Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following vikatan publication.

vikatan publication vikatan publication > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-21 of 21
“தங்க நிலவடிக்க தாஜ்மஹால் கண்ணடிக்க தமிழோடு இசைவந்து சங்கமித்தல் எந்நாளோ?”
vikatan publication, Ananda vikatan pokkisham
“எதிரிகளின் ராணுவம் ஒரு கிராமத்தையே வளைத்துக் கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகளுக்கு அடைக்கலம் தந்திருந்த ஒரு தாய், தன் குழந்தையுடன் கம்யூனிஸ்ட் வீரர்களோடு சேர்ந்து தப்பிப் போய், ஒரு பாலத்திற்கு அடியில் ஒளித்திருக்கிறாள். தலைக்கு மேலே ஆயுதம் ஏந்திய ராணுவம் அணி வகுத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அப்போது அவளுடைய கைக் குழந்தை அழ ஆரம்பிக்கிறது. அந்தக் குழந்தை அழு கின்ற சத்தம் கேட்டால், அங்கே ஒளிந்து கொண்டிருக்கிறவர்கள் அத்தனை பேரையும் ராணுவம் சுட்டுக் கொன்றுவிடும். எனவே அந்தத் தாய், அழும் குழந்தையின் வாயை அழுத்தமாகக் கையால் பொத்துகிறாள். குழந்தையோ திமிறிக்கொண்டு மூக்கால் சிணுங்குகிறது. அப்போது மூக்கையும் அழுத்தி அடக்குகிறாள் தாய். எதிரியின் அணிவகுப்பு மிக நீளமாக முடிவற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. கையையும் காலையும் உதைத்துத் துடிதுடித்துக்கொண்டிருந்த குழந்தையின் துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அடங்குகிறது. கடைசியில் குழந்தையின் உயிர்த் துடிப்பு ஒரேயடியாக நிற்கும்போது, குழந்தையின் தாய் தன்னையும் அறியாமல் வீறிடப் பார்க்கிறாள். அருகில் இருந்த கணவன் அவள் வாயை அழுத்தப் பொத்துகிறான்”
vikatan publication, Ananda vikatan pokkisham
“தலைவர் சுமாரா எவ்வளவு நேரம் பேசுவாரு?’’ ‘‘எவ்வளவு நேரம் பேசினாலும் சுமாராத்தான் பேசுவாரு!”
vikatan publication, Vikatan Jokes 300
“மாலா! ஒரே ஒரு முத்தம் கொடேன்!’’ ‘‘சே... சே! முத்தமெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்!’’ ‘‘அட லூஸு! எனக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சே... சும்மா கொடு!”
vikatan publication, Vikatan Jokes 300
“தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பைப் போட்டால் அவ்வ ளவு நீரும் உப்பு நீராகிவிடுகிறது. எனினும், உப்பைக்காணவில்லை; தண்ணீரில் மறைந்துவிட்டது. மகாத்மாவின் மறைவும் இப்படித்தான் இருக்கிறது. இவர் மக்கள் மூலம் வாழ்கிறார். ஆகவே, மகாத்மாவின் மறைவு குறித்து நாம் துக்கப்படலாகாது;”
vikatan publication, Ananda vikatan pokkisham
“அரசியல் குடிலர்கள்’ என்கிற தொடரை உருவாக்கித் தனது அரசியல் எதிரிகளை விமர்சித்தார். ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?’, ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ போன்ற இலக்கிய வாக்கியங்களை வலிமைமிகு அரசியல் ஆயுதங்களாகப் பேச்சிலும், எழுத்திலும் அவர் பயன்படுத்தினார்.”
vikatan publication, Ananda vikatan pokkisham
“பாப்கார்ன், கட்லெட், சிப்ஸ், என்ன சாப்பிடுறீங்க?’’ ‘‘ஆபரேஷன் முடிஞ்சுடுச்சா சிஸ்டர்!’’ ‘‘இல்லை, டாக்டர் இன்டர்வெல் விட்டிருக்கார்!”
vikatan publication, Vikatan Jokes 300
“1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுதந்திரத்திற்காகப் பாடுபட, சுபாஷ் தலைமையில் ஒரு தொண்டர் படை நிறுவப்பட்டது. இதைக் கவனித்த பிரிட்டிஷ் சர்க்கார், அத்தொண்டர் படை சட்ட விரோதமானது எனக்கூறி, சுபாஷைக் கைது செய்து 6 மாத சிறைத் தண்டனை கொடுத்தது. தண்டனை அளித்த ஆங்கிலேய மாஜிஸ்டிரேட்டிடம் சுபாஷ், ‘‘ஆறு மாதத் தண்டனைதானா? இக்குறைந்த தண்டனை பெற நான் என்ன ஆடு, கோழியையா திருடினேன்?”
