Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Indra Soundar Rajan.

Indra Soundar Rajan Indra Soundar Rajan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-30 of 44
“வேளை (நேரம்) வந்தால் எல்லாம் தேடி வரும்.”
Indira Soundarrajan, ருத்ரவீணை [Rudraveenai]
“அனுபவங்களே ஒருவனை ஆசானாக்கும். அந்த அனுபவங்களிலும் தோல்வியைத் தழுவும்போதுதான் அறிவு மிகக் கூர்மையாகும். உங்களை வலி ஒன்றுதான் வலிமை மிக்கவனாகும். எனவே, வலி ஏற்படும்போதெல்லாம் மகிழ்ச்சி அடையுங்கள். எந்த இன்பமும் நம்மை வளர்க்காது. துன்பமே வளர்க்கும். எனவே, துன்பம் வரும்போது ஆழ்மனதில் அதை வரவேற்று மகிழப்பழகுங்கள்.”
Indra Soundar Rajan, இறையுதிர் காடு [Iraiyudhir Kaadu]
“ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும்”
Indira Soundarrajan, அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]
tags: fact
“சுந்தரேசா... அவனை கோபிக்காதே. அவன் கேள்விக்கு நான் பதில் சொல்றேன். தம்பி... கடவுள் எங்கேயும் தனக்கொரு கோயிலைக் கட்டவோ, வழிபடவோ, வழிபட்டால் தான் அருளுவேன்னோ சொல்லல... சொன்னா அது கடவுள் இல்லை.”
Indira Soundarajan, ரகசியம் பரம(ன்) ரகசியம் [Ragasiyam Parama(n) Ragasiyam]
“இந்த உலகத்துல தப்பு செய்யாம கடவுளாலகூட இருக்க முடியாது.”
Indra Soundar Rajan, தங்கக் காடு [Thanga Kaadu]
“அந்த பையனுக்கே உங்க பொண்ண கொடுக்கறேன்னு சொல்லி பாருங்களேன்.” “இது என்ன விஷப் பரீட்சை…?” “விஷத்தால தானே இவ்வளவு நாளுமே நீங்க பாதிக்கப்பட்டிருக்கீங்க. அதுல இருந்து விடுபடணும்னா தீர்க்கமா ஒரு வி,ப்பரிட்சைல நீங்க இறங்கித்தான் தீரணும்!” “என்னம்மா நீங்க… என் பெண்ணை மருமகளா அடைய அவருக்கு கசக்குமா… மறு வார்த்தை பேசாம அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணத்த வச்சுக்கலாம்னு தாம்மா சொல்வாரு…” “சொல்லட்டும்… கூடவே நாங்க பெண் கேட்டோம்னும் ஒரு வார்த்தை சொல்லுங்க…” “இது எதுக்கு…?” “அப்ப தானே எங்களை கொல்ற முடிவுக்கு வருவார்…” “இது என்ன விபரீத விளையாட்டு…” “விளையாட்டு இல்லை… இது ஒரு வித வலை. குற்றவாளியா தேடி வந்து வலைல விழ வைக்க செய்யற ஒரு முயற்சி…” “அம்மா… போதும்மா… நீங்க இனி எதையும் பேச வேண்டாம். நான் பாத்துக்கறேன். நீங்க போட்ட கோட்டுல நான் ரோடே போட்டுக் காட்றேன்…” கருணாகரன் ஒரு புதிய உற்சாகத்தை காட்டினான். ஜமீன்தார் துரைசிங்கமோ சாரதாவின்”
Indra Soundar Rajan, Naaga Padai
“பயப்பட்றதும் ஒரு தோஷம்டா குழந்தை. தோஷம் இருக்கலாமா?”
Indra Soundar Rajan, Naan Nee….Aathma!
“அதன் பிறப்பின் தொடக்கம். அறுபது வயதின் முடிவில் இதே புள்ளி காலத்தால் திரும்ப வரும். அதை உணர்வது ஞானம். இது, பிறப்பின் முதல் சுற்றாகும். மானுட உடம்பு இருமுறை இந்தப் புள்ளியைக் காணும் உயிர்ப்பை உடையது. இதை மூன்று, நான்கு, ஐந்து, ஆறு என ஆக்கிக்கொள்ள காயகற்பம் எனும் கவசம் உதவும்!”
