அணிலாடும் முன்றில் Quotes
அணிலாடும் முன்றில்
by
Na. Muthukumar1,559 ratings, 4.53 average rating, 180 reviews
அணிலாடும் முன்றில் Quotes
Showing 1-9 of 9
“பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முதல் நாளையும், ஆண்டு இறுதியில் கடைசி நாளையும் அருகிருந்து பார்க்கும் தகப்பன்கள் பாக்கியவான்கள்”
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“பெருமையடையாதே பௌர்ணமியின் முழுமையும் ஓர் இரவுக்குத்தான்!’ - ஜென் தத்துவம்”
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“பூமியே ஒரு வாடகை வீடுதான் என்பது கவிஞனின் பெருமிதம்.”
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“புதைக்கிற மகன்களை எல்லாம் விதைக்கிற விதைகளாக எண்ணிக்கொண்டு இருக்கும் ஈழத்துத் தாய்களிடம் நான் காண்பது உன் முகம் தானே தாயே?”
― அணிலாடும் முன்றில்
― அணிலாடும் முன்றில்
“ஒவ்வொரு மனிதனும் முதுமையின் கடைசிப் படிக்கட்டில் கால்வைக்கும் அதே நேரம், காலச் சக்கரத்தில் திரும்பி வந்து, குழந்தமையின் முதல் படிக்கட்டிலும் கால் வைக்கிறான்.”
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“இதோ உன் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தைக்கு நீ தாய்மாமன். இவன் உன் சகோதரியின் உதிரம். அலைக்கழித்தோடும் இவன் உதிர நதியில் உன் வம்சத்தின் துளியும் கலந்திருக்கிறது. இவனைப் பெற்றவர்கள் பக்கத்தில் இருந்தாலும், காலம் முழுவதும் இவன் மீது காயம் படாமலும், காற்று படாமலும் காக்க வேண்டியது உன் கடமை. தாய்மாமன் என்பவன் உண்மையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஓர் ஆண் தாய்!”
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“நான் படித்த புத்தகங்களிலேயே... உங்கள் அனுபவங்கள்தான் சிறந்த புத்தகம்!”
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் இல்லையா? காலத்தின் காற்று எப்போதும் தாமதமாகத்தான் வீசும்போல.”
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“வெயில் என்றால் வழக்கமாக வரும் வெயில் அல்ல; சந்நதம் வந்து ஆடும் வெறிகொண்ட வெயில். காலங்களுக்கும் முந்தைய ஆதிச் சூரியனில் இருந்து அப்படியே இறங்கி வந்த வெப்ப நதி. ஒரே பார்வையில், அது கிளைகளையும் இலைகளையும் தீப்பிடிக்கச் செய்து மரங்களைக் கருகவைத்தது. ஆழத்தில் அந்த மரங்களின் வேர்கள் வேதனையுடன் சுருண்டு முனகும் வலி மண்ணுக்கு வெளியே நாளெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தது”
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