vikatan publication, Ananda vikatan pokkisham
“பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசியடங்குவதற்கு முன்கையை வாயைவிட்டு எடுத்துக் கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான்”
vikatan publication, Ananda vikatan pokkisham
“எதையும் தாங்கும் இதயம்’ என்று அவர் அடிக்கடி கையாண்ட வாசகம், ஆங்கிலப் பெருங்கவிஞன் பைரனிடமிருந்து எடுத்தாண்டது. ‘ஆளவந்தார்கள்’, ‘சாய்வு நாற்காலி அரசியல்வாதிகள்’, ‘அவர்கள் சிலர்; நாம் மிகப் பலர்’ போன்றவை ஆங்கிலத் தொடர் மொழிகளை அவர் தமிழ்ப்படுத்திக் கையாண்டதற்குச் சில உதாரணங்கள்.”
vikatan publication, Ananda vikatan pokkisham
“கர்னாடக இசையின் மர்மங்களை அழகு செய்த ஜி.ராமநாதன்; கர்னாடக இசையைப் பாமரனுக்கும் கொண்டு சேர்த்த கே.வி.மகாதேவன்; கர்னாடக இசையை நவீனப்படுத்திய விஸ்வநாதன் ராமமூர்த்தி; நாட்டுப்புற இசையை அந்த மண்ணின் குரலோடும் வாத்தியங்களோடும் குழைத்துக் கொடுத்த இளையராஜா;”
vikatan publication, Ananda vikatan pokkisham
“டாக்டர்! நீங்க எனக்கு ஒரு காரியம் பண்ணணும்...’’ ‘‘அதெல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட சொல்லி பண்ணச் சொல்லுங்க!”
vikatan publication, Vikatan Jokes 300
“வேலை குறைவாயிட்டதால உங்களை வேலையிலிருந்து நீக்குறேன்.’’ ‘‘வேலை குறைவாயிட்டா, வேலை செய்திட்டிருந்தவங்களை நீக்குங்க சார். நான் எப்பவும் சும்மாதானே இருக்கேன். என்னை ஏன் நீக்குறீங்க?”
vikatan publication, Vikatan Jokes 300
“ஈ.வே.இராமசாமி நாயக்கர் ‘கல்கி”
vikatan publication, Kalapettagam
“கொலை வழக்கை உங்கக்கிட்டே ஒப்படைச்சோமே... என்ன கண்டுபிடிச்சீங்க?’’ ‘‘கொலை செய்யப்பட்ட நபர் சம்பவம் நடக்கிறதுக்கு முன்னாடி உயிரோட இருந்திருக்கார் சார்!”
vikatan publication, Vikatan Jokes 300
“உறுப்பறுந்து போனாலும் உள்ளம் கலங்கான்; இச் செருப்பறுந்து போனதற்கோ சிந்திப்பான் - நெருப்பை எதிர்ப்பதற்கும் அஞ்சாத எண்ணம் படைத்தாற் பின் கொதிக்குமிந்தத் தார் குளிர் நீர்.”
vikatan publication, Ananda vikatan pokkisham
“டால்ஸ்டாய் எழுதிய ‘நாம் செய்வது என்ன?’ என்ற புத்தகத்தை நீ ஒரு முறை படிக்க வேண்டும்’’ என்று கூறினார். நான் அந்த நூலை வாங்கி ஆழ்ந்து, அழுந்திப் படித்தேன். அந்த நூல் பொன், பொருள், உலகம் என்ற பற்றைக் குறைத்துவிட்டது.”
vikatan publication, Ananda vikatan pokkisham
“டால்ஸ்டாய், திருக்குறள் படித்தவர். ‘சுதந்திர இந்துஸ்தான்’ என்ற பத்திரிகையின் ஆசிரியருக்கு, 1908 டிசம்பர் மாதம் டால்ஸ்டாய் ஒரு நீண்ட கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அவர் ஆறு திருக்குறள்களை மேற்கோள் காட்டினார். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்...’, ‘பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்’ ஆகிய குறள்கள் அவற்றில் அடங்கும். பரபரப்பூட்டிய அந்தக் கடிதத்தை மகாத்மா காந்தி ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் பிரசுரித்தார்.”
