Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Na.Muthuk Kumar.

Na.Muthuk Kumar Na.Muthuk Kumar > Quotes

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-7 of 7
“பூமியே ஒரு வாடகை வீடுதான் என்பது கவிஞனின் பெருமிதம்.”
Na.Muthuk Kumar, அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“பெருமையடையாதே பௌர்ணமியின் முழுமையும் ஓர் இரவுக்குத்தான்!’ - ஜென் தத்துவம்”
Na.Muthuk Kumar, அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“இதோ உன் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைக்கு நீ தாய்மாமன். இவன் உன் சகோதரியின் உதிரம். அலைக்கழித்தோடும் இவன் உதிர நதியில் உன் வம்சத்தின் துளியும் கலந்திருக்கிறது. இவனைப் பெற்றவர்கள் பக்கத்தில் இருந்தாலும், காலம் முழுவதும் இவன் மீது காயம் படாமலும், காற்று படாமலும் காக்க வேண்டியது உன் கடமை. தாய்மாமன் என்பவன் உண்மையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர் ஆண் தாய்!”
Na.Muthuk Kumar, அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“ஒவ்வொரு மனிதனும் முதுமையின் கடைசிப் படிக்கட்டில் கால்வைக்கும் அதே நேரம், காலச் சக்கரத்தில் திரும்பி வந்து, குழந்தமையின் முதல் படிக்கட்டிலும் கால் வைக்கிறான்.”
Na.Muthuk Kumar, அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“நான் படித்த புத்தகங்களிலேயே... உங்கள் அனுபவங்கள்தான் சிறந்த புத்தகம்!”
Na.Muthuk Kumar, அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“வெயில் என்றால் வழக்கமாக வரும் வெயில் அல்ல; சந்நதம் வந்து ஆடும் வெறிகொண்ட வெயில். காலங்களுக்கும் முந்தைய ஆதிச் சூரியனில் இருந்து அப்படியே இறங்கி வந்த வெப்ப நதி. ஒரே பார்வையில், அது கிளைகளையும் இலைகளையும் தீப்பிடிக்கச் செய்து மரங்களைக் கருகவைத்தது. ஆழத்தில் அந்த மரங்களின் வேர்கள் வேதனையுடன் சுருண்டு முனகும் வலி மண்ணுக்கு வெளியே நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தது”
Na.Muthuk Kumar, அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் இல்லையா? காலத்தின் காற்று எப்போதும் தாமதமாகத்தான் வீசும்போல.”
Na.Muthuk Kumar, அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]