Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Na. Muthukumar.
Showing 1-30 of 32
“பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.”
― வேடிக்கைப் பார்ப்பவன்
― வேடிக்கைப் பார்ப்பவன்
“இவன் தனிமையின் வெற்றிடத்தை புத்தகங்கள் நிரப்பின.”
― வேடிக்கைப் பார்ப்பவன்
― வேடிக்கைப் பார்ப்பவன்
“வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“உண்மையில் ஆண்களின் கண்ணீரும் உயர்வானது. அது பெண்களுக்காகச் சிந்தப்படும் எனில், அதி உயர்வானது.”
― வேடிக்கைப் பார்ப்பவன்
― வேடிக்கைப் பார்ப்பவன்
“என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்”
― வேடிக்கைப் பார்ப்பவன்
― வேடிக்கைப் பார்ப்பவன்
“கவலைப்படாத. காசுங்கிறது காகிதம் மாதிரி. வரும்... போகும். இதையெல்லாம் ஒரு அனுபவமா எடுத்துக்கோ.”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும் சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன். அப்புறம் நீயும் நானும் உன் பையனா, பேரனா வாழ்ந்திட்டு இருப்போம். ஜனனமும் மரணமும் முடிவே இல்லாத ஒரு தொடர்ச்சிடா.. புரியுதா?”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“உ.வே.சா. எழுதிய ‘என் சரித்திரம்’ 2. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ 3. மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ 4. லியோ டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ 5. தஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டணையும்’ 6. ‘உலகம் சுற்றிய தமிழர்’ ஏ.கே. செட்டியாரின் ‘பயணக் கட்டுரைகள்’ 7. ஜான் ரீட் எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ 8. சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த ‘ஏழை படும் பாடு’ 9. ராபின்சன் குருசோவின் ‘தன் வரலாறு’ 10. ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“பனித்துளியின் நுனியில் பிரதிபலிக்கிறது சூரியன். இன்னும் கொஞ்ச நேரத்தில் பனித்துளி உருகிவிடும் என்பது சூரியனுக்குத் தெரியும். தான் கரைந்துவிடுவோம் என்பது பனித்துளிக்கும் தெரியும். ஆனாலும், சூரியனைச் சிறைப்பிடித்த அந்த ஒரு கணத்தின் பெருமிதமே பனித்துளியின் வாழ்க்கை!”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“தாத்தா நெறைய கடன் வாங்குனார்டா. அதெல்லாம் அப்பாதான் அடைச்சேன்.” மகன் கேட்டான். “தாத்தா எதுக்குப்பா கடன் வாங்குனாரு?” “தாத்தா நெறைய புக்ஸ் படிப்பார்டா. அத வாங்கத்தான் கடன் வாங்குனாரு...” “நல்ல விஷயம்தானப்பா... நீங்களும் நெறைய புக்ஸ் படிங்க. உங்க கடனை எல்லாம் நான் அடைக்கிறேன்!”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கட்டுகள்தானே கனவுகள்.”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதுமில்லை”
―
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதுமில்லை”
―
“இவன் அப்பா அழைத்து, இவன் வாழ்வின் மிகப் பெரும் ஜன்னல் ஒன்றைத் திறந்துவைத்தார். அன்று அவர், இவன் கையில் கொடுத்தது... அந்த விடுமுறையில் அவசியம் படிக்க வேண்டிய 10 புத்தகங்களுக்கான பட்டியல்.”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“இவன் கடவுளாக இருந்தபோது இவனுக்குள் இருந்த சாத்தான் உரித்த பாம்புச் சட்டை.”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“சில பார்வையாளர்கள் புத்தகங் களைப் படிப்பதைப் போல பாவனைசெய்து, திருடிச் சென்றுவிடுவார்கள். ‘விடுப்பா... அந்தப் புத்தகம் அவனைப் பாதிச்சா, அடுத்த மாசம் திரும்ப வந்து காசு தருவான்’ என்பார் நாரயணன்.”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“எல்லாம் எழுதிய பிறகும் ஏதும் எழுதாததைப் போல் தோன்றுகிறது. இதுதான் வாழக்கைபோலும்.”