Indra Soundar Rajan, Iraiyuthir Kaadu - Part 1
“புரியலேன்னா மாயாஜாலம், புரிஞ்சா மெஸ்மரிசம்” “மெஸ்மரிசமா?” “ஆமா. கிட்டத்தட்ட அப்படித்தான். பீதாம்பர ஜாலவித்தைன்னு கேள்விப்பட்டிருக்கியா?” “என்னென்னமோ சொல்றீங்களே சேட்?” “என்னப்பா நீ. பீதாம்பரய்யர்ங்கறவர் உங்க தமிழ் ஆள் தான். அவர் ஜாலவித்தைல பலே கில்லாடி. 1008 வித்தை தெரியும் அவருக்கு.”
Indra Soundarrajan, அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]
“அசைவே வாழ்வு; அதை தவிர்த்தால் - தவம்! வாழ்வு என் நாட்டியம்; தவம் என் லிங்கம்!!”
Indra Soundar Rajan, சிதம்பர ரகசியம் [Chithambara Ragasiyam]
“மனுஷ வாழ்க்கையில எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும்… முதல் தடவை மட்டும்தான் பெருசா தெரியும்.”
Indra Soundar Rajan, சிதம்பர ரகசியம் [Chithambara Ragasiyam]
“மனத்துக்குப் பஞ்ச பூதச் சிறை கிடையாது. உடம்புக்கு அது உண்டு.”
Indra Soundarrajan, சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]
“ஒன்றை அறிய ஒருவர் விரும்புகிறார் என்றால், அவர் மாணாக்கர். அறிவுறுத்த வேண்டியவர் குருநாதர். குருவைத் தேடி மாணாக்கன்தான் வர வேண்டும்; குருவல்ல!”
Indra Soundarrajan, சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]
“கடவுள் இருக்கா இல்லையாங்கற கேள்விக்கு என்னோட ஒரே பதில் நீ இருக்கேல்ல... அப்ப கடவுளும் இருக்கார். நாற்காலியைப் படைச்சது தச்சன், கட்டடத்தைப் படைச்சது கொத்தன்னா மனுஷனைப் படைக்க ஒருத்தன்”
Indra Soundar Rajan, Naan Nee….Aathma!
“ராமாயணம்!”
Indra Soundar Rajan, சுந்தர காண்டம் [Sundhara Kaandam]
“சித்தர்கள் ரசவாதம் செய்தது, கூடுவிட்டுக் கூடு பாய்ந்தது, நவபாஷாணத்தில் விக்கிரகம் செய்தது, ஆகாயத்தில் பறந்தது, சீன தேசத்துக்கு நொடியில் சென்றது போன்ற அதிசயங்களை எழுதியிருக்கிறார்”
Indra Soundarrajan, சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]
“ஆமா... நீ நல்லவனா கெட்டவனா?"

"இந்தியக் குடிமகன். அதாவது இரண்டும் கெட்டான்!”
Indra Soundarrajan, தொட்டதெல்லாம் பொன் [Thottathellam Pon]
“தண்ணி கொஞ்ச வேண்டிய ஊருல தண்ணிக்கு கெஞ்சிகிட்டு நிக்கறோம்.”
Indra Soundarrajan, Asura Jathagam (Tamil)
“மதுரை அமிர்தம்னா மதுரை நகரம் அமிர்தம்பட்ட ஊர். அமிர்தத்துக்கு அழிவு கிடையாது, அழியாதது கலைகள்… அந்தக் கலைகள் கொண்ட ஊருன்னு பொருள் கொள்ளலாம்.”
Indra Soundar Rajan, சிதம்பர ரகசியம் [Chithambara Ragasiyam]
“இந்த உலகத்துல ஒண்ணை இழந்தாதான் ஒண்ணு கிடைக்கும். இழக்கறதுக்கு சமமாதான் கிடைக்கறதும் இருக்கும்…”
Indra Soundar Rajan, சிதம்பர ரகசியம் [Chithambara Ragasiyam]
“நான் பட்டணம் தான். எனக்கு என் பட்டணம் சந்தேகப்படத்தான் சொல்லி கொடுத்திருக்கு. நம்பிக்கை வைக்கச் சொல்லியே தரலை.”
