Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Pa Raghavan.

Pa Raghavan Pa Raghavan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-30 of 84
“ஒருமுறை, யார் உங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று ஒரு பத்திரிகையாளர் பிரபாகரனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில்: இயற்கை என் தோழன். வாழ்க்கை என் தத்துவ ஆசிரியர். வரலாறு என் வழிகாட்டி.”
Pa. Raghavan, Prabhakaran Vaazhvum Maranamum
“எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?”
Pa. Raghavan, Prabhakaran Vaazhvum Maranamum
“நீண்ட பெருமூச்சுகளில் இரவு கரைந்து விடாதா என்றிருந்தது அவனுக்கு.”
Pa Raghavan, புவியிலோரிடம்
“வெங்கிட்டு, சமையலை எளிதாக நினைக்காதே. ஒரு போராளிக்குச் சமைக்கத் தெரியவேண்டியது மிகவும் அவசியம். வேளைக்குச் சாப்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம்.”
Pa. Raghavan, Prabhakaran Vaazhvum Maranamum
“அமெரிக்கப் பண்ணைகளின் விளைச்சலுக்கு அடிமைகளின் வியர்வை மட்டுமல்ல; ரத்தமும் உரமாகியிருக்கிறது. ரத்தம் சொட்டச்சொட்ட வேலை பார்க்க நேர்ந்த தமது சக அடிமைகள் குறித்து டக்ளஸ் விவரிக்கும் இடங்கள் எப்பேற்பட்டக் கல் மனத்தையும் உடைத்து சுக்குநூறாக்கிவிடக்கூடியது.”
Pa Raghavan, Dollar Desam
“என் கனவுகளில் நீ காட்டிய சங்கேதங்களின் அர்த்தம் உதிர்ந்து விட்டது. நான் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருந்ததாக நம்பிக் கொண்டிருந்தேன். என் கனவுகள் இதுகாறும் என்னைத் தின்று வந்திருப்பதை இப்போது உணருகிறேன்.”
Pa Raghavan, அலை உறங்கும் கடல்
“ஒம்பதாவதுல ரெண்டு வருஷம். பிளஸ் ஒன்ல ரெண்டு வருஷம். கண்ணுக்குத் தெரியாத எதிரியோட சண்டை போடற மாதிரி இருக்கு.”
Pa Raghavan, புவியிலோரிடம்
“குடுமிதான் ஓர் ஆணுக்கு எத்தனை கம்பீரம் தந்துவிடுகிறது என்று அவளுக்குத் தோன்றியது. “அவாவா ப்ரொஃபஷனுக்கு ஏத்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக்கறா.”
Pa Raghavan, புவியிலோரிடம்
“பணத்தைத் தொடாமல் ஒரு மணி நேரம் இருப்பதும் ஒரு வித தியானம்தான்”
Pa Raghavan, யதி [Yathi]
“துறையில் அவரை வெறுப்பதற்கும் பழிவாங்க நினைப்பதற்கும்  யாரும் இல்லை என்பது எத்தனை பெரிய கௌரவம்!”
Pa Raghavan, அப்பா வேலை (ஒரு சிறுகதை) [Appa Velai]
“குற்ற உணர்வற்று இருப்பதே துறவு.”
Pa Raghavan, யதி [Yathi]
“மனித வாழ்க்கை என்பதே சம்பவங்களின் சாட்சிக்கூண்டில் ஏறி நிற்பதுதானே?”
Pa Raghavan, பொலிக பொலிக!  / Poliga Poliga!
“வாழ்நாளில் மதத்தையோ கடவுளையோ மருந்துக்கும் தொட்டுப் பாராமல் உன்னால் மக்களுக்கு நாலு நல்ல விஷயங்களைச் சொல்ல முடியுமானால் உன்னைக்காட்டிலும் உயர்ந்த ஜீவன் வேறில்லை.”
Pa Raghavan, யதி [Yathi]
“நீங்கள் போராடுங்கள். உங்களுக்குச் சுதந்தரம் வேண்டுமென்றால் நீங்கள்தான் போராடியாகவேண்டும். கடவுள் உதவமாட்டார்; உங்கள் பின்னால் வரவும் மாட்டார். சுதந்தரத்தைப் பொருத்த அளவில் போராட்டம் தான் கடவுள்”
Pa. Raghavan, Nilamellam Raththam
“பரீட்சைகளால் ஆனா வாழ்க்கை, வெறுப்பும் சலிப்பும் நிறைந்தது.”
Pa Raghavan, புவியிலோரிடம்
“பூரணத்துவத்துக்காக அலைவது வீண். இந்த உலகில் எதுவும் பூரணமடைந்ததல்ல. எச்சங்களில் இருந்து கற்றுக்கொள்வதே நமக்கு விதித்தது”
Pa Raghavan, யதி [Yathi]
“உதவி கேட்க வேண்டும். ஆனால், கேட்கிற தோரணை தவறியும் எட்டிப்பார்க்கக் கூடாது. தன் மனதைப் புரிய வைத்துவிட வேண்டும். விடைகள் தாமாக எதிராளியின் பிரக்ஞை மீறி உதிரவேண்டும்.”