― Vedikkai Paarpavan
― Vedikkai Paarpavan
“சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய்ச் சொல்வது? வீடு மாற்றுவதை!”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற எல்லா சுதந்திரமும் உனக்கு இருக்கு. பின்னாட்கள்ல அதற்கான சந்தோஷத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கும்போது மட்டும், என்னை நினைச்சுப் பார்த்துக்கோ. அதுக்கு முன்னாடி ஒரு புத்தகம் தர்றேன். அதை முழுசாப் படி. அப்புறம் முடிவு எடு” என்று சொல்லிவிட்டு புத்தக அலமாரிகளில் தேடித் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகத்தை இவனிடம் கொடுத்தார். அது நடிகர் சிவகுமார் எழுதிய ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற புத்தகம்.”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“வேலை இல்லாதவனின் பகலைச் சுட்டெரிக்கும் வெயில், இவன் வானத்தில் தினமும் எரிந்துகொண்டேயிருந்தது. புத்தகங்களின் நிழலில் ஒதுங்குவது மட்டுமே இவனுக்கு ஆறுதலை அளித்தது.”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முதல் நாளையும், ஆண்டு இறுதியில் கடைசி நாளையும் அருகிருந்து பார்க்கும் தகப்பன்கள் பாக்கியவான்கள்”
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
― அணிலாடும் முன்றில் [Aniladum Mundril]
“நிஜம்தான் தாங்க முடியாத பாரம். அந்தப் பாரத்தை இறக்கிவைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக் கொள்ளத்தான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். வெயிலில் உலர்த்துவது என்று ஆகிவிட்டது. எல்லா இடத்திலும்தானே வெயில் விழும். ஆனால், இங்கே மட்டும்தான் விழும் என்பது போல் ஒவ்வொருத்தரும் கொடியில் ஓர் இடத்தில் தொங்கப்போடுவது நமக்குப் பிடித்திருக்கிறது இல்லையா? - எழுத்தாளர் வண்ணதாசன்”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“திறந்து பார்க்காத மின்னஞ்சல்களில்
அருகருகே அமர்ந்துகொண்டு
சீட்டாடிக்கொண்டிருக்கிறார்கள்
ஒரு கடவுளும்
சில சைத்தான்களும்!”
― அ'னா ஆவன்னா
அருகருகே அமர்ந்துகொண்டு
சீட்டாடிக்கொண்டிருக்கிறார்கள்
ஒரு கடவுளும்
சில சைத்தான்களும்!”
― அ'னா ஆவன்னா
“நெருப்பு’ என்றால், நெருப்பு மட்டுமல்ல; நெருப்புக்குள்ளும் நீர் இருக்கிறது. அந்த நீர்... கண்ணீர்!”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“எனது புறநகர் குடியிருப்பு வயல்களின் சமாதி என்று நினைவுபடுத்தியவை தவளைகளே!” _ சுகுமாரன்
'பூமியை வாசிக்கும் சிறுமி’ கவிதைத்”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
'பூமியை வாசிக்கும் சிறுமி’ கவிதைத்”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“இம்முறை கவனமாய் போன வாரம் நட்ட
ரோஜாச்செடி முதல் மாடியில் காய வைத்த
உள்ளாடை வரை எடுத்தாயிற்று
என்றாலும் ஏதோவொன்றை மறந்த ஞாபகம்
சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய் சொல்வது
வீடு மாற்றுவதை !”
― பட்டாம்பூச்சி விற்பவன்
ரோஜாச்செடி முதல் மாடியில் காய வைத்த
உள்ளாடை வரை எடுத்தாயிற்று
என்றாலும் ஏதோவொன்றை மறந்த ஞாபகம்
சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய் சொல்வது
வீடு மாற்றுவதை !”
― பட்டாம்பூச்சி விற்பவன்
“மேய்ப்பனின் கட்டளைக்குப் பின்னும்
மெதுவாகவே நடக்கின்றன
மழைமேகம் அறியா வாத்துகள்.”
― குழந்தைகள் நிறைந்த வீடு [Kuzhanthaigal Nirantha Veedu]
மெதுவாகவே நடக்கின்றன
மழைமேகம் அறியா வாத்துகள்.”
― குழந்தைகள் நிறைந்த வீடு [Kuzhanthaigal Nirantha Veedu]
“எந்த ஊரில் எந்த நாட்டில் எங்கு காண்போமோ? எந்த அழகை எந்த விழியில் கொண்டுசெல்வோமோ? இந்த நாளை வந்த நாளில் மறந்துபோவோமோ? -கவியரசு கண்ணதாசன்”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
“ஒரு வியாபாரி கவிதை எழுதினால், அவனிடம் இருக்கும் காசு மட்டுமே காணாமல் போகும். ஒரு கவிஞன் வியாபாரியானால், அவனிடம் இருக்கும் கவிதையே காணாமல் போய்விடும்!”
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]
― வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]