vikatan publication, Ananda vikatan pokkisham
“அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.இராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் ஒரு கணமும் தயங்காமல் அளித்துவிடுவேன். சாதாரணமாக, இவருடைய பிரசங்கங்கள் மூன்று மணி நேரத்துக்குக் குறைவது கிடையாது. இந்த அம்சத்தில் தென்னாட்டு இராமசாமியார் வடநாட்டு பண்டித மாளவியாவை ஒத்தவராவார். ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய வித்தியாசமுண்டு. பண்டிதரின் பிரசங்கத்தை அரைமணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்து என்னால் கேட்க முடியாது. பஞ்சாப் படுகொலையைப் பற்றிய தீர்மானத்தின் மேல் பேச வேண்டுமென்றால் பண்டிதர் ஸிராஜுதௌலா ஆட்சியில் ஆரம்பிப்பார். 1885-ம் வருஷத்தில் காங்கிரஸ் மகாசபை ஸ்தாபிக்கப்பட்ட காலத்திற்கு வருவதற்குமுன் பொழுது விடிந்துவிடும். ஆனால் இராமசாமியார் இவ்வாறு பழங்கதை தொடங்குவதில்லை. எவ்வளவுதான் நீட்டினாலும் அவருடைய பேச்சில் அலுப்புத் தோன்றுவது கிடையாது. அவ்வளவு ஏன்? தமிழ்நாட்டில் இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான் என்னால் மூன்று மணிநேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன். உட்கார்ந்து உட்கார்ந்து இடுப்பு வலி கண்டுவிடும். எழுந்து போக வேண்டுமென்று கால்கள் கெஞ்சிக் கூத்தாடும். ஆனால் போவதற்கு மனம் மட்டும் வராது. தாம் மூன்றாம் வகுப்புக்கு மேல் படித்ததில்லையென்பதாக ஸ்ரீமான் நாயக்கரே ஒரு சமயம் கூறினாரென அறிகிறேன். இருக்கலாம். ஆனால், அவர் உலகாநுபவம் என்னும் கலாசாலையில் முற்றுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும் உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ, நான் அறியேன்!”
vikatan publication, Kalapettagam
“காந்தியடிகள் வரவேற்புரைக்குப் பதில் சொல்லும்போது, தென்னாப்பிரிக்காவில் சென்னைவாசிகளான தமிழர்கள் செய்த தியாகங்களைத் தம்முடைய தியாகங்களுக்கும் மேலானவையென்று குறிப்பிட்டார். ‘17, 18 வயதுச் சிறுவர்களான நாகப்பனும் நாராயணசாமியும் எத்தனை கஷ்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் சுமந்து தாய்நாட்டின் கௌரவத்தைக்காப்பாற்ற முயன்றார்கள்!”
vikatan publication, Ananda vikatan pokkisham
“இது குறித்துக்காந்தி யடிகளே ‘மாடர்ன் ரெவ்யூ’ என்ற கல்கத்தா மாசிகையில் ஆங்கிலத்தில் பின்வருமாறு தன் அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்: ‘‘ட்ரான்ஸ்வால் கிளர்ச்சியில் தமிழர்கள் செய்த காரியத்தைப் போல் வேறு எந்த இந்திய ஜாதியும் செய்யவில்லை. ஆதலால், வேறு காரணம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு என் திருப்தியை நன்கு உணர்த்த வாவது நான் அவர்களுடைய புத்தகங்களை ஊன்றிப் படிக்க வேண்டும். சென்ற மாதம் அவர்களுடைய பாஷையைக் கவனமாகப் படித்து வந்தேன். அதைப் படிக்கப் படிக்க அம் மொழியிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. நேர்த்தியான மொழி அது; அமுதம் போன்றது. தமிழர்களுக்கிடையே முன்னாளிலும் இந்நாளிலும் அநேக ஞானிகளும் நுண்ணறிவாளர்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா முழுமையும் ஒரே ஜனாங்கமாக ஏற்படவேண்டுமானால், சென்னை மாகாணத்திற்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ் மொழியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.”
vikatan publication, Ananda vikatan pokkisham

All Quotes | Add A Quote
Vikatan Jokes 300 (Tamil Edition) Vikatan Jokes 300
45 ratings
Kalapettagam (Tamil Edition) Kalapettagam
42 ratings