Pa Raghavan, புவியிலோரிடம்
“புன்னகையற்ற சாந்தி. அதே சாந்தி. அதே பார்வை. தன் விருப்பம் என்று ஒன்று இவளுக்கு இருக்கிறதா என்று அப்போதும் அவன் நினைத்தான். எப்போதும் அது இருந்ததில்லை என்றே தோன்றியது. பாதகமில்லை. அதுவும் ஒரு கொடுப்பினையாகத்தான் இருக்கவேண்டும்.”
Pa Raghavan, கொசு / Kosu
“பா. ராகவன்”
Pa Raghavan, இரண்டாம் உலகப் போர்
“தெரிந்ததைக் கடந்துதான் தெரியாதது நோக்கிச் செல்ல வேண்டும். கண்ணைக் கட்டிக்கொண்டு காற்றில் கத்தி வீசியபடியே நடக்கிற அனுபவம். எழுத்து மட்டுமா, வாழ்வும் அதுவேயல்லவா?”
Pa Raghavan, யதி [Yathi]
“சிறு பொய்களால் மட்டுமே மனைவியைச் சமாளிக்க முடிவது உறுத்தலாக உள்ளது குருவே என்றான் சீடன். மனைவிகள் எதிர்பார்ப்பது உண்மைகளையல்ல; பொருத்தமான பதில்களை மட்டுமே என்றார் ஜென்குரு.”
Pa Raghavan, 14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள் [14m looyiyin bathroom sahithyangal]
“மனிதனல்லாத அனைத்துப் பிறப்புகளும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏதோ ஒரு சாமர்த்தியம் இருக்கும் என்று தோன்றியது.”
Pa Raghavan, யதி [Yathi]
“ஆரம்பக் காலத்தில் அவர்கள் கஷ்டத்தால் விரக்தியடைந்திருந்தார்கள். இப்போது காட்சிப் பொருளாகி விரக்தியடைந்திருக்கிறார்கள். ஆயிரம் சொன்னாலும் இதுதான் அமெரிக்காவின் மிக முக்கியமான அவமானச் சின்னம்”
Pa Raghavan, Dollar Desam
“எப்படி உன்னால் சாப்பிட்டு எச்சில் பிரட்டித் துடைப்பது போல் உறவுகளைத் துடைத்து எறிந்துவிட்டுக் கண்காணாமல் இருக்க முடிகிறது என்பதுதான் புரியாத சங்கதியாக உள்ளது.”
Pa Raghavan, புவியிலோரிடம்
“பாவனைகள் சக்தி மிக்கவை. மின்சாரம் நிகர்த்த வீரியம் கொண்டவை. ஆனால், சரியான இடத்தில், சரியான அளவில் கையாளத் தெரிந்திருப்பது அவசியம். மேதைமை என்பது அதில் அடங்கிய சங்கதி.”
Pa Raghavan, யதி [Yathi]
“வெளிய உள்ளதுல காத்துதான் எல்லாம். உள்ளார இருக்கறதுல நெனப்புதான் எல்லாம். இந்த காத்து - நெனப்பு ரெண்டும் வசமாயிட்டா அவன் யோகி.”
Pa Raghavan, யதி [Yathi]
“நவீன அமெரிக்காவை உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவரான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் இப்படிச் சொன்னார்: ‘பிரிட்டிஷ்காரர்கள், மன்னரின் ரசிகராக இருக்கிறார்கள். அமெரிக்கர்களோ அதிபரின் சக ஊழியர்களாக இருக்கிறார்கள்.”
Pa Raghavan, Dollar Desam
“முட்டாளாக வாழ்வதில், அல்லது காட்டிக் கொள்வதில் உள்ள சௌகரியங்களை இரண்டரை வருட தில்லி வாழ்க்கையில் அவன் நன்றாக உணர்ந்திருக்கிறான். உள்ளுக்குள் போடும் கணக்குகள் உண்டாக்கும் பரவசத்தை வெளிக்காட்டி விடாதபடிக்கு முகத்தில் நிரந்தரமாகப் படிந்துவிட்ட அப்பாவித் திரையும் மொழியில் தட்டுப்படும் கோழைத்தனமும் ஓர் அரணாயிருக்கின்றன. சகலமானவர்களும் வசப்படுகிறார்கள்.”
Pa Raghavan, புவியிலோரிடம்
“மதம், அரசியல், உணர்ச்சி. சேரக்கூடாத இந்த மூன்று அம்சங்கள் ஒன்று சேர்ந்த காரணத்தால்தான் இன்றுவரை தீர்க்கப்படமுடியாத சிக்கலாக இது இருந்துவருகிறது.”
Pa. Raghavan, Nilamellam Raththam
“தவமென்பது வாழ்வது. வாழ்வென்பது நிறைகுறைகளின் சரி விகிதக் கலவை. நிறைகள் சார்ந்த அகங்காரமும் குறைகள் சார்ந்த குற்ற உணர்வும் தவிர்க்க முடியாதவை. இதில் எதைத் தவிர்க்க நினைத்தாலும் தோற்கத்தான் வேண்டும்.”
Pa Raghavan, யதி [Yathi]

« previous 1 3
All Quotes | Add A Quote
Pa Raghavan
285 followers