச்சு”
என்ற வாக்கியத்தை பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்திவைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக்கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.”
―
கை தவறி உடைத்த அதிமதுரா
“சொந்தமாக விழுந்து உடைஞ்சி போச்சு”
என்ற வாக்கியத்தை பரிசளித்தாள்.
உடைந்த கோப்பை இருந்த இடத்தில்
அந்த வாக்கியத்தைப் பொருத்திவைத்து
வருவோர் போவோரிடமெல்லாம் எடுத்து எடுத்துக்
காட்டிக்கொண்டிருக்கிறாள் அவள் அம்மா.”
―




![க்ருஷ்ணன் நிழல் [Krushnan Nizhal] க்ருஷ்ணன் நிழல் [Krushnan Nizhal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1611470753l/56799343._SX98_.jpg)