Indra Soundar Rajan, இறையுதிர் காடு [Iraiyudhir Kaadu]
“முகத்துல கறுப்பா எது இருந்தாலும் எதிராளி திருஷ்டியை சலனப்படுத்தும்னும் சொல்வாங்க!”
Indra Soundarrajan, அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]
“அதிலும் நள்ளிரவில்…! அண்ணாந்தால் வானத்தில் நிலா வட்டம்! மாசமோ ஐப்பசி, காலமோ அர்த்தஜாமத்தைத் தொடப்போகும் பன்னிரண்டை நெருங்கும் நிமிடப் போது…இந்த வேளையில் இந்த மணியின் சப்தமா? வீட்டுத் தாழ்வாரம், வாசற்புறத்து கிட்டித் திண்ணை, களத்துமேடு என்று கட்டிலில் புரண்டு கொண்டிருக்கும் தோட்டக்கார மங்கலத்து பெருசுகள் எல்லாம் தூக்கம் கலைந்து நிமிர்ந்து அமர்ந்து மணிச்சப்தம் கேட்டு விதிர்க்கத் தொடங்குகின்றனர்! பட்டி மாடுகள், அடைப்புக் கோழிகள்கூட விடைத்துப் போய் சற்றே சிலிர்க்க, மச்சக்காரன் தெருவில் பால் குடிக்க அழுத ஒரு தூளிக் குழந்தைகூட ஆத்தாளின் முலைக்காம்பை உதட்டால் ஒதுக்கிவிட்டு, அந்த சப்தம் கேட்டு, தன் குட்டி மணிவிழியில் மிரட்சியைத் தூக்கிக் காட்டுகிறது… "ஆரது இந்த ராத்ரியில மணி அடிச்சிகிட்டு…?" "என்னா தெகிரியம்--கருப்பு கோயில் மணிய இந்த ராத்ரில இந்த அடி அடிக்க…?”
Indira Soundarrajan, விட்டு விடு கருப்பா!
“ஆசிரியர்”
Indra Soundar Rajan, சுந்தர காண்டம் [Sundhara Kaandam]
“அன்பெனும் பிடிக்குள் மட்டுமே நான் அகப்படுவேன்; மற்றபடி என்னை அறிவதும் புரிந்துகொள்வதும் பெரும்பாடு”
Indra Soundarrajan, சித்தம் சிவம் சாகசம் [Sittham Sivam Sagasam]
“எவ்வளவோ உபதேசம் செய்யற நீங்க உங்க சமாதியை கோவிலாக்கக் கூடாதுன்னுல்லாம் சொல்றீங்களே." "காரணமாத்தான். அப்பவும் இங்க இரண்டு பேர் வந்து என் சமாதி முன்னால மண்டியப் போட்டு அழுவான். எதாவது பிரச்சினையைச் சொல்லி அழுவான். அதைத் தீர்த்துவை. இதைத் தீர்த்து வைப்பான். எனக்கு இப்படி கேக்கற யாரையுமே பிடிக்கலை. பிரச்சினைகளுக்குப் பயப்படறவங்களைக் கண்டாலே பிடிக்கல... அனுபவிக்கணும். நல்லா அனுபவிக்கணும். எதை? கஷ்டத்தை.. அப்படிக் கஷ்டத்தை அனுபவிக்கறவனைக் கண்டா கடவுளே பயப்படுவார் தெரியுமா?" அவர் மிக வித்தியாசமாகப் பேசினார்.”
Indra Soundar Rajan, Thiruvannamalai
“ஒவ்வொரு பிறப்புக்கும் ஒரு நோக்கமும் இருக்கு. முதல்ல காரணத்தை தெரிஞ்சிக்கணும். பிறகு நோக்கம் தானா தெரியவரும். அந்த நோக்கத்தை நோக்கி செயல்பட்டா திரும்ப பிறக்க வேண்டாம். பிறக்கவும் முடியாது”
Indra Soundarrajan, அரண்மனை ரகசியம் [Aranmanai Ragasiyam]
“மனுஷன்”
Indra Soundar Rajan, Thiruvannamalai

« previous 1
All Quotes | Add A Quote